காதி நீதிமன்ற முறைமையை ஒழிக்க அமைச்சரவை தீர்மானம்: உலமா சபை கவலை

மார்க்க அடிப்படைகளையும் ஜனநாயக உரிமைகளையும் மதித்து மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

0 488

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பாக தாம் அதி­ருப்­தியும் கவ­லையும் அடைந்­துள்­ள­தாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

இஸ்­லா­மிய மார்க்க, சிவில் நிறு­வ­னங்­க­ளு­டைய ஆலோ­ச­னை­களை கருத்திற் கொள்­ளாமல் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் சம்­பந்­த­மாக சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருப்­பது மிகக் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும் என்றும் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

அமைச்­ச­ர­வையின் இத் தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் மார்க்க அடிப்­ப­டை­க­ளையும் நாட்டின் ஜன­நா­யக உரி­மை­க­ளையும் கவ­னத்திற் கொண்டு தீர்­மானம் எடுக்­கு­மாறும் உலமா சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்­நாட்டு முஸ்­லிம்கள் 1000 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமது மத மற்றும் கலாச்­சார விவ­கா­ரங்­க­ளையும், மார்க்க சட்­ட­திட்­டங்­க­ளையும் எவ்­வித பிரச்­சி­னை­யு­மின்றி பின்­பற்றி வந்­துள்­ள­துடன் இது சட்ட அமைப்பில் தொகுக்­கப்­பட்டு ஒல்­லாந்தர் மற்றும் ஆங்­கி­லேயர் காலத்­திலும், சுதந்­தி­ரத்­திற்கு பின்பும் இன்­று­வரை முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்­ப­டையில் சட்ட ரீதி­யாக இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இச்­சட்­டங்கள் முஸ்­லிம்­களின் மார்க்க விட­யங்­க­ளோடு தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் ஆட்­சி­யா­ளர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் கருத்­துக்­களை உரிய முறையில் உள்­வாங்­கியே இதில் தேவை­யான மாற்­றங்­களை செய்து வந்­துள்­ளனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் காணப்­படும் சில விட­யங்­களில் காலத்­திற்குத் தேவை­யான மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­பதில் நாம் உடன்­ப­டு­கின்றோம். குறிப்­பாக பெண்­களின் ஆதங்­கங்கள் இம்­மாற்­றங்கள் மூலம் தீர்க்­கப்­பட வேண்டும். எனினும், இது முஸ்­லிம்­க­ளது மார்க்­கத்­தோடு சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­த­னாலும், ஒரு முஸ்­லி­மு­டைய வாழ்க்கை அவ­னது மார்க்­கத்­தோடு இணைக்­கப்­பட்­டி­ருப்­ப­த­னாலும் இம்­மாற்­றங்கள் மார்க்க அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணில்­லாத வகை­யிலும் உரிய தரப்­பி­ன­ரி­ன­ருடன் கலந்­து­ரை­யாடி அவர்­களின் கருத்­துக்­களை உள்­வாங்­கி­யுமே மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். காலத்­திற்குத் தேவை­யான இம்­மாற்­றங்கள் குறித்த முன்­மொ­ழி­வு­களை ஏற்­க­னவே பல தட­வைகள் பல கட்­டங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் இஸ்­லா­மிய மார்க்க, சிவில் நிறு­வ­னங்­க­ளு­டைய ஆலோ­ச­னை­களை கருத்திற் கொள்­ளாமல் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் சம்­பந்­த­மாக சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருப்­பது மிகக் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இவ்­வி­ட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தனது அதி­ருப்­தி­யையும், கவ­லை­யையும் தெரி­வித்துக் கொள்­கின்­றது.

எனவே, அமைச்­ச­ர­வையின் இத்­தீர்­மா­னங்கள் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யும்­ப­டியும், குறித்த விட­யங்கள் தொடர்­பான மார்க்க அடிப்­ப­டை­களை உரிய முறையில் கவ­னித்து, நாட்டின் அனைத்து பிர­ஜை­களின் உரி­மை­க­ளையும் மதித்து, எவ­ருக்கும் அநீதி இழைக்­கப்­ப­டாத வகையில், இந்­நாட்டின் பல்­லின கலா­சா­ரத்தைப் பேணக்­கூ­டிய விதத்தில், அனைத்து தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைத்த ஒரு பொறி­முறை மூலம் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் படியும் அர­சாங்­கத்­தையும் நீதி அமைச்­ச­ரையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அன்­பாக வேண்டிக் கொள்­கின்­றது.

மேற்­கூ­றிய அடிப்­ப­டையில் நாட்­டி­னதும், முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் நன்­மைக்­கா­கவும் முன்­னேற்­றத்­திற்­கா­கவும் எடுக்­கப்­படக் கூடிய சகல முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தனது முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும் என்­ப­தையும் நாம் கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றோம்.
நாம் மேற்­கொள்ளும் ஒவ்­வொரு தீர்­மா­னமும் நமது நாட்­டுக்கும், நமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கும் நல­வு­க­ளையும், பிர­யோ­ச­னங்­க­ளையும் உண்டாக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.