அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக கைதாகும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் வரமா? சாபமா?

0 527

எம்.எப்.எம்.பஸீர்

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 27 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் ஜனா­தி­ப­தி­யினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி 2218/68 ஆம் இலக்க குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது.

இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லா­னது, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும், சர்­வ­தேச இணக்­கப்­பா­டு­க­ளையும் குறிப்­பாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்­டி­னையும் மீறும் வகையில் அமைந்­துள்­ள­தாக சட்ட வல்­லு­நர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இந் நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் என பர­வ­லாக அறி­யப்­படும் ஏப்ரல் 21 தாக்­கு­த­லுடன் நேரடி தொடர்­பற்­ற­வர்­க­ளுக்கு இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் புனர்­வாழ்­வ­ளிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மிக விரைவில் அவ்­வா­றா­ன­வர்­களை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி, புனர்­வாழ்­வ­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­துள்ளார்.

இந்த புனர்­வாழ்வு நடை­மு­றையை செயற்­ப­டுத்­து­வ­தற்­காக, பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு (ரி.ஐ.டி.), குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சி.ஐ.டி.) மற்றும் தேசிய உளவுச் சேவை (எஸ்.ஐ.எஸ்.)ஆகி­ய­வற்றின் பரிந்­து­ரைகள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அதற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யினால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு மார்ச் 12 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட இந்த புனர்­வாழ்­வ­ளித்தல் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலின் முத­லா­வது ஒழுங்­கு­வி­தி­யா­னது, இவ்­வர்த்­த­மா­னியின் உள்­ள­டக்­கத்தை ‘ 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடுப்பு (வன்­மு­றை­யான மட்டு மீறிய மதக் கொள்­கையைக் கொண்­டி­ருப்­ப­தற்கு எதி­ரான தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல்) ஒழுங்­கு­வி­திகள் ‘ என அறி­முகம் செய்­துள்­ளது.

இவ்­வர்த்­த­மா­னியின் 5 ஆம் ஒழுங்­கு­வி­தியின் 4 ஆவது உப ஒழுங்கு விதி­யா­னது, ‘அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர் ஒருவர், வழக்கு விசா­ர­ணைகள் இன்றி புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த’ நீதிவான் ஒரு­வ­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்­கின்­றது. இதற்­காக சட்ட மா அதி­பரின் எழுத்து மூல அனு­மதி மட்­டுமே அவ­சி­ய­மா­கி­றது.

குறித்த ஒழுங்கு விதி பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது.
‘புரி­யப்­பட்ட தவறின் தன்­மைக்கு இணங்க சர­ண­டைந்­தவர் ஒரு­வ­ருக்கு அல்­லது, தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டவர் ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் நட­வ­டிக்­கை­களை தொடுப்­ப­தற்குப் பதி­லாக புனர்­வாழ்வு நிலை­ய­மொன்றில் அவ­ருக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும் என சட்ட மா அதிபர் அபிப்­பி­ரா­யப்­ப­டு­மி­டத்து, அத்­த­கைய சர­ண­டைந்­தவர் அல்­லது தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டவர் சட்ட மா அதி­பரின் எழுத்து மூல அங்­கீ­கா­ரத்­துடன் நீதிவான் ஒருவர் முன் நிறுத்­தப்­ப­டுதல் வேண்டும். நீதிவான் ஒருவர், 3 ஆம் ஒழுங்­கு­வி­தியில் குறித்­து­ரைக்­கப்­பட்ட தவ­றுகள் அல்­லாத வேறு ஏதும் தவ­று­களை அத்­த­கைய சர­ண­டைந்த அல்­லது தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தவர் புரிந்­துள்­ளாரா என்­பதை கருத்தில் கொண்டு ஒரு புனர்­வாழ்வு நிலை­யத்தில் ஒரு வரு­டத்தை விஞ்­ஞாத காலப்­ப­கு­திக்­காக அவரை புனர்­வாழ்­வுக்­காக ஆற்­றுப்­ப­டுத்தி கட்­ட­ளை­யாக்­கலாம்.’

உண்­மையில் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பா­னது, கைது செய்­யப்­படும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான அடிப்­படை உரிமை உள்­ள­தாக கூறு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது உறுப்­புரை இதனை மிகத் தெளி­வாக எடுத்­தி­யம்­பு­கின்­றது. அப்­படி இருக்­கையில் சட்ட மா அதி­பரின் நிலைப்­பாட்டை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒரு­வரை புனர்­வாழ்­வுக்கு அனுப்­பு­வது பார­தூ­ர­மான விட­ய­மாகும் என சட்டத் துறை அலு­வ­லர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இது தொடர்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜாவிட் யூசுப் கருத்து தெரி­விக்­கையில், ‘ நீதி­மன்றம் ஒரு விடயம் தொடர்பில் இரு தரப்பு விட­யங்­க­ளையும் ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்­தாலும், சட்ட மா அதிபர் அவ்­வா­றா­ன­தொரு செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வ­தில்லை. சட்ட மா அதிபர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­படும் சந்­தே­க­நபர் தொடர்­பி­லான விட­யங்­களை ஆராய்ந்து, அது தொடர்பில் அவ­ரது தீர்­மா­னத்தை நீதி­மன்றில் முன்­வைப்பார். அந்த தீர்­மானம் நியா­ய­மா­னதா என நீதி­மன்றம் வழக்கு விசா­ர­ணையின் பின்­ன­ரேயே தீர்­மா­னிக்கும்.

எனினும் இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமைய, சட்ட மா அதி­பரின் குறித்த நிலைப்­பாடு தொடர்பில் இரு தரப்பு விட­யங்­களை ஆராய்­வது அல்­லது வழக்கு விசா­ரணை இடம்­பெ­றாத சூழ் நிலை­யையே அவ­தா­னிக்க முடி­கி­றது. அதன்­படி அர­சியல் அமைப்பு ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான அடிப்­படை உரி­மையை அது மீறு­வ­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன், இந்த வர்த்­த­மா­னிக்கு அமை­வாக கைது செய்­யப்­படும் நபர்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படும் முறைமை தொடர்­பிலும் எந்த தெளி­வு­ப­டுத்­தல்­களும் இல்­லா­மை­யா­னது மற்­றொரு பார­தூ­ர­மான விட­ய­மாகும்.’ என தெரி­வித்தார்.

இந் நிலையில், இந்த வர்த்­த­மானி தொடர்பில், பிர­பல மனித உரி­மைகள் குறித்த வழக்­க­றிஞர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி விரான் கொரயா தனது ட்விட்டர் சமூக வலைத் தளத்தில் இட்­டுள்ள பதிவில், ‘இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக தனி மனித சுதந்­திரம் தொடர்பில் பாரிய பிரச்­சினை எழு­கி­றது. காரணம், ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நீதி­பதி ஒரு­வ­ருக்கு குறித்த விடயம் தொடர்பில் தீர்­மா­ன­மொன்­றினை எடுப்­ப­தற்­கான அவ­காசம் இல்­லாமல் போகி­றது.’ என தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, அர­சி­ய­ல­மைப்பு குறித்த நிபு­ண­ரான பேரா­சி­ரியர் நிஹால் ஜய­விக்­ரம தெரி­விக்­கையில், கைது செய்­யப்­படும் நபர் ஒருவர் தொடர்பில் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணைகள் இன்றி தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மானால் அதனை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யு­மான விட­ய­மல்ல’ என தெரி­வித்தார்.

சர்­வ­தேச நீதி­ப­திகள் ஆணைக் குழுவும் ( ஐ.சி.ஜே.) இந்த வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் சர்­வ­தேச இணக்­கப்­பா­டு­களை மீறு­வ­தாக குறிப்­பிட்டு, இந்த வர்த்­த­மா­னியின் உள்­ள­டக்­கங்­களைக் கண்­டித்­துள்­ளது. வழக்கு விசா­ரணை இன்றி இரு வரு­டங்கள் வரை தடுத்து வைத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்பை அளிக்கும் இலங்­கையின் புதிய ‘ டி – ரெடி­க­லை­சேஷன் ‘ ஒழுங்­கு­வி­தி­களை கண்­டிப்­ப­தாக குறித்த ஆணைக் குழு தெரி­வித்­துள்­ளது. அந்த ஒழுங்­கு­வி­தி­க­ளா­னது, சிறு­பான்மை மத, இன மக்­களை மற்றாந் தாய் மனப்­பான்­மை­யுடன் பார்க்க வழி­வ­குக்கும் என அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தின் எந்த தலை­யீடும் இன்றி, நிறை­வேற்று அதி­கா­ரத்தை கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த வர்த்­த­மானி, மக்­க­ளி­டையே மத அல்­லது இன முரண்­பா­டு­களை, வேற்­று­மை­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் வச­னங்­களை, சமிக்­ஞை­களை பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களைக் கூட நியா­ய­மான வழக்கு விசா­ர­ணைகள் இன்றி இரு வரு­டங்கள் வரை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த முடி­யு­மான விட­யங்­களை கொண்­டுள்­ளமை ஆபத்­தா­ன­தாகும்.

இந் நிலையில் இது குறித்து ஐ.சி.ஜே. எனும் சர்­வ­தேச நீதி­ப­திகள் ஆணைக் குழுவின் சட்டம் மற்றும் கொள்கை தொடர்­பி­லான பணிப்­பாளர் இயன் சைடேர்மன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் பின் வரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது.
‘நிறை­வேற்று அதி­காரம் கொண்­ட­வரால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த கட்­டளை ஊடாக, நபர்­களை வழக்கு விசா­ரணை இன்றி சிறைப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆம் உறுப்­புரை ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பு உறு­திப்­பாட்­டையும், சர்­வ­தேச சட்­டங்­க­ளு­ட­னான பிணைப்­பையும் மீறும் வகையில் அமைந்­துள்­ளது.

புதிய வர்த்­த­மானி ஒழுங்­கு­வி­தி­களை ஒரு பேரம் பேசும் விடயப் பொரு­ளாக பயன்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது. இங்கு கைதி ஒரு­வ­ருக்கு சட்ட ரீதி­யி­லான குற்­றச்­சாட்டின் கீழ் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு பதி­லாக ஓரிரு வரு­டங்கள் புனர்­வாழ்வு பெறலாம். அல்­லது கால வரை­யறை அற்ற தடுப்புக் காவலில் இருந்து வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முகம் கொடுக்­கலாம். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்­டிய நிலை ஏற்­படும்.

இலங்கை உடன்­பட்­டுள்ள சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 9 ஆம் உறுப்­புரை ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள உறு­திப்­பா­டுகள் பலவும் புதிய வர்த்­த­மா­னியில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை’ என அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உண்­மையில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் உறு­திப்­ப­டுத்­தல்கள் பிர­காரம், நிர்­வாக தேவை­க­ளுக்­காக ஒரு­வரை தடுப்புக் காவலில் வைக்க முடி­யாது. அது மனித உரிமை மீற­லாக பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் இலங்­கையில் இந்த புதிய வர்த்­த­மானி வரு­வ­தற்கு முன்­பா­கவே, பயங்­க­ர­வாத தடை சட்­டத்­தையும், சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச சட்­டத்­தையும் சிறு­பான்­மை­யி­னரை இலக்­காக கொண்­ட­தாக பயன்­ப­டுத்தும் ஒரு போக்­கி­னையே காண முடி­கி­றது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக வெறுப்­புண்ர்­வு­களை தூண்டும் எவரும் இச்­சட்­டங்கள் ஊடாக கைது செய்­யப்­ப­டு­வ­தா­கவோ தடுத்து வைக்­கப்­பட்டு வழக்கு தொடுக்­கப்­ப­டு­வ­தா­கவோ காண முடியவில்லை.

மாற்­றாந்தாய் மனப்­பான்­மையை தூண்டும், வன்­முறை, பகை­மை­க்கு வித்­திடும் வெறுப்புப் பேச்­சுக்­களை ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­புரை தடை செய்­கி­றது. இந்த உறுப்­பு­ரை­யா­னது தற்­போதும் சிறு­பான்­மை­யி­னரை இலக்­கு­வைத்தே நாட்டில் பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு போக்கை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதற்கு ரம்ஸி ராசிக், கவிஞர் அஹ்னாப் என ஏரா­ள­மான உதா­ர­ணங்­களை அடுக்­கிக்­கொண்டே போகலாம்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­துக்கு, புதிய வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள ஒழுங்கு விதி­க­ளா­னது, வெறுப்புப் பேச்­சுக்கள் குறித்து கைதா­வோரைக் கூட ஓரிரு ஆண்­டுகள் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­யின்றி புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த வழி ஏற்­ப­டுத்தும். இந் நிலைமை தற்­போ­தைய நடை­முறைப் பிர­காரம் சிறு­பான்­மை­யி­ன­ரையே இலக்கு வைத்­த­தாக அமையும் என்­பதில் சந்­தேகம் இல்லை. எனவே இந்த புனர்­வாழ்வு குறித்த ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­விப்பு தற்­போ­தைய சூழலில் நிச்சயம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வரமாக அன்றி சாபமாகவே அமையப்போவதாக தோன்றுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.