ராஜபக்சாக்களை பாதுகாக்கவா நஷீட் இலங்கை வந்தார்?

0 5,160

மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான முஹம்மத் நஷீட் தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு, நாட்டின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுடன் தொடர்­பு­பட்ட தரப்­பு­க­ளுடன் சந்­திப்­பு­களை மேற்­கொண்டு வரு­கிறார். எனினும் ராஜ­பக் ஷ குடும்­பத்­துடன் நெருக்­க­மான உறவைக் கொண்­டுள்ள நஷீட், அவர்­களை மாலை­தீ­வுக்கு அழைத்துச் சென்று பாது­காப்­ப­தற்கு முனை­வ­தாக மாலை­தீவு ஊட­கங்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.

இலங்­கையில் முக்­கிய தரப்­பு­க­ளுடன் சந்­திப்பு
இந்த வார ஆரம்­பத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட நஷீட், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, பொது ஜன பெர­முன பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச, முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் உட்­பட பல­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இலங்கை அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள நிலையில், இலங்­கையின் நெருங்­கிய நட்பு நாடான மாலை­தீவின் சபா­நா­யகர் என்ற வகையில் நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்கு தன்னால் இயன்ற உத­வி­களை வழங்க முன்­வந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் உத­வி­களை இலங்­கைக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான விட­யங்­களை தான் ஒருங்­கி­ணைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்­டரில் கருத்து வெளி­யிட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, “வெளி­நாட்டு உத­வி­களைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை ஒருங்­கி­ணைத்து, இலங்­கையின் பொரு­ளா­தார மீட்­சிக்­கான நிவா­ரண முயற்­சி­க­ளுக்கு உத­வு­வ­தற்கு முன்­வந்­துள்­ள­மைக்­காக மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி முகம்மத் நஷீதை நான் பாராட்­டு­கிறேன்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை இச் சந்­திப்பு தொடர்பில் நாமல் ராஜ­பக்ச எம்.பி. வெளி­யிட்­டுள்ள குறிப்பில், “மாலை­தீவும் இலங்­கையும் நாடு­க­ளாக மட்­டு­மல்ல, மக்­க­ளா­கவும் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து கொள்­கின்­றன. கடி­ன­மான காலங்­களில் நாங்கள் எப்­போதும் ஒரு­வ­ருக்கு ஒருவர் துணை­யாக இருந்­தி­ருக்­கிறோம். எங்கள் சார்­பாக சர்­வ­தேச சமூ­கத்தை அணுகி நிவா­ர­ணத்தை ஒருங்­கி­ணைத்து உதவ முன்­வ­ரு­வ­தற்கு நன்­றி­களைத் தெரி­விக்­கிறோம்” என தெரி­வித்­துள்ளார்.

 

நாட்டில் நிலவும் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தொடர்பில் வெளி­நாட்டுத் தலைவர் ஒருவர் முன்­வந்து இவ்­வா­றான முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

தான் வெளி­நாட்டு உத­வி­களை ஒருங்­கி­ணைக்­க­வுள்­ள­தாக நஷீட் குறிப்­பிட்­டுள்ள போதிலும் எவ்­வா­றான உத­வி­களை அவர் கொண்­டு­வ­ர­வுள்ளார் என்­பது பற்­றிய எந்­த­வித விப­ரங்­களும் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இத­னி­டையே, இலங்­கைக்கு நஷீட்­டினால் எந்­த­வித உத­வி­க­ளையும் கொண்­டு­வர முடி­யாது என மாலை­தீவின் அர­சியல் பிர­மு­கர்கள் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளனர். மாலை­தீ­வுக்கே உத­வி­களைக் கொண்­டு­வர முடி­யாத நஷீட்­டினால் எவ்­வாறு இலங்­கைக்கு உத­வி­களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, நஷீட் இலங்­கைக்கு வந்­தி­ருப்­பது, மஹிந்த ராஜ­பக்ச மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­னரை மாலை­தீ­வுக்கு அழைத்துச் சென்று பாது­காப்­பாக தங்க வைப்­ப­தற்கே என அந்­நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளமை இலங்கை மற்றும் மாலை­தீவு அர­சியல் அரங்கில் பெரும் சல­ச­லப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.

‘மோல்டீவ்ஸ் ஜேர்னல்’ எனும் குறித்த ஊடகம் வெளி­யிட்­டுள்ள செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, “இலங்­கையில் சிக்­குப்­பட்ட நிலையில் காணப்­படும் மகிந்த ராஜ­பக்­ச­வையும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் பாது­காப்­பாக மாலை­தீ­விற்கு அழைத்துச் செல்­வ­தற்­கான முயற்­சி­களில் முகமட் நஷீட் ஈடு­பட்­டுள்ளார்.

மகிந்த உதவி கோரினார்
தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்த பின்னர் மகிந்த நஷீட்டின் உத­வியை நாடினார். தொலை­பேசி வழி­யாக உரை­யா­டிய மஹிந்த, இலங்­கையில் பதற்­ற­நிலை தணி­யும்­வரை மாலை­தீவில் தானும் குடும்­பத்­தி­னரும் தங்­கி­யி­ருப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு கேட்டார் என மாலை­தீவின் அர­சாங்க அதி­கா­ரி­யொ­ருவர் மோல்டீவ்ஸ் ஜேர்­ன­லிற்கு தெரி­வித்­துள்ளார்.

மாலை­தீவின் சுற்­று­லாத்­துறை பெரும்­கோ­டீஸ்­வரர் சம்பா முகமட் மூசா என்­ப­வரின் இடத்தில் மகிந்த ராஜ­பக்­சவை தங்­க­வைக்க மாலை­தீவு முதலில் திட்­ட­மிட்­டது. இரு­வ­ருக்கும் நல்ல நெருக்கம் உள்­ளது. எனினும் மூசா நம்­ப­மு­டி­யா­தவர் என்­பதால் நஷீட் அதனை நிரா­க­ரித்­துள்ளார்.

இந்­தி­யாவின் சோனு சிவ்­ட­சானி என்­ப­வ­ருக்கு சொந்­த­மான ‘சொனேவா பியுசி’ என்ற இடத்தில் மகிந்த ராஜ­பக்ச சொந்த வீட்டை வாங்க முடியும் என்ற யோச­னையை நஷீட் முன்­வைத்­துள்ளார்.

சோனு சிவ்­ட­சானி இதனை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். 12 மில்­லியன் டொல­ருக்கு மகிந்த ராஜ­பக்­ச­விற்கு தனது தனிப்­பட்ட மாளி­கையை விற்க அவர் சம்­ம­தித்­துள்ளார். மேலும் இன்­னு­மொரு மாளி­கை­யையும் 3 மில்­லியன் டொல­ருக்கு விற்க தீர்­மா­னித்­துள்ளார். அதனை மகிந்த ராஜ­பக்­சவின் குடும்ப பணி­யா­ளர்கள் மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பயன்­ப­டுத்­த­வுள்­ளனர்.

மகிந்த ராஜ­பக்ச குடும்பம் ஆறு அறைகள் கொண்ட மாளி­கையை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னித்­துள்­ளது – 24000 சதுர அடி- இங்கு 18 பேர் தங்­கலாம், இது­த­விர சகல ஆடம்­பர வச­தி­களும் உள்­ளன.

சர்­வ­தேச உத­வியை ஒருங்­கி­ணைப்­பதே நஷீடின் ஆரம்ப உறு­தி­மொ­ழி­யாக காணப்­பட்­டாலும், மகிந்­தவை மாலை­தீ­விற்கு கொண்­டு­செல்­வது குறித்த அவ­ரது பரப்­புரை கார­ண­மாக சர்­வ­தேச உதவி ஒருங்­கி­ணைப்பு பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.

ராஜ­பக்­சவும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் பாது­காப்­பாக இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யேற அனு­ம­திக்­க­வேண்டும் என நஷீட் தொடர்ந்தும் பரப்­புரை செய்து வரு­கின்றார்.
சஜித் பிரே­ம­தா­ச­வு­ட­னான சந்­திப்­பின்­போது அவர் அமை­தி­யையும் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வது குறித்து கருத்து தெரி­வித்தார், இந்த சந்­திப்­பு­களில் அவர் பழி­வாங்­கு­வதை தவிர்க்க வேண்டும் என வேண்­டுகோள் விடுத்தார்.

இலங்கை நீதி­மன்றம் ராஜ­பக்­சவின் கட­வுச்­சீட்டை பறி­முதல் செய்­துள்­ளது. அவ­ருக்கு எதி­ராக வெளி­நாட்டு பய­ணத்­தடை காணப்­ப­டு­கின்­றது.

ராஜ­பக்ச பாது­காப்­பாக வெளி­யே­று­வ­தற்­காக பல்­வேறு தரப்­பட்­ட­வர்­களை ஒருங்­கி­ணைப்­பதே இலங்­கையில் நஷீட்டின் பணி என மாலை­தீவு அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. இதற்கு பதி­லாக நஷீட்டின் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி உத­­வி வழங்க மகிந்த இணங்­கி­யுள்ளார் என அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

குற்­றச்­சாட்­டுக்­களை மறுக்­கின்றார் நஷீட்
மகிந்த ராஜ­பக்ச தனக்கு மாலை­தீவில் அடைக்­கலம் அளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுக்­க­வில்லை என மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி முகமட் நஷீட் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை விஜ­யத்தின் போது தான் மகிந்த ராஜ­பக்­சவை சந்­திக்­கவும் இல்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் அர­சியல் சூழ்நிலையை கருத்­தில்­கொண்டு மகிந்த தனக்கும் தனது குடும்­பத்­த­வர்­க­ளிற்கும் மாலை­தீவில் அடைக்­கலம் வழங்­கு­மாறு மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார் என வெளி­யான தக­வல்கள் தவ­றா­னவை என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
இலங்கை மாலை­தீவு உற­வு­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த விரும்பும் சக்­திகள் மாலை­தீவில் உள்­ளன என தெரி­வித்­துள்ள அவர் மகிந்த ராஜ­பக்ச தொடர்பில் வெளி­யான தக­வல்கள் பொய்­யா­னவை எனவும் தெரி­வித்­துள்ளார்.

நெருக்­க­டி­யான தரு­ணத்தில் இலங்­கைக்கு உத­வியை பெற்­றுக்­கொ­டுக்­கவே நான் இங்கு வந்­துள்ளேன், இலங்­கையின் உள்­வி­வ­கா­ரங்­களை இலங்கை மக்கள் தீர்த்துக் கொள்­ள­வேண்டும் என தெரி­வித்­துள்ளார்.

நாமல் ராஜ­பக்­ச­வுடன் மகிந்த விவகாரம் குறித்து ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோரின் கடவுச்சீட்டு பிரதிகளை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள மாலைதீவின் ஊடகவியலாளர் ஒருவர், இப் பிரதிகள் ஏன் நஷீட்டுக்கு வழங்கப்பட்டன எனக் கேள்வியெழுப்பியுள்ளார். எனினும் அவ்வாறு தான் எவருக்கும் கடவுச் சீட்டு பிரதிகளை வழங்கவில்லை எனவும் தனது கடவுச் சீட்டு தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நாட்டுக்கு நன்மைகளைக் கொண்டு வரப் போகிறதா அல்லது அவர் தனது நெருங்கிய நண்பரான ராஜபக்ச குடும்பத்தை இலங்கையிலிருந்து மீட்டுச் செல்லத்தான் வந்தாரா என்பதை அடுத்து வரும் நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.