மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளில் 75 வீதமானோர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரியது

ஓய்வு பெற்றுச் செல்லும் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர்

0 1,062

நீண்ட கால­மாக சிறைச்­சா­லைகள் துறையில் கட­மை­யாற்­றிய நிலையில் கடந்த 16.08.2019 முதல் ஓய்வு பெற்றுச் செல்லும் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையின் உதவி அத்­தி­யட்­சகர் கே.எம்.எச்.யு.அக்பர் ‘விடி­வெள்ளி’ க்கு வழங்கி செவ்வி.

நேர்­கண்­டவர்: எம்.எஸ்.எம்.நூர்தீன்

Q சிறைச்­சாலை அதி­காரி பத­விக்கு நீங்கள் வந்­தது எப்­படி?

பதில்: நான் சிறைச்­சா­லை­யிலே இரண்டாம் தர ஜெயிலராக 1985 ஆம் ஆண்டு பதவி ஏற்றேன்.

நான் இந்தப் பதவி ஏற்­ப­தற்கு முன்பு விளை­யாட்­டுத்­து­றையில் உதை­பந்­தாட்­டத்தில் மிகவும் முன்­னி­லையில் இருந்தேன். 1984 ஆம் ஆண்டு அநு­ரா­த­பு­ரத்தில் நடந்த “கம்­உ­தாவ ” எனும் ஒரு உதை­பந்­தாட்ட போட்­டியில் அநு­ரா­த­புர மாவட்ட உதை­பந்­தாட்ட அணிக்­காக விளை­யா­டினேன். அப்­போது நான் அநு­ரா­த­புர அணிக்­குக்கு கெப்­ட­னாக இருந்து அணியை நடத்­தினேன்.

அப்­போது அந் நிகழ்­வுக்கு தலைமை தாங்கி பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்ட அன்­றைய பிர­தம மந்­திரி ரண­சிங்க பிர­ம­தாச என்னைக் கண்டு இந்த விளை­யாட்டு வீரரை ஏன் நீங்கள் இலங்கை தேசிய உதை­பந்­தாட்ட அணிக்கு எடுக்­க­வில்லை என்று பயிற்­று­விப்­பா­ள­ரிடம் கேட்டார். அதன்பின் எனக்கு தேசிய உதை­பந்­தாட்ட அணியில் இடம் கிடைத்­தது. அதன் ஊடா­கத்தான் எனக்கு சிறைச்­சா­லையில் இரண்டாம் தர ஜெயி­ல­ராக தொழில்­வாய்ப்பு கிடைத்­தது.

Q இரண்டாம் தர ஜெயி­ல­ராக பதவி ஏற்ற நீங்கள் இறு­தி­யாக சிறைச்­சாலை இரண்டாம் தர உதவி அத்­தி­யட்­ச­க­ராப பதவி உயர்வு பெற்­றீர்கள். இந்த பத­வி­யு­யர்­வுகள் எவ்­வாறு கிடைக்கப் பெற்­றன?

பதில்: முதலில் நான் பத்து வரு­டங்­க­ளாக வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கட­மை­யாற்­றினேன். அதன் பின்பு நான் அநு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­ற­மாகி ஏழு வரு­டங்கள் அங்கு கட­மை­யாற்­றினேன். அநு­ரா­த­பு­ரத்தில் இருந்து மீண்டும் நான் பது­ளைக்கு சென்று பிர­தான ஜெயி­ல­ராக கட­மை­யாற்றி மீண்டும் அநு­ரா­த­பு­ரத்­திற்கு வந்தேன். பின்னர் கண்டி போகம்­பர சிறைச்­சா­லையில் மூன்று வரு­டங்கள் கட­மை­யாற்றி அதன்பின் பல்­லே­கல சிறைச்­சா­லையில் பிர­தம ஜெயி­ல­ராக கட­மை­யாற்­றினேன். பிற்­பாடு உதவி அத்­தி­யட்­ச­க­ராகப் பதவி உயர்ந்து முதன் முத­லாக வவு­னியா சிறைச்­சா­லைக்கு என்னை இடம் மாற்­றி­னார்கள். அங்கு நான் பதி­னொரு மாதங்­க­ளாக கட­மை­யாற்­றிய போதுதான் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற ஓர் அசம்­பா­வி­தத்தின் கார­ண­மாக என்னை உட­ன­டி­யாக மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைக்கு உதவி அத்­தி­யட்­ச­க­ராக நிய­மித்­தனர்.

Q உங்­க­ளு­டைய எல்லா பதவி இட­மாற்­றங்­களும் “புனித ரமழான் “மாதத்­தி­லேதான் இடம் பெற்­ற­தாக நீங்கள் ஒரு வைபத்­திலே கூறி­னீர்கள். அதைப் பற்றி சொல்­லுங்கள்….?

பதில்: இந்த இட­மாற்­றங்கள் எல்லாம் அதி­ச­ய­மான முறையில் இடம் பெற்­றது என்று என்னால் கூற முடியும்.

எனது இட­மாற்­றங்கள் எல்­லாமே நோன்பு கால­மா­கவே இந்­தது. நோன்பு நோற்­ற­வ­னா­கவே நான் இட­மாற்றம் பெற்­றி­ருந்தேன். அது மிகவும் அரு­மை­யான ஒரு நிகழ்வு.

Q இந்த மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் எத்­தனை வரு­டங்கள் உதவி அத்­தி­யட்­ச­க­ராக கட­மை­யாற்­றி­யுள்­ளீர்கள்?

பதில்: நான்கு வரு­டங்­களும் ஒரு மாதமும் கட­மை­யாற்­றி­யுள்ளேன்.

Q உங்­க­ளது சிறைச்­சாலை வர­லாற்றில் மறக்க முடி­யாத ஒரு சம்­ப­வத்தை கூற­மு­டி­யுமா?

பதில்: மறக்க முடி­யாத சம்­ப­வங்கள் நிறைய இருக்­கின்­றன. அந்த வகையில் கடை­சி­யாக நடந்த மறக்க முடி­யாத சம்­ப­வம்தான் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குண்­டு­வெ­டிப்புச் சம்­பவம். அந்த சம்­ப­வத்தை ஒரு நாளும் நான் மறக்­க­மாட்டேன்.

தினமும் தஹஜ்ஜத் தொழு­து­விட்டு நடந்­துதான் சுபஹ் தொழு­வ­தற்­காக மட்­டக்­க­ளப்பு ஜும்ஆ பள்­ளிக்குச் செல்வேன். அன்றும் சுபஹ் தொழு­து­விட்டு வந்து இருக்கும் போது பெரிய வெடிச் சத்தம் கேட்­டது. எனது உத்­தி­யோ­கத்­தர்கள் ஓடி வந்து என்­னிடம் விட­யத்தைக் கூறி­னார்கள். நான் எனது உத்­தி­யோ­கத்­தர்­களை சியோன் தேவா­ல­யத்­துக்கு அனுப்­பினேன். அங்கே ரத்த வெள்­ளத்தல் கிடந்­த­வர்­களை எல்லாம் எமது உத்­தி­யோ­கத்­தர்­கள்தான் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

இவை நடந்து முடிந்து ஒரு சில நாட்­க­ளின்பின் தொலைக்­காட்­சியில் செய்தி பார்த்துக் கொண்­டி­ருக்கும் போது நான் எதேச்­சை­யாகக் கண்டேன். அந்த தேவா­ல­யத்தில் குண்டு வைப்­ப­தற்­காக வந்­தவன் மட்டக்­க­ளப்பு ஜாமி யுஸ் ஸலாம் பள்­ளிக்கு தொழு­வ­தற்­காக செல் லும் காட்சி. அந்த வீடி­யோவில் அவன் என­த­ருகில் நின்­றுதான் சுபஹ் தொழு­தி­ருக்­கிறான் என்­பதைக் கண்டு அதிர்ந்து விட்டேன்.

இந்தக் காட்­சியைக் கண்ட பின்பு எனக்கு மனதில் பெரிய பயமும் பதற்­றமும் ஏற்­பட்­டது. அந்த இடத்தில் அந்தக் குண்டு வெடித்­தி­ருந்தால் இப்­போது உங்­க­ளுக்கு இந்த பேட்டி எடுக்கும் சந்­தர்ப்­பமும் கிடைத்­தி­ருக்­காது. அதன் பின் அந்த அதிர்ச்­சியால் சில மாதங்­க­ளாக நான் சுபஹ் தொழு­கைக்கு பள்­ளிக்குப் போவ­தையே நிறுத்தி விட்டேன்.

Q மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையின் அத்­தி­யட்­ச­க­ராக இருந்து விடை­பெறும் இந்த சந்­தர்­ப்பத்­திலே மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையை பொறுத்த வரைக்கும் முஸ்­லிம்­க­ளு­டைய எண்­ணிக்கை வீதம் என்ன? எவ்­வா­றான குற்­றச்­சாட்டில் இவர்கள் கூடு­த­லாக சிறைச்­சா­லைக்கு வரு­கி­றார்கள்?

பதில்: நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் மிகவும் கவ­லைக்­கு­ரிய விடயம். அதை சொல்­வ­தற்கே மனம் சங்­க­ட­மாக இருக்­கிது.

முதன் முத­லாக நான் 2017 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைக்கு வரும் போது நூற்­றுக்கு இரு­பத்­தைந்து வீதம்தான் முஸ்­லிம்கள் இருந்­தார்கள். இப்­போது நூற்­றுக்கு எழு­பத்­தைந்து வீதம் முஸ்­லிம்கள் இருக்­கின்­றார்கள். போதைப்­பொ­ருட்கள், மோச­டிகள் இவை­க­ளுக்­காக தான் இவர்கள் அதிகம் வரு­கின்­றனர்.

ஏனைய சமூ­கத்­த­வர்­களைப் பார்த்தால் அவர்கள் சிறு சண்­டைகள், மனை­விக்கு பணம் கட்­டாமை இது போன்ற வழக்­கு­க­ளுக்கே வரு­கின்­றனர். எமது சமூகம் சீர­ழிந்து போய்­விட்­டது என்­ப­தைத்தான் இந்த எண்­ணிக்­கைகள் காண்­பிக்­கின்­றன.

எனது சிந்­த­னைக்­கெட்­டிய வகையில், எமது சமூகம் இந்த நிலைக்குத் தள்­ளப்­படக் காரணம் அவர்கள் கல்­விக்குக் கொடு­கின்ற முக்­கி­யத்­துவம் குறைந்து கொண்டு போவ­தாகும். பெண் பிள்­ளை­களை சிறு வய­தி­லேயே திரு­மணம் செய்து கொடுக்­கின்­றார்கள். ஆண் பிள்ளை என்றால் தந்­தையின் தொழில்­க­ளுக்கு அனுப்­பு­கின்­றார்கள். இந்த நிலமை மாற வேண்டும்.

பிள்­ளை­க­ளுக்கு கல்­வி­ய­றிவை கொடுக்க வேண்டும். கல்­வி­ய­றி­வினால் தான் இந்த சமூ­கத்தின் நிலையை மாற்றி குற்றச் செயல்­களைக் குறைக்­கலாம் என்­பது எனது நம்­பிக்கை.

Q உங்­க­ளு­டைய அடை­வு­க­ளுக்கு குடும்­பத்தின் ஒத்­து­ழைப்பு எவ்­வாறு அமைந்­தது?

பதில்: எனது இந்த நிலைக்கு காரணம் எனது மனைவி, பிள்­ளை­கள்தான் என்­பதில் ஐயமே இல்லை. என்னை ‘தஹஜ்ஜத்’ தொழு­வதில் ஆர்­வ­மூட்­டி­யதும் சுபஹ் தொழு­கைக்கு பள்­ளிக்கே சென்று தொழ வேண்டும் என்­ப­திலும் அதிக அக்­கறை காட்­டி­ய­வரும் என் மனைவி தான். ஐந்து வேளை தொழு­கையை தொழு­வதன் முக்­கி­யத்­து­வத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் என் மனைவி, பிள்ளைகளே. தினமும் தஹஜ்ஜத், சுபஹ் தொழுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணர முடியும். என்னில் ஏற்பட்ட நல்ல மாற்றம் உங்களுக்கும் ஏற்படவேண்டும். எல்லோரும் “தஹஜ்ஜத், சுபஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதில் தான் உயர்வும் இறைவனின் அருளும் இருக்கின்றது.

Q கடைசியாக நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நான் கூறுவது ஊடகவிய லாளர்கள், பள்ளித் தலைவர்கள், உலமாக்கள் எல்லோருமே தமது குடும்பத்தில் இருந்து நல்ல பிள்ளைகளை உருவாக்குங்கள். கல்வியை பிள்ளைகளுக்குக் கொடுங்கள், பிற சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ கற்றுக் கொடுங்கள்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.