அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பலஸ்தீன ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் படுகொலை

0 392

ஏ.ஆர்.ஏ.பரீல்

சிறீன் அபூ அக்லா கட்­டாரைத் தள­மாகக் கொண்டு இயங்கும் அல்­ஜெ­சீரா தொலைக்­காட்­சியின் கள நிரு­ப­ராவார். இஸ்­ரே­லிய படை­யினர் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரை­யி­லுள்ள ஜெனின் அக­திகள் முகாம்­மீது கடந்த 11 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தினர். அப்­போது இஸ்­ரே­லிய படை­யி­னரின் துப்­பாக்கி சூட்­டுக்கு சிறீன் அபூ அக்லா பலி­யானார்.
அவர் இரும்­பி­லான (Steel) அங்கி ஆடையொன்­றினை அணிந்து கொண்டு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்தார். அந்த அங்­கியில் ஊடகம் (Press) என பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இஸ்­ரே­லிய படை­யி­னரின் துப்­பாக்கி ரவை­க­ளினால் அவ­ரது தலை கடு­மை­யான காயங்­க­ளுக்­குள்­ளாகிய நிலையில் அவர் இறந்தார்.

இஸ்­ரே­லிய படை­யினர் சிறீன் அபூ அக்­லாவின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யி­ருந்­தனர் என பலஸ்­தீன சுகா­தார அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டது. இதே­வேளை இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் இதனை ம-றுத்­தது. பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ள­ரான சிறீன் பலஸ்­தீ­னர்கள் மேற்­கொண்ட துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி உயிர் துறந்­த­தாக இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சும் இரா­ணு­வமும் வாதிட்­டது.

51 வய­தான ஊட­க­வி­ய­லா­ள­ரான சிறீன் அல் ஜெசீரா தொலைக்­காட்­சியின் ஆரம்­ப­கால ஊட­க­வி­ய­லா­ளர்­களில் ஒரு­வ­ராவார். அவர் இப்­பி­ராந்­தி­யத்தில் நீண்­ட ­கா­ல­மாக பணி­யாற்­றி­யவர். இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் வாழும் பலஸ்தீன் மக்கள் மீது இஸ்­ரே­லினால் நடாத்­தப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­களை இவர் ஊடகம் மூலம் வெளிச்­சத்­துக்குக் கொண்டு வந்­தவர்.

சிறீன் அபூ அக்லா 1971 இல் ஜெரு­ச­லத்தில் பிறந்­தவர். இவர் ஜோர்தான் யர்மூக் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊட­க­வியல் துறையில் பட்டம் பெற்­ற­வ­ராவார்.
ஜெனின் அக­திகள் முகாமை இஸ்­ரே­லிய படை­யினர் சுற்­றி­வ­ளைத்­த­போது பலஸ்­தீ­னர்­க­ளுக்கும், இஸ்­ரே­லிய படை­யி­ன­ருக்­கு­மி­டையில் கல­வ­ரங்கள் மூண்­டன. அச்­சந்­தர்ப்­பத்­திலே இஸ்­ரே­லிய படை­யினர் பலஸ்­தீன வீடொன்­றினை சுற்­றி­வ­ளைத்து சிறீனை இலக்கு வைத்­தனர்.

இலங்கை ஒருமைப்பாட்டு குழு கண்டனம்

இஸ்­ரே­லிய படை­யி­னரால் பெண் ஊட­க­வி­ய­லாளர் சிறீன் அபூ அக்லா படு­கொலை செய்­யப்­பட்டமை தொடர்பில் உட­ன­டி­யாக சர்­வ­தேச விசா­ர­ணையை ஆரம்­பிக்­கு­மாறு பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக்குழு கோரிக்கை விடுத்­துள்­ளது.
பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை குழுவின் பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை குழு இஸ்­ரே­லிய படை­யி­னரின் நாக­ரீ­க­மற்ற, கோழைத்­த­ன­மான இந்தச் செயலை தீவி­ர­மாக கண்­டிக்­கி­றது. அத்­தோடு படுகொலை செய்­யப்­பட்ட பலஸ்­தீன ஊட­க­வி­ய­லாளர் சிறீன் அபூ அக்­லாவின் ஜனாஸாவை சுமந்து சென்­ற­வர்கள் மற்றும் அவ­ரது இறுதிக் கிரி­யை­களில் அஞ்­சலி செலுத்­தியோர் மீது இஸ்­ரே­லிய படை­யினர் மேற்­கொண்ட தாக்­கு­த­லையும் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

பலி­யான (உயிர்­நீத்த) உலகப் புகழ்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மீதான திட்­ட­மி­டப்­பட்ட ஸ்னைப்பர் (மறைந்­தி­ருந்து தாக்­குதல்) தாக்­குதல் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான யுத்தக் குற்­றத்­துக்­கான எடுத்­துக்­காட்­டாகும். பலஸ்­தீ­னத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள இஸ்­ரே­லிய படை­யி­னரால் இத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அவ­ரது தலையைக் குறிவைத்து நடாத்தப்பட்ட ஒற்றைத் துப்­பாக்கிச் சூட்­டினால் அவர் பலி­யா­கி­யுள்ளார். அவ­ரது தலைக்­க­வசம் மற்றும் குண்டு துளைக்­காத பாது­காப்பு ஜக்­கட்­டுக்­கு­மி­டை­யி­லான குறு­கிய இடை­வெ­ளி­யிலேயே குண்­டு­ து­ளைத்­துள்­ளது. இந்த இலக்­கினை ஸ்னைப்பர் தாக்­குதல் மூலமே அடைய முடியும்.

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை அமைப்பு பலஸ்­தீ­னர்கள் மற்றும் உலக மக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து ஊட­க­வி­ய­லாளர் அபூ அக்லா பலி­யெ­டுக்­கப்­பட்­டமை தொடர்பில் உட­ன­டி­யாக சுதந்­தி­ர­மான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கி­றது.

அபூ அக்லா பலஸ்­தீனில் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு தொடர்பில் பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக பல­மாக செய்­தி­களைச் சேக­ரித்த முதன்­மை­யான ஊட­க­வி­ய­லா­ள­ராவார். இதற்­கா­கவே இவர் கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தின் விடாப்­பி­டி­யான தன்மை கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மனித உரிமை மீறல்­களில் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வை­களே உள்­நாட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. உள்­நாட்டு விசா­ர­ணைகள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­ன­வல்ல.
இஸ்ரேல் இரா­ணுவம் ஏழு தசாப்த காலத்­துக்கும் மேலாக சட்­டத்­துக்கு முர­ணாக பலஸ்­தீ­னத்தை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டுள்­ளது. நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீன ஊடக பணி­யா­ளர்கள் தங்­க­ளது கட­மையின் போது கால­மா­கி­யி­ருக்­கி­றார்கள் என அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

55 பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொலை
இதே­வேளை, இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­கரை, கிழக்கு ஜெரு­சலேம், தடைகள் விதிக்­கப்­பட்­டுள்ள காஸா பகு­தி­களில் இஸ்­ரே­லிய படை­யினர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 55 பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொலை செய்­துள்­ள­தாக பலஸ்தீன் விடு­தலை இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

ஊட­க­வி­ய­லாளர் சிறீன் அபூ அக்­லாவின் கொலைக்கு உல­க­ளா­விய ரீதியில் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீன விடு­தலை இயக்கம் (PLO) தனது சமூக ஊடக பதிவில் இஸ்­ரே­லிய படை­யினர் 2000 ஆண்டு முதல் 55 பலஸ்தீன ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கொலை செய்­துள்­ள­தா­கவும் 16 பலஸ்தீன் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சிறையில் அடைத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
அதே­வேளை இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் லியோர் ஹைடாட் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தாம் பரி­சீ­லனை செய்­வ­தாக அன­டொலு ஏஜென்சி (AA) க்குத் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்கள் நாட்டில் நடை­பெறும் ஆர்ப்­பாட்­டங்­களை துணி­க­ர­மாக வெளிக்கொண்டு வருகின்றனர் என எல்­லை­க­ளற்ற நிரு­பர்கள் அமைப்பு தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இவ்­வாறு துணி­க­ர­மாக பணி­யாற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இஸ்­ரே­லிய படை­யி­னரால் பல்­வேறு இன்­னல்­க­ளுக்­குள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்.
தடுத்து வைத்தல், அவர்­க­ளது ஊடக உப­க­ர­ணங்கள் சேதங்களுக்கு உள்­ளாக்­கப்­படல் மற்றும் ஊடக அடை­யாள அட்டை இரத்துச் செய்­யப்­படல் போன்ற நட­வ­டிக்­கைகள் அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதே­வேளை இஸ்­ரே­லிய படை­யினர் ஆர்ப்­பாட்­டங்­களில் தலை­யி­டு­வதால் காயங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர்.

காஸா எல்லையில் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பலஸ்தீன ஊடகவியலாளர்கள் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி கொல்லப்பட்டார்கள். இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியே இவர்கள் கொல்லப்பட்டனர்.

அன­டொலு ஏஜன்ஸி (AA)படப்­பி­டிப்­பாளர் (Cameraman) மெடின் யுக்சல் கயா, அலி­க­டல்லா உட்­பட பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது இஸ்­ரே­லிய படை­யினர் துப்­பாக்கி சூடு மேற்­கொண்­டதால் காயங்­க­ளுக்­குள்­ளா­கினர்.

காஸா எல்­லையில் இஸ்­ரே­லிய படை­யினர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் கார­ண­மாக ஒரு சில பலஸ்தீன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தங்கள் கண்­பார்­வையைக் கூட இழந்­தனர்.

துப்­பாக்கி ரவை­க­ளி­லி­ருந்து வெளி­யான துகள்கள் கார­ண­மா­கவே அந்­நி­லைமை ஏற்­பட்­டது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்ட வான் தாக்­குதல் கார­ண­மாக பலஸ்­தீன ஊட­க­வி­ய­லாளர் யூசுப் அபு ஹுசைன் கொல்­லப்­பட்டார்.
இவ்­வாறு பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் முன்­னெ­டுக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச உரிமைசார் அமைப்புகள் முன்வர வேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.