பெளத்த, கத்தோலிக்க வாக்குகளைப் பெறவே ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினர்

பாராளுமன்றத்தில் உண்மைகளை போட்டுடைத்தார் மனுஷ

0 350

ஏ.ஆர்.ஏ.பரீல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மனுஷ நாண­யக்­கார கடந்த 21.04.2022 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.

அருந்­திக பெர்ணான்டோ எம்.பி. இங்கு உரை­யாற்­று­கையில், மதம் தொடர்­பான வசனம் ஒன்­றினைக் கூறி காலி முகத்­திடல் போராட்­டத்தில் அடிப்­ப­டை­வாதம் இருப்­ப­தாகக் கூறினார். கோல்பேஸ் போராட்­டக்­கள பூமியில் அடிப்­ப­டை­வாதம் இல்லை. இந்­நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை துடைத்­தெ­றிவ­தற்­கா­கவே இளை­ஞர்கள் அங்கு ஒன்று கூடி­யி­ருக்­கி­றார்கள் என்­பதை அருந்­திக பர்­ணாந்து புரிந்து கொள்ள வேண்டும்

அவ்­வி­டத்­துக்கு நோன்பு திறப்­ப­தற்­காக வரு­ப­வர்கள் சாப்­பி­டு­வ­தற்கும் குடிப்­ப­தற்கும் இல்­லா­த­வர்கள் என்று கூறி­னீர்கள். அங்கு சென்று நோன்பு திறக்­க­வேண்டாம் என்­றீர்கள். வேறு இடங்­க­ளுக்குச் சென்று நோன்பு திறக்­கும்­படி கூறி­னீர்கள். அங்­கு­வந்து முஸ்­லிம்கள் நோன்பு திறக்கும் போது, மத­கு­ரு­மார்கள் கலந்து கொள்­வதைப் பார்க்கும் போது எங்­க­ளுக்கு ஆசை­யாக இருக்­கி­றது. இதுவே இளை­ஞர்­களின் எதிர்­பார்ப்­பா­கவும் இருக்­கி­றது.

இன, மத வேறு­பா­டு­களின் கீழ் 1956 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்­நாட்டை பிள­வுக்­குள்­ளாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களே இடம்­பெற்­றன. இதைத்தான் இன்று இளை­ஞர்கள் கூறு­கி­றார்கள்.

நாங்கள் இனம், மதம், சாதி­யினால் பிரிந்­தி­ருக்க வேண்டாம். நாம­னை­வரும் ஒன்­றாக ஒன்­றி­ணைவோம் என்­கி­றார்கள் இளை­ஞர்கள். இந்­நாட்டை எப்­போதும் ஏன் இவ்­வாறு கூறு­போட்­டார்கள். அர­சியல் தேவைக்­கா­கவே இவ்­வாறு செய்­தார்கள். சிங்­க­ளத்தை அரச மொழி­யாக்­கி­னார்கள். சிங்­களம் மாத்­திரம் என்­றார்கள். இவை­ய­னைத்­தையும் தங்­க­ளது வயிற்றை நிரப்­பிக்­கொள்­வ­தற்­கா­கவே செய்­தார்கள். அர­சியல் சுய­ந­லத்­துக்­கா­கவே இவை­ய­னைத்­தையும் செய்­தார்கள்.

2015 ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு முன்பு திகன நகரில் கல­வ­ரங்­களை உரு­வாக்­கி­ய­வர்கள் ஞான­சார தேரர் உட்­பட்ட குழு­வி­னரே. தேர்­தலில் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே கல­வ­ரத்தை உரு­வாக்­கி­னார்கள். அத்­தோடு கருத்­தடை கொத்து, கருத்­தடை மார்­புக்­கச்சை என்ற தலைப்­பு­களைக் கூறி, பிர­சாரம் செய்­தமை இன­வா­தத்தைக் கிள­று­வ­தற்­கே­யாகும். தேர்­தலில் பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களைப்  பெற்­றுக்­கொள்­வ­தற்­கே­யாகும்.

2019 இல் ஜனா­தி­பதி தேர்தல் அண்­மிக்­கப்­போ­கி­றது என்று அறிந்­து­கொண்­டதும் இந்­நாட்டில் கருத்­துக்­க­ணிப்பு ஒன்­றினை மேற்­கொள்­வ­தற்கு ஆரம்­பித்­தார்கள். நாங்­களும் கருத்துக் கணிப்­பொன்­றினை ஆரம்­பித்தோம். அந்தக் கருத்­துக்­க­ணிப்பில் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்­கான மக்கள் ஆத­ரவு எந்த நிலையில் இருக்­கி­றது?சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கான மக்கள் ஆத­ரவு எந்­நி­லையில் இருக்­கி­றது? என்­பது வெளிப்­பட்­டது.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிறுத்­தினால் மக்கள் ஆத­ரவு எவ்­வாறு இருக்கும்? சஜித் பிரே­ம­தா­சவை நிறுத்­தினால் மக்கள் ஆத­ரவு எவ்­வாறு இருக்கும்? என்­பதை அறிந்­ததன் பின்பே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நாங்கள் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கினோம்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ சஜித் பிரே­ம­தா­சவை விடவும் மிகவும் பின் நிலை­யிலே இருந்தார். கருத்­துக்­க­ணிப்பில் சஜித் பிரே­ம­தாச கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை விட மிகவும் முன்­னி­லை­யி­லேயே இருந்தார்.

கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­களின் படி இந்­நாட்டில் சிங்­கள மக்­களின் 70 வீத­மான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு  ஜனா­தி­ப­தி­யா­கலாம் என்­பதை அப்­போ­தி­ருந்த ஜனா­தி­பதி உணர்ந்து கொண்டார்.

இத­னை­ய­டுத்தே சிங்­கள பெளத்த வாக்­கு­களை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­ளலாம் என்று திட்­ட­மிட்­டார்கள். ஆயு­தங்கள் வழங்கி, பயிற்சி முகாம்­களில் பயிற்­சிகள் வழங்கி இரா­ணுவம் மற்றும் உளவுப் பிரி­வு­க­ளுக்கு நிய­மனம் வழங்­கி­யி­ருந்த தங்­க­ளது ஆத­ர­வா­ளர்­களை இத்­திட்­டத்­துக்குப் பயன்­ப­டுத்­தி­னார்கள். பிர­த­மரே சம்­பளம் வழங்­கி­ய­தாக ஏற்­றுக்­கொண்ட சஹ்­ரான்­களை சந்­தர்ப்­பத்­தை­ய­றிந்து வெளியில் இறக்­கி­னார்கள். பெளத்த பன்­ச­லை­களைத் தாக்க வேண்­டுமா? அல்­லது கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளைத் தாக்க வேண்­டுமா? என்று சிந்­தித்­தார்கள்.

பெளத்த வாக்­கு­களை எப்­ப­டி­யா­வது பெற்­றுக்­கொள்­ளலாம். இதே­வேளை கிறிஸ்­தவ வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்­மா­னித்­தார்கள். இதுதான் நடந்­தது. கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­களை தாக்­கினால் கத்­தோ­லிக்க வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்று இறு­தியில் முடிவு செய்­தார்கள். இதன் பின்­ன­ணி­யி­லேயே உயிர்த்த ஞாயிறு குண்­டு­தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தற்கு தீர்மானித்தார்கள்.

இத்­தாக்­கு­த­லுக்கு மலே­சி­யா­வி­லி­ருந்தும் உதவி கிடைத்­தது. மலே­சியா அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து உதவி கிடைக்­க­வில்லை.மலே­சி­யா­வுக்கு சென்­றி­ருந்த எமது இலங்­கையர் ஒருவர், இந்­தி­யா­வுக்கும் அவர் சென்­றி­ருந்தார். எமது அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் அவர் மீது குற்­றச்­சாட்­டுகள் இருந்­ததால் பதவி விலக்­கப்­பட்டார். அவர் இலங்­கைக்கு வந்து இந்த தாக்­கு­தலை முறை­யாகத் திட்­ட­மிட்டார். அவர் யார்? அவர் தான் சலே. அவர்தான் இதன் பின்­ன­ணியில் இருந்தார்.

எனது கற்­பனை இது என நீங்கள் நினைக்­கலாம். ஆனால் இதுதான் நடந்த உண்மை. சலே பின்­ன­ணியில் இருக்­கும்­போது நாட்டில் இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இத்­திட்டம் தொடர்­பான தக­வல்கள் வெளி­வந்­தன. இந்தத் தக­வல்கள் வெளி­வந்­ததும் அந்தத்

தக­வல்­களை நிலந்த ஜய­வர்­தன மறைத்துக் கொண்டார். தனது மடிக்­க­ணி­ணியிலிருந்த தகவல்களை அழித்தார். கைய­டக்க தொலை­பேசி காணாமற் போனது என்று கூறினார். அதிலிருந்த தகவல்களையும் அழித்தார். தனது மனை­விக்கு கொடுத்­து­விட்­ட­தாக கூறினார். சர்­வ­தேச விசா­ர­ணைப்­பி­ரி­வினர்  இலங்­கைக்கு வந்­தார்கள். அவர்கள் இந்தச் சம்­பவம் தொடர்பில் ஆராய்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார்கள். அவர்­க­ளது விசா­ர­ணை­களின் இறு­தியில் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு எந்த வெளி­நாட்டு சக்­தி­க­ளி­னதும் தொடர்பு இல்லை என உறுதி செய்­தார்கள். விசா­ர­ணை­களின் மூலம் இதனை அவர்கள் நிரூ­பித்­தார்கள்.

என்ன நடந்­தது? 21 ஆம் திகதி தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­தன. 25 ஆம் திகதி ஆமி ­மொ­ஹிதீன் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்றார். அங்கு அவர் மாத்­தளை சஹ்­ரா­னையும் சந்­தித்தார். அங்­கி­ருந்து ஐஎஸ் ஐஎஸ்க்கு பேசி ‘நாங்கள் தான் தாக்­கு­தலை நடத்­தினோம்’ என்று உத்­த­ரவு ஒன்­றினைப் பெற்­றுக்­கொண்டார். வீடி­யோவை முதலில் அனுப்பி வையுங்கள் என்று ஐஎஸ்ஸை கோரினார்.

ஆமி­ மொ­ஹிதீன் யாரென தேடிப்­பார்த்து அவர் கைது செய்­யப்­பட்டார். சானி அபே­சே­கர சென்று ஆமி­ மொ­ஹி­தீனைக் கைது செய்து சி.ஐ.டி.க்கு அழைத்து வந்தார். என்ன நடந்­தது? இது எங்­க­ளது புரஜக்ட் என்று ஆமி­ மொ­ஹி­தீனைக் கொண்டு சென்­றார்கள்.

அப்­படி என்றால் இது யாரி­னது புரஜெக்ட் (திட்டம்).  இது இரா­ணு­வத்தின் திட்டம் என்று நாங்கள் கூற­வில்லை. இதனை இரா­ணுவ தள­பதி அறிந்­தி­ருக்­க­வு­மில்லை.

இது நிச்­ச­ய­மாக பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வான முன்னாள் உள­வுப்­பி­ரிவைச் சேர்ந்த குழு­வொன்றே இதில் தொடர்­பு­பட்­டுள்­ளது என்­பது தெளி­வாக நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. நிலந்த ஜய­வர்­தன இந்தத் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தாமை தொடர்பில் நாம் அன்று எல்லா இடங்­க­ளிலும் கூறினோம். நாம் இந்தத் தக­வல்­களைக் கூறி­ய­போது எமது வாயை அடைப்­ப­தற்கு முயற்­சித்­தார்கள். இன்று மீண்டும் நிலந்த ஜய­வர்­த­னவை குற்­ற­வா­ளி­யாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். ஏனென்றால் அவர்­க­ளுக்கு இப்­போது சாட்­சி­யங்கள் வேண்டும். அவர்­க­ளுக்கு வாக்கு மூலம் வேண்டும்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­லி­ருந்து மறு­பக்கம் போய் அமர்ந்த பின்பு இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது இந்தப் பழியைச் சுமத்­து­வ­தற்கு முயற்­சித்து வரு­கி­றார்கள். இதனை ஏற்­றுக்­கொள்­ளாது விட்டால் நிலந்த ஜய­வர்­த­னவை சிறை செல்­லு­மாறு கூறு­வ­தற்கு தயா­ரா­குங்கள். தேச­பந்து தென்­னகோன் இப்­போது எங்­கி­ருக்­கிறார். ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அவர் இச்­சம்­ப­வத்தின் பிர­தி­வாதி எனத் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்­ளது. இன்று இவ்­வி­டயம் சிஐ­டிக்கு பொறுப்புக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இது பற்றிப் பேசிப் ­ப­ய­னில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலைத் தடுப்ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முடி­யா­மற்­போ­னது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலை நல்­லாட்சி அர­சாங்கம் தடுக்காதிருக்கும் வகையில் நிலந்த ஜய­வர்­த­ன­வுக்கு அப்பால் தக­வல்கள் செல்லக் கூடாது என யாரது தேவைக்­காக திட்­ட­மி­டப்­பட்­டது. இவை­ய­னைத்தும் 52 நாள் ஆட்­சி­யிலே ஆரம்­பிக்­கப்­பட்­டது. 52 நாளில் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கு முயற்­சித்­தார்கள். சூழ்ச்சி செய்­தார்கள். ஆனால் அது முடி­யா­மற்­போ­னது. முடி­யா­மற்­போ­ன­த­னா­லேயே பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்­துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவும் அழைக்கப்படவில்லை.

இராஜாங்க அமைச்சர் அழைக்கப்படவுமில்லை. பொலிஸ்மா அதிபர் அழைக்கப்படவுமில்லை. அவ்வாறு அழைக்கப்படாமை ஒரு திட்டமிட்ட செயலாகும். மஹிந்த ராஜபக்ஷ வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என மைத்திரிபால சிறிசேனவும் நினைத்தார். எனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரச்சினை இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இணைந்து கொண்டால் நல்லது என அவர் நினைத்தார். மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றி அவரையும் நாட்டிலிருந்து அனுப்பிவிட்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதான சூத்திரதாரி யார் என நாம் அன்று வினவினோம். பிரதான சூத்திரதாரியை இனங்காணுவதே எமது முயற்சியாக உள்ளது என்பதை நாம் கூறுகிறோம்.
யாரை ஆட்சியில் அமர்த்துவதற்கு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது? நூற்றுக்கு 60 வீதம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கும் கத்தோலிக்க மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டதென்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவார்கள் என்றார்.– Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.