“ஹஜ் ஏற்பாடுகள் ஒருவார காலத்தில் பூர்த்திசெய்யப்படும்”

0 309

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்சின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அமைச்சின் ஆலோ­சனை கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

ஹஜ் விவ­காரம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரு ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. இதன் இரண்டாம் கட்­ட­மாக திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 86 ஹஜ் முக­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்று நாளை வெள்­ளிக்­கி­ழமை திணைக்­க­ளத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் வழ­மை­யாக சவூதி அரசு மற்றும் திணைக்­கள அதி­கா­ரிகள் கையொப்­ப­மிடும் உடன்­ப­டிக்கை இவ்­வ­ருடம் இணை­ய­வ­ழியில் கையொப்­ப­மி­டப்­ப­ட­வுள்­ளது.
ஹஜ் யாத்திரை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் ஒருவார காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.