லிபியாவில் பணயக் கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐ.எஸ். ஆயுததாரிகள்

0 603

லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐ.எஸ். ஆயுததாரிகள் படுகொலை செய்துள்ளனர்.

லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு இராணுவம் கைப்பற்றியது. ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐஎஸ் ஆயுததாரிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை ஆயுததாரிகள் சிறைப்பிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு இராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலர் கடத்திச் சென்றதாகவும் ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை ஆயுததாரிகள் படுகொலை செய்துள்ளனர். இதனை மாவட்ட அதிகாரி உறுதி செய்தார்.  ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் இராணுவத்திடம் உள்ள ஆயுததாரிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.