ஹிட்லரின் போதனையும் தலைமைத்துவ வழிபாடும்

0 578

மூலம்: திஸரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்

அஸ்­கி­ரிய பீடத்தின் உதவித் தலைவர் வெண்­ட­ருவே உபாலி தேரர் ஹிட்­ல­ராக மாறி­யேனும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­மாறு கோட்­டா­பய ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை கூறினார். இந்தப் போதனை நடை­பெற்­றது 2018 இல் ஆகும். மனித வர­லாற்றில் மிகப் பயங்­க­ர­மான மனிதப் படு­கொ­லையை உதா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ளு­மாறு போதனை செய்­வது பௌத்த தத்­து­வத்­துக்கு எவ்­வ­ளவு தூரம் பொருந்தும் என்­பதை உபாலி தேரர் தான் விளக்க வேண்டும்.

உபாலி தேரரின் போத­னைக்கு அர­சியல் சமூ­கத்­தி­லி­ருந்து துலங்கல் கிடைக்­கா­விட்­டாலும் இணை­யத்­த­ளத்தில் அத்­த­கைய பதில்கள் காணப்­பட்­டன. அத்­த­கைய துலங்­கல்கள் அனே­க­மாக நகைச்­சுவை கலந்த கலாய்ப்­பு­க­ளா­கவே இருந்­தன. அந்த ஜோக்­கு­களின் சார­மாக அமைந்த விடயம் யாதெனில் உபாலி தேரர் லீக்­குவான் யூ வையும் ஹிட்­ல­ரையும் போட்டுக் குழப்பிக் கொண்டார் என்­ப­தாகும்.

ஹிட்லர் சோதனை மூலமும் அதற்கு சமூ­கத்தில் இருந்து கிடைத்த அச­மந்­த­மான துலங்­களில் இருந்தும் தெரி­ய­வ­ரு­வது யாதெனில் ஹிட்­லரின் நாசிசம் பற்­றிய எமது விளங்­கா­மை­யாகும். ஹிட்­லரின் நோக்கின் படி மனித சமூகம் உயர் மானிடர் (Übermensch) கீழ் மானிடர் (Untermensch) என வகைப்­ப­டுத்­தப்­பட்­டது. பூமியின் உண்­மை­யான உரித்­தா­ளிகள் உயர் மானி­டரே. கீழ்­மா­னிடர் வகையில் சேர்வோரை நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாகக் கொலை செய்ய வேண்டும். அப்­ப­டி­யின்றேல் நிரந்­தர அடி­மை­க­ளாக மாற்­ற­வேண்டும் யூதர்கள், ரோமர்கள் (Gypsies) மட்­டு­மன்றி ஸ்லோவி­யர்­க­ளான ஐரோப்­பி­யர்­களும் கீழ் மானி­டர்­க­ளி­லேயே சேர்க்­கப்­பட்­டனர். ஹிட்­லரின் கோட்­பாட்டின் படி கறுப்பு மற்றும் பொது நிற மக்­களும் கீழ்­நிலை மானி­ட­ரா­கவே மதிக்­கப்­ப­டு­வ­தனால் அவர்­க­ளையும் கொலை செய்யச் சிபா­ரிசு செய்­கிறார் ஹிட்லர். இரண்டாம் உலக மகா யுத்­தத்தில் ஹிட்லா; வெற்றி பெற்­றி­ருப்பின் இலங்­கையோ சிங்­க­ள­வரோ புத்த மதமோ இப்­பூ­மியில் நிலைத்­தி­ருக்­காது.

ஹிட்லர் மற்றும் நாசிசம் தொடர்­பான மற்­று­மொரு முக்­கிய விடயம் யாதெனில் அவர் மனித வர­லாற்றில் தோன்­றிய மிக மோச­மான ஒரு ஆட்­சி­யாளர் என்­ப­தாகும். ஆயிரம் வரு­டங்கள் நீடித்­தி­ருக்கும் ஒரு ஆட்­சியை (thousand year Reich) உரு­வாக்­கு­வதே தமது நோக்கம் என்றும் அவர் வாய்ச் சவால் விட்டார். தனது பலம் பற்றி அவ­ரிடம் இருந்த கருத்­தா­வது இரண்டாம் உலக யுத்­தத்தில் வென்ற பின்னர் உலகத் தலை­ந­க­ராக மாறப்­போகும் பர்லின் நக­ரத்தின் வடி­வ­மைப்பு பற்­றிய படங்­கiயும் திட்­டங்­க­ளையும் கூட அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

ஹிட்­லரின் 1000 வருட ஆட்சிக் கனவு 12 வரு­டங்கள் மட்­டுமே நீடித்­தி­ருந்­தது. அவர் பத­விக்கு வரும்­போது பொரு­ளா­தாரச் சீர­ழிவில் இருந்து ஓர­ளவு ஜேர்­மனி; மீண்டு வரும் கால­மாக இருந்­தது. அவரின் ஆட்சி முடிவில் ஜேர்­மனி சின்­னா­பின்­னப்­பட்டு நான்கு இரா­ணு­வங்­களின் கீழ் ஆளப்­படும் இரண்டு துண்­டு­க­ளாக மாறி­யது. ஹிட்­லரின் 12 வருட ஆட்­சியால் ஜேர்­ம­னிக்குக் கிடைத்த நன்மை என்று எதுவும் கிடை­யாது. எஞ்­சி­ய­தெல்லாம் பேர­ழிவும் மர­ணமும் தான். சுதந்­திரம், தன்­னா­திக்கம் மற்றும் நாட்டின் எல்­லைகள் கிழிக்­கப்­பட்டு அப­கீர்த்­திக்கு உட்­பட்­டது தான் மிச்சம். ஹிட்­ல­ராக வர முயற்­சிக்கும் ஒரு­வ­ருக்கு ஜேர்­ம­னியில் என்றால் மக்கள் வாக்­க­ளிப்பு மூலம் பத­விக்கு வர முடி­யாது.

ஹிட்­லரின் போத­னையின் அடிப்­படை அறி­யா­மை­யாகும். ஹிட்லர் ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பிய தலைவர் அல்ல. ஒரு நாட்டை அழித்­தொ­ழித்த தலைவர். ஹிட்லர் ஒரு நாட்டை உலக சமூ­கத்தில் உயர்த்தி வைத்த, பலப்­ப­டுத்­திய ஒரு தலைவர் அல்ல, நாட்டை நிர்­மூ­ல­மாக்கி அந்­நிய நாடு­க­ளுக்கு அடி­மைப்­ப­டுத்­திய ஒரு தலைவர். ஹிட்லர் சுபீட்­சத்தின் அல்­லது அபி­வி­ருத்­தியின் சின்­ன­மல்ல, மாறாக மர­ணத்­தி­னதும், அழி­வி­னதும் சின்னம். ஒரு தலைவர் ஹிட்­லரை எடுத்­துக்­காட்­டாக கொண்டால் அவரை முப்­பத்து மூன்று கோடித் தேவர்­க­ளாலும் கூட காப்­பாற்ற முடி­யாமற் போகும்.

பிர­பல எழுத்­தாளர் சுக­த­பால டி சில்வா எழு­திய ‘ஹிட்லர் தூக்­கி­லிட்டுக் கொல்­லப்­பட்டான்’ என்ற தலைப்­பி­லான சிங்­கள நூலில் இவ்­வாறு குறிப்­பி­டு­கின்றார். அனர்த்­தத்தை உரு­வாக்­கிய நிபுணர் ஹிட்லர். அவ­ருக்கு புதி­தாக நினைவுச் சின்­னங்கள் எதுவும் அமைக்கத் தேவை­யில்லை. நாலா பக்­கங்­க­ளிலும் பார்த்தால் அனைத்து இடங்­க­ளிலும் அவர் பற்­றிய அழிவின் நினை­வுச்­சின்­னங்கள் தான் காணப்­ப­டு­கின்­றன.

புத்­தரின் வழி­காட்­டலின் மையம் ஞான­மாகும். நிர்­வாண நிலையை விளங்கிக் கொள்­ளுதல் என்­பதன் மூலம் அதுவே வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. ஹிட்­லரின் நினைவுச் சமாதி அமைக்கும் அத்­தி­வாரம், எதிர்ப்பு மோகம் புரிந்து கொள்­ளாமை என்­ப­ன­வாகும். இரட்­சிப்­பவர் ஒருவர் பற்­றிய கனவில் மிதந்த 69 லட்சம் இலங்­கையர் (அதில் பெரும்­பான்­மை­யினர் சிங்­கள – பௌத்தர்) 2019இல் ஞானத்­து­டன்தான் வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­தினர் என்­ப­தை­விட பக்­தி­யினால் என்று கூறலாம். புரி­த­லை­விட நம்­பிக்கை கொண்டு உச்­சத்தில் தூக்­கி­வைத்துக் கொண்­டாடும் மனப்­பாங்­கி­லாகும். இந்த மனப்­பாங்கை ராஜ­பக்ச எதிர்ப்பு முகா­மினர் கையில் எடுத்­துக்­கொண்டால் தலை­வர்­களின் பெயர்கள் மட்டும் வேறு­படும் ஒரு பயங்­கர எதிர்­காலம் உரு­வா­கலாம்.

காரண காரியம் முதல் மூட­நம்­பிக்கை வரை
ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச ஒரு தடவை மத்­திய வங்கி ஆளுநர் மற்றும் உயர் அதி­கா­ரி­களை அழைத்து ஒரு விரி­வுரை நடத்­தினார். பலத்த எதிர்ப்­ப­லைகள் கிளம்­பிய அந்த உரையைப் பதி­விட ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர் அந்த உரையின் போது tool kit போன்ற பிர­யோ­கங்­களை அதி­க­மாக பயன்­ப­டுத்­தினார். (கருவி தொகுதி) புதிய ஒரு tool kit ஐ பயன்­ப­டுத்­து­மாறு அவர் எச்­ச­ரிக்கும் பாணியில் குறிப்­பிட்டார். எந்த வகை­யான கரு­விகள் அத்­தொ­கு­தியில் இருக்க வேண்டும் என அங்­கி­ருந்த எந்த அதி­கா­ரி­களும் கேள்வி எழுப்­ப­வில்லை.

தாம் வாசிப்­பதில் ஆர்­வ­முள்­ளவர் என்று 2008 இல் அமெ­ரிக்­காவின் உப ஜனா­தி­ப­தி­யாகப் போட்­டி­யிட்ட சாரா பாலின் குறிப்­பிட்­ட­போது இறு­தி­யாக வாசித்த புத்­தகம் அல்­லது பத்­தி­ரிகை எது என ஊட­க­வி­ய­லாளர் கேட்ட சமயம் விடை சொல்ல முடி­யாமல் திரு­தி­ரு­வென விழித்த காட்சி கம­ராவில் பதி­வாகி உல­க­மெங்கும் ஒளி­ப­ரப்­பா­கி­யது. டொனால்ட் ட்ரம்ப் அர­சி­யலில் இறங்­கி­ய­வுடன் தமது கிறிஸ்­தவ பக்தி பற்றி அடிக்­கடி குறிப்­பிட்டார். பைபிளில் நீங்கள் அதிகம் விரும்பும் பகுதி எது என ஒரு ஊட­க­வி­யாளர் ட்ரம்­பிடம் கேட்டார். அதற்கு விடை தெரி­யாமல் தவிப்­பது உல­கெங்கும் ஊட­கங்­களில் பர­வி­யது.

அர­சியல் தலை­மை­யிடம் கேள்வி கேட்கும் வழக்கம் எமது நாடு­களில் இல்லை. விஷே­ச­மாக தலை­வர்கள் தங்­களைப் பற்றிக் கூறும் விட­யங்கள் பற்றிக் கேள்வி கேட்கும் நிலை இல்லை. பெரும் பணக்­கா­ரர்­க­ளுக்கு, அதி­கா­ரி­க­ளுக்கு, அமைச்­சர்­க­ளுக்கு வணக்கம் செலுத்தும் வழக்­கத்­தி­லி­ருந்து தெரிய வரு­வதும் அது­போன்­ற­தொன்றே. இன்று ஒரு மனநோய் போன்று பர­வி­வரும் இந்தச் செய்­கைக்கு பகி­ரங்­க­மாக எதிர்ப்பு தெரி­வித்த ஒரு­வர்தான் மர­ணித்த அமைச்சர் மங்­கள சம­ர­வீர. அவரின் அந்த துணிச்­ச­லான பேச்சை ஆரம்­ப­மாகக் கொண்டு கலந்­து­ரை­யாட எமது தலை­மைகள் அர­சி­யல்­வா­திகள் தயா­ராக இல்லை. தலைமைத்­துவ வழி­பாட்டில் அவர்­க­ளுக்­கி­ருக்­கின்ற ஆசை­யையே இது காட்­டு­வ­தாகக் கூறலாம்.

தலை­மைத்­துவ வழி­பாடு இலங்கை அர­சி­யலில் கடந்த இரண்டு மூன்று தசாப்­தங்­களில் வெகு­வாகப் பிர­பல்­ய­ம­டைந்­துள்­ளது. குறிப்­பாக பாட­சாலை மாண­வர்­களும் அர­சி­யல்­வா­தி­களின் காலில் விழுந்து வணங்கும் மோச­மான செய்கை 1980களின் பின்னர் தான் ஏற்­பட்­டுள்­ளது. 90ஆவது தசாப்­தத்தின் போது சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலில் விழுந்து வணங்கும் சில அர­சியல்வாதிகளின் புகைப்­படம் வெளி­யான போது அது ஐக்­கிய தேசிய கட்­சியின் கேலிக்கு உட்­பட்­டது.

முனி­தாச குமா­ர­துங்க என்ற பழம் பெரும் எழுத்­தாளர் தான் நடத்­திய லக்­மிணி பஹன என்ற பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் தலை­யங்­க­மொன்றில் பிக்கு சமூ­கத்தின் தவ­று­களை விமர்­சித்த போது யாரும் அவ­ரு­டைய பத்­தி­ரிகை அலு­வ­ல­கத்­துக்கு தீ வைக்­க­வில்லை. எப்­ரஹாம் கோவூர், ஈ.டப்­லியூ அதி­காரம் போன்ற பகுத்­த­றி­வு­வா­திகள் தீ மிதிப்பு என்­பது ஏமாற்று என்று சாதித்த போதும் அன்­றைய சமூ­கத்தில் மதிக்­கப்­பட்­டனர். எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி பொலி­சுக்கு போகாமல் நீதி­மன்றப் படி­களில் ஏறாமல் அவர்­களின் பணி­களைச் செய்ய முடிந்­தது.

நக­ரங்­களில் மட்­டு­மன்றி கிரா­மங்­க­ளிலும் பக்திப் பிர­வா­க­மெ­து­வு­மின்றி கால்கள் சுடு­ப­டாமல், தீமி­திப்பில் ஈடு­பட்­டனர். இதில் பெண்­களும் ஈடு­பட்­டனர். அன்­றைய பத்­தி­ரி­கை­களைப் புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். இந்த அளவு திறந்த மன­துடன் கூடிய ஒரு பகுத்­த­றிவு சமூ­கத்தில் வைரஸைக் கொல்­வ­தற்கு ஆறு­களில் முட்­டி­களை இறக்கும் நிலையும் பிரித்­நீரை ஆறு­களில் ஊற்றும் சம்­ப­வங்­களும் காளி அம்­மாவின் அருள் பெற்ற பாணியை கொவிட்-19 நோயா­ளர்­க­ளுக்கு கொடுக்கும் நிலையும் உரு­வா­னது எப்­படி என்­பது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது.

அதி­மே­தகு வணக்­கத்­துக்­கு­ரிய ஜனா­தி­பதி முறை
ஜே.ஆர் ஜய­வர்த்­தன பிற்­போக்­கான சமூக கருத்­துக்­க­ளுக்கு தலை சாய்க்­காத ஒரு தலைவர். ஆயினும் பிற்­போக்கு அர­சியல் சிந்­த­னை­க­ளுக்கு அவரின் நோக்கில் இட­மி­ருந்­தது. ஜனா­தி­பதிப் பத­வி­யேற்ற பின்னர் அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்யும் போது இலங்­கையின் வர­லாறு தொடர்­பான ஒரு ஆவ­ணத்தைத் தயார் செய்து கொண்டு சென்றார். இலங்­கையின் அரச பரம்­ப­ரையும் அதில் அடங்­கி­யி­ருந்து. ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்­கனை அடுத்து இடம் பெற்­றி­ருந்த பெயர் ஜே.ஆர் ஜய­வர்த்­தன என்­ப­தாகும்.

பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்ஸ் மன்னர் பரம்­ப­ரையில் தனது பெய­ரையும் சேர்த்தால் அந்த நாட்டில் அவ­ருக்கு என்ன நடக்கும்? சார்­ப­ளவில் சர்­வா­தி­கா­ரி­யொ­ரு­வரை உரு­வாக்க இடம் வைக்­காத ஜனா­தி­பதி முறை காணப்­படும் நாடு­க­ளுக்­கி­டையில் வர­லாற்று ரீதி­யான ஓர் ஒற்­று­மை­யுண்டு. ஒன்றில் மன்­ன­ராட்சி பரம்­ப­ரை­யற்ற அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளாகும். பிரான்ஸ் நாட்­டுக்கு ஒரு மன்னர் பரம்­பரை காணப்­ப­டினும் மூன்று தட­வைகள் மக்கள் புரட்சி மூலம் மன்­னர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட வர­லாறும் அதற்­குண்டு. 1789 இன் பிரான்­சியப் புரட்­சியின் பின்னர் 16 ஆம் லூயி மன்­னரும் இராணி மாரி அன்­ட­னியும் கொலை செய்­யப்­பட்­டனர். 1830 இல் நடந்த புரட்­சியின் போது 10 ஆம் சாள்ஸ் மன்­னரும் 1848 புரட்­சியில் லூயி பிலிப் மன்­னரும் பதவி நீக்­கப்­பட்­டார்கள். 1845 புரட்­சியின் போது பரிஸ் நக­ர­வா­சிகள் சிம்­மா­ச­னத்தை வீதி வழி­யாக இழுத்துச் சென்று தீவைத்துக் கொளுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்க சம்­ப­வ­மாகும். ஜனா­தி­பதி முறை சர்­வா­தி­கா­ரத்தை நோக்கிச் செல்­லாத நாடு­களில் ஜனா­தி­ப­தியை மன்­ன­ராகச் சித்­த­ரிக்கும் ஒரு வர­லாறு இருந்­த­தில்லை.

எமது நாட்­டுக்கு அப்­ப­டி­யொரு வர­லாறு இல்லை. எமக்கு இருப்­பது அர­சரின் காலில் விழுந்து வணங்­கிய வர­லா­றாகும். ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்கன் சிம்­மா­ச­னத்தை இழக்கக் கார­ண­மாக இருந்த பிரபுக்கள் அதற்குப் பதி­லாக இலங்­கையை பிரித்­தா­னிய கிரீ­டத்தின் கீழ் கொண்டு வரும் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

அப்­ப­டி­யொரு வர­லாற்றைக் கொண்ட இலங்கை ஜனா­தி­ப­தியை மன்னர் ஸ்தானத்­துக்கு உயர்த்­து­வதும், ஜனா­தி­பதி கதி­ரையில் இருக்கும் வரை அரசன் அல்­லது அர­சி­யாக மதிப்­பதும் ஆச்­ச­ரி­ய­மா­ன­தன்று.

2015 இல் பொது வேட்­பா­ள­ராக நின்று வெற்றி பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி முறையை ஒழிக்கும் பொருத்­தத்தில் கள­மி­றங்­கி­ய­வர். சில நாட்­களில் அதனை அவர் மறந்து விட்டார். அவ­ருக்­குப்பின் அப்­ப­த­வியை அடையக் கண் வைத்­தி­ருந்­தவர்களுக்கும் ஜனா­தி­பதி முறையை ஒழிப்­பது ஒரு பொருட்­டாகப் பட­வில்லை. ஜனா­தி­ப­தியின் வருடப் பூர்த்­தியின் போது அவரை மகா பராக்­கி­ர­ம­பாகு மன்­ன­ருடன் ஒப்­பிட்ட ஒரு ஆவ­ணப்­ப­டத்தை ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு தயா­ரித்­தி­ருந்­தது. அது இணையத் தளத்தில் வெளி­யி­டப்­பட்ட போது மக்­க­ளி­ட­மி­ருந்து எழுந்த எதிர்ப்­ப­லைகள் கார­ண­மாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அதனை வெளி­யி­டா­தி­ருக்க தீர்­மா­னித்து விலக்­கிக்­கொள்­ளப்­பட்­டது. ஆனாலும் அது போன்ற ஒரு வீடி­யோவைத் தயா­ரித்­த­தி­லி­ருந்து விளங்­கு­வது ஜனா­தி­பதிக் கதி­ரையில் அமர்­கின்ற ஒரு­வரின் மனப்­பாங்கில் ஏற்­படும் முரண்­பாட்டுச் சிந்­த­னை­யாகும்.

எனது சமூ­கத்தில் ஒரு புற்று நோய் போல புரை­யோ­டி­யுள்ள தலை­மைத்­துவ வழி­பாடு மேலும் தீவி­ர­ம­டைந்து வரும் நிலைமை தான் ஆரம்­பத்­தி­லி­ருந்தே தெரி­கி­றது. ஜனா­தி­ப­தியை விழிப்­ப­தற்கு “அதி மேதகு” என்ற பிர­யோ­கத்தை முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­தன அனு­ம­தித்­தி­ருந்தார். இந்த பிர­யோ­கத்தின் மூலம் ஜனா­தி­பதிப் பத­விக்கு அர­சியல் தலை­மையை மிஞ்சி நிற்கும் ஒரு ‘ராஜ‘ அந்­தஸ்து புனையப்படு­கின்­றது. அரசன் ‘தேவர்’ (தேவயன் வஹன்ஸே) என்று கடவுள் அந்­தஸ்தில் அழைப்­பது எமது வர­லாற்றுப் பாரம்­ப­ரி­யத்தில் உள்­ள­தாகும். தேவ அந்­தஸ்தில் அழைக்­கப்­படும் போது அங்கு அரசர் மக்­களில் ஒரு­வ­ராக அன்றி மிகவும் உயர்ந்த தரத்தில் வைத்து மதிக்­கப்­ப­டு­கிறார். அவர் கட­வுளின் அல்­லது புத்த பெரு­மானின் நிலையில் வைத்து நோக்கப்படு­கின்றார். ‘அதி­மே­தகு’ பிர­யோ­கத்தின் மூலமும் உண்­மையில் அது தானே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மக்கள் தலை­மைத்­து­வத்தை வழி­படும் போது அவர்கள் மனதில் ஒரு புனி­தத்­துவ உணர்வு தோன்­று­கின்­றது. அவர் அந்த உணர்­வு­டனே செயற்­படும் போது மக்­களின் வழி­பாடு மேலும் அதி­க­ரிக்­கி­றது. இது அடி­மைத்­துவ உணர்வை (a slavish cycle) தோற்­று­விக்­கி­றது.

ஹிட்­லரின் போத­னையைப் போன்றே கோட்­டா­பய ராஜ­பக்ச இந்­நாட்டின் அண்மிய வர­லாற்றின் மிகவும் பல­வீ­ன­மான (fail) ஆட்­சி­யா­ள­ராக முத்­திரை குத்­தப்­பட்­டுள்ளார். இப்­போது அர­சாங்க, எதிர்க்­கட்சித் தலை­வர்கள் தாங்கள் அடுத்த “அதி­மே­தகு” வாகக் கனவு காண்­கின்­றனர்.

மஹிந்த ராஜ­பக்ச பிர­த­ம­ராகப் பதவி வகிக்கும் வரை ராஜ­பக்ச குடும்­பத்தில் அழிவு ரீதி­யான அதி­காரப் போட்­டி­யெ­துவும் ஏற்­பட வாய்ப்­பில்லை. ஆனால் எதிர்க்­கட்­சி­களின் நிலை அவ்­வா­றன்று. ஜனா­தி­பதி கதி­ரைக்­காக சில மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட இருமுனை வரையறை இப்போது மும்முனை நான்கு முனைப் போட்டியாக மாறும் அறிகுறிகளைக் காட்டுகின்றது. இந்த நிலை தணிக்கப்படாத விடத்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக அல்லது மூன்றாக பிளவு படும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஹிட்லரின் தலைமைத்துவத்தில் போன்றே ஹிட்லரின் போதனையிலும் பொதிந்திருக்கின்ற பிரதான ஒரு காரணி யாதெனில் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளாத அதீத ஆசை அல்லது மோகமாகும். ஹிட்லர் சோவியத் ஒன்­றி­யத்தை ஆக்­கி­ர­மித்­த­மையும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக யுத்தப் பிர­க­டனம் செய்­ததும் இவ்­விரு நாடு­க­ளி­னதும் யுத்த பலம் பற்­றிய அறிவு அவ­ருக்கு இல்­லா­தி­ருந்­த­மை­யி­னா­லாகும். கோட்­ட­பாய ராஜ­பக்­சவும் பொரு­ளா­தா­ரத்­தையும் சேதனப் பசளைச் செயற்­திட்­ட­த­்தையும் குழப்­பிக்­கொண்­டதும் இதனால் தான்.

யதார்த்­தத்தை உண­ராமை ஹிட்­ல­ருடன் அல்­லது அவரின் நினைவுச் சின்­னங்­க­ளுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. அதிகாரத்தின் மீதுள்ள ஆசை ஒரு அதீத ஆசையாக மாறும் போது கூடிக் குறைந்த அளவுகளில் ஜனநாயகத் தலைவர்களுக்கும் இது பொருந்தும். ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றுடன் மற்றொன்று எதிரியானால் ராஜபக்சாக்களைத் தோற்கடிக்க முடியாது. ஜனாதிபதிப் பதவியால் கண்கள் நீலம் பாரிக்கின்ற எதிர்க் கட்சித் தலைவர்களின் தவறினால் ராஜபக்ச ஆட்சி பாதுகாக்கப்படின் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.