சஜித் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் தேர்வுக் குழுவில் கபீர், இம்தியாஸ் உள்ளீர்ப்பு

0 462

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் வேட்­பாளர் தேர்­வுக்­கு­ழுவில் முன்னாள் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாஷிம் மற்றும் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

குழுவில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார, லக் ஷ்மன் கிரி­யெல்ல, மலிக் சம­ர­விக்­ரம, தலதா அத்­து­கோ­ரள, மங்­கள சம­ர­வீர, கபீர் ஹாஷிம், இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார், ரவீந்­திர சம­ர­வீர, எரான் விக்­ர­ம­ரத்ன உள்­ளிட்ட மேலும் சிலரும் அங்கம் வகிக்­கின்­றனர்.

இக்­குழு நேற்று முன்­தினம் கூடி வேட்­பாளர் தெரிவு தொடர்­பி­லான ஆரம்­ப­கட்ட பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டன.

பதி­னைந்­தா­வது பாரா­ளு­மன்றம் கடந்த திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் நான்­கரை வரு­டங்­களைக் கடந்த நிலையில் ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தை கலைத்­துள்ளார்.

அதன்­படி பதி­னா­றா­வது பாரா­ளு­மன்­றத்­துக்­கான தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­துடன், வேட்பு மனுத் தாக்­கல்கள் இம்­மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி நண்­பகல் 12 மணி­வரை இடம்­பெ­ற­வுள்­ளன. அத்­துடன் பதினாறாவது பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.