மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

0 925

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மனோ­நி­லையை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கிறது.

​பேரு­வளை: மாண­வர்கள் கைக­லப்பு

கடந்த வியா­ழக்­கி­ழமை 22 ஆம் திகதி பேரு­வளை அல்­ஹு­மை­ஸரா பாட­சாலை வழ­மை­போன்று உற்­சா­க­மா­கத்தான் ஆரம்­ப­மா­னது. என்­றும்போல் மாணவ தலை­வர்கள் சக மாண­வர்­களை வழி­ந­டத்­திக்­கொண்­டி­ருந்­தனர்.

பாட­சா­லையில் க.பொ உயர்­தர கணிதப் பிரிவில் கல்­வி­ப­யிலும் பேரு­வ­ளை­ஹேன பகு­தியைச் சேர்ந்த முஹம்மத் தாரிக் சிறப்பு சிரேஷ்ட மாணவ தலை­வ­ராவார்.

அவர் தரம் ஒன்­ப­துக்குள் சென்­ற­போது ஏதோ ஒரு­வ­கையில் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதன்­போது மாணவன் ஒரு­வனால் தாரிக் தள்ளி வீழ்த்­தப்­பட்­ட­தா­கவும் இதன்­போது அவ­ரது தலையில் அடி­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் தாரிக் மற்ற மாண­வ­னுக்கு பதி­லுக்கு அடித்­த­தா­கவும் இதனை ஆசி­ரியர் ஒருவர் கண்­ட­தா­கவும் சொல்­லப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் தாரிக்­குக்கு தண்­ட­னை­யாக வெயிலில் நிறுத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் பாட­சாலை தரப்பு இதனை முற்­றாக மறுத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் மாணவன் தாரிக் வாந்தி எடுத்­த­ நிலையில்  பின்னர் களுத்­துறை தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்­டுள்ளார்.

மரணம்

பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய ஆஸ்­பத்­தி­ரிக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்டு பின்னர் மீண்டும் நாகொட பெரி­யாஸ்­பத்­தி­ரியில் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குறித்த மாணவன் தாரிக் மர­ண­மானார்.

களுத்­துறை பதில் நீதவான் வஜிர லக் ஷ்மன் அசு­ரப்­புலி நாகொடை ஆஸ்­பத்­தி­ரிக்கு சென்று சட­லத்தை பார்­வை­யிட்­ட­தோடு சம்­பவம் இடம்­பெற்ற பாட­சா­லையின் வகுப்­ப­றை­யையும் பார்­வை­யிட்டார்.

பின்னர் சட­லத்தை பிரேத பரி­சோ­தனை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறும் நாகொட ஆஸ்­பத்­திரி சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு உத்­த­ர­விட்டார்.

பிரேத பரி­சோ­த­னையின் பின் சீனன்­கோட்டை பாஸிய்யா பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் ஜனாஸா கடந்த திங்­கட்­கி­ழமை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

கைது

சம்­பவம் தொடர்பில் மாணவன் ஒரு­வனை பேரு­வளை பொலிஸார் கைது செய்­தனர். களுத்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில்  ஆஜர்  செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு  பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தான். காய­முற்ற மாணவன்  தாரிக் மர­ண­மா­ன­தை­ய­டுத்து  மீண்டும் குறித்த மாணவன் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

களுத்­துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் பொடி­து­வக்கு, களுத்­துறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் உபுல் நில்­மினி ஆரி­ய­ரத்ன, களுத்­துறை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் கபில பிரே­ம­தாஸ ஆகி­யோரின் பணிப்பில் பேரு­வளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி சரத் குமார தலை­மை­யி­லான பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

விளக்­க­ம­றியல்

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட சம்­பந்­தப்­பட்ட மாணவன்  களுத்­துறை  மேல­திக நீதிவான்  திரு­மதி  என். நாண­யக்­கார  முன்­னி­லையில்  ஆஜர் செய்­த­போது  டிசம்பர்  மாதம் 10 ஆம் திகதி  வரை மாக்­கொல  சிறுவர்  இல்­லத்தில்  தடுத்து  வைக்­கு­மாறு  உத்­த­ர­விட்டார்.

பாட­சாலை சுற்றி வளைப்பு

அதே­ச­மயம், பிர­தேச இளை­ஞர்கள் குறித்த பாட­சா­லையை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுற்­றி­வ­ளைத்­த­தை­ய­டுத்து பொலிஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து நில­மை­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.  பேரு­வளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஜனக விதான, களுத்­துறை கல்விப் பணிப்­பாளர் பிரி­யானி முத­லி­கே­யிடம் விடுத்த வேண்­டு­கோ­ளினை கருத்திற் கொண்டு பாட­சாலை இரு நாட்கள் மூடப்­பட்­டன.

அத்­துடன் திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் இரண்டு நாட்­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த பேரு­வளை சீனன் கோட்டை அல்–­ஹு­மை­ஸரா தேசிய பாட­சாலை மீண்டும் நேற்­று­முன்­தினம் திறக்­கப்­பட்­டது. திறக்­கப்­பட்ட பாட­சாலை வழ­மைபோல் இயங்­கி­யது.

பாட­சா­லையில் ஆண்­டி­றுதிப் பரீட்­சைகள் நடத்­தப்­பட்டு வந்­த­நி­லையில் 26 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருந்த இரு பாடங்­க­ளுக்­கான பரீட்­சைகள் நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்­டன.

மாத்­தறை சம்­பவம்

மாத்­தறை – எல­வில்ல வீதி­யி­லுள்ள மேல­திக வகுப்­புக்கு அருகில் வைத்து,  கடந்த சனிக்­கி­ழமை (26) 17 வய­தான மாணவர் ஒருவர் மற்­று­மொரு மாண­வரை கூரிய ஆயு­தத்தால் தாக்­கி­யதில் அவர் மர­ண­ம­டைந்தார்.

இச்­சம்­ப­வத்தில் திஹ­கொடை, நாய்ம்­பல, மாஹேன பிர­தே­சத்தைச் சேர்ந்த ரவிந்து ஜிம்ஹான் என்ற மாண­வரே உயி­ரி­ழந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மோட்டார் சைக்­கிளில் வந்த மூன்று மாண­வர்கள், மேல­திக வகுப்­பிற்கு செல்­வ­தற்­காக வந்த மற்றும் சில மாண­வர்­களை தாக்கி, அதில் ஒரு மாண­வனை அவர்­களில் ஒருவர் கூரிய ஆயு­தத்தால் தாக்­கு­வ­தோடு, அதனைத் தொடர்ந்து அம்­மா­ணவன் காய­முற்று நிலத்தில் வீழ்­வது தொடர்­பான CCTV காட்­சிகள், சமூக வலை­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து குறித்த சம்­பவம் தொடர்பில் மூன்று மாண­வர்கள் தொடர்­பிலும் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­ட­தோடு, அவர்­களை கைது செய்­வ­தற்கு கந்­தறை, திஹ­கொட பொலிஸ் நிலையம் மற்றும் புல­னாய்வு பிரிவு ஆகிய மூன்று பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன.

குறித்த கொலைச் சம்­பவம் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ரான 17 வயது மாணவன் கடந்த திங்­கட்­கி­ழமை (26) மாத்­தறை மேல­திக நீதவான் நீதி­மன்றில் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து அவர் கைது செய்­யப்­பட்டார்.

அத்­துடன் குறித்த சம்­ப­வத்தில் தாக்­கு­தலில் ஈடு­பட்ட மற்­று­மொரு 17 வயது மாணவன் மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் காரி­யா­ல­யத்தில் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து குறித்த இரு­வ­ருக்கும் மாத்­தறை மேல­திக நீதவான் நீதி­மன்றம், எதிர்­வரும் டிசம்பர் 03 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் விதித்­துள்­ளது.

குறித்த மாண­வனின் சடலம் பிரேத பரி­சோ­த­னையை அடுத்து கடந்த ஞாயி­றன்று அவ­ரது இல்­லத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதன்­போது அங்கு பெருந்­தி­ர­ளான மக்கள் குழு­மி­யி­ருந்­தார்கள்.

இதற்கு முன்னர் இடம்­பெற்ற பிரச்­சினை ஒன்றை மைய­மாக வைத்து இத்­தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு மாண­வர்­களின் குரோத மன­நிலை படு­கொலை வரை செல்­கின்­ற­மை­யா­னது எதிர்­காலத் தலைமைகளின் இலட்சணங்களை வெட்டவெளிக்கு கொண்டு வருவதாகவே இருக்கிறது.

கடந்த காலங்களில் கொழும்பில் தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரோயல் கல்லூரி மாணவர்கள் குழுக்களிடையே அடிக்கடி வீதிச் சண்டைகள் வருவதுண்டு. அத்துடன் கண்டியின் பிரபல முஸ்லிம் தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையேயான பிக் மெட்ச் ஒன்றின்போது தேசிய கிரிக்கெட் மைதானமொன்று சேதப்படுத்தப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு ஆரேக்கியமற்ற மாணவர்கள் நடத்தைகளானது எதிர்காலத்தை கேள்விக்குட் படுத்துவதாகவே இருக்கிறது. அத்துடன் இவ்வாறான நடத்தை பிறழ்வு குறித்து அதிவிசேட கவனத்தை கல்வியமைச்சு செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.