விஜயதாசவின் தனிநபர் பிரேரணை: ஜனநாயக விரோதமானது

சிறிய, சிறுபான்மை காட்சிகளை கடுமையாக பாதிக்கும் என்கிறது முஸ்லிம் காங்கிரஸ்

0 811

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக் ஷவினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள இலங்கைச் சன­நா­யக சோலிசக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்­புக்­கான இரு­பத்­தோ­ரா­வது திருத்தம் சிறு­பான்மை மற்றும் சிறிய அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்­வது மாத்­தி­ர­மல்ல, அடிப்­படை ஜன­நா­யக கோட்­பா­டு­க­ளுக்கும் எதி­ரா­ன­தாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்தார்.

ஜன­நா­யக வெளிப்­பா­டு­களை மற்றும் ஜன­நா­யக எண்­ணப்­பா­டு­களைக் கொண்ட சிறு­பான்மை கட்­சி­களை இது மிகவும் பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக்ஷ அர­சி­ய­ல­மைப்­புக்­கான இரு­பத்­தோ­ரா­வது திருத்தம் ஒன்­றினைந் செய்­வ­தற்­காக தனியார் சட்­ட­மூலம் ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அதற்­கான அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­த­லொன்றும் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அர­சி­ய­ல­மைப்­புக்­கான இரு­பத்­தோ­ரா­வது திருத்தம் பின்­வ­ரு­மாறு எடுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 99 ஆம் உறுப்­பு­ரையைத் திருத்­துதல்.

இலங்கை சன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பின் (இதனகத்துப் பின்னர் “அர­சி­ய­ல­மைப்பு” என குறிப்­பீடு செய்­யப்­படும்) 99 ஆவது உறுப்­பு­ரையின் (6) ஆவது பந்­தியின் (அ) உப பந்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள “மொத்த வாக்­கு­களில் இரு­பதில் ஒன்­றுக்கு குறை­வான” எனும் சொற்­களை நீக்கி விட்டு அதற்குப் பதி­லாக ‘மொத்த வாக்­கு­களின் எட்டில் ஒன்­றுக்குக் குறை­வான’ என்ற சொற்­களை பதி­லீடு செய்து இத்தால் திருத்­தி­ய­மைக்­கப்­ப­டு­கின்­றது என வர்த்­த­மானி அறி­வித்தல் தெரி­விக்­கி­றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் சட்­டத்­த­ரணி தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், அர­சியல் கட்­சிகள் மொத்த வாக்­கு­களில் எட்டில் ஒன்­றுக்கு குறை­வான வாக்­கு­களைப் பெற்றால் பிர­தி­நி­தித்­துவம் பெற முடி­யாது என்­பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்­ரபே முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ச­வுடன் பேரம்­பேசி மொத்த வாக்­கு­களில் இரு­பதில் ஒன்­றுக்குக் குறை­வான என்று திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர். இது 15 ஆவது திருத்­த­மாகும்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அர­சி­ய­ல­மைப்பில் இந்தத் திருத்­தங்­களைக் கொண்டு வந்­த­தாலே சிறு­பான்மைக் கட்­சிகள் மாத்­தி­ர­மல்ல, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல­உ­று­மய, மலை­யக மக்கள் முன்­னணி போன்ற தமிழ் கட்­சிகள் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

சிறு­பான்மை கட்­சிகள் குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரை ஆட்­சியில் உள்­வாங்கிக் கொள்­ளக்­கூ­டாது. அவர்கள் தங்கள் பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கக்­கூ­டாது என்ற அடிப்­ப­டை­யிலே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக் ஷவினால் இந்த இரு­பத்­தோ­ரா­வது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அபாயகரமான சட்டமூலம் எனலாம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் பேசப்பட்டு அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட மிகவும் முக்கியமான திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கே தற்போது முயற்சிக்கப்படுகிறது என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.