ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காப்பாற்றும் முயற்சிகளை தடுக்கவே வழக்குகள் தாமதம்

தொடர்ந்தும் சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் என்கிறார் வீரசேகர

0 390

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட முக்­கிய குற்­ற­வா­ளி­களை நீதி­மன்­றத்தில் முன்­னி­றுத்­தினால் இவர்­க­ளுக்­காக முன்­வந்து வாதாடும் சிறந்த சட்­டத்­த­ர­ணிகள் சட்ட ஓட்­டை­களை பயன்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வி­டு­வார்கள். அவ்­வா­றான தவ­றுகள் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற கார­ணத்­தி­னாலே ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­விற்கு எதி­ராக இன்னும் வழக்கு தொட­ராது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர சபையில் தெரி­வித்தார்.

இந்த தாக்­குதல் தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்­தி­லான விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், எப்.பி.ஐ மற்றும் ஒஸ்ட்­ரே­லியன் பெடரல் பொலிஸ் ஆகிய சர்­வ­தேச விசா­ரணை பிரி­வு­க­ளுடன் எமது குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு இணைந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­ முன்­தினம் புதன்­கி­ழமை பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர மூல­மாக முன்­வைக்­கப்­பட்ட அமைச்சின் விசேட அறி­விப்பின் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில், ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ரணை நட­வ­டிக்­கைகள் குறித்து சட்­டமா அதிபர் அறி­விப்­பொன்றை விடுத்­தி­ருந்தார். இதன்­போது குறை­பா­டுகள் இருப்­ப­தா­கவும், வழக்­குகள் தொடுக்க முடி­யாத கார­ணிகள் குறித்தும் அறி­வித்­தி­ருந்தார். அதேபோல் இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் சூழ்­சிகள் உள்­ள­தா­கவும், பிர­தான சூத்­தி­ர­தாரி குறித்த தெளி­வுகள் இல்லை எனவும், சர்­வ­தேச நபர்கள் குறித்த தக­வல்கள் தெளி­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார். இதனை அடுத்து பேரா­யரும் சில கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இவை குறித்து பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் பதில் கூற­வேண்­டி­யுள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் முப்­பது ஆண்­டு­கால பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்­டு ­வந்தோம், அவ்­வாறு இருக்­கையில் நாம் மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வா­தத்­தையும், அடிப்­ப­டை­வா­தத்­தையும் தலை­தூக்க இட­ம­ளிக்க மாட்டோம்.

எவ்­வாறு இருப்­பினும் ஈஸ்டர் தாக்­கு­தலில் எமது நாட்டு பொது­மக்­களை போலவே சர்­வ­தேச நபர்­களும் கொல்­லப்­பட்­டனர். எனவே இது குறித்த சர்­வ­தேச மட்­டத்­தி­லான விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எப்.பி.ஐ மற்றும் ஒஸ்ட்­ரே­லியன் பெடரல் பொலிஸ் ஆகிய சர்­வ­தேச விசா­ரணை பிரி­வு­க­ளுடன் எமது குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு இணைந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. சர்­வ­தேச விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு நீண்ட காலம் எடுக்கும். உதா­ர­ண­மாக கூறு­வ­தென்றால் 2001 அமெ­ரிக்க தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட கலீத் என்ற நபர் இன்­னமும் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார், அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது, வழக்­குகள் கூட இன்­னமும் தொடுக்­கப்­ப­ட­வில்லை. ராஜீவ் காந்தி கொலை, லக்ஸ்மன் கதிர்­காமர் கொலை, தல­தா­மா­ளிகை தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொட­ரவும் நீண்­ட­ காலம் எடுத்­தது.

எவ்­வாறு இருப்­பினும் ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 32 பேருக்கு வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளன, மாவ­னெல்லை புத்த சிலை உடைக்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட 16 பேருக்கு கேகாலை நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. வனாத்­தவில்லு லக்டோ தோட்­டத்தில் வெடி­பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வத்தில் 6 சந்­தேக நபர்­க­ளுக்கு புத்­தளம் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. தஸ்லீம் என்ற நப­ருக்கு துப்­பாக்கி சூடு நடத்­திய குற்­றத்தில் சந்­தே­க­ ந­பர்கள் மூன்று பேருக்கு கேகாலை நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வா­தத்­திற்கு அனு­ச­ரணை வழங்­கிய குற்­றத்தில் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா உள்­ளிட்ட மேலும் சில­ருக்கும் வழக்­குகள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த வழக்­குகள் குறித்து சட்­டமா அதி­ப­ருக்கு அறி­வித்­துள்ளோம், அதேபோல் தனிப்­பட்ட முறையில் சட்­டமா அதி­பரை சந்­தித்து குறித்த விட­யங்கள் தொடர்பில் பேசி­யி­ருந்தேன். எவ்­வாறு இருப்­பினும் பொலி­சாரின் சாட்­சி­யங்கள் மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைக்கு இடையில் முரண்­பா­டுகள் இருக்­கின்ற கார­ணத்­தினால் முழு­மை­யாக அறிக்கை கிடைக்கும் வரையில் பொறுமை காக்­க­வேண்­டி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். இவ்­வா­றான செயற்­பா­டு­களில் சாட்­சி­யங்கள் மாறு­ப­டு­கின்­றமை மற்றும் குறை­பா­டுகள் ஏற்­ப­டு­வதும் வழ­மையே. ஆகவே இது குறித்த செயற்­பா­டு­களை குறை­பா­டுகள் இன்றி முழு­மைப்­ப­டுத்த நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.

மேலும் எமது புல­னாய்­வுத்­துறை விசா­ர­ணை­களின் போதும் அமெ­ரிக்­காவின் விசா­ர­ணை­களின் போதும் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பிர­தான பாத்­திரம் நௌபர் மௌலவி மூல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஐ.எஸ் கொள்­கையை இலங்­கைக்குள் கொண்­டு­வந்து சஹ்ரான் மற்றும் அவ­ரது அணி­யி­னரை பயங்­க­ர­வா­தத்­திற்குள் கொண்­டு­வந்­துள்ளார். இது குறித்த பல்­வேறு சாட்­சி­யங்கள் எம்­மி­டமும், எப்.பி.ஐயி­டமும் உள்­ளது. அதேபோல் இந்த தாக்­கு­த­லுடன் சர்­வ­தேச நபர்­களும் தொடர்பில் உள்­ளனர். குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் நட­வ­டிக்­கைகள் குறித்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் இந்த தாக்­குதல் குறித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தின் சக­லரும் பொறுப்­புக்­கூற வேண்டும்.

அதேபோல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மூலமாக முன்னெடுக்கப்பட்ட “சேவ் த பேர்ல்” என்ற அமைப்பின் மூலமாக நௌபர் மௌலவி மற்றும் சஹ்ரான் ஆகியோர் சிறுவர்களுக்கு அடிப்படைவாத போதனைகளை முன்னெடுத்துள்ளனர். எனவே இவர்களுக்கு உடனடியாக வழக்கு தொடுத்தால் குறித்த குற்றவாளிகளுக்காக முன்வரும் சிறந்த சட்டத்தரணிகள் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். எனவேதான் எந்தவொரு தவறுகளையும் செய்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் நாம் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடராது சாட்சியங்களை பலப்படுத்தும் வேலையை செய்து வருகின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.