யெமன் போரில் சவூதிக்கு வழங்கும் ஆதரவை திரும்ப பெற அமெரிக்க செனட் நடவடிக்கை

0 794

யெமனில், சவூதி அரே­பி­யாவின் தலை­மையில் நடை­பெற்று வரு­கின்ற போருக்கு அமெ­ரிக்கா வழங்கி வரும் ஆத­ரவை திரும்பப் பெறு­வ­தற்­கான முயற்சி ஒன்றை அமெ­ரிக்க செனட் அவை முன்­னெ­டுத்­துள்­ளது. அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்­புக்கு பலத்த அடி­யாக இந்த முயற்சி பார்க்­கப்­ப­டு­கி­றது,

சவூதி பத்­தி­ரி­கை­யாளர் ஜமால் கஷோக்­ஜியின் கொலை பற்றி டிரம்ப் தெரி­வித்த கருத்­து­களை பல அமெ­ரிக்க செனட் அவை உறுப்­பி­னர்கள் விரும்­ப­வில்லை.

யெமனின் நிலை­மையை மிகவும் மோச­மாக்கும் என்­பதால், இந்த மசோ­தா­வுக்கு செனட் அவை உறுப்­பி­னர்கள் ஆத­ரவு அளிக்­கக்­கூ­டாது என்று வெளி­யு­றவு செய­லாளர் மைக் பாம்­பே­யோவும், பாது­காப்­புத்­துறை செய­லாளர் ஜிம் மேத்­திஸும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இருப்­பினும், இரு கட்­சி­களும் கொண்டு வரும் முன்­மொ­ழி­வாக இதனை எடுத்துச் செல்ல செனட் அவை உறுப்­பி­னர்கள் 63:37 என்ற அளவில் வாக்­க­ளித்து ஆத­ரவு அளித்­துள்­ளனர்.

கடந்த ஒக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்­கியின் இஸ்­தான்­புல்லில் இருக்கும் சவூதி துணைத் தூத­ர­கத்­திற்கு சென்ற அமெ­ரிக்க வாழ் சவூதி பத்­தி­ரி­கை­யாளர் ஜமால் கஷோக்ஜி கொல்­லப்­பட்டார். அதன் பின்னர், சவூதி அரே­பியா மீதான விமர்­ச­னங்கள் அதி­க­ரித்­தன.

இந்த கொலையை செய்ய சவூதி அரே­பி­யாவின் பட்­டத்து இள­வ­ரசர் முகம்­மது பின் சல்மான் ஆணை­யிட்­டுள்ளார் என்று அமெ­ரிக்க உள­வுத்­துறை (சிஐஏ) நம்­பு­வ­தாக அமெ­ரிக்க ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இருப்­பினும், சிஐஏ உறு­தி­யான முடி­வுக்கு வர­வில்லை என்று கூறி இந்த கருத்தை அதிபர் டிரம்ப் நிரா­க­ரித்­துள்ளார்.

சவூதி அரே­பியா இன்­றி­ய­மை­யாத நட்பு நாடு என்று தெரி­வித்­தி­ருக்கும் டிரம்ப், சவூதி அரசின் தலை­மைக்கு எதி­ராக தடைகள் விதிப்­ப­தற்கு எழுந்த கோரிக்­கை­களை ஏற்­க­வில்லை.

சவூதி அரே­பி­யா­வோடு கொண்­டி­ருக்கும் உற­வுகள் பற்­றிய இர­க­சிய விசா­ரணை அமர்வில் சிஐஏ இயக்­குநர் ஜினா ஹாஸ்பல் பங்­கேற்­க­வில்லை என்­பதால் செனட் அவை உறுப்­பி­னர்கள் கோப­ம­டைந்­துள்­ளனர்.

கஷோக்­ஜியின் கொலை தொடர்­பான ஓடியோ பதிவு என துருக்கி கூறு­வதை ஹாஸ்பல் கேட்­டுள்ளார். இந்த வழக்கின் சான்­று­களை அவர் ஆய்வு செய்­துள்ளார். ஹாஸ்பல் பங்­கேற்­கா­தது பற்றி கருத்து தெரி­வித்த செனட் அவை உறுப்­பினர் ஒருவர் “இது மூடி­ம­றைக்கும் செயல்” என்று கூறி­யுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யெமனில் கற்­பனை செய்ய முடி­யாத அள­வுக்­கான மனி­தா­பி­மான பேர­ழிவு ஆகி­ய­வற்றை உரு­வாக்­கி­யுள்ள சவூதி அரே­பி­யா­வுக்கு எதி­ரான சமிக்­ஞையை அனுப்ப வேண்­டிய நேர­மிது என்று ஜன­நா­யக கட்­சியின் செனட் அவை உறுப்­பினர் பாப் மெனெண்டெஸ் கூறி­யுள்ளார்.

செனட் அவையின் வெளி­யு­றவு குழுவின் தலை­வ­ரான குடி­ய­ரசு கட்­சியை சேர்ந்த செனட் அவை உறுப்­பினர் பாப் கோர்கெர், “இங்கு சிக்கல் உள்­ளது. சவூதி அரே­பியா நமது நட்பு நாடு. ஓர­ளவு முக்­கி­ய­மான நாடு. ஆனால், அந்­நாட்டு பட்­டத்து இள­வ­ர­சரோ வரம்பு மீறு­கி­ற­வ­ராக இருக்­கிறார்” என்­கிறார்.

யெமனில் சவூ­திக்கு அளிக்கும் ஆத­ரவைத் திரும்பப் பெறு­வ­தற்கு ஆத­ர­வாக செனட் அவை தீர்மானம் நிறைவேற்றிவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படலாம். ஆனால், புத்தாண்டில் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுகிறது என்பதால் அப்போது இது நிறைவேற்றப்படும் வாய்ப்பும் உள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.