தனியார் சட்ட விவகாரம் குறித்து கலந்துரையாடல்

0 239

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட குழு தற்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடியது. நீதியமைச்சரினால் இக்குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

வக்பு சபையின் தலைவரும், குழுவின் தலைவருமான சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது. குறிப்பாக பலதார மணம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் சுமூகமாக இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்வதாக நீதியமைச்சர் தெரிவித்தாக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.