பங்­க­ளா­தேஷில் கொவிட-19 தொற்று விடு­மு­றையில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­மி­க­ளுக்கு திரு­மணம்

பாட­சாலைக் கல்­வி­யையும் கைவிட்­டனர்

0 658

எம்.ஐ.அப்துல் நஸார்

பங்­க­ளா­தேஷில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக நீண்ட கால­மாக மூடப்­பட்­டி­ருந்த பாட­சா­லைகள் மீளத் திறக்ப்­பட்­ட­போது அங்கு கல்வி கற்ற சிறு­மி­களின் ஆச­னங்கள் வெறு­மை­யாகக் காணப்­பட்­டன.

பாட­சா­லைகள் மூடப்­பட்­டி­ருந்த கடந்த 18 மாதங்­களில் இப்­ப­கு­தியில் உள்ள ஏரா­ள­மான பாட­சாலை மாண­வி­க­ளுக்கு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.
பங்­க­ளா­தேஷில் திரு­மண வயது பெண்­க­ளுக்கு 18, ஆண்­க­ளுக்கு 21 ஆகும், எனினும் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்னர், 2019ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஐக்­கிய நாடுகள் சிறுவர் நிதி­யத்தின் மதிப்­பீட்­டின்­படி 15.5 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான 15 வய­திற்­குட்­பட்ட பங்­க­ளாதேஷ் சிறு­மிகள் திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தேஷில் பாட­சா­லைகள் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, ஏரா­ள­மான மாண­விகள் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளிக்­கா­ததைக் கண்டு ஆசி­ரி­யர்கள் மிகவும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

கொவிட்-19 தொற்று பரவல் காலத்­தின்­போது பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற சிறு­ப­ராய திரு­ம­ணங்கள் தொடர்­பான துல்­லி­ய­மான தக­வல்கள் இல்­லா­தி­ருந்­தாலும், அங்கு வறு­மை­யான சமூ­கங்­களில் காணப்­படும் பொரு­ளா­தார மற்றும் சமூக இறுக்­கங்கள், முடக்­க­நிலை அதி­க­ரித்­த­மை­யினால் சிறு­ப­ராய திரு­ம­ணங்­களின் எண்­ணிக்­கைகள் அதி­க­ரித்­த­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

பங்­க­ளாதேஷ் தலை­ந­க­ரி­லி­ருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலை­வி­லுள்ள குல்னா மாவட்­டத்தில், அதி­கா­ரிகள் இது தொடர்பில் ஆராயத் தொடங்­கி­யுள்­ளனர்.

‘கடந்த மாதம் பாட­சா­லைகள் மீளத் திறக்­கப்­பட்­ட­போது பல மாண­விகள் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை என்­பதை நாம் அவ­தா­னித்தோம். எமது பாட­சாலை அதி­கா­ரிகள் அவ்­வா­றான மாண­வி­களின் பாது­கா­வ­லர்­களைத் தொடர்­பு­கொண்டு விசா­ரித்த­போது, பாட­சா­லைகள் மூடப்­பட்­டி­ருந்த காலத்தில் பல மாண­வி­க­ளுக்கு திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதை கண்­ட­றிந்­தனர். இந்த மாவட்­டத்தில் 3,000 க்கும் மேற்­பட்ட சிறு­ப­ராய திரு­ம­ணங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என தெரி­வித்த மாவட்ட அதி­கா­ரி­யொ­ருவர், உண்­மை­யான எண்­ணிக்கை அதனை விட மிக அதி­க­மாக இருக்­கலாம் எனவும் தெரி­வித்தார்.

‘பொரு­ளா­தாரம் மற்றும் சமூக பாது­காப்­பின்மை போன்ற பிரச்­சி­னைகள் கார­ண­மாக பெற்றோர் தமது மகள்­களை திரு­மணம் செய்து வைக்க வழி­வ­குத்­துள்­ளன. எமது ஆசி­ரி­யர்கள் பாது­கா­வ­லர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணு­கி­றார்கள், அச் சிறு­மி­களை பாட­சா­லை­க­ளுக்குச் செல்ல அனு­ம­திப்­ப­தற்கு இணங்கச் செய்து வரு­கின்­றனர்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

குல்­னாவைச் சேர்ந்த அபுஸ் ஷாஹித் என்ற தந்தை, தனது ஒன்­பதாம் வகுப்பு மகளை ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு திரு­மணம் செய்து வைத்தார், ஏனெனில் அவ­ரது வரு­மானம் முழு­மை­யாக இழக்­கப்­பட்­டுள்­ளதால் தனக்கு வேறு வழி தெரி­ய­வில்லை எனத் தெரி­வித்தார்.

‘அதே நேரத்தில், கால­வ­ரை­யறையற்று பாட­சா­லைகள் மூடப்­பட்­டன, என் மகள் வீட்டில் சும்மா உட்­கார்ந்­தி­ருப்­பதைத் தவிர வேறு எதுவும் செய்­ய­வில்லை,’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

குல்­னாவைச் சேர்ந்த அஸ்மா பேகம், தனது 15 வயது மகளை விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் மற்றும் கிண்டல் செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக திரு­மணம் செய்து வைக்க ஒப்­புக்­கொண்­ட­தாக தெரி­வித்தார்.

‘நான் தீர்­மா­ன­மொன்றை எடுக்க வேண்­டி­யி­ருந்­தது. அது தவிர, எங்­க­ளுக்கு ஒரு நல்ல மாப்­பிள்ளை தரப்­பி­லி­லி­ருந்து திரு­மண கோரிக்­கை­யொன்று வந்­தது அதற்கு நாம் சம்­மதம் தெரி­வித்தோம். அவர்கள் தங்­க­ளது மரு­ம­களை தொடர்ந்து படிக்க அனு­ம­திக்­கி­றார்­களா அல்­லது இல்­லையா என்­பது மாப்­பிள்ளை குடும்­பத்­தி­னரின் முடிவைப் பொறுத்­தது’ என பேகம் மேலும் தெரி­வித்தார்.

பங்­க­ளா­தேஷில் பாட­சா­லைகள் மீளத் திறக்­கப்­பட்­டதன் மூலம் சிறு­ப­ராயத் திரு­ம­ணங்கள் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளன.

கொவிட் -19 தொற்­று­நோய்க்கு முன்னர், உலகில் ஒவ்­வொரு இரண்டு வினா­டி­க­ளிலும் சிறு­மி­யொ­ருவர் வலுக்­கட்­டா­ய­மாக திரு­மணம் செய்து வைக்­கப்­ப­டு­வ­தாக தர­வுகள் காட்­டு­கின்­றன. வைரஸ் பரவல் மேலும் அதி­க­ரித்து வரும் நிலையில், அடுத்த தசாப்­தத்தில் 13 மில்­லியன் சிறு­ப­ராயத் திரு­ம­ணங்கள் இடம் பெறும் என ஐ.நா கணித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.