என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு

0 1,030
  • ஏ.ஜே.எம்.நிழாம்

தான் விரும்­பாத பிர­த­ம­ரையோ அமைச்­சர்­க­ளையோ மாற்றும் அதி­காரம் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அது முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்தல், அதன் ஆயுட்­காலம் ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யான பின் கலைத்தல் ஆகிய அதி­கா­ரங்­களும் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அவையும் முடி­யாது. இவை மட்­டு­மல்ல 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் பிர­த­மரை நிய­மிக்கும் அதி­கா­ரமோ அமைச்­ச­ர­வையை நிய­மிக்கும் அதி­கா­ரமோ நிறை­வேற்று ஜனா­தி­ப­திக்கு இல்லை.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையைப் பெறும் கட்­சித்­த­லை­வரே பிர­த­ம­ராகித் தனது அமைச்­ச­ர­வையைத் தெரிவு செய்து கொள்வார். அந்த அமைச்­ச­ர­வையை மாற்ற முடி­யாது. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மூலம் அது தோற்­க­டிக்­கப்­பட்­டா­லேயே அதைக் கலைக்­கலாம், எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பெரும்­பான்­மை­யுடன் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்த பிர­த­ம­ரையும் அமைச்­ச­ர­வை­யையும் நீக்கிப் பெரும்­பான்­மை­யற்ற கட்­சியை ஆளும் கட்­சி­யாக்கிப் புதிய பிர­த­ம­ரையும் புதிய அமைச்­ச­ர­வை­யையும் நிய­மித்­தி­ருக்­கிறார். பாராளுமன்றத்தை ஒத்­தி­வைத்­த­தோடு கலைத்தும் விட்­டி­ருந்தார்.

ஆக, இவ­ரது  இச்­செ­யற்­பா­டுகள் 19 ஆம் ஷரத்­துக்கு மாற்­ற­மா­ன­வை­யாகும். முடி­யு­மானால் உயர் நீதி­மன்­றத்தை நாடலாம் என மஹிந்த தரப்­பினர் சவால் விட்­டார்கள். ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­ததை சட்­டமா அதிபர் ஆத­ரித்தும் 19 ஆம் ஷரத்­துப்­படி உயர் நீதி­மன்றம் நிரா­க­ரித்­து­விட்­டது. அதுபோல் பெரும்­பான்­மை­யுள்ள தலை­வரே பிர­த­ம­ராகி அமைச்­ச­ர­வையைத் தெரிவு செய்வார் எனவும் அதை மாற்­ற­மு­டி­யாது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ணையில் தோற்­றா­லேயே கலைக்­கலாம் எனவும் ஜனா­தி­பதி தனக்கு விருப்­ப­மா­ன­வரை பிர­த­ம­ராக்­கவோ, அமைச்­சர்­க­ளா­கவோ நிய­மித்­துக்­கொள்ள முடி­யாது எனவும் 19 ஆம் ஷரத்­துப்­படி பொருட்­கோடல் செய்­தாக வேண்டும். யாப்பில் நிறை­வேற்று அதி­காரம், சட்ட நிர்­ணயம், நீதிக்­கட்­ட­மைப்பு என மூன்று பிரி­வுகள் உள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 19 ஆம் ஷரத்து மூலம் பாரா­ளு­மன்­றத்­தோடு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொண்­ட­தற்­கு­மாக அதன் சுயா­தீ­னத்தை தனது எல்­லைக்கும் அப்பாற் சென்று அழித்­தி­ருக்­கிறார். இந்­நி­லையில் நீதிக்­கட்­ட­மைப்பைத் தவிர பாரா­ளு­மன்­றத்­துக்கு நாதி­யில்லை.மஹிந்த வழியில் மைத்­தி­ரியும் நீதி­யைக்­காவு கொண்டால் அதோ கதிதான்.

ஜனா­தி­பதி நாட்டின் தலை­வ­ராக மட்­டுமே இருக்­க­வேண்டும். ஆட்­சியின் தலை­வ­ராகப் பிர­தமர் இருக்­க­வேண்டும். நிறை­வேற்று அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைப்­பதன் மூலம் முப்­ப­டை­களின் பரி­பா­ல­னமும் பாரா­ளு­மன்­றத்­தி­டமே அமை­ய­வேண்டும். தனிப்­பட்ட ஒரு­வரை நாட்டின் தலை­வ­ரா­கவும் ஆக்கி, ஆட்சித் தலை­வ­ரா­கவும் ஆக்கி, முப்­படைத் தலை­வ­ரா­கவும் ஆக்­கினால் எப்­ப­டி­யி­ருக்கும் இம்­மூன்றும் மன்­ன­ராட்­சியின் மொத்த அம்­ச­மாகும். அர­சியல் அறி­விலும் நடத்­தை­க­ளிலும் மிகவும் பின்­தங்­கிய நாடு­க­ளுக்கு இவை ஒரு போதும் எடு­ப­டாது. அர­சியல் அறிவும் ஒழுக்க மேம்­பா­டு­முள்ள சில நாடு­களில் மன்­ன­ராட்சி இருக்­கவே செய்­கி­றது. எனினும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் நீதிக்­கட்­ட­மைப்­புக்கும் சுயா­தீனம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மன்­ன­ருள்ள நாடு­களே அப்­ப­டி­யி­ருக்­கையில் நாம்தான் சாதா­ரண ஒரு­வரை மன்­ன­ருக்­கு­ரிய குணா­தி­சய மன்­ன­ராக்கிக் கொண்டு தடு­மா­று­கிறோம். மன்­ன­ரா­கவே பிறந்­த­வர்போல் எம்மை ஆதிக்கம் செய்யும் நிலையை ஏற்­ப­டுத்தி விட்­டி­ருக்­கிறோம். இலங்கை ஜன­நா­யக சம தர்மக் குடி­ய­ரசு அல்­லவா?ஆக யாப்­புக்கும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத தனி மனித நிறை­வேற்று அதி­கா­ரமே முன்­னைய ஜனா­தி­ப­தி­க­ளுக்கு இருந்­தன. அதைக் கட்­டுப்­ப­டுத்­தவே 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின் ரணில் 19ஆம் ஷரத்தைப் பெரும்­பான்மை பலத்­தோடு இரு­பெரும் கட்­சிகள் மூலம் ஏகப் பெரும்­பான்­மை­யோடு நிறை­வேற்­றி­யி­ருந்தார். இதன் மூலம் பாரா­ளு­மன்­றத்­தோடு தனி­ம­னித நிறை­வேற்று அதி­காரம் பகி­ரப்­பட்­டி­ருப்­பதால் முன்­னைய ஜனா­தி­ப­தி­க­ளைப்போல் யாப்பை மீறி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் செயற்­பட முடி­யாது.

19ஆம் ஷரத்து என்றால் என்ன? எனக்கே சரி­வரத் தெரி­யாது என ஒரு­முறை இவர் கூறி­யி­ருந்தார். அப்­ப­டி­யானால் இவர் தெரி­யா­மலா அதை ஆத­ரித்­தி­ருந்தார். சென்ற ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன் ரணில் ஒரு முறை மாமா( ஜே.ஆர்)போட்ட முடிச்சை என்னால் அவி­ழ்க்க முடியும் எனக் கூறி­யி­ருந்தார். பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைப் பகிரும் 19 ஆம் ஷரத்தால் அந்த முடிச்சு அவிழ்த்தல்? ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கே 19ஆம் ஷரத்து பற்றி தெரி­யா­தி­ருந்­ததா?

ஆக அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் முழு­மை­யாக அதி­கா­ரத்­துக்­காகவே போட்­டி­யிட்­டி­ருக்­கிறார். அவரை ரணில் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கட்­டுப்­ப­டுத்தும் ஜனா­தி­ப­தி­யா­கவே போட்­டி­யிட வைத்­தி­ருக்­கிறார் என்­கி­றது. அப்­ப­டி­யானால் இவ்­வி­ரு­வரும் எதற்­காக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் தனி மனித நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­துக்குப் பாரப்­ப­டுத்த மக்­க­ளாணை பெற்­றார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­னுமே மஹிந்த ராஜபக் ஷவின் மனப்­போக்­கி­லேயே இருக்­கிறார். 19ஆம் ஷரத்து என்ன என இவரே வின­வி­யதன் மூலம் அது பற்றி இவர் அறி­ய­வில்லை எனலாம் அல்­லது இவ­ருக்கு அது அறி­விக்­கப்­ப­ட­வில்லை எனலாம். அதை இயற்­றிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி.ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன அது­பற்றி இவ­ருக்குத் தெளி­வாகக் கூற­வில்­லையா?

18ஆம் ஷரத்து தற்­போது அமுலில் இல்லை என நாம் நினைத்­தி­ருக்­கை­யி­லேயே மஹிந்­த­வுடன் மைத்­திரி சேர்ந்­தபின் பொலிஸ் அதி­காரம் மைத்­தி­ரியின் கைக­ளுக்குக் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி தன்­னிச்­சைப்­படி கலைத்­தது செல்­லாது என அண்­மையில் உயர்­நீ­தி­மன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்­கி­யதால் அடுத்த கட்­ட­மாக அதற்கும் ஆப்­பு­வி­ழலாம். சுயா­தீனத் தேர்­த­லி­லேயே நாம் போட்­டி­யி­டுவோம் எனத் தற்­போது ஐக்­கிய தேசியக் கட்சி கூறு­கி­றதே என்ன காரணம்? தேர்தல் அதி­கா­ரத்­தையும் மைத்­திரி கையேற்­கலாம் என நினைப்­ப­த­னா­லே­யாகும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வர்கள் அடிக்­கடி அரச ஊழி­யர்­களை எச்­ச­ரிக்­கி­றார்­கள் அந்த அதி­கா­ரமும் ஜனா­தி­ப­தி­யிடம் வரலாம் எனும் நினைப்­பி­லே­யாகும். ஆக, மைத்­திரி மஹிந்­த­வுடன் இணைந்­த­தா­னது 19 ஆம் ஷரத்தை அழித்து 18 ஆம் ஷரத்தை உயிர்ப்­பிக்கும் செயற்­பா­டா­கவே அமை­யலாம். 19ஆம் ஷரத்தில் நிறை­வேற்று அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­தோடு பகி­ரப்­பட்­டுள்­ளது எனக் காணப்­ப­டு­கின்ற போதும் 18 ஆம் ஷரத்தின் வடிவில் நிறை­வேற்று ஜனா­தி­ப­தியை வலுப்­ப­டுத்தி பிர­தமர் பத­வியை விட்டும் ரணி­லையும் நீக்கி சபா­நா­ய­க­ரையும் முடக்கி ரணிலின் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மை­யையும் நிரா­க­ரிக்­கி­றார்கள்.

மஹிந்­தவை தோற்­க­டித்து மைத்­திரி மூலமே ரணில் நம்மை முடக்­கினார். அதே மைத்­திரி மூலம் நாம் ரணிலை முடக்­க­வேண்டும். எனும் எண்­ணமும் நமது எம்­பிக்­க­ளையும் சேர்த்­துக்­கொண்டே மைத்­தி­ரிக்கும் தெரி­யாமல் ரணில் 19ஆம் ஷரத்தை இயற்றிப் பாரா­ளு­மன்றக் கட்­டுக்குள் அவ­ரையும் வைத்தார். இதனால் நமது கட்சி மைத்­திரி அணி, மஹிந்த அணி எனப் பிள­வுண்­டது. மஹிந்­தவின் எதிர்­கால அர­சியல் கேள்­விக்­கு­றி­யா­னது. பாரா­ளு­மன்­றத்­துக்கே நிறை­வேற்று அதி­காரம் எனக்­கூறிக் கொண்­டி­ருந்த ரணில் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்­தது. ரணிலை நேர­டி­யாக எதிர்த்துக் கொண்டு அவர் மீது நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­ததால் தோல்­வி­யுற்­றதும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து இன்­னொரு அணி ரணில் எதிர்ப்­பா­ளர்­க­ளாகப் பிரிந்­தமை மஹிந்த பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியை ஆரம்­பித்து உள்­ளூ­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிட வைத்து ரணிலை தோற்­க­டித்­த­தோடு மைத்­தி­ரியை மூன்றாம் இடத்­துக்குத் தள்­ளி­யமை அடுத்த வருட பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் போட்­டி­யிடத் தயா­ரா­கு­கையில் மட்­டு­மன்றி, அடுத்த வருட மாகாண சபைத் தேர்­த­லிலும் கூட மூன்­றாகப் பிள­வு­பட்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியால் ரணில் அமோக வெற்றி பெறும் நிலை உரு­வா­கி­யமை, இதனால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை முற்­றிலும் அழித்­தவர் எனும் பழி­பாவம் தனது தலையில் விழுந்து வர­லாறு நெடுக வாசிக்­கப்­ப­டலாம் என மைத்­திரி அஞ்­சி­யி­ருக்­கலாம். அத்­தோடு ரணி­லுக்கு இவர் சார்­பா­னவர் என்­ப­தற்­கா­கவே இவரை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னர் வெறுக்­கி­றார்கள் என்­பதும் இவ­ருக்குத் தெரிந்­து­விட்­டது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைச் சார்ந்­த­வ­னல்ல எனத் தன்­னைக்­காட்டிக் கொள்­வ­தற்­கா­கவே ரணில் மீதும் அக்­கட்­சியின் மீதும் எதிர்ப்பு மன­நி­லையைக் கொண்­டி­ருந்தார். ஊழல் விட­யங்­களில் மஹிந்­த­வுக்கு விடு­பாட்டு உரி­மை­யையும் ரணில் விட­யத்தில் பொறுப்­புக்­கூறும் கடப்­பாட்­டையும் இவர் விதிக்க அதுவே கார­ண­மாகும். மஹிந்த தரப்­புக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து காப்­பீடும் வழங்­கினார். இல்­லா­விட்டால் ரணில் தரப்பின் கை ஓங்கும் எனும் மன­நி­லையே இதற்குக் கார­ண­மாக இருக்­கலாம். மஹிந்த எனும் பழம்­பெரும் ஆருயிர் நண்­ப­னான தலை­வ­னோடு அவ­ச­ரப்­பட்டு சிந்­திக்­காமல் கோப­முற்று தானும் சம்­பந்­தப்­பட்ட இறு­திப்­போரில் இவர் மட்டும் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­டி­ருக்­கையில் மைத்­திரி என்ன செய்தார்? தேர்­தலில் எதிர்த்­த­ரப்­பி­னரால் வேட்­பா­ள­ராகித் தோற்­க­டித்தார்.

எனினும், மஹிந்த நிலை­கு­லை­ய­வில்லை. தான் தோற்­றது முதல் இற்றை வரை மைத்­திரி– ரணில் இணைந்த கலப்பு அரசை கிர­ம­மாகத் தொலைத்து எடுத்துக் கொண்டே வந்தார். தான் சிறு­பான்­மை­களால் வென்­றவன் எனப்­பெ­ரும்­பான்­மை­யினர் கணிப்­பிட்­ட­தையும் முறி­ய­டிக்க மைத்­திரி முனை­ய­வில்லை. இயற்­கை­யா­கவே அவ­ரோடு சிறு­பான்­மை­களின் நெருக்கம் மிகவும் குறை­வா­கவே இருந்­தது, ரணில் மூலம் அதை ஈட்­டிக்­கொள்­ளவும் அவர் முயற்­சிக்­க­வில்லை. யுத்த வெற்­றி­யாளர் மஹிந்­தவே எனப் பெரும்­பான்­மைச்­ச­மூகம் கரு­தி­ய­தாலும் இவர் தனி­மைப்­பட்டார்.

சர்­வ­தேச போர்க்­குற்­றச்­சாட்டில் அகப்­பட்ட மஹிந்­தவைத் தோற்­க­டித்த மைத்­திரி உள்­நாட்டு எதிர்­த­ரப்­போடு இணைந்­த­மையை அவர்­களால் சீர­ணித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை.

சர்­வ­தேச போர்க்­குற்­றத்தை மறுப்­பது நாட்­டுக்கு ஆபத்து என்­றாலும் கூட சிங்­க­ளவர் மத்­தியில் பாரிய இமேஜை வளர்த்துக் கொள்­வ­தற்­காக மஹிந்த அதை மறுத்தார். மைத்­திரி போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்டு 30/1 ஆம் 30/4 ஆம் நிபந்­த­னை­க­ளுக்கும் உட்­பட்­டதால் மேற்­படி நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்தில் குற்­ற­வி­லக்கு அளிக்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

இதன் மூலம் நிபந்­த­னைகள் மைத்­தி­ரியால் நிறை­வேற்­றப்­பட்­டா­லேயே குற்­ற­வி­லக்கு கிடைக்கும் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­றது. அதற்கு இரு­முறை தவ­ணை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. உள்­நாட்டு சூழல்­களைக்  கூறிக் கட்டம் கட்­ட­மா­கவே நிறை­வேற்ற முடியும். இன்றேல் எதிர்­வி­ளை­வுகள் ஏற்­பட்­டு­விடும். காரணம் இது நெடுங்­காலப் பிரச்­சினை என்­றெல்லாம் மைத்­திரி சாக்­கு­போக்கு கூறி­ய­வாறே 3 ½ ஆண்­டு­களை கழித்தார். எனினும் அதற்­கென உள்­நாட்டில் நிகழ்ந்த செயற்­பா­டு­களில் அச­மந்­தமே காணப்­பட்­டன. இதனால் மஹிந்­தவை மீறி எதையும் செயற்­ப­டுத்த முடி­யாது எனும் நிலைப்­பாட்­டுக்கு மைத்­திரி வந்­தி­ருக்­கலாம். ரணில் ஐ.நாவுக்கு சார்­பாக நின்றால் சிங்­கள மக்­க­ளுக்­குதான் துரோகம் செய்து விட்­ட­தாகப் பழி­விழும். என­வேதான் சாட்­சி­யா­ள­னிடம் அவர் சர­ண­டை­யாமல் சண்­டைக்­கா­ரனின் காலில் விழுந்து விட்டார்  இருந்த இடத்­துக்கே போய்­விட்டார்.

18ஆம் ஷரத்தை மஹிந்த இயற்­று­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து 17 எம்.பிக்­களை உள்­வாங்­கியே சாதித்தார். அப்­போதும் அமைச்­சுக்­களும் வரப்­பி­ர­சா­தங்­களும் வழங்­கப்­பட்­டன. அந்த வகை­யி­லேயே இம்­மு­றையும் முயன்­றி­ருக்­கி­றார்கள். இது­வரை அந்த நடை­மு­றைக்கு எதி­ரான சட்டம் இயற்­றப்­ப­ட­வே­யில்லை. இது தனி மனி­தனின் சுயா­தீன உரிமை என அர்த்­தப்­ப­டுத்­து­கி­றார்கள். இதன் மூலம் சுய­வி­ருப்பை மட்டும் பார்க்­கி­றார்­களே தவிர, வாக்­க­ளித்­தோரின் விருப்பை நிரா­க­ரித்து விடு­கி­றார்கள்.

இது கட்­சி­யையும் கொள்­கை­யையும் ஏலம் விடும் செய்­கை­யாகும். யார் அதிகம் தரு­கி­றார்­களோ அவ­ரது கொள்­கையே எனதும் கொள்கை. எவ­ரது கட்­சியில் அமைச்சு உத்­த­ர­வா­தமோ அதுவே எனதும் கட்சி, எனும் நடை­மு­றையே காணப்­ப­டு­கி­றது. நிரம்­பிய குளத்தில் கொக்­குகள் அதிகம். வற்­றிய குளத்தில் கொக்­குகள் தட்­டுப்­பாடு. எவர் எங்கு பாய்ந்­தாலும் வசதி வாய்ப்பும் அமைச்சுப் பத­வியும் அவ­ரிடம் இருக்­கு­மாயின் குறை­வின்றி கூட்டம் நிரம்பி வழியும். வென்­றவர் பக்கம் சேர்ந்து தோற்­றவர் மீது வசை­பா­டு­வார்கள்.

இத்­த­கைய அர­சியல் சித்து விளை­யாட்­டுக்கள் 1978ஆம் ஆண்டின் திறந்த பொரு­ளா­தா­ரத்தின் பின்பே வியா­பித்­தன. இது நிலை­யான அரச கட்­ட­மைப்­பிற்கு ஆபத்­தா­னது. எனவே கட்சி மாறும் நிலை 19ஆம் ஷரத்தின் மூலம் தடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இரு கட்­சி­களும் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க தடு­மாறும் நிலை இத­னா­லேயே ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தற்­போது 19ஆம் ஷரத்­திற்கு முர­ணாக நான் நினைத்­த­வரே பிர­தமர் எனவும் நான் நினைத்­ததே அமைச்­ச­ரவை எனவும் நிய­மித்­தி­ருக்­கிறார். ரணி­லுக்­காக அவ­ரது அமைச்­ச­ர­வை­யையும் மாற்­றி­யி­ருக்­கிறார். இதன் மூலம் 19ஆம் ஷரத்து மூலம் பகி­ரப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தையும் கையேற்­றி­ருக்­கிறார்.

இவ­ரது கூற்­றுப்­படி ரணிலைத் தவிர்த்து விட்டு கரு­ஜ­ய­சூ­ரி­யவோ, சஜித் பிர­ம­தா­சவோ பிர­த­ம­ரா­வ­தற்கு இணங்­கி­யி­ருப்­பார்­க­ளாயின் அமைச்­ச­ர­வையில் அதிக மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­காது. கரு­ஜ­ய­சூ­ரி­யவும், சஜித் பிரே­ம­தா­சவும் விரும்­பா­த­தால்தான் இவர் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கி அமைச்­ச­ர­வையை அவர் விருப்­புக்கு விட்­டாராம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியில்  பலர் இருக்க மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் கரு­வையும் சஜித் பிரே­ம­தா­ச­வையும் அழைக்க வேண்டும். மேற்­படி இரு­வரும் அடுத்த நிலை தலை­வர்கள் என்­ப­தா­லேயே அவர் இவ்­வாறு கூறி­யி­ருக்­கலாம். ரணி­லோடு சேர்ந்து கொண்டு ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­ய­துபோல் மஹிந்­த­வுடன் சேர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தும் செயலா? மஹிந்தவும் இதை நன்றாக சிந்தித்துப் பார்த்திருக்கலாம். காரணம் மைத்திரிக்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு அல்ல ரணில் மீது மட்டுமே தனிப்பட்ட பகை எனும் கருத்தே இதில் தொனிக்கிறது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட விருப்பை முன்வைத்து இவர் பதவி மாற்றம் செய்தவரென்பதால் தன்னோடு இவருக்கு கோபம் ஏற்படுமாயின் ஜி.எல்.பீரிஸையோ, தினேஷ் குணவர்தனவையோ இவர் அழைத்துப் பேசலாம்  அல்லவா? இவரால் மஹிந்த சூடு கண்ட பூனை. எனவே  எப்போதும் விழிப்புடனேயே இருப்பார். அதனால் தான் மைத்திரியால் பிரதமரான மஹிந்த ராஜபக் ஷ இப்போது பொது ஜன ஐக்கிய முன்னணியில் தலைவராக ஆகிக்கொண்டார். ஆக ஜனாதிபதியாவதற்கு மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கீழிறக்கினார்.  அதுபோல் ஜனாதிபதி பதவியை இழந்ததற்காகவே மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன ஐக்கிய முன்னணி மூலம் அண்மையில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை படுதோல்வியுறச் செய்திருந்தார்.

இனி அக்கட்சி மீண்டெழ வேண்டுமாயின் ரணிலோடும் மஹிந்தவோடும் சமராட வேண்டும். அந்த அளவுக்கு மைத்திரிபால சிறிசேன அக்கட்சியை கொண்டு வந்துவிட்டு விட்டார். அரசியலில் அனுபவம் பெற்ற சந்திரிகா பண்டாரநாயக்கா வழிகாட்டலை இவர் பேணியிருந்தால் அந்தக் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தற்போது அக்கட்சியை மீளுருவாக்கம் செய்ய சந்திரிகா பண்டாரநாயக்க முனைப்புக்காட்டுவதாக தெரிகிறது. அக்கட்சியின் ஸ்தாபக தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் குடும்பத்தேர்தல் தொகுதியான அத்தனகல்லையில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் கூட இம்முறை மஹிந்தவின் கட்சியே வென்றிருந்தது. இதனால் இப்போது சந்திரிகாவும் குழம்பிப்போயிருக்கிறார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.