கண்பார்வை இழந்த நிலையிலும் மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் கலீல் றகுமான்

0 750

எச்.எம்.எம்.பர்ஸான்

“எனக்கு மூனு வய­சு­லயே கண்­பார்வை இல்­லாம போனதாம். அந்த குறை­பாடு எனக்கு ஏழு வய­சுலான் தெரிய வந்­திச்சு. எனக்கு வந்த அம்மை நோய்தான் கண்­பார்வை இழந்­த­துக்­கான காரணம் என்டு எங்க உம்­மாவும், வாப்­பாவும் சொன்­னாங்க” என தனது கதையை கூற ஆரம்­பிக்­கிறார் கலீல் றகுமான்.

கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட காவத்­த­முனை துறை­யடி வீதியில் வசித்து வரு­ப­வர்தான் கலீல் றகுமான். அவ­ருக்கு இப்­போது 49 வய­தா­கி­றது. திரு­மணம் முடித்­துள்ள இவ­ருக்கு இரு ஆண் பிள்­ளை­களும் இருக்­கி­றார்கள்.
இரண்டு கண்­க­ளி­னதும் பார்­வையை இழந்த போதிலும் மின்­சாரப் பொருட்­களை பழுது பார்த்துக் கொடுக்கும் தனது திறமை மூலம் அனை­வ­ரையும் ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கிறார் கலீல் றகுமான்.

“கண் பார்­வையை அல்லாஹ் எடுத்துக் கொண்­டாலும் என்னை அவன் கைவி­ட­வில்லை. எனது பிரார்த்­த­னை­க­ளுக்கு அவன் விடை அளித்­துள்ளான்” என மிகவும் மகிழ்ச்­சி­யுடன் தனது கதையைக் கூறத் தொடங்­கினார் அவர்.

“நான் சின்ன வய­சுல இருக்கும் போதே மின்­சாரப் பொருட்­களை கழற்றி பூட்­டுவன். மின் உப­க­ர­ணங்­கள பழுது பார்க்கும் என்ட நெருங்­கிய கூட்­டாளி ஒருவர் எனக்கு இந்த விச­யத்­தில பெரிதும் உதவி வழங்­கி­னாரு. அவ­ரு­கிட்ட கேட்டு கேட்டு தான் இந்த வேலய பழகிக் கொண்டன்.

நமக்கு கண் பார்வை தெரி­யாது என்டு வீட்­டுக்­குள்­ளேயே முடங்கிக் கிடந்தா அது ரொம்­பவும் கஷ்­ட­மா போய்­விடும். அல்லாஹ் எனக்கு புத்திக் கூர்­மைய தந்­தி­ருக்கான் என்டு நினைக்கும் போது எனக்கு ரொம்­பவே சந்­தோஷம்.
நான் இப்ப செய்ற வேலைக்கு முன்பு ஓடாவி வேல செஞ்­சி­ருக்கன். அதுல கோழிக் கூடு, தில்லக் குத்தி போன்ற சாமான்­க­ளையும் சமைக்க பழகி இருக்கன். அதற்கு பிற­குதான் பழு­தா­கின மின் உப­க­ர­ணங்­கள சமைக்­கிற வேலய பழகி அத என்ட தொழி­லாக செஞ்சி வாரன்.

இந்த தொழில நான் பதி­னாறு வரு­சமா செஞ்சி வாறன். இந்த தொழில நான் ஆரம்­பத்­துல பழ­கக்க கொஞ்சம் கஷ்­ட­மாத்தான் இருந்­திச்சு. பல முற எனக்கு கரண்டும் அடிச்சு இருக்கு. இருந்தும் நான் இந்த தொழில விட்டுக் கொடுக்­கல.
பழு­தா­கின சாமான்­களை கண்டு பிடிக்க எனக்­கிட்ட மீட்டர் ஒன்று இருக்கு. அத மின் உப­க­ர­ணங்­க­ளில வைக்கும் போது சத்தம் கேட்கும். அத வெச்சி நான் என்ட வேலய லேசாக்கிக் கொள்வன்.

நான் கேஸ் குக்கர், ரைஸ் குக்கர், வொஷிங் மெஷின், ஐயன் பொக்ஸ், பேன், ஹீட்டர், தண்ணி மோட்டர் போன்ற சாமான்­களை பழது பார்த்து கொடுப்பன்.
நான் பழுது பார்த்துக் கொடுக்கும் சாமான்கள் நல்­லாவே வேலை செய்­கின்­றன. யாரும் வந்து குறை கூற மாட்­டார்கள். நான் உத்­த­ர­வா­தத்­துடன் தான் பழுது பார்த்து கொடுப்பேன்.

பழு­த­டைந்த பொருட்­களை திருத்­து­வ­தற்கு எனக்கு ஒரு நாள் போதும். அத அல்­லாஹ்வின் உத­வி­யோடு செய்து முடிப்பேன்.

பார்வை இல்ல என்­ட­துக்­காக நான் என்­டைக்கும் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்­புறல்ல. என்ட எல்லா வேலை­க­ளையும் நானே செஞ்சி முடிப்பன். என்­னால சாப்­பாடும் சமைக்க முடியும். வீட்­டுல கூடு­த­லாக நான்தான் சாப்­பாடு சமைக்­கிற. வீட்­டுல இருக்­கிற வேலை­களை நான் முடிஞ்ச வர­யில செஞ்சி முடிப்பன்.

என்ட மன வெளிச்சம், கைகள் இது இரண்­டா­ல­யும்தான் நான் தைரி­ய­மாக இயங்­கிட்டு இருக்கன். எனக்கு கண் பார்வை இல்­லை­யென்று அலட்­டிக்­கி­றயும் இல்ல. அதப்­பத்தி யோசிக்­கி­றயும் இல்ல. அப்­படி யோசிக்­கி­ற­தால நாம இழந்­தத்த பெற முடி­யாதே.
சில சமயம் தூங்­கினா கனவு காணுவன். அந்த கன­வுல பழு­தான ஒரு பொருள எப்­படி திருத்­தணும் என்று எனக்கு விளங்கும். காலை­யில எழும்பி அதன்­ப­டியே சரி­யான முறை­யில அந்த வேலைய செஞ்சி முடிக்­கும்­போது எனக்கு ரொம்­பவும் சந்­தோ­ச­மாக இருக்கும்.

நான் சின்ன வய­சில இருக்கும் போது அல்­லாஹ்­கிட்ட அடிக்­கடி துஆ கேட்பன். யாருக்கும் அடிமை இல்­லாத, நிம்­ம­தி­யான ஒரு தொழி­லையும், நல்ல மனை­வி­யையும் தா என்று. அல்லாஹ் என்ட ஆசய நிறை­வேத்­தி­யுள்ளான்.

நானே உழைச்சி வீடு காட்­டித்தான் கல்­யாணம் முடிச்ச. கண்­பார்வை இல்ல என்டு என்ட மனைவி என்ன ஒதுக்கி பாக்­கு­ற­தில்ல. நாங்க எப்­போதும் சந்­தோ­ச­மா­கத்தான் இருக்கம். எனக்கு ரெண்டு ஆண் மக்கள் இருக்­காங்க.

நான் எப்­போதும் நேர்­மை­யா­கத்தான் வேல செஞ்சி வாரன். அதுலான் பரகத் இருக்கு. யாரையும் ஏமாத்தி வேல வெஞ்சா அது நல்­ல­மில்ல.

சிலர் பொருட்கள் வேல செய்­யல என்டு கொண்டு வரு­வாங்க. ஆனால் அதுல ஒரு வயர்தான் அறுந்­தி­ருக்கும். அத திருத்திக் கொடுத்­துட்டு நான் காசி வான்­கு­றல்ல. ஏன் என்றா நான் கஷ்­டப்­பட்டு வேல செய்­யணும் கஷ்­டப்­பட்­டால்தான் காசி வாங்­குவன். பொய்ய சொல்லி ஒரு­போதும் காசு வாங்க மாட்டன்.

ஒரு தடவ ஒரு வீட்­டுக்கு போயி­ருந்தன். அங்க வொஷிங் மெஷின் பழுது எண்­டாங்க. அத செக் பண்ணி பார்த்தன் மோட்டார் மாத்­தனும் போல இருந்­திச்சு. மோட்டார் மாத்­தனும் காசு கூட வரும் போல இருக்கு பரவா இல்­லயா என்டு கேட்டன். அவங்­களும் ஒகே பர­வா­யில்ல என்­டாங்க. மிசின வீட்ட ஏத்தி அனுப்­புங்க என்டு சொன்னன். அனுப்­பி­னாங்க. அத வீட்ட வெச்சி செக் பண்ணி பார்த்தன். மோட்டார் பழு­தா­கல்ல, அதுல சின்ன பழுது ஒன்­டுதான் இருந்­திச்சு. அத சமச்சி வெச்­சிட்டன். அத எடுக்க வந்­தாங்க. மோட்­டார மாத்­தின என்டு நினச்­சிட்டு அவங்க எனக்கு கூட காசி தந்­தாங்க. நான் அவங்­கள ஏமாத்­தாம விச­யத்த சொல்­லிட்டு செஞ்ச வேலைக்கு மட்­டும்தான் காச வாங்­கினன். நான் ஏன் இத சொல்றன் என்டா நம்­மள அவங்க பாக்­காட்­டியும் அல்லாஹ் நம்­மள பாத்­துட்டு இருக்கான். நாம எப்­ப­வுமே நேர்­மை­யாக உழைக்­கனும் அது­லதான் பரகத் இருக்கு” என தனது கதையால் நம்மை மென் மேலும் ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கிறார் கலீல் றகுமான்.
பார்வை இருந்தும் உடலில் பல­மி­ருந்தும் உழைக்­காது, நேர்­மை­யற்று செயற்­படும் பல மனி­தர்­க­ளுக்கு நிச்­சயம் கலீல் றகு­மானின் வாழ்க்­கையே ஒரு முன்­மா­தி­ரிதான்.
“ இந்த தொழிலை நான் இன்னும் மேம்படுத்த விரும்புறன். அதுதான் என்ட ஆச. அதற்கு பொருளாதார சிக்கல்தான் முக்கிய காரணமா இருக்கு. பொருளாதாரம் இருக்குமென்டா இதுல இருந்து நான் இன்னும் முன்னேறுவேன்” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அவர். கலீல் றகுமானின் தொழில் மேம்பட நீங்களும் கைகொடுக்க விரும்பினால் அவரை தொடர்பு கொள்ளலாம். : 0752281398

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.