இஸ்லாம் சமய பாட நூல்களில் அடிப்படைவாதமா?

0 550

ஏ.ஆர்.ஏ.பரீல்

எமது நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட, சர்­வ­தே­சத்­தையே அதி­ர­வைத்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைத் தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­தை தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்­தி­விட்­டது. முஸ்லிம் சமூ­கத்தின் சிறி­யவோர் குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இத்­தாக்­குதல் சமூ­கத்தின் தலை­யெ­ழுத்­தையே மாற்றி எழு­தி­விட்­டது என்று கூறலாம்.

முஸ்லிம் சமூ­கத்தின் புத்­தி­ஜீ­விகள், மார்க்க அறி­ஞர்கள், பொது­மக்கள் எனப்­ப­லரும் இத்­தாக்­கு­தலை வன்­மை­யாகக் கண்­டித்தும் பெரும்­பான்மைச் சமூ­கமும், கத்­தோ­லிக்க சமூ­கமும் கண்­ட­னங்­க­ளையும் மறுப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் மீது இந்தப் பழியைச் சுமத்­து­வ­தற்கு பல முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்கள் தொடர்ந்தும் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் முஸ்­லிம்கள் சார்ந்த பரிந்­து­ரைகள் மாத்­தி­ரமே தற்­போது ஒன்­றன்பின் ஒன்­றாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஏனைய சமூகம் சார்ந்த பரிந்­து­ரைகள் மற்றும் கடந்­த­கா­லங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நாட்டில் பரப்­பப்­பட்ட இன­வா­தத்தின் சூத்­தி­ர­தா­ரிகள் விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் போன்ற சிபா­ரி­சு­களை இது­வரை அர­சாங்கம் கண்டு கொள்­ள­வில்லை. தேடிப்­பார்க்கவில்லை என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. ஆனால் தற்­போது உயிர்த்த ஞாயிறு ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்ள முஸ்லிம் சமூகம் சார்ந்த விட­யங்கள் ஒன்­றன்பின் ஒன்­றாக அரங்­கேற்­றப்­பட்டு வரு­கி­ன்­றன.

இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள்
பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான இஸ்லாம் சமய பாட­நூல்­களில் தற்­போது திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படவுள்­ளன. இது தொடர்­பாக கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பி.என். அயி­ல­பெ­ரும சகல தேசிய பாட­சாலை அதி­பர்கள் மற்றும் பாட­நூல்கள் நேர­டி­யாக விநி­யோ­கிக்­கப்­படும் பாட­சாலை அதி­பர்கள் என்­போ­ருக்கு சுற்­று­நி­ருபம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். EPD/DIS/1/2021/01 ஆம் இலக்க குறிப்­பிட்ட சுற்­று­நி­ருபம் 2021.12.14ஆம் திகதி அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்லாம் தரம் 6 (சிங்­களம்), இஸ்லாம் தரம் 6 (தமிழ்), இஸ்லாம் தரம் 7 (சிங்­களம்), இஸ்லாம் தரம் 10 (சிங்­களம்) இஸ்லாம் தரம் 10 (தமிழ்) , இஸ்லாம் தரம் 11 (தமிழ்) ஆகிய இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளதால் அப்­பாட நூல்­களை பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பதை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு அயி­லப்­பெ­ரும வேண்­டி­யி­ருந்தார்.

இப்­பாட நூல்கள் மாண­வர்­க­ளுக்கு ஏற்­க­னவே விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்தால் அவற்றை பாட­சாலை களஞ்­சி­யங்­க­ளுக்கு திருப்பிப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அதி­பர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது மாண­வர்கள் பயன்­ப­டுத்­து­கின்ற குறிப்­பிட்ட இஸ்லாம் சமய பாட நூல்கள் திருப்பி எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­துடன் மீள்­ப­யன்­பாட்­டிற்­காக அவற்றை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கக்­கூ­டாது. இந்­நூல்­க­ளுக்குப் பதி­லாக புதிய திருத்­தப்­பட்ட நூல்­களை வழங்­கு­வ­தற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்­களம் மூலம் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனவும் சுற்று நிரு­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாய­கத்தின் விளக்கம்
கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இந்தத் திடீர் நட­வ­டிக்­கை­யினால் முஸ்லிம் சமூகம் அதிர்ச்­சி­ய­டைந்­தது. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான பரீட்­சைகள் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில் இஸ்லாம் சமய பாட நூல்கள் மீளத் திருப்பிப் பெறப்­ப­ட­வுள்­ளன. திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என அறி­விக்­கப்­பட்­ட­மையால் பாட­சாலை மாண­வர்கள் உள ரீதியில் பாதிப்­பு­களை எதிர்­நோக்­கினர்.

கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரு­ம­விடம் சுற்­று­நி­ருபம் தொடர்பில் விளக்கம் கோரிய போது, ‘இஸ்­லா­மிய சமய பாட நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன’ என்றார்.

யாரின் உத்­த­ர­வுக்­க­மைய இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது? என்று வின­விய போது, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைக்­க­மை­யவே இந்­ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன எனப் பதி­ல­ளித்தார்.

குறிப்­பிட்ட இஸ்லாம் சமய பாட நூல்கள் மீள திருப்பிப் பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் மூலம் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு திருத்­தப்­பட்ட புதிய பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும். கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்றின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான முஸ்லிம் அதி­கா­ரி­களின் சிபா­ரி­சு­க­ளின்­ப­டியே இஸ்­லா­மிய சம­ய­பாட நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலைமைக் காரி­யா­லயம் மற்றும் தேசிய பாது­காப்பு கற்­கைகள் நிறு­வனம் என்­ப­ன­வற்­றி­லி­ருந்து எமக்குக் கிடைத்த தக­வல்­க­ளின்­படி அப்­பாட நூல்­களில் தகாத, அடிப்­ப­டை­வாத வச­னங்கள் அடங்­கி­யுள்­ளன. இந்த பாட நூல்­களில் அடங்­கி­யி­ருந்த தீவி­ர­வாத வச­னங்­களே திருத்­தப்­பட்­டுள்­ளன. எனினும் சிறிய திருத்­தங்­களே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனவும் அவர் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள்

பாடசாலைகள், பாடத்திட்டம், சமய பாடநூல்கள் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு ஆணைக்­குழு பரிந்­து­ரை­களை சிபா­ரிசு செய்­துள்­ளது.

தேசிய, மாகாண பாட­சா­லைகள் மற்றும் சர்­வ­தேச பாட­சா­லைகள் எதிர்­கா­லத்தில் பௌத்தம், கிறிஸ்­தவம், இந்து, இஸ்லாம் என்ற ரீதியில் வேறு­ப­டுத்­தப்­ப­டாது பொது­வா­ன­தாக அமைய வேண்டும். அனைத்துப் பாட­சா­லை­க­ளிலும் நாட்டின் மத விகி­தா­சா­ரத்­துக்­கேற்ப மாண­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட வேண்டும். பாட­சா­லை­களில் அனைத்­து­மத மாண­வர்­களும் ஒன்­றாகக் கல்வி கற்க வேண்டும்.
நாட்டின் தேசிய, மாகாண பாட­சா­லைகள் மற்றும் சர்­வ­தேச பாட­சா­லைகள் என்­ப­ன­வற்றில் கல்­வி­ப­யிலும் மாண­வர்­க­ளுக்­கான சம­ய­பாட நூல்­களில் தீவி­ர­வாதம் அல்­லது பயங்­க­ர­வாத இலக்­கியம் என்­பன நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாக உள்­ள­டங்­கி­யுள்­ளதா என்­பது ஆராய்ந்து அறி­யப்­பட வேண்டும்.

கல்வி வெளி­யீட்டு பாட நூல்கள் குழு­வொன்­றினால் மீளாய்வு செய்­யப்­பட்டு பாட நூல்­களில் அடிப்­ப­டை­வாத அல்­லது தீவி­ர­வாத கருத்­துகள் உள்­ள­டங்­கி­யுள்­ளதா என்­ப­தனை ஆராய்ந்து அக்­க­ருத்­துகள் அகற்­றப்­பட வேண்டும் என உயிர்த்த ஞாயிறு ஆணைக்­குழு தனது பரிந்­து­ரையில் தெரி­வித்­துள்­ளது. இஸ்லாம் மத பாட நூல்­களில் அடங்­கி­யுள்­ள­தாகக் கூறப்­படும் அடிப்­படை வாதத்­துடன் தொடர்­பான வச­னங்கள் இதன் அடிப்­ப­டை­யிலே அகற்­றப்­பட்­டுள்­ளன அல்­லது திருத்­தப்­பட்­டுள்­ளன என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

மீளாய்வு குழு
குறிப்­பிட்ட இஸ்லாம் சமய பாட நூல்­களைப் படித்து மீளாய்வு செய்து திருத்­தங்கள் தொடர்பில் பரிந்­துரை செய்­வ­தற்கு கல்வி அமைச்­சினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவில் பாட நூல்கள் அபி­வி­ருத்­திக்­கான ஆணை­யாளர் நிர்­மலா பிய­சீலி, தோட்­டப்­புற பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்­திக்­கான பணிப்­பாளர் எஸ்.முர­ளீ­தரன், சமயக் கல்­வி­க­ளுக்­கான பணிப்­பாளர் நிமல் தர்­ம­சிறி, தமிழ் பாட­சா­லை­களின் அபி­வி­ருத்­திக்­கான கல்விப் பணிப்­பாளர் என். ஆலால சுந்­தரம், வெளி­யீ­டு­க­ளுக்­கான உதவி ஆணை­யாளர் இந்­துனில் பியசாத் ஆகியோர் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.
இஸ்லாம் சமய பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை மற்றும் வச­னங்­களை மீளாய்வு செய்து திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவில் ஒரு முஸ்­லி­மேனும் அடங்­கி­யில்­லாமை பெரும் தவ­றாகும்.

இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்கு பொறுப்­பான அதி­கா­ரிகள்
கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பாக இருக்கும் இரு முஸ்லிம் அதி­கா­ரி­க­ளிடம் கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அவர்கள் அறிக்­கையை ஆராய்ந்து திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு சிபா­ரிசு செய்­தனர். அவ் அதி­கா­ரிகள் எம்.ரி.ஏ.ரஹ்மான், ஐ.எ.எம்.அப்சான் ஆகி­யோ­ராவார்.

கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான ஐ.ஏ.எம்.அப்­சானை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

‘இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களே திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பாட நூல்­களில் அடங்­கி­யுள்ள சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. சில வச­னங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­தி­ருத்­தங்கள் இஸ்லாம் பாடத்­திட்டம் மற்றும் மார்க்­கத்­துக்குப் பாதிப்­பில்­லாத வகை­யிலே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அர­சாங்க அச்­ச­கத்தில் ஒரு தொகைப்­பாட நூல்கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. அந்தப் பாட­நூல்­களில் திருத்­தங்­களின் ஸ்டிக்கர் ஒட்­டப்­படும். ஏற்­க­னவே மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள பாட நூல்கள் மீளப்­பெற்று களஞ்­சி­யத்­துக்கு அனுப்­பப்­பட்டு வரு­கி­றது. அந்­நூல்கள் மீண்டும் திருத்­தங்­க­ளுடன் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட மாட்­டாது.

விஷேட உத்­த­ர­வு­களின் படியே இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் இத்­திட்­டத்தை கல்வி வெளி­யீட்டுத் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது. 10 ஆம், 11ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் சமய பாட நூல்­க­ளிலே பல திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதே­வேளை 6ஆம், 7ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய பாட­நூல்­களில் ஒரு சில திருத்­தங்­களே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் அடங்­கிய வச­னங்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன அல்­லது மாற்­றப்­பட்­டுள்­ளன என்றார்.

சிலை வணக்கம் இஸ்­லாத்தில் வெறுக்­கத்­தக்­கது என இஸ்லாம் சமய பாட நூலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் மாண­வர்கள் தவ­றாக வழி நடத்­தப்­ப­டலாம் என்ற அடிப்­ப­டை­யிலே இவ்­வ­ச­னத்தை நீக்­கு­வ­தற்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டது.

அத்­தோடு ‘எனது மகள் பாத்­திமா கள­வெ­டுத்­தாலும் அவ­ளது கையை நான் வெட்­டுவேன்’ என நபிகள் நாயகம் தெரி­வித்­த­தாக பாட நூல்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது போன்ற விட­யங்­களே திருத்­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்றும் அவர் தெரி­வித்தார்.

உலமா சபை விளக்கம் கோரி­யது
இஸ்­லா­மிய சம­ய­பாட நூல்கள் மீளப்­பெற்றுக் கொள்­ளப்­பட்­டமை தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்­திடம் விளக்கம் கோரி­யுள்­ளது.

உலமா சபை இது தொடர்பில் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என்.அயி­லப்­பெ­ரு­ம­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது.
ஏன் திடீ­ரென இஸ்­லா­மிய சமய பாட நூல்­களை மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கும் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றீர்கள்? இதனால் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. அத்­துடன் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறும் கோரி­யுள்­ளது.

அத்­தோடு உலமா சபை கல்வி அமைச்சர் தினேஷ் குண­வர்­த­ன­வையும் சந்­தித்து இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்தத் திட்­ட­மிட்­டுள்­ளது.

உலமா சபையின் செய­லாளர்
இஸ்­லா­மிய சமய பாடநூல் விவ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்­துள்ள கருத்­துகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.

‘இஸ்லாம் சமய பாட­நூல்­களில் சில தலைப்­புகள் மற்றும் சில வச­னங்கள் தொடர்­பாக பாது­காப்புத் துறையின் குற்­ற­வியல் விசா­ரணை பிரிவு மற்றும் தேசிய கல்வி நிறு­வனம் உலமா சபை­யிடம் தெளி­வு­களை கோரி­யது.

அதற்­கான தெளி­வு­களை நாம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ளோம். மாண­வர்­க­ளுக்­கான பாட­நூல்­களை வெளி­யி­டு­வ­தற்­காக ஒவ்வோர் சம­யத்­துக்கும் தனித்­த­னி­யாக பாடநூல் ஆக்கக் குழுக்கள் இருக்­கின்­றன. இக்­கு­ழு­வினை தேசிய கல்வி நிறு­வ­கமே (NIE) நிய­மனம் செய்­கி­றது.

இஸ்லாம் சமய பாட­நூ­லாக்கக் குழுவைத் தவிர ஏனைய சம­யங்­க­ளுக்­கான பாட­நூ­லாக்கக் குழுக்கள் ஆக்­கங்­களை பரி­சீ­ல­னைக்­காக அந்­தந்த சம­யங்­களின் அறி­ஞர்கள், நிபு­ணர்கள் அடங்­கிய மார்க்க சபைக்கே அனுப்பி வைக்­கின்­றன. மார்க்க சபையின் ஆலோ­ச­னை­க­ளின்­படி அந்­தந்த சமய பாட நூல்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.
ஆனால் இஸ்லாம் சமய பாட­நூ­லாக்கக் குழு இந்த நடை­மு­றை­யினைப் பின்­பற்­று­வ­தில்லை. இதனால் சமய பாட­நூல்கள் வெளி­வ­ரு­வ­தற்கு முன்பு அதன் உள்­ள­டக்­கங்­களை உலமா சபை­யினால் அறிந்து கொள்ள முடி­வ­தில்லை.

எனவே எதிர்­கா­லத்தில் இஸ்லாம் சமய பாடநூல் ஆக்­கங்­களை இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள், நிபு­ணர்கள் அடங்­கிய சபைக்கு அனுப்பி வைத்து சிபா­ரி­சு­க­ளையும் பெற்றுக் கொண்­டதன் பின்பே அச்­சிட வேண்டும். இந்த ஏற்­பா­டு­களை தேசிய கல்வி நிறு­வகம் ஏற்­பாடு செய்ய வேண்டும் என உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

இம்ரான் மஹ்ரூப் எம்.பி.
கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்­தினால் அச்­சிட்டு விநி­யோ­கிக்­கப்­பட்ட இஸ்லாம் சமய பாட­நூல்கள் மீளப் பெறப்­ப­டு­வதன் நோக்கம் என்ன என்­பதை நீதி­அ­மைச்சர் அலி­சப்ரி உள்­ளிட்ட அர­சாங்­கத்­தி­லுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என திர­ுகோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்­கை­யொன்­றினை வெளியிட்­டுள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைக்­க­மைய இஸ்லாம் சமய பாட நூல்கள் மீளப் பெறப்­ப­டு­வ­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­படும் துறை சார்ந்த வாண்மை மிக்­க­வர்­க­ளி­னாலே பாட­நூல்கள் எழு­தப்­ப­டு­கின்­றன. இஸ்லாம் சமய பாட நூல்­களும் இவ்­வாறே எழு­தப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு எழு­தப்­பட்டு வெளி­யி­டப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள இஸ்லாம் சமய பாட­நூல்கள் சம்­பந்­த­மாக தீர்­மானம் மேற்­கொள்ளும் உரிமை ஞான­சார தேர­ருக்கு உண்டா? என்­பதைக் கேட்க விரும்­பு­கிறேன். இந்த விவ­காரம் தொடர்பில் அரசில் முக்­கிய பங்கு வகிக்கும் அமைச்சர் அலி­சப்ரி கவனம் செலுத்த வேண்டும். மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.
இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் செய்­யப்­ப­ட­வேண்­டு­மென ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி கல்வி அமைச்­சிடம் கோரி­யுள்­ளது. இதன்­ப­டியே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இது சட்­ட­வி­ரோத செயற்­பா­டாகும். எங்­களின் மத உரி­மை­களை மதி­யாது செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள். இது மனித உரிமை மீற­லாகும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது தொடர்பில் கதைக்க வேண்டும்.

தேசிய கல்வி நிறு­வ­கத்தின் உறுப்­பி­னர்கள் இந்த ஏற்­பா­டு­க­ளுக்­காக வற்­பு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நாம் சர்­வ­தேச ரீதி­யிலும் அர­சாங்­கத்­துக்கு வற்­பு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.

நீதி­ய­மைச்சர் அலி சப்ரி
இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யிடம் வின­வி­னார்கள். அவர் இவ்­வாறு பதில் வழங்­கினார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியில் சில திட்­டங்கள் இருப்­ப­தென்றால் மீண்டும் அமைச்­சுக்கு சென்று பார்க்க வேண்டும். முஸ்­லிம்கள் தான் அந்தப் புத்­த­கங்­களை எழு­து­கி­றார்கள். அவர்கள் அதனை திருப்பிப்பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படி தான் நடக்கும் என்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி கோரிக்கை விடுக்­க­வில்லை
இதே­வேளை ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­லணி இஸ்­லா­மிய சமய பாட நூல்கள் தொடர்பில் எவ்­வித கோரிக்­கை­யையோ, பரிந்­து­ரை­க­ளையோ முன்­வைக்­க­வில்­லை­யென ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான அஸீஸ் நிசா­ருத்தீன் தெரி­வித்­துள்ளார்.

இச்­செ­ய­லணி தொடர்ந்தும் தனது பணி­யினை முன்­னெ­டுத்து வரு­கி­றது. இம்­மாத இறு­தி­யிலே அது தனது அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்கும். இந்­நி­லையில் இவ்­வி­வ­கா­ரத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ளது என்­பது தவ­றா­ன­தாகும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

ஆனால், ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்­பான செய­ல­ணியின் செய­லாளர் கடந்த 2021.11.03 ஆம் திகதி கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் கபில பெரே­ரா­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். செய­ல­ணியின் செய­லாளர் ஜீவந்தி சேனா­நா­யக்க அனுப்பி வைத்­துள்ள கடிதம் ‘இஸ்லாம் அடிப்­ப­டை­வாத போத­னைகள் மற்றும் மத்­ரஸா பாட­சா­லைகள் தொடர்­பாக’ என தலைப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 2251/30ஆம் இலக்க 2021.10.26ஆம் திக­தி­யிட்ட அர­சாங்க வர்த்­த­மானி மூலம் ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் 13 உறுப்­பி­னர்கள் அடங்­கு­கின்­றனர்.
செய­ல­ணிக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களின் கீழ் பின்­வரும் விப­ரங்­களைக் கோரு­கிறேன்.

அர­சாங்க பாட­சா­லை­களின் பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத போத­னை­களை அகற்­றுதல், இந்த நூல்கள் எழு­து­வதில் தொடர்­பு­பட்­ட­வர்­களை அந்தக் குழுக்­க­ளி­லி­ருந்தும் நீக்­குதல் தொடர்­பான தற்­போ­தைய நிலைமை என்ன? மற்றும் மத்­ரஸா பாட­சா­லை­களின் எண்­ணிக்­கை­யினைக் குறைத்தல் தொடர்­பான தற்­போ­தைய நிலை­மை­யினை அறி­விக்­கும்­படி கோரு­கிறேன்.

இது தொடர்­பான அறிக்­கையை இந்தக் கடிதம் கிடைத்து ஒரு­வார காலத்­துக்குள் பதில் கிடைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யும்­படி வேண்­டு­கிறேன் என்றே கோரப்­பட்­டுள்­ளது.

2020இலும் குழு நிய­மிக்­கப்­பட்­டது
அரச பாட­சா­லை­களில் போதிக்­கப்­படும் இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் மற்றும் பாடத்­திட்­டங்­களில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் 2020.08.01ஆம் திகதி குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. குழு தனது அறிக்­கையைச் சமர்ப்­பிப்­ப­தற்கு 2021.01.31ஆம் திகதி வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

கலா­நிதி அஷ்ஷெய்க் அப்வர்தீன் அல் அஸ்ஹரி தலைமையிலான இக்குழுவில் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சலீம், அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித், கலாநிதி அஷ்ஷெய்க் ஏ.அஸ்வர் அஸாஹீம் அல்அஸ்ஹரி, கலாநிதி அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.சித்தீக் அல் அஸ்ஹரி, கலாநிதி அஷ்ஷெய்க் எல்.எம்.முபீத் அல்அஸ்ஹரி, கலாநிதி அஷ்ஷெய்க் அஹமட் ராசிக் சர்ஜுன், அஷ்ஷெய்க் கே.ஏ.ஸகி அஹமட், அஷ்ஷெய்க் முர்சித் முளப்பர், அஷ்ஷெய்க் எம்.ஏ.ஹுஸ்னி முப்தி, மௌலவி எம்.ஆர்.எம்.சில்மி, மௌலவி பஸ்ருல் ரஹ்மான், மௌலவி ஏ.எம்.ரிஸ்மி ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இக்­குழு பல அமர்­வு­களை நடாத்தி இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களை ஆய்வு செய்­தது. தரம் 1 முதல் தரம் 11 வரை­யி­லான இஸ்லாம் பாட நூல்கள் வாசித்து ஆய்வு செய்­யப்­பட்­டன. இந்­நூல்­களில் தீவி­ர­வா­தத்தைத் தூண்­டக்­கூ­டிய கருத்­துகள் உள்­ள­டங்­கி­யுள்­ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சூராகவுன்ஸில், ஷரீஆ கவுன்ஸில் போன்றவற்றிலிருந்தும் இது தொடர்பாக அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. பாடநூல்கள் உன்னிப்பாக வாசிக்கப்பட்டன. ஆனால் குழுவின் செயற்பாடுகள் சில காரணங்களினால் இடையில் ஸ்தம்பித்து விட்டன’ என குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மௌலவி பஸ்ருல் ரஹ்மான் தெரிவித்தார்.

மார்க்க அறிஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்
இஸ்லாம் சமய பாட நூல்கள் ஆக்­கக்­கு­ழுவில் புத்­தி­ஜீ­வி­க­ளான மார்க்க அறி­ஞர்­களும் இணைத்துக் கொள்­ளப்­பட வேண்டும். அத்­தோடு எதிர்­கா­லத்தில் இஸ்லாம் பாடநூல் ஆக்­கங்கள் மார்க்க அறி­ஞர்கள், நிபு­ணர்கள் அடங்­கிய சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு சிபா­ரி­சு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். இத­னையே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அர்கம் நூரா­மித்தும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மேலும் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கைகள் மாண­வர்­களின் கல்வி செயற்­பா­டு­களைப் பாதிக்­காத வகையில் இடம்­பெற வேண்டும்.
கல்வி வெளி­யீட்டுத் திணைக்­களம், கல்வி அமைச்சு, தேசியக் கல்வி நிறு­வகம் என்­ப­ன­வற்றின் உயர் அதி­கா­ரிகள், இஸ்லாம் பாட நூல்­களில் அடங்­கி­யுள்ள வச­னங்கள், கருத்­துகள், அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிப்­பன அல்ல, அவ்­வ­ச­னங்கள் வரலாற்றுடன் தொடர்புபட்டவை என்பதில் தெளிவு பெற வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.