பேருவளை மாணவர் மரணம்: கைதான மாணவர் விளக்கமறியலில்

0 820

பேரு­வளை  அல்–­ஹு­மை­ஸரா  தேசிய  பாட­சா­லையில்  இரு மாண­வர்­க­ளுக்­கி­டையில் இடம் பெற்ற  மோதலின்  போது மாணவன் ஒருவர்  மர­ண­மான  சம்­பவம்  தொடர்பில்  பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட சம்­பந்­தப்­பட்ட மாணவன் களுத்­துறை மேல­திக நீதிவான் திரு­மதி என்.நாண­யக்­கார  முன்­னி­லையில் ஆஜர்­செய்த போது  டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மாக்­கொல சிறுவர் இல்­லத்தில் தடுத்து வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

இந்த மாணவர் ஏற்­க­னவே களுத்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு  பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். சம்­ப­வத்தில் காய­முற்ற மாணவர் மர­ண­மா­ன­தை­ய­டுத்து மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.