அஹ்னாப் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்

ஐக்­கிய நாடுகள் சபை செயற்­குழு

0 454

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளரும் இளம் கவி­ஞ­ரு­மான அஹ்னாப் ஜெஸீம் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யா­னது சர்­வ­தேச சட்­டத்தை மீறிய செயற்­பா­டாகும் என ஐக்­கிய நாடுகள் சபை செயற்­குழு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

விசா­ர­ணை­க­ளின்றி நியா­ய­மற்ற முறையில் அஹ்னாப் ஜெஸீம் சிறை வைக்­கப்­பட்­டமை மூலம் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச மனித உரிமை சட்­டத்தை மீறி­யுள்­ளது.
ஐ.நா.சபையின் செயற்­கு­ழு­வி­னது தீர்­மா­னத்தை நாங்கள் வர­வேற்­கிறோம் என Freedom Now சட்ட அலு­வலர் அடம் லேட்மட் (LHEMAT) தெரி­வித்­துள்ளார். அத்­தோடு அஹ்னாப் ஜெஸீம் தொடர்ந்தும் சிறையில் இல்லை.அவர் சுமார் இரண்டு வரு­டங்கள் விசா­ர­ணை­க­ளின்றி தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இது அவ­ரது கருத்துச் சுதந்­திர உரிமை மீறப்­பட்­ட­மையை தெளி­வாக உறு­திப்­ப­டுத்­து­கி­றது. இத­னிலும் மேலாக அவர் தான் எழு­திய கவி­தை­க­ளுக்­காக சிறைத்­தண்­டனை பெறும் நிலை­மையை எதிர்­கொண்­டார். இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்­துக்கு உடன்­ப­டு­மாறும் அஹ்னாப் ஜெஸீம் மேல­திக சட்ட ரீதி­யான தொந்­த­ர­வு­க­ளுக்கு உள்­ளா­க­ம­லி­ருப்­பதை உறு­தி­செய்­யு­மாறும் வேண்­டிக்­கொள்­கிறோம் எனவும் கோரி­யுள்ளார்.

அஹ்னாப் ஜெஸீம் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு 2019 ஜூலை மாதம் முதல் வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் நக­ரி­லுள்ள தனியார் சர்­வ­தேச பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­றினார். அவர் அங்கு தமிழ் மொழியும், தமிழ் இலக்­கி­யமும் போதித்தார். அவர் பல்­க­லைக்­க­ழக அங்­கத்­தி­ன­ராக இருந்த காலத்­தி­லி­ருந்து மன்­னா­ர­முது அஹ்னப் என்ற புனைப்­பெ­யரில் கவி­தை­க­ளையும் சிறு­க­தை­க­ளையும் வெளி­யிட்டு வந்தார்.

2017இல் அவர் எழு­திய “நவ­ரசம்” என்ற பெயரில் முதன் முதல் கவிதை நூலொன்­றினை வெளி­யிட்டார். இந்த நூல் பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. பொது மக்­களின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யுடன் தொடர்­பு­பட்­ட­வைகள் குறிப்­பாக சமயம், அன்பு, போதை பொருட்கள் மற்றும் இஸ்­லா­மிய வர­லாறு என்­ப­வை­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தன. இந்நூல் அஹ்னாப் ஜெஸீமின் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. நிகழ்வில் சுமார் 1000பேர­ளவில் கலந்து கொண்­டனர்.

2020 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் அஹ்னாப் ஜெஸீமை பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­தனர். மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வாதம் மற்றும் இன ரீதி­யான கொள்­கை­களைக் கற்­பித்­தமை மற்றும் அவ்­வா­றான புத்­த­கங்­களை வெளி­யிட்­டமை எனும் குற்­றச்­சாட்­டுக்­களின் கீழேயே அவர் கைது செய்­யப்­பட்டார்.

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் சந்­தே­கத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களை எது­வித விசா­ர­ணை­க­ளு­மின்றி நீண்­ட­காலம் தடுத்து வைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தது. அஹ்னாப் ஜெஸீம் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்த போது பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டார். அவர் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முதல் 10 மாத­காலம் சட்­டத்­த­ர­ணி­களின் உத­விகள் மறுக்­கப்­பட்­டது.

அதி­கா­ரிகள் ஜெஸீமின் குடும்­பத்தார் ஊடாக ஜெஸீமை பல­வந்­த­மாக குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளச் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டனர். 2021 ஜூன் மாதம் வரை ஜெஸீமை தடுப்­புக்­கா­வலில் வைத்­தி­ருக்­கும்­படி நீதி­மன்றம் எந்த உத்­த­ர­வி­னையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. 2021 நவம்பர் மாதம் வரை அவ­ருக்கு எதி­ராக உத்­தி­யோகபூர்­வ­மாக குற்­றச்­சாட்­டுகள் எதுவும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

கவிதை நூல் தமி­ழிலே எழு­தப்­பட்­டி­ருந்­தது. விசா­ர­ணை­க­ளுக்­காக அந்நூல் மொழி பெயர்க்­கப்­பட்­டது. இந்த மொழி பெயர்ப்பு தமிழ் மொழி நிபு­ணர்­க­ளினால் விமர்­சிக்­கப்­பட்­டது. ஜெஸீமின் கவிதை நூல் எவ்­வாறு வன்­செ­யல்­களைத் தூண்­டு­கி­றது என்­பதை அர­சாங்­கத்­தினால் நிரூ­பிக்க முடி­யா­மற்­போ­னது.

இதற்கு மாறாக ஜெஸீமின் கவிதை நூலில் அடங்­கி­யுள்ள கவிதைகள் ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பினை கண்டிப்பதாக அமைந்திருந்தன. பயங்கரவாத அமைப்புகளுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பிரகடனம் செய்வதாகவும் கவிதைகள் புனையப்பட்டிருந்தன.

அஹ்னாப் ஜெஸீம் 2021 டிசம்பர் மாதம் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார். அவர் 19 மாதங்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ந்தும் நிலு­வையில் உள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.