“நாம் ஊடகங்களுக்காக யுத்தம் நடத்திய நடிகர்கள் அல்லர்”

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க

0 1,460

இரா­ணு­வத்தின் முன்னாள் தள­ப­தி­யா­க­வி­ருந்த ஒரு­வரின் வீடு எவ்­வாறு இருக்கும் என்று நாம் மனதில் எடை போட்­டி­ருந்த எத்­த­கைய தட­யங்­களும் இல்­லாத ஒரு சாதா­ரண வீடா­கவே முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேனா­நா­யக்­கவின் வீடு காணப்­பட்­டது. அதுவும் நக­ரத்­திற்­கப்­பா­லுள்ள சன­நெ­ருக்­க­டி­யற்ற அமை­தியும் வெறு­மை­யு­மான பிர­தே­சத்­தி­லேயே அவ்­வீடு அமைந்­துள்­ளது. மிகவும் எளி­மை­யான முறையில் வாழ்ந்து வரும் அரச ஓய்வு பெற்ற மனிதர் ஒரு­வரின் வீடு அது. அம்­ம­னி­தரின் பாது­காப்­புக்­காக அமர்த்­தப்­பட்­டி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரி­களால் கூட எமக்கு எத்­த­கைய அசெ­ள­க­ரி­யங்­களும் ஏற்­ப­ட­வு­மில்லை. வீட்டின் முன் கதவால் வெளியே வந்த அம்­ம­னிதர் மகேஷ் சேனா­நா­யக்க புன்­மு­றுவல் பூத்த முகத்­தோடு கைலாகு செய்து எம்மை வர­வேற்றார்.

வீட்டின் உள்ளே நுழைந்­த­போதும் சர்வ சாதா­ர­ண­மாக நாம் எடை­போடும் இரா­ணுவ பதக்­கங்கள், இரா­ணுவ புகைப்­ப­டங்கள் உள்­ளிட்ட படைத்­த­ரப்பு சார்ந்த எத்­த­கைய அடை­யா­ளங்­க­ளையும் காண முடி­ய­வில்லை. சுதந்­தி­ர­மாக வாழும் ஓர் அமை­தி­யான சூழ்­நி­லை­யையே எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. எங்­க­ளுடன் மிகவும் மிரு­து­வான சுபா­வத்­து­டனே கதைக்க ஆரம்­பித்தார். அதி­கார ஆணவம் அவ­ரி­ட­மி­ருந்து வெளிப்­ப­டவே யில்லை. மகேஷ் சேனா­நா­யக்க சாதா­ர­ண­மாக உரை­யா­டும்­போது, நகைச்­சு­வை­யாகக் கதைக்கும் சுபா­வ­முள்­ளவர். அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் போது வரு­ண­னை­க­ளுப்பால் நட்பு ரீதி­யான மரி­யாதை யொன்றே அவ­ரி­ட­மி­ருந்து வெளிப்­பட்­டது. அவ­ருடன் செவ்­வி­யெ­டுத்து முடிந்து நாம் வெளி­யே­றினோம். அப்­போதும் அவர் சிறிது தூரம் எம்­மு­டனே வந்தார். நேர்­கா­ணலில் அவ­ரது கடந்த கால வாழ்வு குறித்து முதலில் வின­வினோம்.

“எனது தந்தை ஒரு பொலிஸ் அதி­காரி. அதனால் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கட­மையின் பொருட்டு இட­மாற்றம் பெற்­றுச்­சென்­றுள்ளார். தந்­தையின் பிறந்த ஊர், தென் மாகா­ணத்தின் பலப்­பிட்­டி­யி­லுள்ள கொஸ்­கொ­ட­யாகும். ஆனாலும் நான் முதலாம் தரத்­தி­லி­ருந்து 13 ஆம் தரம் வரை­யிலும் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரி­யிலே பயின்­றுள்ளேன். நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள அண்­டர்சன் தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யி­லேயே ஆரம்ப காலத்தில் இருந்­துள்ளேன். பின்னர் தந்தை கட்­டு­பத்தப் பகு­தியில் காணி­யொன்றை வாங்கி வீடொன்றை நிர்­மா­ணித்தார். எனக்கு இரண்டு மூத்த சகோ­த­ரி­களும் ஒரு தங்­கையும் ஒரு தம்­பியும் இருந்­தனர். ஆனால் தம்பி பின்னர் எம்மை விட்டும் பிரிந்து விட்டார். எனது தாயின் இளைய சகோ­த­ரியும் எங்கள் வீட்­டில்தான் இருந்தார். இதனால் எங்கள் குடும்ப எண்­ணிக்கை எண்­ம­ராக இருந்­தது. தந்தை தொழிலின் நிமித்தம் ஒவ்­வொரு இடத்­திற்கும் செல்­ல­வேண்­டிய நிலை. இதனால் அவ­ருடன் உற­வாடும் சந்­தர்ப்­பங்கள் மிகவும் குறை­வா­கவே இருந்­தன.

நான் பாட­சா­லையில் செய்­ய­வேண்­டிய குறும்­புகள் எல்லாம் செய்­துள்ளேன். அவற்­றுக்கு மத்­தியில் கல்­வி­யிலும் கவனம் செலுத்­தினேன். பாட­சா­லையில் பல்­வேறு சங்­கங்­க­ளிலும் அங்கம் வகித்­துள்ளேன். விளை­யாட்­டிலும் ஈடு­பாடு காட்­டி­யுள்ளேன்.

பொலிஸ் மற்றும் இரா­ணுவம் ஆகிய இரு கடெட் குழுக்­க­ளிலும் இருந்­துள்ளேன். நான் பொலிஸ் கடெட் குழுவின் சார்ஜன் தரத்­தி­லி­ருந்த போது 1980 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதி­யி­லான விருதைப் பெற்­றுள்ளேன்.
திரைப்­படம் பார்ப்­ப­தையே பிர­தான பொழுது போக்­காகக் கொண்­டி­ருந்தேன். அத்­துடன் நான் பார்த்த படத்தின் பெயர், அதன் தயா­ரிப்­பாளர், அதன் நடிக– நடி­கையர் பெயர் விப­ரங்­களை சீ.ஆர்.புத்­தகம் ஒன்றில் பதிவு செய்து வைத்­துள்ளேன். படத்தை திரை­ய­ரங்கில் பார்த்­ததை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக குறித்த குறிப்­புக்­களை எழு­திய இடத்தில் மேற்­படி திரைப்­பட சினிமா கொட்­ட­கையின் டிக்­கட்­டையும் ஒட்டி வைப்பேன். இந்த வகையில் அப்­போது திரைப்­படம் பார்த்தோர் வரி­சையில் அதி­க­மான திரைப்­ப­டங்­களைப் பார்த்­தவன் என்ற சாத­னை­யையும் நிலை நாட்­டி­யுள்ளேன். இதனால் திரைப்­படம் பார்ப்­பதில் பரம ரசிகன் நான் என்­பது உறுதி. சிங்­களம், ஹிந்தி திரைப்­படப் பிரியன் நான். பொரள்­ள–­லிடோ, ரிட்ஸ், தெமட்­ட­கொ­ட–­ச­மந்தா, மரு­தா­னை–­கா­மினி போன்ற சினிமா தியேட்­டர்­க­ளி­லேயே அநே­க­மான படங்­களைப் பார்த்­துள்ளேன். காமினி தியேட்­டரில் நாம் இல்­லாது திரைப்­படம் ஓட மாட்­டாது என்று நாம் பகி­டி­யாகக் கதைப்­ப­துண்டு.

Q சுதந்­தி­ர­மாக திரைப்­படம் பார்த்து வந்த வாலிபப் பிற­வி­யான நீங்கள் எவ்­வாறு இரா­ணு­வத்தில் இணைந்­தீர்கள்?

எமது பாட­சா­லையில் கேர்ணல் ஜீ.டப்­ளியூ. ராஜபக் ஷ என்­பவர் அதி­ப­ராக இருந்தார். எனது பாட­சாலை வாழ்க்கை முழு­வதும் அவரே அதி­ப­ராகக் கட­மையில் இருந்தார். அவர் எமது திறமை, ஆற்­றல்­களை நன்­கு­ணர்ந்­த­வ­ராவார். எங்­களை பல்­க­லைக்­க­ழகம் அனுப்­ப­வேண்டும் என்­பதே எமது பெற்­றோ­ரதும் விருப்­ப­மாக இருந்­தது. இந்­நி­லையில் என்னை இரா­ணு­வத்தில் சேர்க்­கும்­படி எங்கள் அதி­பரே எமது பெற்­றோ­ருக்கு ஆலோ­ச­னையை முன்­வைத்தார்.
இரா­ணு­வத்தில் குறு­கிய கால அதி­கார முறைமை, நீண்­ட­கால அதி­கார முறைமை என்று இரு வகை முறை­மைகள் உள்­ளன. நான் இரா­ணு­வத்தில் இணை­வ­தென்றால், நீண்­ட­கால முறைமைப் பிரி­வையே தேர்ந்­தெ­டுக்கும் படி எனது தந்தை ஆணித்­த­ர­மா­கவே என்னைப் பணித்தார். அத்­துடன் ஐந்து வரு­டங்­களில் வெளி­யேறும் நோக்­கத்­துடன் இரா­ணு­வத்தில் சேர வேண்டாம் என்ற கண்­டிப்­பான உத்­த­ர­வொன்­றையும் விடுத்தார். எனது இரா­ணுவ பாட­நெறி இரண்டு வரு­டங்­க­ளாகும். என்­னுடன் 19 பேருக்கே மேற்­படி பிரிவில் அனு­மதி கிடைத்­தது. அந்த அணியில் முதல் நிலை பெற்று விருதும், சான்­றி­த­ழையும் வென்­றெ­டுத்தேன். அதனால் பல வரு­டங்­க­ளுக்­கொரு முறையே வழங்­கப்­படும் கடெட் நடத்­துநர் அதி­கா­ரிக்­கான நிய­மனம் எனக்கு உட­ன­டி­யா­கவே கிடைத்­தது. 1983 ஜூன் 23 ஆம் திகதி இந்­நி­ய­மனம் பெற்றேன். அப்­போது பொறி­யியல் துறை அணிக்கே செல்­ல­வேண்டும் என்று ஜானக பெரேரா என்னைப் பல­வந்­த­மாகப் பணித்தார். அவ்­வ­ணி­யிலும் சிறி­து­காலம் நான் திருப்­தி­க­ர­மாகப் பணி­யாற்­றினேன். அதன் பின்­னரே இலங்கை இரா­ணு­வத்தில் விசேட அணி­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து நான் 1988 முதல் விசேட அணியில் சேர்க்­கப்­பட்டு பணி­யாற்­றினேன்.

Q விசேட படை­ய­ணி­யான எஸ்.எப்.என்­பது இலங்கை இரா­ணு­வத்தில் சிறப்­பு­வாய்ந்த படை வீரர்கள் உள்ள அணி­யாகும். ஆனாலும் ‘ரண­விரு நீரோ’ எனும் பூரண தகை­மை­யான ஸ்னைபர் வீரர்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பட்ட வீரர்கள் அடங்­கிய எஸ்.எப். அணி குறித்து அறிந்து கொள்ள முடி­யுமா?

எஸ்.எப். குறித்து அவ்­வீ­ரர்­க­ளது படை நட­வ­டிக்­கைகள் மிகவும் இர­க­சி­ய­மா­கவே கையா­ளப்­ப­டு­வதால் அது பற்றி தெரிந்­து­கொள்ள வாய்ப்புக் கிடைப்­ப­தில்லை. நாம் நீண்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கிறோம். நாம் ஊட­கங்­க­ளுக்­காக யுத்தம் செய்யும் நடி­கர்கள் அல்லோம்.

2002 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்­திற்கும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்­புக்கும் இடையே ஒப்­பந்தம் ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. விசேட படை­ய­ணியின் நட­வ­டிக்­கை­களை இடை நிறுத்­தும்­படி அவ்­வொப்­பந்­தத்தின் ஒரு விதியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அத்­த­கை­ய­தொரு விதி இதர படை­யணி மீது விடுக்­கப்­ப­ட­வில்லை. எல்.ரீ.ரீ.ஈ பெரிதும் அஞ்­சி­யது விசேட படை­ய­ணிக்­கே­யாகும். இலங்­கையில் மிகவும் தரம்–­பலம் வாய்ந்த வீரர்­களைக் கொண்ட படை­ய­ணி­யாக இவ்­வி­சேட அணியே விளங்­கி­யமை இதன் மூலம் நன்கு தெரி­ய­வ­ரு­கி­றது.

எமது நான்கு வீரர்கள் சுமார் 90 Km தொலை­தூரம் அடர்ந்த காட்­டுக்குள் ஊடு­ருவிச் சென்று, அவர்­க­ளது படை முகாமைத் தாக்கி மீண்டு வரு­வது குறித்து எல்.ரீ.ரீ.ஈ நன்கு தெரிந்து வைத்­தி­ருந்­தனர். அத்­த­கைய பொறுப்பு வாய்ந்­த­தொரு தொழி­லி­லேதான் நாம் ஈடு­பட்டு வந்தோம். புலி­களை ஆட்­டங்­காண வைக்கும் படை நட­வ­டிக்­கை­யொன்றை நடத்தி முடித்து பத்து நாள் விடு­மு­றையில் எனது வீட்­டுக்கு வந்தேன். நாம் என்ன சாதித்தோம் என்று வீட்டில் யாருக்கும் தெரி­யாது. நாம் அச்­சா­த­னைகள் குறித்து நூல் ஏதும் எழு­து­வ­தில்லை. நூல் எழு­தி­னாலும் அதி­லுள்ள கார­ணி­களைத் தவ­றான முறையில் திசை திருப்­பவும் முடியும். ஒரு சில அதி­கா­ரி­களால் எழு­தப்­பட்ட நூல்­களில் அடங்­கி­யுள்ள சில கார­ணிகள் இன்று விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன. எம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட பெரும்­பா­லான படை நட­வ­டிக்­கைகள் பரம இர­க­சி­ய­மாகும். அவை குறித்து பெரு­மை­ய­டிக்க முடி­யாது. எங்­களால் நடத்­தப்­பட்ட படை நட­வ­டிக்­கைகள், எதிர்­கா­லத்தில் நாட்டின் பாது­காப்­புக்­காக உழைக்கும் கனிஷ்ட வீரர்­க­ளிடம் மாத்­திரம் பகிர்ந்து கொள்­வதை விடுத்து ஊர் உல­கத்­திற்குப் பறை­சாற்று வதில் பய­னில்லை. ஜனா­தி­பதி தேர்தல் பிர­சார மேடை­களில் கூட எனது சாக­சங்கள் குறித்து பெருமை பேசி­யது கிடை­யாது. அதே­போன்றே இன்று வரை­யிலும் எமது விசேட படை­யணி மீது மனித உரிமை நிறு­வ­னத்­தாலோ அல்­லது வேறு எந்த அமைப்­புக்­க­ளி­ட­மி­ருந்தோ எத்­த­கைய முறைப்­பாடு களும் சுமத்­தப்­ப­ட­வு­மில்லை.

Qரம்போ போன்ற திரைப்­ப­டங்­களில் விசேட படை வீரர்கள் குறித்து கண்­டு­கொள்ள முடி­கி­றது. அத்­த­கைய படங்­களில் வரும் வீரர்­களின் சாக­சங்கள் சாதா­ரண மனி­த­ரொ­ரு­வரின் இய­லு­மை­யையும் தாண்­டி­ய­தாக உள்­ளது. எனவே திரைப்­ப­டங்­களில் காணக்­கூ­டிய மேற்­படி காட்­சிகள் உண்­மை­யாக நிகழ்த்­தப்­பட்­ட­வைகள் தானா?

உண்­மை­யி­லேயே எங்­க­ளுக்கு உயர்ந்­த­பட்ச தொழில்­நுட்ப வச­திகள் ஏதும் இருக்­க­வில்லை. நாம் வேடு­வர்­களின் பாணியில் வெள்­ளை­யர்­க­ளது யுத்­தத்­தையே மேற்­கொண்டோம் என்று நான் அடிக்­கடி கூறு­வ­துண்டு. உலக நாடு­களில் எவரும் சாதிக்­காத சாத­னை­களை எமது ஒரு சில வீரர்கள் புரிந்­தி­ருக்­கி­றார்கள். இய­லு­மை­யோடு அலா­தி­யான பலம் மற்றும் மன தைரியம் எல்லாம் எமது வீரர்­க­ளிடம் உள்­ளன. உதா­ர­ணத்­திற்கு பாலம் குமர என்­ற­ழைக்­கப்­படும் ஒரு வாலிபன் குறித்து குறிப்­பி­டலாம். அது அவ­ரது உண்­மை­யான பெய­ரல்­ல­வென்­பதால் அவரைத் தனிப்­பட்ட ரீதியில் இனம்­காண முடி­யாது. அதனால் அப்­பெ­யரைக் குறிப்­பிட்டேன். அவ­ருடன் நாம் நீண்ட படை நட­வ­டிக்­கை­யொன்­றுக்குச் சென்றோம். பரஸ்­பரம் துப்­பாக்கிப் பிர­யோகம் நடந்­ததால் எமது படை­யணி சித­றுண்டு போனது. எல்.ரீ.ரீ.ஈ எம்மை பின் தொடர்ந்து தாக்கி வந்­தது. பின்னர் எமது குழு ஒரு­வாறு ஒன்று சேர்ந்து கொண்­டது. ஆனால் பாலம் குமர மட்டும் தனித்து விடப்­பட்­டி­ருந்தார். அவர் எப்­ப­டியும் புலி­களின் பிடியில் சிக்­காது தப்­பித்து வரக்­கூ­டிய துணிச்சல் மிக்­கவர் என்­பது எமக்­குத்­தெ­ரியும்.

சுமார் ஒன்­றரை வாரங்­களின் பின்னர் அவர் வந்து சேர்ந்தார். கையில் எத்­த­கைய வரை­ப­டமோ வழி­காட்டி உப­க­ர­ணங்­களோ ஏது­மின்றி நடுக்­கா­டு­க­ளுக்கு மத்­தியில் இருந்தே மீண்டு வந்­துள்ளார். அவரைக் கண்ட மாத்­தி­ரத்­தி­லேயே அவரை வைத்­திய பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்றே நான் எடை­போட்டேன். ஆனால் அவரோ முக்­கி­ய­மா­ன­தொரு தாக்­குதல் நட­வ­டிக்­கைக்­கான சான்­றா­தா­ரங்­க­ளு­டனே வந்­தி­ருந்தார். மேற்­கூ­றப்­பட்ட எத்­த­கைய பாதை வழி­காட்­டுதல் ஆதா­ரங்கள் ஏதும் இல்­லாது காட்டின் மத்­தி­யி­லுள்ள புலி­களின் மூன்று படை முகாம்கள் உள்ள இடங்­களை இனம் கண்டே வந்­துள்ளார். வந்த கையோடு விமானத் தாக்­குதல் தொடுக்க அவ்­வி­டங்கள் குறித்த தக­வல்­களைக் கைய­ளித்தார். வேறு எவரும் இவ்­வாறு தனித்து விடப்­பட்டு வந்து சேர்ந்­ததும் உட­ன­டி­யாக விடு­முறை பெற்று வீடு செல்­லவே எத்­த­னிப்பர். அவரோ அப­ரி­மி­த­மாக அர்ப்­ப­ணிப்புச் செய்­துள்ள ஒரு வீர­ராவார்.

அவர் இப்­போது சமூ­கத்­தோடு ஒரு­வ­ராக அமை­தி­யா­கவும் சாதா­ர­ண­மா­கவும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறார். இன்று பாலம் கும­ரயா பற்­றியோ அவ­ரது வீர தீர செயற்­பா­டுகள் குறித்தோ யாருக்கும் தெரி­யாது. அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட குறிப்­பி­டத்­தக்க சாக­சங்கள் குறித்து யாரும் நினைவு கூரவும் விரும்­பு­வ­தில்லை போலும். யுத்தம் என்­பது இனிய அனு­பவம் ஒன்­றன்று. அது­வேதான் உண்­மை­யாக உழைக்கும் தொழில். நிதர்­ச­ன­மான போர் வீரம்.

‘ப்ராவோ–2 சீரோ’ என்ற பெயர் தாங்­கிய உலகப் பிர­சித்தம் பெற்ற நூல் ஒன்­றுள்­ளது. அந்நூல் கருவை வைத்து திரைப்­படம் ஒன்று தயா­ரிக்­கப்­பட்­டது. பிரித்­தா­னி­யாவின் விசேட எஸ்.ஏ.எஸ்.படைக்­குழு, ஈராக்கில் மேற்­கொண்ட படை நட­வ­டிக்கை பற்­றிய கதையே அந்­நூ­லி­லி­ருந்து திரைப்­ப­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. அந்­நூலை எழு­திய குறித்த வீரரை கொழும்பில் சந்­திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. அவ­ரது அனு­ப­வங்­களில் இரண்­டொன்றை நாமும் பெற்­றுக்­கொள்ளும் எண்­ணத்தில் அவ­ருடன் உரை­யா­டினேன். ஆனால் அவ­ரது கூற்­றி­லி­ருந்து என்னால் எத­னையும் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அவ­ரது வாழ்க்­கையில் இடம்­பெற்ற ஒரே சம்­ப­வமே அந்­நூலின் கருப்­பொ­ரு­ளாகும். அதனைத் தவிர வேறு குறிப்­பி­டத்­தக்க எச்­சம்­ப­வமும் அவ­ரிடம் காணப்­ப­ட­வில்லை. அதுவும் அவர் எழு­திய அனு­பவம் போன்று ஏரா­ள­மான சம்­ப­வங்­களை நாம் அனு­ப­வித்­துள்ளோம்.

இரா­ணு­வத்­திற்குள் இரு வகை­யான வீரர்கள் உள்­ள­தாக நாம் சாதா­ர­ண­மாக கூறி வரு­கிறோம். ஒரு வகை­யினர் நெருக்­கடி நெருங்கும் சந்­தர்ப்­பத்தில் கிரேனேற் பொருத்­தியும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தும் தாக்­குதல் நடத்தி வரு­வோ­ராவார். அடுத்த தரப்பு, தூர­நோக்­கோடு நட­வ­டிக்கை ஒன்­றுக்­காகக் காத்­தி­ருக்கும் வகை­யி­ன­ராவர். மீண்டும் முகா­முக்குள் வந்­த­டைந்த பின்னர் யுத்­தத்தில் ஈடு­பட்­டோரால் தாம் மேற்­கொண்ட நட­வ­டிக்கை குறித்த கதையைக் கூற முடி­வ­தில்லை. அந்­ந­ட­வ­டிக்­கையை நேரில் பார்த்துக் கொண்­டி­ருந்­த­வர்­களால் தான் கதையை அழ­காகக் கூற­மு­டியும். அதனால் படை நட­வ­டிக்­கையின் பின்னர் முகாம்­களில் வீரர்கள் சுற்றி வளைத்து வினாத்­தொ­டுப்­பது இரண்டாம் தரப்­பி­ன­ரிடம் தான். ஏனெனில் யுத்­தத்தில் ஈடு­பட்­ட­வர்கள் அல்ல. பார்த்­தி­ருந்­தோரே இவ்­வி­டத்தில் கதா­நா­யகர். யுத்தம் செய்­த­வர்­களே நாம் எவ்­வாறு நடந்து கொண்டோம் என்று பார்த்­தி­ருந்­தோ­ரி­டமே கேட்டுத் தெரிந்­து­கொள்வர். இதுவே உலக நிலை.

எமது படை வீரர்கள் மிகவும் உன்­ன­த­மா­ன­வர்கள் என்று நான் மிகவும் கெள­ர­வ­மா­கவும் பெரு­மை­யு­டனும் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன். பெரும்­பா­லானோர் வறுமை கார­ண­மாக தொழி­லுக்­காக இரா­ணு­வத்தில் சேரு­கி­றார்கள்.

நான் யுத்தம் இல்­லாத நிலையில் இரா­ணு­வத்தில் இணைந்தேன். ஆனாலும் யுத்தம் ஆரம்­பித்­ததைத் தொடர்ந்து இரா­ணு­வத்தை விட்டும் வெளி­நாட்­டுக்குத் தப்­பிச்­செல்­ல­வில்லை. அதே­போன்றே யுத்தம் நடத்து கொண்­டி­ருந்த வேளை­யிலே இரா­ணு­வத்தில் சேர்ந்து பணி­யாற்­றிய வீரர்­களும் உளர். அந்த வகையில் பெரும்­பா­லான படை­யினர் மிகவும் உன்­ன­த­மா­ன­வர்­கள்தான்.

Q யுத்­தத்­தின்­போது ஒரு­வ­ரை­யொ­ருவர் சுட்டுக் கொல்­கின்­றனர். இன்­னொரு மனித உயிரைக் கொல்­லும்­போது நல்ல மன­முள்ள யுத்த வீரர் ஒரு­வரின் மனம் எப்­ப­டி­யி­ருக்கும்? அம்­ம­ர­ணத்தை மறந்து அவரால் வாழ முடி­யுமா? இவ்­வி­னா­வுக்கு நீங்கள் தான் பதி­ல­ளிக்கப் பொருத்­த­மா­னவர் எனக் கரு­து­கிறேன்.

எவ­ரது உயி­ரையும் பலி­யெ­டுத்­ததன் பின்னர் அந்­நி­கழ்வு என்றும் மனதை விட்டும் அக­லாது. பயங்­க­ர­வா­தி­யா­னாலும் எங்­களால் கொல்­லப்­பட்ட அம்­ம­னித உயிர் குறித்த நினை­வுகள் எங்கள் உள்­ளத்­திலே பதிந்­தி­ருக்கும். அக்­காட்­சிகள் மனதில் ஊச­லா­டவே செய்யும். கன­வு­களில் தோன்றி பீதி­யூட்­டவும் செய்யும். நானும் இவற்றை அனு­ப­வித்­துள்ளேன். அத­னால்தான் நாம் இரா­ணுவ முகா­முக்­குள்ளே மத­வ­ழி­பாட்டு நிகழ்­வு­களை அடிக்­கடி மேற்­கொள்­கிறோம். சமயக் கிரி­யை­களை அனுஷ்­டித்து வரு­கிறோம். உள­வியல் ரீதி­யா­கவும் வீரர்­களை தயார்­ப­டுத்த வேண்டும். பொது­வாகச் சொல்லப் போனால் மேற்­கண்ட விட­யங்­களில் நாம் தேர்ச்­சியும் வெற்­றியும் கண்­டுள்ளோம். ஆயி­ரத்தில் ஓரி­ருவர் இதி­லி­ருந்து வேறு­ப­டலாம். ஒரு சிலர் வீடு சென்­றதும் மனை­வி­யுடன் மோதல்­களில் ஈடு­ப­டு­வ­து­முண்டு. நாம் எல்­லோரும் ஒரு வகையில் பாதிக்­கப்­பட்ட வகுப்­பி­ன­ரே­யாவர். எல்லா மனி­தர்­களும் அன்­றாட வாழ்வில் இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்­துக்­கொண்­டு­தா­னி­ருக்­கி­றார்கள். இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் அதே துன்­ப–­து­ய­ரங்­களும் இல்­லா­ம­லில்லை. இதனால் இருந்து நின்று ஒருவர் அல்­லது இருவர் வன்­மு­றை­களில் ஈடு­ப­டவும் கூடும். ஆனாலும் மிகவும் பண்­புகள் பேணி சமூ­கத்­திற்கு தலை­மைத்­துவம் வழங்கும் இரா­ணுவ வீரர்­க­ளையும் நாம் அறிவோம்.

Q இரா­ணுவம் உள்­ளிட்ட துறை­களால் எமது நாட்டு இரா­ணுவ வீரர்கள் மற்றும் அதி­கா­ரிகள் உன்­னத நிலை­க­ளுக்கு உயர்த்­தப்­பட்­டு­முள்­ளனர். அந்த கெள­ர­வமே படை வீரரின் தலைமேல் ஏற்­றப்­படும் சுமை­யாகி விடு­வ­து­முண்டு. இந்நிலையில் மேற்­படி நம்­பிக்­கை­யையும் மரி­யா­தை­யையும் எவ்­வாறு காப்­பாற்­று­வது?

இரா­ணுவ வீரர் எனும் மரி­யா­தையை எங்­க­ளுக்கு அளிக்­கும்­போது நாமும் அந்த மரி­யா­தையைக் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்கு தெரிந்­து­கொள்ள வேண்டும். இரா­ணுவ வீரர் ஒருவர் யாரோ ஒரு­வ­ரு­டைய திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன் அமர்ந்து உண்­ணா­வி­ரதம் இருந்து உயிர் துறக்க எத்­த­னிப்­பா­ராயின் அது அவ­ரது கெள­ர­வத்­திற்குப் பொருந்­தா­த­தொன்­றாகும். படை வீர­னுக்கும் கொலை­கா­ர­னுக்கும் இடையே வேறு­பா­டுண்டு. சண்டை மூண்டு கொண்­டி­ருக்­கும்­போது பெரும்­பா­லான வீரர்கள் மிகவும் சிறப்­பாக நடந்து கொண்­டுள்­ளனர். அதிலும் இரண்­டொ­ருவர் தவ­றி­ழைத்­தி­ருந்தால் அது குறித்து விசா­ரித்­த­றிந்து குற்றம் காணு­மி­டத்து தண்­டனை வழங்க வேண்டும். அதை­வி­டுத்து நாம் இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தற்­காக எல்­லா­வற்­றையும் ‘இரா­ணு­வத்­தினர்’ என்ற வச­னத்­திற்குள் புகுத்­திக்­கொள்­வது தவறு. இன்று இரா­ணுவ வீரர் என்­பது ஒரு புறத்தில் வியா­பாரப் பொரு­ளொன்­றா­கி­யுள்­ளது. மறு புறத்தில் அர­சியல் தேவைக்­கேற்ப பயன்­ப­டுத்தும் பொரு­ளா­க­வுள்­ளது.

Q உங்­க­ளது குடும்ப மற்றும் நண்பர் உற­வுகள் எவ்­வா­றுள்­ளன?

எனக்கு குடும்­பத்­துடன் மிகவும் நெருக்­க­மான உற­வுள்­ளது. எனது 19 ஆவது வயதில் இரா­ணு­வத்தில் இணைந்தேன். அப்­ப­டி­யி­ருந்தும் குடும்பம், நண்­பர்கள், உறவு எனும்­போது அதில் நான் முதன்­மை­யா­னவன். எனக்கு பாட­சாலை நண்­பர்கள் ஐவர். அன்று போல் இன்றும் அதே உற­வுதான் நீடிக்­கி­றது. ஐந்து ஆப்த நண்­பர்­க­ளாக நாம் இருந்தோம். நான் ‘மய்யா’ என்ற பெயரால் அழைக்­கப்­பட்டேன். மற்ற நண்­பர்கள் நால்­வரும், ‘படிக்­கமா’, ‘வன்­னியா’, ‘கரூ’, ‘வவுலா’ என்ற இடு­பெ­யர்­க­ளாலே அழைக்­கப்­பட்­டனர். இந்­நால்­வரும் உயர் மட்ட உத்­தி­யோ­கத்தில் உள்­ளனர். நாம் எப்­போதும் ஒன்­றா­கவே இருப்போம். சில சந்­தர்ப்­பங்­களில் என்னைத் திட்டித் திட்டி என்­னு­டனே இருப்பர். அவர்கள் எனக்கு வாக்­க­ளித்தும் இருக்­க­மாட்­டார்கள். ஆனாலும் நான் தேர்தல் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த போது, எனக்கு உணவு அனுப்­பு­வார்கள். எமது பிள்­ளை­க­ளுக்கு அத்­த­கைய நண்­பர்கள் எவரும் இல்லை. பெரும்­பா­லா­ன­வர்கள் குடும்பம், நண்­பர்­களை விட்டும் பிரிந்­து­முள்­ளனர். நான் அப்­ப­டி­யல்ல. எப்­போதும் குடும்பம், நண்­பர்கள் என்ற உற­வு­டனே இருந்து வரு­கிறேன்.

Q இறுதி யுத்­தத்தின் போது உங்­க­ளது குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பு என்ன?

நாட்டில் யுத்தம் ஒன்று நடந்து கொண்­டி­ருக்கும் போது இரா­ணு­வத்­திலும் முக்­கிய பதவி நிலைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. முதன்­மை­யா­னவர், இரா­ணுவத் தள­பதி, அதற்­க­டுத்த நிலையில் புல­னாய்­வுத்­துறைப் பணிப்­பாளர் மற்றும் திட்­ட­மிடல் பணிப்­பாளர். இவர்­க­ளை­ய­டுத்து அமு­லாக்­கற்­ப­ணிப்­பாளர். இவர்­க­ளுக்குப் புறம்­பாக மற்றோர் அதி­காரி. விசேட அனு­பவம் மற்றும் இய­லுமை கார­ண­மாக முக்­கி­ய­மாக மாற்­றங்கள் செய்­யவும் வாய்ப்­புள்­ளது. எவ்­வா­றி­ருந்த போதிலும் யுத்­தத்­திற்­கான திட்­டங்கள் வகுக்­கும்­போது முதலில் புல­னாய்­வுத்­துறைப் பணிப்­பாளர் தக­வல்கள் பெற்­றுக்­கொண்டு அவற்றை புல­னாய்­வு­க­ளாகச் சமர்ப்­பிப்பார். அந்த புல­னாய்வுத் தக­வல்கள் திட்­ட­மிடல் பணிப்­பா­ள­ரிடம் சென்­ற­டை­கின்­றன. இதனை அமு­லாக்கல் பணிப்­பாளர் செயற்­ப­டுத்­துவார்.

நான் இறுதி யுத்­தத்­தின்­போது திட்­ட­மிடல் பணிப்­பாளர் பொறுப்­பி­லேயே இருந்தேன். புல­னாய்வுப் பணிப்­பா­ள­ராக அமல் கரு­ணா­சே­கர பணியில் இருந்தார். அமுல்­ப­டுத்தல் பணிப்­பாளர் தரத்தில் உதய பெரேரா அமர்த்­தப்­பட்­டி­ருந்தார். நாம் மூவரும் ஒரே குழுவில் இருந்து படித்­த­வர்­களே. இதுவோர் அபூர்வ நிகழ்­வாகும். அத்­துடன் நாம் மூவரும் நல்ல நண்­பர்­க­ளாவோம். இந்­நி­லையில் ஜெனரல் சரத் பொன்­சேகா எங்கள் மூவரில் ஒரு­வ­ருக்கு தொலை­பே­சியில் தொடர்பு கொள்ளும் அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில் நாம் மூவரும் ஓர் அறையில் ஒன்­றா­கவே இருப்போம். நாம் ஒரு குழு­வா­கவே இயங்­கினோம். இரவும் பகலும் நாம் ஒன்­றா­கவே பணி­யாற்­றினோம். அது யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­த­ள­பதி, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மற்றும் ஜனா­தி­பதி ஆகிய முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் இல­கு­வாக அமைந்­தது.

2010 இல் சரத் பொன்­சேகா அர­சி­யலில் பிர­வே­சித்தார். நான் திட்­ட­மிடல் பணிப்­பாளர் என்­பதால் சரத் பொன்சேகாவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வராத நாட்களே இல்லையென்று கூறலாம். ஆனாலும் அவர் அன்று அரசியலில் நுழைந்தபோதிலும் நான் அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை இராணுவத்திற்குள் புகுத்தவுமில்லை. ஆனால் நாம் இராணுவத்திற்குள் அரசியலை கொண்டு வருவோமோ என்ற பீதியிலேயே அப்போதைய ஆட்சி நிர்வாகம் அஞ்சிக்கொண்டிருந்தது. அதனால் நான் உட்பட சிலரை இராணுவத்திலிருந்து வெளியேற்றினர். மீண்டும் அத்தகையதொரு நிலை உருவாகாதிருப்பது நல்லது. பின்னர் நான் அரசியலுக்கு வந்தபோது பெரும்பாலானோர் வாழ்த்துத் தெரிவித்து குறுந்தகவல் அனுப்பினர். அவர்களுள் இராணுவத்தைச் சேர்ந்தோருக்கு நான் அனுப்பிய பதில் குறுந்தகவலில் ‘நன்றி, தயவு செய்து இராணுவத்தில் அரசியல் வேண்டாம்’ என்றே அவ்வசனங்கள் அமைந்திருந்தன.

Q இறுதியில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரானீர்கள். அது குறித்து….?

நாளை நான் உயர்ந்தாலும் அது எனக்கு போனஸ்; ஜனாதிபதியானாலும் அதுவும் எனக்கு போனஸ். நான் இராணுவ வீரன் என்ற வகையில் அந்தத் துறையில் அடைய வேண்டிய உச்சஸ்தானத்தையே தொட்டுவிட்டேன். அது தான் இராணுவத்தளபதி பதவியாகும். அதனைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லாத நிலையில் நான் அரசியலில் அடியெடுத்து வைத்தேன். நான் அதிகார ஆசையில் வரவில்லை. யாரும் ஜனாதிபதியாக வருவர். சில்வா ஜனாதிபதியானாலும் ஒன்று. பெரேரா ஜனாதிபதியானாலும் ஒன்று.

ஆனாலும் அதிகாரத்தில் இருப்பவருக்கு கொள்கை ரீதியிலான அழுத்தம் கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். நான் நாளையும் அரசியலிலே தான் இருப்பேன். எவ்வாறு செயலாற்றுவேன் என்பது வெகு விரைவில் தெரியவரும். ஆனாலும் நாட்டின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் முன்னாள் இராணுவத் தளபதி. நான் மரணித்தாலும் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பி வைப்பார்கள். மரியாதை ஊர்வலம் நடத்துவர். அத்தகைய எதனையும் நான் விரும்புவதில்லை. நான் மரணித்த போதோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதோ மக்கள் நான் செய்த காரியங்களை கெளரவிக்கும் வகையில் எனது வீட்டுக்கு வர வேண்டும். அதற்காகவே தான் நான் செயற்படுகிறேன்.-Vidivelli

  • நன்றி–அனித்தா பத்திரிகை
  • தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.