அலி சப்ரி ரஹீமின் வீடு முற்றாக தீக்கிரை

0 506

முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமின் வீட்டின் மீது கடந்த திங்­கட்­கி­ழமை இரவு நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறித்த வீடு முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளது.

கொழும்பில் மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் ஆத­ர­வா­ளர்கள் தாக்­கி­ய­தை­ய­டுத்து நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பொது­மக்­களால் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்­களின் வீடுகள், சொத்­துக்கள் பலவும் தாக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்­நி­லையில், புத்­தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வீட்டின் மீதே இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்லம், அவ­ரது அலு­வ­லகம் என்­பன கடும் சேதங்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்­ளன. மோட்டார் சைக்கிள் உள்­ளிட்ட வாக­னங்­களும் தீயிட்டு கொளுத்­தப்­பட்­டுள்­ளன.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான அலி­சப்ரி ரஹீம், கடந்த பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார்.

இவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர், அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் இன்றுவரை அரசுசார் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.