ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் அரச செயற்பாடுகள் முடங்கியுள்ளன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தவறான முடிவுகளால் நாட்டின் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று முன்தினம் கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று நாம் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். தக்ஷிலா ஜயவர்தன எனும் பெண்னே இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளார். மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் மென்டாமுஸ் பேராணை ஒன்றின் ஊடாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

அரசியல் இலாபத்தை புறம்தள்ளிசமூகத்துக்காக ஒன்றிணைவோம்

அரசியல் இலாபத்தை புறம்தள்ளி சமூகத்துக்காகவும் சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமையென முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் அக்கிராமத்திலுள்ள பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்காக 7 லட்சம் ரூபா நிதியும்…

உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்த நடவடிக்கை

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிதத்துல் ஆலம் அல் -  இஸ்லாமி) செயற்பாடுகள் மற்றும்  அபிவிருத்திப் பணிகளை,  இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக,  சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹம்மாட் அலி ஜீலானுக்கும்,  உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்குப்  பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று,  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, உலக முஸ்லிம் லீக்கின்…