பாகிஸ்தான் மக்களின் கவலையை பகிர இலங்கை வருவேன்

பிரியந்தவைக் காப்பாற்ற போராடிய மலிக் அத்னான்

0 619

ஆங்கிலத்தில்: சானிகா சிறியானந்த
தமிழில்:ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்­கைக்கு விஜயம் செய்து பிரி­யந்­தவின் மனைவி மற்றும் மகன்கள் இரு­வ­ரையும் சந்­தித்து பாகிஸ்­தானின் அனைத்து மக்­க­ளி­னதும் கவ­லையைத் தெரி­விப்­ப­தற்கு நான் எதிர்­பார்த்­தி­ருக்­கிறேன். அவ­ரது உயிரை என்னால் காப்­பாற்ற முடி­யா­மற்­போ­னமை எனக்கு பெரும்­வே­த­னை­யாக இருக்­கி­றது என பாகிஸ்தான் சியால்­கோட்டின் தொழிற்­சா­லை­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­யாற்­றிய பிரி­யந்த குமார என்ற இலங்­கை­யரை வன்­முறைக் கும்­ப­லி­ட­மி­ருந்து பாது­காக்கப் போரா­டிய மலிக் அத்னான் டெய்லி எப்.டி. பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள பிரத்­தி­யேக நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார். மலிக் அத்­னா­னுக்கு பாகிஸ்­தானின் இரண்­டா­வது உயர் சிவில் விரு­தான ‘தம்கா இ சுஜாத்’ விருது வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­தமர் இம்ரான் கான் அறி­வித்திருந்தார். அதன்படி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது நான் ஓர் பாகிஸ்­தா­னிய பிரஜை என்ற ரீதி­யிலும் முஸ்லிம் ஒருவர் என்ற ரீதி­யிலும் ஒரு மானிடன் என்ற ரீதி­யிலும் உட­ன­டி­யாக சில தீர்­மா­னங்­களை மேற்­கொண்டே பிரி­யந்த குமா­ரவை காப்­பாற்றும் முயற்­சியில் ஈடு­பட்டேன் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

சியால்கோட் ராஜ்கோ இன்டஸ் ரீஸ் தொழிற்­சாலை பணி­யா­ளர்கள் அவரை கொலை செய்­து­விட்ட சம்­ப­வத்தின் சோகத்தில் தான் தொடர்ந்தும் ஆழ்ந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். அவ­ரு­ட­னான விசேட நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் வரு­மாறு:.

Q: உங்களைப் பற்றியும் ராஜ்கோ இன்டஸ்ரீஸ் நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றுகிறீர்கள் என்றும் கூறமுடியுமா?
எனது வாழ்­விடம் சியால் கோட் ஒலாக் அவான் விவ­சாய கிராமம். எனது வயது 40. எனது குடும்­பத்தில் என்­னுடன் நால்வர். ஒரு சகோ­த­ரரும், இரண்டு சகோ­த­ரி­களும் இருக்­கி­றார்கள். 2020 இல் எனது தந்தை கால­மாகி விட்டார். கடந்த 16 வரு­டங்­க­ளாக நான் இந்த ராஜ்கோ தொழிற்­சா­லையில் வேலை செய்­கிறேன். தற்­போது இந்த நிறு­வ­னத்தில் உதவி முகா­மை­யா­ள­ராகப் பணி­யாற்றி வரு­கிறேன். நான் பஞ்சாப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர்த்­தக முகா­மைத்­து­வத்தில் பட்டம் பெற்­றுள்ளேன்.

Q: பிரியந்த குமாரவுக்கும் தொழிற்சாலையின் பணிப்பாளர்களுக்குமிடை யிலான தொடர்புகள் எவ்வாறு இருந்தது?
அவர் பணி­யா­ளர்­க­ளுடன் மிகவும் கரு­ணை­யுள்­ளவர். ஆனால் கடமை நேரத்தில் மிகவும் கண்­டிப்­பாக பணி­யாற்­றிய ஒருவர். கடி­ன­மான பொறுப்­புடன் கட­மை­யாற்­றினார். தொழிற்­சாலை ஊழி­யர்­களும் தன்­னைப்போல் பொறுப்­புடன் கட­மை­யு­ணர்­வுடன் வேலை செய்­வார்கள் என்று எப்­போதும் எதிர்­பார்ப்­பவர்.

Q: தொழிற்சாலை ஊழியர்கள் அவர் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?
ஊழி­யர்கள் அவ­ருக்கு கீழ்ப்­ப­டிந்து செயற்­பட்­டார்கள். அவர் தொடர்பில் ஊழி­யர்­க­ளுக்கு கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. என்­றாலும் அந்த முரண்­பா­டுகள் முகா­மை­யா­ளர்­க­ளிடம் பகி­ரங்­க­மாக தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. தொழிற்­சா­லையில் பணி­யா­ளர்கள் 2,200 பேர் வேலை செய்­கி­றார்கள். மேலும் 100 முகா­மை­யா­ளர்கள் கட­மையில் இருக்­கி­றார்கள். நாங்கள் ஆடைகள் மற்றும் விளை­யாட்டுப் பொருட்­களை இங்கு உற்­பத்தி செய்­கிறோம்.

Q: அந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தினால்…?
பிரி­யந்த குமார தொழிற்­சா­லையில் அவ­ரது காரி­யா­ல­யத்­துக்கு சென்று கொண்­டி­ருக்­கும்­போது தான் இந்தச் சம்­பவம் நடை­பெற்­றது. அன்று காலை 10.00 மணி­ய­ளவில் தொழிற்­சாலை ஊழி­யர்கள் போஸ்­டர்கள் சில­வற்றை ஒட்­டி­யி­ருந்­தார்கள். போஸ்டர் ஒட்­டி­யி­ருப்­பதை அவர் விமர்­சித்தார். அத்­தோடு போஸ்­டர்­களை கழற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தார். அச்­சந்­தர்ப்­பத்தில் தொழிற்­சாலை ஊழி­யர்­க­ளுக்கு மத்­தியில் பர­ப­ரப்பு ஏற்­பட்டு குழப்ப நிலை உரு­வா­னது. தங்­க­ளது மத நம்­பிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக பிரி­யந்த குமார மீது குற்றம் சுமத்­தி­னார்கள். ஊழி­யர்கள் அவரை ஏசிக்­கொண்டு பிரி­யந்த குமா­ரவின் காரி­யா­ல­யத்­திற்குச் சென்­றார்கள். சப்­த­மிட்டு எதிர்ப்பு தெரி­வித்­தார்கள். குழப்பம் விளை­வித்­தார்கள். அவர்­க­ளி­ட­மி­ருந்து தன்னைப் பாது­காப்­ப­தற்­காக பிரி­யந்த தொழிற்­சா­லையின் கூரைப்­பக்கம் ஓடினார். ஊழி­யர்கள் சப்­த­மிட்டுக் கொண்டு அவரைத் துரத்தி பின்னால் ஓடி­னார்கள்.

Q: அந்த போஸ்டர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது. பிரியந்தவுக்கு உருது மொழி வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருந்ததா?
போஸ்­டர்­களில் என்ன எழு­தி­யி­ருந்­தது என்­பதை என்னால் இப்­போது விளக்க முடி­யாது. ஆனால் அவ­ருக்கு உருது மொழியில் எழு­து­வ­தற்கோ வாசிக்­கவோ முடி­யு­மாக இருக்­க­வில்லை.

Q: உருது மொழியில் எழுதப்பட்டிருந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவரால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்திருந்தால் அவர் எப்படி அந்தப் போஸ்டர்கள் விமர்சித்திருக்க முடியும்-?
போஸ்­டர்­களில் எழு­தப்­பட்­டி­ருந்­த­வற்றை அவரால் விளங்­கிக்­கொள்ள முடி­யாமல் இருந்­தது. என்­றாலும் என்ன எழு­தப்­பட்­டி­ருந்­தது என்­பதை நாம் அறிந்­தி­ருந்தோம்.

Q: அவர் கூரைப்பகுதியை நோக்கி ஓடும்போது நீங்கள் அவருடனா இருந்தீர்கள்?ஆம், அவ­ருடன் தான் இருந்தேன். இந்த குழப்­ப­மான நிலை­யி­லி­ருந்து அவரை எப்­ப­டி­யா­வது காப்­பாற்­றி­விட வேண்டும் என்­ப­தற்­காக நானும் அவ­ரு­டனே இருந்தேன். குழப்­ப­மான நிலைமை அதி­க­ரித்த வேளையில் தொழிற்­சா­லையின் இரண்­டா­வது வாயி­லி­னூ­டாக மக்கள் உள்ளே வரு­வ­தற்கு ஆரம்­பித்­தார்கள். எங்­க­ளது தொழிற்­சாலை ஊழி­யர்கள் மாத்­தி­ர­மல்ல வேறு தொழிற்­சா­லை­களின் ஊழி­யர்­களும், கிரா­ம­வா­சி­களும் இரண்­டா­வது வாயி­லி­னூ­டாக உள்ளே நுழைந்­தார்கள். ஆத்­தி­ர­ம­டைந்­த­வர்கள் அநேகர் பிரி­யந்­தவை தாக்­கும்­போது நான் அவர்­க­ளுக்கு மத்­தியில் பாய்ந்து பிரி­யந்­தவின் சார்­பாக பேசினேன். அவரை காப்­பாற்­று­வ­தற்கு என்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டேன்.

என்­றாலும் ஆத்­தி­ர­ம­டைந்­தி­ருந்த குழு­வினர் எவ­ரது பேச்­சையும் கேட்கும் நிலையில் இருக்­க­வில்லை. அவர்கள் கோபத்தின் உச்ச நிலையில் பிரி­யந்­தவைத் தாக்­கி­னார்கள். இறு­தியில் பிரி­யந்­தவை என்னால் காப்­பாற்ற முடி­யாமல் போனது. தாக்­கு­தலில் நானும் காய­ம­டைந்தேன். ஆரம்­பத்தில் 50–100 க்கும் இடைப்­பட்ட ஊழி­யர்­களே தாக்­கி­னார்கள். என்­னைப்போல் மேலும் சில ஊழி­யர்­களும் அவரைத் தாக்க வேண்­டா­மெனக் கெஞ்­சி­னார்கள். என்­றாலும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் நாம் கூறி­யதை செவி­சாய்க்­க­வில்லை.

Q: தாக்குதலை மேற்கொண்டவர்களை நீங்கள் கண்டபோது உங்களுக்கு என்ன உணர்வு மேலிட்டது?
எப்­ப­டி­யா­வது பிரி­யந்­தவைக் காப்­பாற்ற வேண்டும் என்ற எண்­ணமே மேலிட்­டது. அவர் ஒரு சிறந்த தலைவர். நல்ல மனிதர்.நல்ல நண்பர். அவ­ரைக்­ காப்­பாற்­றி­யி­ருந்தால் அது­போன்ற மன­நி­றைவு எனக்கு எப்­போதும் ஏற்­பட்­டி­ருக்­காது. நாங்கள் இரு­வரும் பல வரு­டங்கள் ஒன்­றாக வேலை செய்தோம். அவர் தொழிற்­சா­லையில் எனது மேலாளர்.

Q:பாகிஸ்தான் மக்களுக்கு இது தொடர்பில் என்ன செய்தியைச் சொல்கிறீர்கள்?
இஸ்­லாத்தின் போத­னை­களின் உண்­மை­யான அர்த்­தத்­தினைப் புரிந்து கொள்­ளுங்கள் அந்­தப்­போ­த­னை­களின் பெறு­ம­தியை உள்­ளத்தில் நிறுத்­திக்­கொள்­ளுங்கள்.
எவ­ரா­வது ஒருவர், ஏதா­வது வழியில் குற்றம் இழைத்­தி­ருந்தால் பாகிஸ்­தானின் சட்­டத்­துக்கு அமைய செயற்­ப­டுங்கள். சட்­டத்தை கையி­லெ­டுப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­ளுங்கள்.

Q:பிரியந்தவின் கொடூரமான கொலை காரணமாக இன்னும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்களுக்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்?
இந்தச் சம்பத்தின் காரணமாக பாகிஸ்தான் மக்களுடன் நீங்கள் கொண்டுள்ள நட்புறவில் விரிசல்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தினால் நாம் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நிகழா வண்ணம் நாமனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு பாகிஸ்தானியராக உயிரைப் பயணம் வைத்து மனிதாபிமானத்துக்காக நான் ஆற்றிய செயற்பாட்டுக்காக எனக்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியுடன் இலங்கை வரவுள்ளேன்.
பிரியந்தவின் குடும்பத்தைச் சந்தித்து எமது கவலையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.