சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் – பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார

0 249

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­களில் 70 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்­க­ளாயின் முன்­னைய காலங்­களைப் போல் இத்­தேர்­தல்­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழும் என்று பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார தெரி­வித்­துள்ளார்.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­றுகள் எப்­படி அமையப் போகின்­றன என்­பது குறித்து தனது ஆய்­வுக்­கண்­ணோட்­டத்தை வெளி­யிடும் போதே அர­சி­யல்­துறை நிபு­ணரும் பேரா­தெ­னிய பல்­க­லைக்­க­ழக அர­சி­யல்­துறை முன்னாள் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார மேற்கண்டவாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இது விட­ய­மாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
இம்­முறை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக 35 பேர் கள­மி­றங்­கி­யுள்­ளார்கள். முதல் இரு போட்­டி­யா­ளர்­க­ளி­டை­யேயும் கடும் போட்டி நில­வு­வ­துடன் அடுத்து வரு­வோரும் கணி­ச­மான வாக்­கு­களைப் பெறக்­கூ­டிய நிலை தோன்­று­கி­றது. இதனால் முதல் வரு­பவர் அளிக்­கப்­படும் வாக்­கு­களில் 50 வீதத்தைப் பெறத்­த­வறும் நிலையில் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்­கு­களை எண்ணும் நிலை ஏற்­படும். வாக்­க­ளிப்பில் தெற்கில் உள்ளோர் சிந்­திப்­பதைப் போன்று வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­க­ளிப்பு அமை­வ­தில்லை. அவர்கள் வித்­தி­யா­ச­மான முறை­யிலே சிந்­தித்து வாக்­க­ளிக்­கி­றார்கள்.

நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் உள்­ளது போன்றே சிங்­கள –பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களும் இருக்­கி­றார்கள்.
பெரும்­பான்­மை­யான சிங்­கள, பெளத்த மக்­களின் வாக்­கு­களை இலக்கு வைத்து இன, மத­வா­தத்தைத் தூண்டி தேர்தல் பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. வடக்கு, கிழக்­கி­லுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இதனை அங்­கீ­க­ரிப்­ப­தில்லை.

வட மாகா­ணத்தில் மூன்று மாவட்­டங்­க­ளிலும் 14 தேர்தல் தொகு­திகள் உள்­ளன. அதே­போன்றே கிழக்கு மாகா­ணத்­திலும் மூன்று மாவட்­டங்­க­ளிலும் 10 தேர்தல் தொகு­திகள் உள்­ளன.

இவற்றைத் தவிர தெற்­கி­லுள்ள குறிப்­பி­டத்­தக்க ஒரு சில அர­சி­யல்­வா­திகள் இன, மத மற்றும் பயங்­க­ர­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தியே வாக்கு வேட்­டை­யா­டு­கின்­றனர். சிங்­கள பௌத்தம் அல்­லது கிறிஸ்­தவ உணர்வைத் தூண்­டு­கின்­றனர். ஆனால் மேலே குறிப்­பிட்ட வடக்கு –கிழக்கு தொகுதி வேட்­பா­ளர்கள் அவ்­வாறு இன­வாதத் தூண்­டு­தலில் ஈடு­ப­டு­வ­தில்லை. இதனால் இன­வாதம், மத­வாதம் பேசு­வோ­ருக்கு எதி­ரா­கவே தமிழ், முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­கின்­றனர். எனவே தெற்கின் இன­வாத்­திற்­கெ­தி­ரா­கவே தமிழ், முஸ்லிம் வாக்­குகள் அமை­கின்­றன. இதனால் அவர்­களில் கணி­ச­மானோர் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்ளும் போது அது தெற்கின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் வெற்­றியில் தாக்கம் செலுத்­தவே செய்­கி­றது. இவர்கள் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ளாது போனால் தெற்கில் பெரும்­பான்மை வாக்குப் பெறுபவர் வெற்றி பெறுவார்.
இன்­றுள்ள தேர்­தல்­க­ளத்தில் தெற்­கி­லுள்ள வாக்­குகள் இரண்­டாகப் பிரி­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இன்­றி­ய­மை­யா­த­தா­கின்­றன.

2005, 2010, 2015 ஆகிய கடந்­த­கால ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் மொத்த வாக்­க­ளிப்பில் வடக்கு –கிழக்கு வாக்­குகள் தான் பெரும் தாக்­கத்தைக் கொடுத்­தன என்­பது ஆய்­வா­ளர்­களின் கணிப்­பீ­டாகும். ஆய்­வா­ளர்­களால் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்­க­ளுக்­க­மைய 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு, கிழக்கு வாக்­குகள் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின. 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் 13 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டனர். ஆனால் அவர்­களுள் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக போட்­டி­யிட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கூட்­டான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ரான மகிந்த ராஜபக் ஷவுக்கும் இடை­யேதான் கடும்­போட்டி நில­வி­யது.

இறுதிப் பெறு­பேற்றில் மகிந்த ராஜபக் ஷ 4,887,152 வாக்­குகள் பெற்று வெற்றி பெற்றார். அது அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 50.3% வீத­மாகும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெற்­றுக்­கொண்ட வாக்­குகள் 4,706,366 ஆகும். இது 48.4% வீத­மாகும். மகிந்த 180,786 வாக்கு வித்­தி­யா­சத்­தி­லேயே வெற்றி பெற்றார். இந்த வெற்­றிக்கு வடக்கு –கிழக்கு வாக்­கு­களே ஆதிக்கம் செலுத்­தின. அதா­வது 2005 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வடக்கு –கிழக்கின் கணி­ச­மான பகு­திகள் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்­தன. இதனால் அப்­ப­குதி தமிழ் மக்­க­ளுக்கு வாக்­க­ளிப்பைப் புறக்­க­ணிக்கும் படி எல்.ரீ.ரீ.ஈ அமைப்­பினால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு கட்­டுப்­பட்ட அம்­மக்­களில் கணி­ச­மானோர் வாக்­க­ளிக்­காது தவிர்ந்து கொண்­டனர்.

வட­மா­கா­ணத்தில் பதிவு செய்­யப்­பட்ட வாக்­குகள் 952,324. அவற்றுள் 94398 பேரே வாக்­க­ளித்­துள்­ளனர். அவ்­வாக்­கு­களில் 71321 வாக்­குகள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குக் கிடைத்­துள்­ளன. எனவே தவிர்க்­கப்­பட்ட வாக்­கு­களில் கணி­ச­மான தொகை ரணி­லுக்குக் கிடைக்­க­வி­ருந்­தமை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
இதே காலப்­பி­ரிவில் கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மகிந்த ராஜபக் ஷவுக்கு 28,836 வாக்­கு­களும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு 121,514 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, திகா­ம­டுல்ல ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் பதிவு செய்­யப்­பட்ட வாக்­குகள் 953,936 ஆகும். அவற்றுள் 595,251 வாக்­கு­களே அளிக்­கப்­பட்­டன. சுமார் 358,685 வாக்­குகள் அளிக்­கப்­ப­டா­துள்­ளன.
2010 ஜன­வரி 25 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் 30 வருட உள்­நாட்டுப் போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட பின்னர் இடம்­பெற்­றதால் யுத்த வெற்­றியின் தாக்கம் இதில் முன்­னிலை பெற்­றது.

இதில் 22 வேட்­பா­ளர்கள் களத்தில் குதித்த போதிலும் இரண்டு பிர­தான கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யேதான் கடும் போட்டி நிலை ஏற்­பட்­டது. 2005 முதல் ஜனா­தி­பதி பத­வியில் இருந்த மகிந்த ராஜபக் ஷ, முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேக்கா ஆகிய இரு­வ­ருமே முன்­னிலை போட்­டி­யா­ளர்­க­ளாக விளங்­கினர்.

மகிந்த, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வெற்­றிலை சின்­னத்­திலும் சரத் பொன்­சேக்கா ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பொது வேட்­பா­ள­ராக அன்னச் சின்­னத்­திலும் போட்­டி­யிட்­டனர்.

மகிந்த வெற்றி பெற்ற போதிலும் வட மாகா­ணத்தில் சரத் பொன்­சேக்­காவே அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டார். வட­மா­கா­ணத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள முழு வாக்­காளர் எண்­ணிக்கை 988,334 ஆகும். இவற்றில் 298,898 பேரே வாக்­க­ளிப்பில் கலந்து கொண்­டுள்­ளனர். அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் 186,410 வாக்­குகள் சரத் பொன்­சேக்­கா­வுக்குக் கிடைத்­துள்­ளன. இந்­நி­லை­யிலும் வடக்கில் சுமார் 7 இலட்சம் வாக்­குகள் அளிக்­கப்­ப­ட­வில்­லை­யென்று ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

இதே­போன்றே கிழக்கு மாகா­ணத்­திலும் மகிந்­த­வுக்குப் போதிய வாக்­குகள் கிடைக்­க­வில்லை.

கிழக்கு மாகா­ணத்தில் மூன்று மாவட்­டங்­க­ளிலும் அளிக்­கப்­பட்ட வாக்­குகள் 690,265 இல் 386,823 வாக்­குகள் சரத் பொன்­சேக்­கா­வுக்கு அளிக்கப் பட்­டுள்­ளன. மகிந்த ராஜபக் ஷவுக்கு 2,72,327 வாக்­குகள் மாத்­தி­ரமே கிழக்கு மாகா­ணத்தில் கிடைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­தேர்­தலில் மகிந்த அமோக வெற்­றி­யீட்­டிய போதிலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மொத்த வாக்­கு­களில் சரத் பொன்­சேக்­காவே வெற்றி பெற்­றுள்ளார். இதே போன்றே இலங்­கையில் வடக்கு கிழக்­குக்கு வெளி­யே நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மாத்­தி­ரமே பொன்­சேக்­காவால் மகிந்­த­வை­விட அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களைப் பெற­மு­டிந்­துள்­ளது.
நாட­ளா­விய ரீதியில் மொத்­த­மாக மகிந்த 6,015,934 வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். சரத் பொன்­சேக்­கா­வுக்கு 4,173,185 வாக்­கு­களே கிடைத்­துள்­ளன.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­யின வாக்­குகள் பெரிதும் தாக்கம் செலுத்­திய தேர்­த­லாகும். இலங்­கையில் அதி­கா­ரத்­தி­லி­ருந்த நிறை­வேற்­ற­தி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யொ­ருவர், மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யிட்ட முத­லா­வது தேர்­த­லாக 2015 ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற தேர்தல் வர­லாற்றில் பதி­வா­கி­யது.

தனது இரண்­டா­வது பத­விக்­காலம் நிறை­வ­டை­வ­தற்கு இரண்டு வரு­டங்கள் இருக்­கத்­தக்க நிலையில் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவி­னா­லேயே தேர்தல் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இத்­தேர்­தலில் மகிந்­த­வுடன் நேர­டி­யாக எதிர்த்­த­ரப்பு அபேட்­ச­க­ராக விளங்­கி­யவர், அவ­ரது கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­க­வி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வே­யாகும்.

அவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் அமை­யப்­பெற்ற புதிய ஜன­நா­யக முன்­ன­ணியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய பொது வேட்­பா­ள­ராக அன்னச் சின்­னத்­திலே கள­மி­றங்­கினார்.

மகிந்த ராஜபக் ஷ கடந்த தேர்­தல்­களைப் போன்று வெற்­றிலைச் சின்­னத்­திலே போட்­டி­யிட்டார்.

வடக்­கு–­கி­ழக்கு மாகா­ணங்­களில் அதிகூடிய வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார்.

வடக்கில் பதிவு செய்யப்பட்ட 782,297 வாக்குகளில் 2015 ஜனாதிபதித் தேர்தலில் 531,014 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 4 இலட்சம் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்தன.

முஸ்லிம் அரசியல் கட்சிகளது ஆதரவும் புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்தன. இதனால் மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மிகவும் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று இலகுவாக வெற்றியைத் தழுவிக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் அளிக்கப்பட்ட 816,769 மொத்த வாக்குகளில் 583,120 வாக்குகள் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார்.

மகிந்த ராஜபக் ஷவுக்கு 214,769 வாக்குகளே பெறமுடிந்தது.

முழு நாட்டிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 6,217,162 வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தன. இது 51.28% வீதமாகும்.

இதன் மூலம் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார்.-Vidivelli

  • ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.