உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பாரிய சதிகள் நெளபர் மெள­ல­வியே பிர­தான சூத்­தி­ர­தாரி என கூற முடி­யாது

பதவிக் காலம் முடிந்து செல்லும் சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா கூறு­கிறார்

0 606

 ஏ.ஆர்.ஏ.பரீல்

2019.04.21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய சதித்­திட்­ட­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. சாட்­சி­யங்கள், உளவுத் தக­வல்கள் தொடர்­பான ஆவ­ணங்கள் மற்றும் ஏனைய தக­வல்கள் என்­பன மிகவும் கவ­ன­மாக மதிப்­பீடு செய்­யப்­பட்டு இத்­தாக்­கு­தலின் தலை­மைத்­துவம் தொடர்­பான தீர்­மா­னத்­தினை எட்­ட­வேண்டும் என சட்­டமா அதிபர் தப்­புல டிலி­வேரா தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘ அரச உளவுச் சேவையின் தக­வல்­க­ளின்­படி தாக்­குதல் இடம் பெற்ற நேரம் தாக்­கு­தலின் இலக்கு, தாக்­குதல் நடத்­தப்­பட்ட முறை மற்றும் மேலும் தக­வல்­க­ளின்­படி பாரிய சதித்­திட்­ட­மொன்று இடம்­பெற்­ற­தற்­கான சாட்­சி­யங்கள் உள்­ளன.

இத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக அர­சினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள நெளபர் மெள­லவி மாத்­திரம் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யல்ல. இன்னும் பலர் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த சதித்­திட்­டத்தில் தொடர்­பு­பட்­ட­வர்­களின் அடை­யா­ளங்கள் கட்­டா­ய­மாக சாட்­சி­யங்கள் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். சட்­டமா அதிபர் திணைக்­களம் தற்­போது இச்­ச­தித்­திட்­டத்தின் சூழ்­நிலை தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்­ளது.

பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர 2019 ஏப்ரல் 21ஆம் திகதி தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி நெளபர் மெள­லவி என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். நெளபர் மெள­லவி இந்த தாக்­கு­த­லுக்­கான சதித்­திட்­டத்தின் ஒரு பிர­தான நப­ராவார். என்­றாலும் அவர்தான் பிர­தான சூத்­தி­ர­தாரி என உறுதி செய்ய முடி­யாது. அவர்தான் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக இருந்­தி­ருக்க வேண்டும். இது­பற்றி முழு­மை­யாக கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். அப்­போது உண்மை வெளி­வரும். தற்­போது இந்தத் தாக்­கு­தலைத் திட்­ட­மி­டு­வதில் பங்­கு­கொண்ட ஒரு குழு­வி­னரைப் பற்­றியே புலன் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

இந்த சதித்­திட்­டத்தை நிறை­வேற்­றிய தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தற்­போது உயி­ரு­ட­னில்லை. ஆனால் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லானோர் புல­னாய்­வா­ளர்­க­ளினால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர் எனவும் சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா கூறி­யுள்ளார்.
மேலும் அவர் தெரி­விக்­கையில், இத்­தாக்­கு­தலை மேற்­கொள்ள சதி செய்­த­வர்கள் பல்­வேறு தரப்­பி­ன­ராவர். சஹ்ரான் ஹாசிம் (தாக்­கு­தலை மேற்­கொண்ட குழு­விற்கு தலைமை தாங்­கி­யவர்) போன்­ற­வர்கள் இந்த சதித்­திட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் தன்­னைத்­தானே வெடிக்கச் செய்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளனர். இந்தப் பாரிய சதித்­திட்டம் தொடர்­பான புலன் விசா­ர­ணைகள் முடி­வுக்கு வந்­துள்­ள­தாக எம்மால் கூற முடி­யாது.

சிலர் தாக்­கு­தலைத் திட்­ட­மிட்­டார்கள், சிலர் தற்­கொலை குண்­டு­தா­ரி­களை வழி நடத்­தி­னார்கள். இந்த இரு தரப்­பி­னரும் இச்­ச­தித்­திட்­டத்தின் பங்­கு­தா­ரர்­க­ளாவர். எனவே அதற்­கான சாட்­சி­யங்கள் மிகவும் கவ­ன­மாக நோக்­கப்­ப­ட­வேண்டும்.

புலன்­வி­சா­ரணை அதி­கா­ரிகள் இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட வெளி­நாட்டுத் தொடர்­பா­ளர்­களின் சாட்­சி­யங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. என்­றாலும் வெளி­நா­டு­களில் வாழும் மூவர் தொடர்பில் புலன்­வி­சா­ர­ணைகள் தொடர்­கின்­றன. அவர்கள் லுக்மான் தாலிப் , அவ­ரது மகன் (அவுஸ்­தி­ரே­லியா) மற்றும் அபு ஹின்த் (இந்­தியா) என்­போ­ராவர்.

புலஸ்­தினி ராஜேந்­திரன் அல்­லது சாரா ஜெஸ்மின் தொடர்­பிலும் தப்­புல டி லிவேரா கருத்துத் தெரி­வித்தார். சாரா சாய்ந்­த­ம­ருது துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வத்தில் பலி­யா­ன­தாகக் கூறப்­பட்­டாலும் இது­வரை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.அவர் இந்­தி­யா­வுக்கு தப்­பிச்­சென்று விட்­ட­தாக நாம் நினைக்­கிறோம். என்­றாலும் அதுவும் இது­வரை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. உண்­மையில் அவர் எங்­கி­ருக்­கிறார் என்­பது தெரி­ய­வில்லை.

தாக்­கு­த­லுக்கு வெளி­நாட்டு பங்­க­ளிப்பு இருந்­த­தற்­கான சாட்­சி­யங்கள் இல்லை. வெளி­நாட்டு தீவி­ர­வாதம், வன்­செயல், சமய கொள்­கைகள் இவ்­வி­டத்தில் முக்­கி­ய­மா­ன­தாகும். இக்­கொள்­கைகள் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் பெரும் பாத்­தி­ர­மேற்­றி­ருக்­கலாம். இத்­தாக்­கு­த­லுக்கு மேலும் பல சம்­ப­வங்கள் தொடர்­பு­டை­ய­வை­க­ளாக இருந்­துள்­ளன.அவை தொடர்­பிலும் கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் தப்­புல டி லிவேரா தெரி­வித்தார். இச்­சம்­ப­வங்கள்
* 2019.04.16ஆம் ­தி­கதி கிழக்­கு­மா­காணம் காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்­பவம்.
* பாரிய சதித்­திட்டம்
* சாய்ந்­த­ம­ருது துப்­பாக்­கிச்­சூடு மற்றும் வெடிப்புச் சம்­பவம்
* பாது­காப்பு மற்றும் பொலிஸ் பிரிவின் அதி­கா­ரிகள் தாக்­கு­தலைத் தடுக்கத் தவ­றி­யமை.
* முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள்.
இந்தச் சம்­ப­வங்கள் விசா­ரணை செய்­யப்­பட்டு மதிப்­பீடு செய்­யப்­ப­டு­வது அவ­சியம் என அவர் தெரி­வித்தார்.

இந்த ஆய்வு எதிர்­பார்த்­ததை விட சிக்­க­லா­ன­தாகும் எனவும் அவர் கூறினார். சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா முன்பு பொது அறி­விப்­பொன்­றி­னையும் விருத்­தி­ருந்தார். சதித்­திட்டம் தீட்­டி­ய­வர்கள் மற்றும் குற்­றச்­செ­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­து­வ­தற்கு என்னால் முடி­யா­ம­லி­ருக்­கி­றது. ஏனென்றால் 2019.04.21 தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் இன்னும் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினால் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனால் எனது பதவிக் காலத்தில் இதனைச் செய்ய முடி­யா­ம­லுள்­ளது. இந்த அறி­விப்பு சட்­டமா அதி­பரின் இணைப்பு அதி­காரி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிஸாரா ஜய­ரத்­ன­வினால் 2021.05.15 ஆம் திகதி விடுக்­கப்­பட்­டது. ஏப்ரல் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் மீதான விசா­ர­ணைகள் சிஐ­டி­யினால் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை எனவும் நிஸாரா ஜய­ரத்­ன­வினால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டமா அதிபர் பொலிஸ்மா அதி­ப­ரிடம் நிலு­வை­யி­லுள்ள விசா­ர­ணைகள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­மாறு ஏற்­க­னவே கோரி­யி­ருந்தார். ஏப்ரல் 21 தாக்­குதல் சந்­தேக நபர்கள் 42 பேருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட 130 சாட்­சி­யங்­களை பொலிஸ்­மா­அ­திபர் உறுதி செய்­தி­ருந்தார். இவர்­களில் 5 சந்­தேக நபர்­களின் சாட்­சி­யங்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருந்­த­மையை அவ­தா­னித்த சட்­டமா அதிபர் விசா­ரணை மேலும் நிலு­வையில் உள்­ளதா என பொலிஸ்மா அதி­ப­ரிடம் வின­வி­யி­ருந்தார். மொஹமட் ஆசிம், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வாகர் யூனுஸ், மொஹமட் பர்ஸான் மற்றும் சாஹூல் ஹமீட் என்­போரே குறிப்­பிட்ட 5 சந்­தேக நபர்­க­ளாவர். அத்­தோடு மேலும் 29 சந்­தேக நபர்­களின் மீதான விசா­ர­ணைகள் தொடர்பிலும் சட்டமா அதிபர் விளக்கங்களைக் கோரினார்.

விசா­ர­ணைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. அதனால் வழக்­கு­களை முன் நகர்த்த முடி­ய­வில்லை என தப்­புல டி லிவேரா கடந்த 12 ஆம் திகதி தெரி­வித்­தி­ருக்­கிறார். சில சந்­தேக நபர்­களின் விசா­ர­ணைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­ததால் நீதி­மன்று மூலம் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­துள்­ளது எனவும் அவர்­கூ­றி­யுள்ளார்.

விசா­ர­ணை­களின் தாமதம் கார­ண­மா­கவே எனது பத­விக்­கா­லத்தில் இந்த வழக்கு தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க முடி­யா­ம­லி­ருக்­கிறேன். விசா­ர­ணைகள் முற்றுப் பெற்­றி­ருந்தால் எனது பத­விக்­கா­லத்­திலே இந்த வழக்­கு­களை முன்­னெ­டுத்­தி­ருப்பேன் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா இந்த மாத இறு­தியில் தனது பதவிக் காலத்தை முடித்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.