நெருக்கடி நிலைமையை தீர்க்க முஸ்லிம்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்

என்.எம்.அமீன் தெரிவிப்பு

0 106

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
எமது நாடு தற்­போது பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டிக்குள் சிக்­குண்­டுள்ள நிலையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தூர­நோக்­கு­டனும் பொறுப்­பு­டனும் செயற்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். இன்று முஸ்­லிம்கள் கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று சிந்­திக்க வேண்­டிய காலத்தில் இருக்­கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார்.

நாட்டின் இன்­றைய அர­சியல், பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­மையில் முஸ்­லிம்­களின் வகி­பாகம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; ‘இலங்கை வர­லாற்றில் என்­றுமே எதிர்­பார்க்­காத அர­சியல், பொரு­ளா­தார நெருக்­கடி நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்­தையும், புத்தி ஜீவி­க­ளி­னதும், பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளி­னதும் வழி­காட்­டல்­க­ளையும், கருத்­து­க­ளையும் மதிக்­காது தமக்கு பெரும்­பான்மை பலம் இருக்­கி­றது என்று ஆட்சி செய்­த­மை­யி­னாலே இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த ஏதேச்­சாதி­கா­ர­மான ஆட்­சி­யினால் இன்று எல்லா மக்­களும் கஷ்­டப்­ப­டு­கி­றார்கள். இந்­நாட்டின் துயரம் நீங்க வேண்டும். அனைத்து மக்­களுக்கும் விமோ­சனம் கிடைக்க வேண்டும். இதே வேளை கடந்த காலங்­களில் இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களால் இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தான் இதற்­குக்­கா­ரணம். இது இறை­வனின் சாபம் என சிலர் கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கி­றார்கள். அவ்­வா­றான கருத்­து­களை நாம் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.

இன்று எல்­லோ­ருமே துய­ரங்­க­ளையும், கஷ்­டங்­க­ளையும் அனு­ப­விக்­கி­றார்கள். முஸ்­லிம்கள் இன்­றைய சூழலில் கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் சிந்­திக்­க­வேண்டும். எங்­க­ளது செயற்­பா­டுகள் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத­வு­கின்ற வகையில் அமைய வேண்டும். அனைத்து அர­சியல் கட்­சி­களும் இந்­நி­லைமை தங்­க­ளது அர­சி­ய­லுக்கு கிடைத்­தி­ருக்­கின்ற ஒரு சந்­தர்ப்பம் என சுய­ந­ல­மாக நினைக்­கக்­கூ­டாது. குறிப்­பிட்ட காலத்­துக்கு கட்சி வேறு­பா­டு­களை மறந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்ப ஒன்­று­பட்டு ஒத்­து­ழைக்க வேண்டும்.

கடந்த காலங்­களில் இன­வாதம் மற்றும் மத­வாதம் மேலோங்கும் வகையில் சில அர­சியல் கட்­சி­களும், மதக்­கு­ழுக்­களும் இயங்­கின. இந்த நிலைமை தற்­போது மாறி வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது. எல்­லோரும் நாடு என்ற வகையில் ஒன்றுபட்­டு ­வ­ரு­வதை நாம் சாத­க­மாக நோக்­க­வேண்டும்.

இன்­றுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி உட­ன­டி­யாக தீர்க்­கப்­பட்டு நாட்­டுக்குப் பொருத்­த­மான அர­சியல் யாப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். 30 வரு­ட­கால யுத்­தத்­திற்குப் பிறகு நாட்டில் நல்ல சூழ்­நிலை உரு­வா­கு­மென்று நாம் எதிர்­பார்த்தோம். ஆனால் அந்­நி­லைமை உரு­வா­க­வில்லை. சிறு­பான்மை மக்­க­ளி­டையே நம்­பிக்­கை­யின்­மையே காணப்­ப­டு­கி­றது.

இந்­நி­லைமை மாற­வேண்டும். முஸ்லிம் அர­சியல் வாதிகள் மற்றும் புத்தி ஜீவிகள் தங்­க­ளது பங்­க­ளிப்பை வழங்­க­வேண்டும்.

அண்மைக் கால­மாக முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு உதவ முன்­வந்­துள்­ளன. இதனை நாம்­வ­ர­வேற்க வேண்டும். இது எமது தாய்­நாடு, வெளி­நா­டு­க­ளி­லி­ருக்கும் இலங்கை முஸ்­லிம்கள் நெருக்­கடி நிலை­மையைத் தவிர்ப்­ப­தற்கு தங்­க­ளது பங்­க­ளிப்பை வழங்­க­வேண்டும். இதன் மூலம் எமது நாட்டின் ஏனைய சமூ­கத்­தி­ன­ரதும் வாழ்க்­கையில் மலர்ச்சி ஏற்­படும்.

சில நேரங்­களில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஓரி­ருவர் சமூ­கத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வு­களை இடு­கின்­றனர். இது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். இதனால் சட்­டத்­தின் பிடியில் சிக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டுவர். விமர்­சிக்கும் ஜன­நா­யக உரிமை எல்லை மீறக்­கூ­டாது. தனி ஒருவர் செய்யும் செயல் சமூகம் சார்ந்­த­தா­கவே பார்க்­கப்­படும். எனவே அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும் என்றார்.

பொரு­ளா­தார நெருக்­கடி நீங்க பள்­ளி­வா­சல்கள் ஊடாக விவ­சாயம் ஊக்­கு­விக்­கப்­ப­ட­வேண்டும். பல பகு­தி­களில் நாம் வெற்­றுக்­கா­ணி­களைப் பார்க்கிறோம். இது நாம் நாட்டுக்குச் செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.

பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் – குறைந்த பட்சம் சமூகத்தை வழி நடாத்த இவர்கள் ஒன்றுபட வேண்டும். சமூகத்துக்கு வழிகாட்டல் அவசியமாகும்.

நாட்டின் நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்கு பேதங்களை மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.