முத­லா­வது தேசிய விடு­தலைப் போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான சூழல் மலர்ந்­துள்­ளது

0 411

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி, அனைத்து மக்­களின் வாழ்­விலும் மிகுந்த அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்­சியால், பொருட்­களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து, மக்கள் சேமித்து வைத்­துள்ள பணத்தின் பெறு­மதி வேக­மாக குறைந்து வரு­கி­றது. மருந்­துகள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­படும் என்ற அச்சம் அதி­க­ரித்­துள்­ளது.

இர­சா­யன உரங்கள் இன்­மையால் பயிர் விளைச்சல் குறை­வ­டை­வது தவிர்க்க முடி­யா­த­தாகும். அத்­தோடு வெளி­நாட்டு சந்­தை­களின் தேவையை பூர்த்தி செய்ய முடி­யாமல் இலங்­கையின் தேயிலை சந்தை நஷ்­ட­ம­டைந்து வரு­கி­றது. வெளி­நா­டு­களில் இருந்து மூலப்­பொ­ருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்குத் தேவை­யான டொலர்கள் பற்­றாக்­கு­றை­யினால் இலங்­கையின் கைத்­தொ­ழில்­களும் சிறு வணி­கங்­களும் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றன, மேலும் இணை­யத்தைப் பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட வர்த்­தக வாய்ப்­பு­களை இலங்கை இழக்­கி­றது. இவை அனைத்தின் மூலமும், இலங்கை மக்கள் முன்­னெப்­போதும் இல்­லாத இருண்ட கால­கட்­டத்தை எதிர்­நோக்கி உள்­ளார்கள்.

இப்­போது நாம் எதிர்­நோக்­கி­யுள்ள நிலை­மை­களின் இருண்ட பக்­கமே இது. ஆனாலும் இந்த இருண்ட சூழ­லுக்கு ஊடாக மிகவும் பிர­கா­ச­மான வெள்ளிக் கோடொன்று வெளிப்­படத் துவங்­கி­யுள்­ளது. அதுவும் இலங்கை வர­லாற்றில் நாம் என்­றுமே காணாத எமக்கு புதிய எதிர்­பார்ப்­பு­களை துளிர்க்கச் செய்­கிற ஓர் மாற்றம் அது.

கடந்த 100 ஆண்­டு­களில், இத் தீவின் அனைத்து மக்­க­ளையும் ஒன்று போல் பாதிக்கும் பிரச்சி­னை­யொன்று இருந்­த­தில்லை. வறட்சி, தொற்­று­நோய்கள் மற்றும் சுனாமி போன்ற பேர­ழி­வுகள் இருந்­தன, ஆனால் அவை நாட்டில் உள்ள அனை­வ­ரையும் பாதிக்­க­வில்லை. எனவே அவற்றின் பாதிப்பை எல்­லோரும் ஒன்று போல் உண­ர­வில்லை.
எமது நாட்டில் நிகழ்ந்த மக்கள் போராட்­டங்­களை அவ­தா­னித்தால் அவை அனைத்து மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய போராட்­டங்­க­ளா­கவோ அல்­லது நாட்டில் பெரும்­பா­லான மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய போராட்­டங்­க­ளா­கவோ இருக்க வில்லை என்­பது புல­னாகும்.

1948 கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து நாம் விடு­தலை பெற்­றமை அனைத்து மக்­க­ளி­னதும் கூட்டுப் போராட்­டத்தின் விளைவால் அடைந்து கொள்­ளப்­பட்­ட­தொன்­றல்ல. அது ஆங்­கிலம் பேசும் சமூ­கத்தின் உய­ர­டுக்கு மக்­களை பிரதி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஓர் நிகழ்வே அது. அவர்­களின் சொந்த இலா­பங்­களை அடைந்து கொள்ள பேரம் பேசு­வ­துதான் அங்கு நடந்­தது, மாறாக, அவை பொது­மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை பிர­தி­ப­லிக்­க­வில்லை. அதன்பின் நடந்த ஒவ்­வொரு போர்­களும் சிங்­கள பௌத்த மக்­களின் போர்­க­ளா­கவே இருந்­தன. அல்­லது அவை தமிழ் பேசும் மக்­களின் போராட்­ட­மாக, அல்­லது தோட்டத் தொழி­லா­ளர்­களின் போராட்­டங்­க­ளாக அல்­லது தொழிற்­சங்கப் போராட்­டங்­க­ளா­கவே இருந்­தன. எனவே, இந்த போராட்­டங்கள் எதுவும் இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரதும் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­ற­வில்லை.

சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், பர்கர் சமூ­கத்­த­வர்கள், பௌத்த, இந்து, கிறித்­தவ, இஸ்­லா­மிய மதங்­களை பின்­பற்­று­ப­வர்கள் பணக்­காரர், ஏழை போன்ற பாகு­பா­டு­க­ளின்றி அனைத்து மக்­க­ளையும் ஒரு­சேர பாதிக்கும் மிகவும் கடு­மை­யான பிரச்­சி­னை­யொன்று இந்­நாட்டில் எழுந்­தி­ருப்­பது இதுவே முதல் முறை.

அனை­வ­ரையும் பாதித்­துள்ள இப்­போது எதிர் கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­பாக மக்கள் தமக்­கி­டையே அது­வரை இருந்து வந்த எல்லா பிள­வு­க­ளையும் களைந்து அவ்­வ­னைத்து வேறு­பா­டு­க­ளுக்கும் அப்பால் நின்று இன்று அனை­வரும் ஒன்று கூடு­கி­றார்கள். அவர்கள் இது­வரை மக்­களை பிரித்து ஆட்சி செய்து வந்த அநீ­தி­யான ஆட்சிக் கட்­ட­மைப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்­றனர். பல அதி­கார வெறி கொண்ட குடும்­பங்­களின் குழந்­தை­களும் பேரக்­கு­ழந்­தை­களும் நாட்­டி­லுள்ள ஏழை­களின் சொத்­துக்­களை சூறை­யா­டு­வது குறித்து கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

டிஜிட்டல் யுகத்தின் இளைய தலை­மு­றை­யினர், காலி முகத்­திடல் போராட்டக் களத்தில், தங்­களின் எண்ணம் போல் இன வேறு­பா­டுகள் அற்ற, பன்­மு­கத்­தன்­மையை மதிக்கும் ஒரு கனவு தேசத்தின் மாதி­ரியை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். அனை­வரும் ஒன்­றாக வாழக்­கூ­டிய புதிய இலங்­கையை அவர்கள் கனவு காண்­கி­றார்கள்.

எனவே, இத்­தீவின் அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் முத­லா­வது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அவசியமான பின்புலமே இன்று உருவாகியுள்ளது என்று நான் நிச்சயமாக கூறுவேன். முன்பு விவரிக்கப்பட்ட அனைத்து துரதிர்ஷ்டவசமான நிலைமைகளும் கொண்ட இருண்ட காலத்திற்கு உள்ளிருந்து அதை ஊடறுத்து வெளிப்படும் பிரகாசமான வெள்ளிக் கீற்றே இது. எனவே இவ் வாய்ப்பை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்வது எம் அனைவருக்கும் முன்னால் உள்ள தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.