முரண்பாடுகளை தவிர்க்க மஹிந்த-மைத்திரி நாளை சந்திப்பு

0 655

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றுக் கிடையில் நிலவும் முரண்­பா­டு­க­ளைத்­தீர்த்துக் கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யாட லொன்று நாளை பிற்­பகல் 6.30 மணிக்கு கொழும்பு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெறவுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யாடல் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருக்­கி­டையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் பொது­ஜ­ன­பெ­ர­முன கட்­சியின் சார்பில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, அக்­கட்­சியின் தேசிய அமைப்­பாளர் பஷில் ராஜபக் ஷ மற்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜெய­சே­கர, அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, தேசிய அமைப்­பாளர் துமிந்த திசா­நா­யக்க மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர ஆகி­யோரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யொன்று ஏற்­க­னவே கைச்­சாத்­திட்­டுள்ள நிலையில் இந்த உடன்­ப­டிக்­கைக்கு குந்­தகம் ஏற்­படும் வகையில் பொது­ஜன பெர­மு­னவின் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் கருத்து வெளி­யிட்டு வரு­வதால் இதற்குத் தீர்வு காணும் முக­மாக கலந்­து­ரை­யாடலொன்­றினை ஏற்­பாடு செய்­யும்­படி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர ஜனா­தி­ப­தியைக் கோரி­யி­ருந்தார்.
இந்தக் கோரிக்­கைக்கு அமை­வா­கவே நாளை குறிப்­பிட்ட கலந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திர பொது­மக்கள் முன்­ன­ணியின் கீழ் போட்­டி­யி­டு­வ­தற்கு சின்னம் தொடர்பில் நிலவும் முரண்­பா­டுகள் மற்றும் பொது­ஜன பெர­முன கட்­சியின் சில அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­யிடும் முரண்­பா­டான கருத்­துகள் தொடர்பில் நாளைய கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு இறு­தித்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோருக்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.