மஜ்மா நகர் மையவாடி முழு உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது

சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி டாக்டர் அன்வர் ஹம்தானி

0 1,489

கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை நாட்டின் எப்­ப­கு­தி­யிலும் உள்ள மைய­வா­டி­களில் அடக்கம் செய்ய முடியும் என சுகா­தார அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந் நிலையில் சுகா­தார அமைச்சின் கொவிட் 19 விவ­கா­ரங்­க­ளுக்­கான இணைப்­பா­ள­ரா­கவும் ஓட்­ட­மா­வ­டியில் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணி­களின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கவும் செயற்­பட்ட டாக்டர் அன்வர் ஹம்­தா­னியைச் சந்­தித்து இத் தீர்­மானம் மற்றும் அதன் பின்­னணி தொடர்பில் உரை­யா­டினோம். அவர் விடிவெள்ளிக்கு வழங்­கிய செவ்வி வரு­மாறு :

கொவிட் சட­லங்­களை நாட்டின் எப்­பா­கத்­திலும் அடக்கம் செய்­யலாம் என அனு­ம­தி­ய­ளிக்கும் தீர்­மானம் சடு­தி­யாக எடுக்­கப்­பட்­டதா?
இல்லை. இது குறித்து கடந்த பல மாதங்­க­ளாக ஆரா­யப்­பட்­டது. கடந்த டிசம்பர் மாதம் கூடிய சுகா­தார அமைச்சின் விஞ்­ஞான, தொழில்­நுட்பக் குழு சட­லங்­களை அடக்கம் செய்­வது தொடர்­பான விட­யங்­களை மீளாய்வு செய்­தது. இதன்­போது பல்­வேறு தரப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் விடுக்­கப்­பட்ட கோரிக்­கைகள் மற்றும் விஞ்­ஞான ரீதி­யான கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே கொவிட் சட­லங்­களை ஓட்­ட­மா­வ­டியில் மாத்­தி­ர­மன்றி நாட்டின் எப்­பா­கத்­திலும் அடக்கம் செய்ய அனு­ம­திப்­பது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அவ்­வா­றெனின் இதற்­கான சுகா­தார வழி­காட்­டல்கள் என்ன?
நாம் கடந்த வாரம் வெளி­யிட்ட சுற்று நிரு­பத்தில் இதற்­கான வழி­காட்­டல்கள் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

கொவிட் தொற்று இனங்­கா­ணப்­பட்ட 7 நாட்­க­ளுக்குள் ஒருவர் மர­ணித்தால் அவ­ரது உற­வி­னர்கள் 10 முதல் 12 பேர் வரை வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று இறுதிக் கிரி­யை­களை மேற்­கொள்ள முடியும். பின்னர் சட­லத்தை வீட்­டுக்கு கொண்டு செல்­லாது நேர­டி­யாக அடக்­கவோ அல்­லது எரிக்­கவோ முடியும். சட­லத்­திற்­கான பெட்டி மற்றும் போக்­கு­வ­ரத்துச் செல­வு­களை குடும்­பத்­தி­னரே பொறுப்­பேற்க வேண்டும்.

உதா­ர­ண­மாக, கொழும்­பி­லுள்ள முஸ்லிம் நபர் ஒருவர் கொவிட் தொற்­றினால் மர­ணித்தால் அவரை மாளி­கா­வத்தை மைய­வா­டியில் அடக்கம் செய்­யலாம். நாம் வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றி விரும்­பிய மைய­வா­டி­களில் அடக்கம் செய்யும் பணி­களை முன்­னெ­டுக்­கலாம்.

அதே­போன்று சட­லங்­களை தமது சமய வழி­மு­றை­க­ளின்­படி எரிக்க விரும்­பு­ப­வர்கள் தாம் விரும்­பு­கின்ற சுட­லை­க­ளுக்குக் கொண்டு சென்று எரிக்­கலாம். ஆரம்­பத்தில் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கி­லுள்ள சுட­லை­களில் மாத்­தி­ரமே எரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் கொவிட் சட­லங்­களை வீடு­க­ளுக்கு எடுத்துச் செல்ல அனு­மதி வழக்­கப்­ப­ட­வில்லை. மரணம் நிகழ்ந்து 24 மணி நேரத்­தினுள் அடக்கம் செய்­யப்­பட வேண்டும் அல்­லது எரிக்க வேண்டும்.

ஒருவர் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்­பது இனங்­கா­ணப்­பட்ட 7 நாட்­க­ளுக்குள் அவர் மர­ணித்தால் அவரை 24 மணி நேரத்­தினுள் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து நேர­டி­யாக மைய­வாடி அல்­லது சுட­லைக்கு கொண்டு செல்ல வேண்டும். மாறாக கொவிட் தொற்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு 7 நாட்­க­ளுக்குப் பின்னர் மர­ணித்தால், அவர் கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வ­ராக இனங்­கா­ணப்­ப­ட­மாட்டார். அவரை சாதா­ர­ண­மான மரணம் போன்று வீடு­க­ளுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய முடியும்.

ஓட்­ட­மா­வ­டியில் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணியை சுகா­தார அமைச்சின் சார்பில் ஒருங்­கி­ணைத்­தவர் என்ற வகையில் அது பற்­றிய அனு­ப­வத்தைக் கூறுங்கள்?
2021 மார்ச் 5 ஆம் திகதி முதல் 2022 மார்ச் 5 ஆம் திகதி வரை கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்யும் பணிகள் ஓட்­ட­மா­வ­டியில் இடம்­பெற்­றன. இப் பணி­களை சுகா­தார அமைச்சின் சார்பில் நானே ஒருங்­கி­ணைத்தேன். இக் காலப்­ப­கு­தியில் எல்லா சமூ­கங்­க­ளையும் சேர்ந்த 3634 பேரின் உடல்கள் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் – 2992, பௌத்­தர்கள் – 287, இந்­துக்கள் – 270, கிறிஸ்­த­வர்கள் – 85 என்ற ரீதியில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர். ஆண்கள் 2225 பேரும் பெண்கள் 1409 பேரும் இதில் அடங்­குவர்.

இது உண்­மையில் ஒரு கஷ்­ட­மான பணி. மக்­களின் உணர்­வு­க­ளுடன் ஒன்­றித்த விடயம். எனினும் இவற்­றுக்கு மத்­தியில் இப் பணியை நாம் முடிந்­த­ளவு நேர்த்­தி­யாக செய்­துள்ளோம்.

இப் பணியை முன்­னெ­டுப்­பதில் பல தரப்­பினர் பங்­க­ளிப்­பு­களை வழங்­கி­யுள்­ளனர். அது பற்றி?
இதில் பல்­வேறு தரப்­பி­னரின் பங்­க­ளிப்பு உள்­ளது. அவர்­க­ளுக்கு இந்த இடத்தில் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன்.

ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் மற்றும் செய­லாளர் ஆகியோர் இந்த வேலைத்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் மிகப் பாரிய ஒத்­து­ழைப்பை வழங்­கி­னார்கள். இரவு பக­லாக எந்­த­வித சளைப்­பு­மின்றி அவர்கள் இந்தப் பணியில் ஈடு­பட்­டார்கள். இதில் மஜ்மா நகர் மக்­களின் ஒத்­து­ழைப்­பையும் மறந்­து­விட முடி­யாது.
நாட­ளா­விய ரீதியில் சுமார் 10 இணைப்­பா­ளர்கள் தொண்­டர்­க­ளாக செயற்­பாட்­டா­ளர்கள். அவர்­க­ளி­ட­மி­ருந்தே கொவிட் மர­ணங்கள் குறித்த தக­வல்கள் எனக்கு கிடைக்கும்.

அடுத்­த­தாக இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு நான் விசே­ட­மாக நன்றி கூற வேண்டும். அவர்கள் மிகவும் சிறப்­பான பங்­க­ளிப்பை இது­வி­ட­யத்தில் வழங்­கி­யுள்­ளார்கள்.

ஓட்­ட­மா­வ­டிக்கு சட­லங்­களை கொண்டு செல்லும் பணிகள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதில் இரா­ணு­வத்­தினர் என்ன பங்­க­ளிப்பை வழங்­கி­னார்கள்?
இரா­ணு­வத்­தினர் மிகவும் பொறு­மை­யு­டனும் ஒழுக்­கத்­து­டனும் இப் பணி­களை முன்­னெ­டுத்­தனர்.

மர­ணங்கள் நிகழும் நேரத்தை எம்மால் கணிக்க முடி­யாது. சில நாட்­களில் ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு செல்ல வேண்­டிய சட­லங்­களின் பெயர் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு அனைத்தும் தயா­ரான பின்­னரும் மர­ணங்கள் நிகழும். பின்னர் அந்த சட­லங்கள் வரும் வரையும் பொறு­மை­யோடு காத்­தி­ருந்து இரா­ணு­வத்­தினர் அவற்றை கொழும்­பி­லி­ருந்து எடுத்துச் செல்­வார்கள்.

உதா­ர­ண­மாக ஒரு நாளில் 10 சட­லங்கள் சேர்ந்தால் அவற்றைக் கொண்டு செல்­வ­தற்­கான அனு­ம­தியை நான் வழங்­குவேன். அந்த 10 சட­லங்­க­ளையும் கொண்டு செல்லக் கூடிய வச­தி­யுள்ள வாக­னத்தை இரா­ணு­வத்­தினர் தயார்­ப­டுத்தி அவற்றில் சட­லங்­களை ஏற்­று­வார்கள். 11 ஆவது சடலம் வந்­து­வி­டு­மானால் நாம் அதனை விடப் பெரிய வாக­னத்தை தயார் செய்ய வேண்டும். மீண்டும் சட­லங்­களை அதற்கு மாற்ற வேண்டும். ஒரு வருட கால­மாக இடம்­பெற்ற இந்தப் பணி இல­கு­வா­ன­தல்ல. இரா­ணு­வத்­தினர் முகம்­சு­ழிக்­காமல் இதனைச் செய்­தார்கள்.

கொழும்­பி­லி­ருந்து சட­லங்­களை ஏற்­றிய வாகனம் சரி­யாக காலை 7 மணிக்கு ஓட்­ட­மா­வடி நோக்கிப் புறப்­படும். அன்­றி­ரவு 2 மணி­ய­ளவில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதனை 7 மணிக்குள் கொண்டு வந்து சேர்ப்­பது கடினம். அதனால் சில சம­யங்­களில் 8.30 மணி வரை காத்­தி­ருந்து கொண்டு செல்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும். இவ்­வாறு நெகிழ்­வுத்­தன்­மை­யு­டனே இந்த விட­யங்கள் கையா­ளப்­பட்­டன.

இது விட­யத்தில் கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், கண்டி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், நாட­ளா­விய ரீதியில் உள்ள ஜனாஸா சங்­கங்கள், மேலும் பல தொண்டு நிறு­வ­னங்கள், குழுக்கள் பங்­க­ளிப்புச் செலுத்­தின. இவர்கள் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு கிடைத்­தி­ருக்­கா­விடின் இதனை வெற்­றி­க­ர­மாக செய்­தி­ருக்க முடி­யாது. அவர்கள் அனை­வ­ருக்­கு­மான கூலிகள் நிச்­சயம் இந்த உல­கிலும் மறு உல­கிலும் கிடைக்கும்.

மஜ்மா நகரில் காணியை வழங்­கிய மக்­க­ளுக்கு நஷ்­ட­யீ­டுகள், உத­விகள் வழங்­கப்­ப­டுமா? ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தமக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து உத­விகள் கிடைக்­க­வில்லை எனக் கூறு­கி­றதே?
சட­லங்கள் அடக்கம் செய்ய தெரிவு செய்­யப்­பட்ட காணி வெற்று நிலம். அது அர­சாங்­கத்­திற்குச் சொந்­த­மா­னது. இந்த நிலம் பிர­தேச சபைக்குச் சொந்­த­மா­னது எனில் அதனை அபி­வி­ருத்தி செய்யத் தேவை­யான நிதியை அவர்கள் தேசிய கொவிட் செய­ல­ணி­யிடம் கோர முடியும்.

எனினும் கடந்த காலங்­களில் இந்தப் பணியை முன்­னெ­டுப்­ப­தற்கு நிதித் தேவைகள் ஏற்­பட்­ட­போது பல தன­வந்­தர்கள் மூல­மாக அவற்றைப் பூர்த்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை நாம் செய்து கொடுத்தோம். எனக்கு ஊடா­கவும் அவ்­வா­றான நிதி உத­விகள் வழங்­கப்­பட்­டன.

நான் மூன்று தட­வைகள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நக­ருக்கு விஜயம் செய்­துள்ளேன். இதன்போது அங்குள்ள பிரச்சினைகள் எனக்கு கூறப்பட்டன. அவற்றுக்கான தீர்வுகள் தனவந்தர்கள், நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் இந்த மையவாடி எவ்வாறு நிர்வகிக்கப்படவுள்ளது?
இந்த மைய­வா­டியைச் சூழ மதில் நிறு­வப்­ப­ட­வுள்­ள­துடன் அத­னோ­டி­ணைந்­த­தாக ‘தேசிய கொவிட் 19 நல்­ல­டக்க பூமி’ என்ற வகையில் ஞாப­கார்த்த சின்­னமும் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.

சகல சம­யங்­க­ளையும் சேர்ந்த மக்கள் இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளதால் உல­கி­லேயே ஒரு முன்­மா­தி­ரி­மிக்க அடக்­கஸ்­த­ல­மாக இது வர­லாற்றில் பதிவு செய்­யப்­படும் என நம்­பு­கிறேன். இவ்­வா­றான ஒரு அடக்­கஸ்­தலம் உலகின் வேறு எங்கும் இருப்­ப­தாக நான் அறி­ய­வில்லை.

அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளது உற­வி­னர்கள் மைய­வா­டிக்கு விஜயம் செய்­யவும் தமது உற­வு­க­ளுக்­காக பிரார்த்திக்கவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.