“காழி நீதிமன்றங்கள்” விட்டுக் கொடுக்கவே முடியாத விவகாரம்

0 675

அரபாத் ஸைபுல்லாஹ்

இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய எமக்குக் கிடைத்த ஓர் வரப்­பி­ர­சா­தமே காதி நீதி­மன்­றங்கள். இது இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல. எமது முன்­னோர்­களால் பல நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே வடி­வ­மைக்­கப்­பட்ட இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் காலாண்டு கால­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் ஆள் சார் சட்டம், ஆதனச் சட்டம் என்ற இரு பிரி­வு­களைக் கொண்­டது.

காதி நீதி­மன்­றங்கள் ஆள் சார் சட்டம் என்ற வரை­ய­றைக்குள் உள்­ள­டங்­கு­கின்­றது.
முஸ்லிம் தனியார் சட்ட வர­லாறு 500 வரு­டங்­க­ளையும் கடந்து செல்­கின்­றது.
S.G perera எழு­திய History Of Ceylon என்ற நூலின் முதல் பாகத்தில் ” எட்டாம் நூற்­றாண்டில் (அதா­வது இஸ்லாம் தோன்றி 200 வரு­டங்­க­ளுக்குப் பின்னால்) கொழும்பு, பேரு­வலை,காலி போன்ற கரை­யோர முஸ்­லிம்கள் தங்கள் திரு­மண விவ­கா­ரங்கள் மற்றும் வர்த்­தக கொடுக்கல் வாங்கல் தொடர்­பான பிணக்­கு­களை தீர்ப்­ப­தற்­காக, அவர்­க­ளுக்­கென்றே கொழும்பில் ஷரீஅத் நீதி­மன்றம் ஒன்று காணப்­பட்­டது” என்­ப­தாக குறிப்­பி­டு­கிறார்.

மேலும் Professor Lakshman Marasinghe மற்றும் Sharya Scharenguivel அவர்கள் எழு­திய Compilation of Selected Aspects of the special laws of Sri Lanka என்ற நூலிலும் கொழும்பில் காணப்­பட்ட ஷரீஅத் நீதி­மன்றம் தொடர்­பாக எழு­து­கி­றார்கள்.

Lorna Dewaraja அவர்கள் எழு­திய ஆயிரம் வருட வர­லாறு கொண்ட இலங்கை முஸ்­லிம்கள் The Muslims of Sri Lanka: One Thousand Years of Ethnic Harmony, என்ற நூலிலும் இதனை வர­லாற்று ஆதா­ரங்­க­ளுடன் உறு­திப்­ப­டுத்­து­கிறார்.

அது­மட்­டு­மின்றி போர்த்­துக்­கேயர் இலங்கை வந்த போது கரை­யோர முஸ்­லிம்­களே அவர்­க­ளுக்­கெ­தி­ராக முகம் கொடுத்­தனர். அப்­போது அவர்­களை போர்த்­துக்­கேயர் கண்­டிக்கு துரத்­தினர். அந்த வேளையில் கண்டி இராஜ்­யத்தின் மன்­னர்கள் கூட, தஞ்சம் புகுந்ந கரை­யோர முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் கைவைக்­க­வு­மில்லை. சமயம் சார்ந்த பல சலு­கை­க­ளையும் வழங்­கினர் என்று வர­லாறு கூறு­கின்­றது.

அதனைத் தொடர்ந்து கண்­டிக்கு வந்த முஸ்­லிம்கள் மீண்டும் கரை­யோரம் திரும்­பினர். அப்­போது ஒல்­லாந்­தரின் ஆட்சிக் காலம்.

அவ் வேளையில் இலங்­கையில் இருந்த ஒல்­லாந்து கவர்னர் பதா­வி­யாவில் இருக்கும் அவர்­களின் தலை­மை­ய­கத்­திற்கு எழு­திய கடி­தத்தில் “இலங்கை முஸ்­லிம்கள் தங்கள் திரு­மணம் மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு, அவர்­க­ளுக்­கென்றே சமயம் மற்றும் கலா­சாரம் சார்ந்த சில சட்­டங்கள் இருக்­கின்­றன. அவற்றை ஒரு­நாளும் மாற்ற முடி­யாது. எனவே அதனை கருத்தில் கொண்டு நீங்கள் சட்­ட­மியற்­றுங்கள்” என்று கூறப்­பட்­டது. இன்­று­வரை அந்தக் கடி­தங்கள் வர­லாற்று நூல்­களில் காணப்­ப­டு­கின்­றன.
பின்னர் அதனை கருத்தில் கொண்டு 8ஆம் இலக்க சட்டம் “முஹம்­ம­தியன் கோர்ட்” என்ற சட்டக் கோவை பதா­வி­யா­வி­லி­ருந்து இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­காக 1770 இல் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

பின்னர் 1801 ஆங்­கி­லேயர் இலங்­கையை கைப்­பற்­றிய போதும் முஸ்­லிம்­களின் சட்­டங்­க­ளையும் தாம் ஏற்றுக் கொண்­ட­தாக பிர­க­டனம் செய்­தனர்.

ஆங்­கி­லே­யரால் 1806 மற்றும் 1833 இல் யாப்புச் சீர்திருத்­தங்கள் வந்­த­போதும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் எவ்­வித மாற்­றத்­தையும் மேற்­கொள்­ள­வில்லை

இறு­தி­யாக 1929 இல் டி பி ஜாயா, நீதி­ய­ரசர் அக்பர் போன்­ற­வர்­களைக் கொண்ட குழு முஸ்லிம் தனியார் சட்­டத்தை நெறிப்­ப­டுத்­தி­னார்கள்.
இந்த வர­லாற்றுப் பின்­ன­ணி­களை நோட்­ட­மிடும்போது இலங்கை முஸ்­லிம்கள் தங்­க­ளது தனித்­துவ அடை­யா­ளங்­களை எப்­போதும் விட்டுக் கொடுக்­க­வில்லை என்ற செய்தி புல­னா­கின்­றது.

எனவே இவ்­வாறு மாபெரும் வர­லாற்றுப் பின்­ன­ணியால் பல நூறு ஆண்­டுகள், எங்கள் முன்­னோர்­களால் பாது­காக்­கப்­பட்ட இச் சட்­டங்­களை ஒரு வார்த்­தையால் துடைத்­தெ­றிய முடி­யுமா?

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டுமே தவிர இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்­பது எவ­ரி­னதும் உளக்­கி­டக்கை அல்ல.
குறிப்­பாக காதி நீதி­மன்­றங்கள் இல்­லா­ம­லாக்­கப்­படும் என்ற நீதி அமைச்­சரின் முடிவு அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இது விட்டுக் கொடுக்­கவே முடி­யாத விவ­காரம். இதனை நாம் விட்டுக் கொடுப்­பது வர­லாற்றுத் தவ­றாகும் என்­பதில் எள்­ள­ளவும் சந்­தே­க­மில்லை.

குறித்த விடயம் தொடர்­பாக முஸ்லிம் அமைச்சர்கள், சிவில் அமைப்புக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என அனைவரும் இணைந்து, இதற்கான ஓர் ஆக்கபூர்வமான தீர்வொன்றை பெறுவது தார்மீகக்கடமையாகும்.

அத்தோடு முஸ்லிம்களாகிய நாம் எமது உரிமைகளை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை களில் ஈடுபடுவதும் அவசியமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.