நெல்லிகல தேரரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்

ஜெய்லானி பள்ளி நிர்வாக சபை உபதலைவி ரொசானா அபு சாலி

0 249

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
எங்கள் குடும்பம் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அபு­சா­லியின் கூர­கல பிர­தே­சத்தைச் சொந்த இட­மாகப் பாவித்து அங்கு ஆட்சி செய்­ய­வில்லை. எங்கள் குடும்பம் சிங்­கள அரசர் காலம் முதலே அங்கு வாழ்ந்து சமூ­கப்­ப­ணி­களைச் செய்­தது. முஸ்­லிம்­க­ளுக்­கென்று தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை நிறு­வி­யது.  அரசர் காலம் தொட்டு முஸ்­லிம்கள் இன­வா­தி­க­ளல்ல. சிங்­கள அர­சர்­க­ளு­டனும் மக்­க­ளு­டனும் நல்­லு­ற­வைப்­பேணி வரு­ப­வர்கள். நாங்கள் குடும்­பத்தின் பிரச்­சி­னையை நாட்­டுக்குக் கொடுத்­துள்­ள­தாக நெல்­லி­கல வத்­து­கும்­புர தம்­ம­ர­தன சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யு­­ள்ள நேர்­கா­ண­லொன்றில் தெரி­வித்­துள்ள கருத்­தினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நான் இதனைக் கண்­டிக்­கின்றேன். இது பெளத்த மக்­களை தவ­றாக வழி­ந­டாத்­து­வ­தாகும் என தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உப­த­லைவி ரொசானா  அபு­சாலி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் அண்­மையில் சிங்­கள யுடியூப் ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் முன்னாள் அமைச்சர் அபு­சா­லியின்  குடும்­பத்தைச் சாடி­யி­ருந்தார்.” தப்தர் ஜெய்­லானி பிர­தே­ச­மான கூர­க­லயை அபு­சாலி தனது சொந்த இட­மாக பாவித்து வந்தார். இந்த இடத்­திலே பள்­ளி­வாசல் நிறு­வப்­பட்­டது.  இது ஒரு குடும்பம் ஆட்சி செய்த பிர­தேசம் அவர்கள் குடும்­பப்­பி­ரச்­சி­னையை இன்று நாட்­டுக்குக் கொடுத்­துள்­ளார்கள். இன­வாத பிரச்­சி­னை­யி­லி­ருந்து கூர­க­லயை நான் விடுத்­துள்ளேன். முஸ்­லிம்­க­ளுக்கு நான் எந்த அநி­யா­யமும் செய்­ய­வில்லை. கூர­க­லயில் இன ஒற்­று­மை­யை­யயும் சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நான் முன்­னெ­டுத்­துள்ளேன்” என நெல்­லி­கல தேரர்  தனது நேர்­கா­ணலில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
தேரரின் கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் வகை­யிலே ரொசானா அபு­சாலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில் “எங்கள் குடும்பம் கூர­க­லயை தங்­க­ளது தனிப்­பட்ட சொந்த இட­மாக கரு­த­வில்லை. சிங்­கள அரசர் காலம் முதல் அங்கு வாழ்ந்­தது எனது பாட்­ட­னாரே. 1890 இல் தப்தர் ஜெய்­லா­னியில் கந்­தூரி வைப­வத்தை ஆரம்­பித்து வரு­டாந்தம் நடத்­தினார். கொடி­யேற்­றத்­தையும் ஆரம்­பித்தார்.

எங்கள் குடும்­பத்­தி­ன­ரி­னாலே 1922 ஆம் ஆண்டு தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிறு­வப்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு வக்பு சபை நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வரப்­பட்­டது.
எங்­க­ளது குடும்பம் பள்­ளி­வா­சலை நிர்­வ­கித்­தது மூலம் தஃவாப் பணி­க­ளையே முன்­னெ­டுத்­தது. நாங்கள் இன­வா­தத்தை போஷிக்­க­வில்லை. நெல்­லி­கல. தேரர் பிழை­யான கருத்­துக்­களைத் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது என்றார்.

நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் முஸ்லிம்களின் மரபுரிமைப் பிரதேசமான கூரகலயில் பாரிய பன்சலை உட்பட புனித பூமி திட்டடொன்றினை நிறுவியுள்ளார். இதற்கு 15 ஆயிரம் இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.