விடை காண முடியாத வினாக்கள்

0 1,103

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தெற்கின் சிங்­கள பௌத்­தர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாக்­க­ளித்­தி­ருந்த அதே நேரம் வடக்கின் தமி­ழர்­களும் கிழக்கின் முஸ்­லிம்­களும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இலங்­கையில் மூன்று இனங்­களும் இனம், மதம் என்ற அடிப்­ப­டையில் பிரிந்து குழுக்­க­ளாகச் செயற்­பட்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தனை மேற்­படி தேர்தல் முடி­வு­களின் மூல­மாக அறிந்­து­கொள்­ள­மு­டி­கின்­றது.

குறித்த போட்­டியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்­த­வர்­களைத் தோற்­க­டித்து தமது அர­சியல் ரீதி­யி­லான வெற்­றி­யினை சிங்­கள பௌத்த மக்கள் அடைந்­து­கொண்­டனர். இதனை வேறு வித­மாகக் கூறு­வ­தானால், தமிழ், முஸ்­லிம்கள் சிங்­கள பௌத்­த­ரான சஜித் பிரே­ம­தா­சவை வெற்­றி­ய­டையச் செய்­வ­தற்­காக முயற்­சித்­த­துடன் சிங்­கள பௌத்­தர்கள் அந்த முயற்­சியைச் தோல்­வி­ய­டையச் செய்து இன்­னு­மொரு பௌத்­த­ரான கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை வெற்­றி­ய­டையச் செய்­தி­ருக்­கின்­றனர் என்­ப­தா­கவும் குறிப்­பி­டலாம். இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் ஊடாக இலங்­கையின் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளு­டைய அர­சி­யலின் போக்­கினை தெளி­வாகப் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

தமிழ் முஸ்­லிம்கள் மத்­தியில் தமது எதிர்­காலம் குறித்த அச்ச நிலை காணப்­பட்­டது என்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். அத்­துடன் சிங்­கள பௌத்­தர்கள் மத்­தி­யிலும் தமது இனம், மதம் என்­ப­வற்றின் இருப்­பினை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட அச்ச நிலைமை இருந்­தி­ருக்­கின்­றது என்­பது இந்தத் தேர்தல் முடி­வுகள் ஊடாகக் கண்­டு­கொள்ள முடி­கின்­றது.

தமிழர், முஸ்­லிம்கள் மத்­தி­யி­லி­ருந்த அச்ச உணர்வு என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யு­மான விட­ய­மான போதிலும் சிங்­கள பௌத்­தர்கள் தமக்குள் ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்ற பயம் என்­பது எந்­த­வ­கை­யிலும் நியாயம் கற்­பிக்க முடி­யாத ஒன்­றாகக் குறிப்­பி­ட­வேண்டும். தேர்தல் நடை­பெறும் காலப்­ப­கு­தி­யா­கும்­போது புலிப்­ப­யங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு பத்து வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அத்­துடன் புலிகள் மீண்டும் தலை­தூக்­கலாம் என்­ப­தாக கதைகள் கூறப்­பட்ட போதிலும் அவைகள் உண்­மை­யா­ன­தாகக் கருத முடி­வ­தில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் என்­பது எந்த வித­மான பாகு­பா­டு­க­ளு­மின்றி நாட்டின் அனைத்து மக்­க­ளையும் பாதிப்­புக்கு உள்­ளா­வ­தற்குக் கார­ண­மாக அமைந்த போதிலும் குறித்த செயற்­பா­டுகள் அனைத்­துமே அடி­யோடு முற்­று­மு­ழு­தா­கவே முறி­ய­டிக்­கப்­பட்­டன. அத்­துடன் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையக் கூடிய எந்த வித­மான செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட அனைத்து அபேட்­ச­கர்­க­ளுக்கும் வடக்கு –கிழக்கு உட்­பட நாட்டின் எந்தப் பகு­திக்கும் சென்று மரண பய­மின்றி தமது தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டக்­கூ­டிய நிலை காணப்­பட்­டது. புதிய ஜனா­தி­பதி பத­வியைப் பெறுப்­பேற்­றதும் தனது பய­ணங்­க­ளின்­போது பாதை­களை மூடு­வ­தில்லை எனவும் இரண்டே பாது­காப்பு வாக­னங்கள் மாத்­தி­ரமே தனது பய­ணங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் என்ற அடிப்­ப­டையில் தனது கொள்­கை­களை அமைத்­துக்­கொண்­ட­தா­னது நாட்டின் பாது­காப்பு சிறந்த நிலையில் இருக்­கின்­றது என்­ப­தற்­கான எடுத்­துக்­காட்­டாகும் என்­ப­துடன். நாடு பாது­காப்­பான நிலையில் இருக்­கின்­றது என்­ப­தனை ஜனா­தி­பதி மிகவும் தெளி­வா­கவே அறிந்­தி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே அவ்­வா­றான முடி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

குழுக்­க­ளாக செயற்­படல்

ஜன­நா­யக அர­சி­ய­ல­மைப்­பொன்றில் எந்த ஒரு சமூகக் குழு­வி­னரும் நாட்டு மக்­களின் நலன்­களை நோக்­காகக் கொண்டு கூட்­டாகத் தேர்தல் நட­வ­டிக்­கை­களில் செயற்­ப­டு­வ­தற்­கான சுதந்­திரம் காணப்­ப­டு­கின்­றது. இந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது வடக்கின் தமி­ழர்கள் நாட்டைப் பிரித்­தாளும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­கின்ற தமிழர் ஒரு­வ­ருக்கு தமது வாக்­கு­களை வழங்­க­வில்லை. மாறாக, அவர்கள் சிங்­கள பௌத்­த­ரான ஒரு­வ­ருக்கே தமது வாக்­கு­களை வழங்கி யிருக்­கின்­றனர். முஸ்­லிம்­களும் நாட்டைப் பிரித்­தாளும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­கின்ற முஸ்லிம் ஒரு­வ­ருக்­காக தமது வாக்­கு­களை வழங்­க­வில்லை. மாறாக, அவர்­களும் ஒரு சிங்­கள பௌத்­த­ரான சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே தமது வாக்­கு­களை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். இலங்­கையைப் பொறுத்­த­வரை தமிழ் அல்­லது முஸ்லிம் இனத்­தவர் தேர்­தலில் போட்­டி­யிட்டு ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கின்ற வாய்ப்பு காணப்­ப­டு­வ­தற்­கில்லை. தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற சிங்­கள அபேட்­ச­கர்­களில் தமது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கத்­தக்க அடிப்­ப­டையில் தமக்குச் சாத­மாக அமைவார் என எதிர்­பார்க்­கத்­தக்க ஒரு­வ­ருக்கு தமது ஆத­ர­வினை வழங்­கு­வது மாத்­தி­ரமே அவர்­களால் செய்ய முடி­யு­மான ஒன்­றாக இருக்­கின்­றது. இதனை சட்­டத்­திற்கு முர­ணான ஒன்­றா­கவோ ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான செயற்­பா­டா­கவோ ஒரு போதுமே நோக்க முடி­யாது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பொது அபேட்­சகர் ஒரு­வரை நிறுத்­து­வதன் ஊடாக ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினை தோல்­வி­ய­டையச் செய்­ய­வேண்டும் என்ற முன்­வொ­ழி­வொன்று பௌத்­தர்கள் மத்­தியில் நன்­ம­திப்­பினைப் பெற்­றி­ருந்த மாது­லு­வாவே சோபித தேர­ரினால் முன்­வைக்­கப்­பட்­டது.

அவ­ரது மேற்­படி முன்­மொ­ழி­வா­னது பௌத்த தேரர்­களின் எதிர்ப்­புக்கு உள்­ளான ஒன்­றா­கவும் அமை­ய­வில்லை. அந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தோல்­வியில் பாரிய தாக்கம் செலுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது. அன்­றைய தேர்­தலில் தமிழ் மற்றும் முஸ்­லிம்கள் பிரி­வினைவாதத்­தினை நோக்­காகக் கொண்டு பொது அபேட்­ச­க­ருக்கு தமது வாக்­கு­களை வழங்­க­வில்லை. அவர்­க­ளது நலன்­களை மதிக்­கின்ற ஒரு ஆட்­சி­யினை நோக்­காகக் கொண்டே அவர்கள் வாக்­க­ளித்­தார்கள்.

நல்­லாட்சி அர­சாங்கம் என்­பது தோல்வி கண்­டதும் முட்டாள் தன­மா­ன­து­மான ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது உண்மை என்ற போதிலும் எதிர்க்­கட்­சிகள் கூறு­வது போன்று பாது­காப்புப் படை­யி­னரை மின்­சாரக் கதி­ரைக்கு அனுப்­பு­கின்ற செயற்­பா­டு­களோ அல்­லது பிரி­வி­னை­வாதச் செயற்­பா­டு­களோ அவர்­க­ளது ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெ­ற­வில்லை. தமிழ் –முஸ்லிம் மக்­களை அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தாத அமைப்பில் மிரு­து­வான அடிப்­ப­டை­யி­லான ஆட்­சியே மேற்­கொள்­ளப்­பட்­டது. 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­காது சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமது வாக்­கு­களை வழங்­கி­யது சஜித் பிரே­ம­தாச குறித்த இரண்டு இனங்­க­ளி­னதும் பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைப்­ப­தாக வாக்­கு­று­தி­யொன்றை வழங்­கி­யி­ருந்தார் என்ற கார­ணத்­துக்­கா­கவோ அல்­லது அதற்­காக அவர்­க­ளுடன் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்டார் என்­ப­தற்­கா­கவோ அல்ல, குறைந்­தது தாம் அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டாத அமைப்பில் மிரு­து­வான ஆட்­சி­யொன்றை உரு­வாக்­கிக்­கொள்­கின்ற நோக்­கத்­தி­லேயே அவர்கள் தமது ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்­காக முன்­வந்­தனர்.

தீவி­ர­வாதம்

மக்­க­ளது எண்­ணப்­பா­டு­களில் தீவி­ர­வாதம் என்­பது அதிக தாக்கம் செலுத்தும் ஒன்­றாக இருக்­கின்ற கார­ணத்­தினால் இலங்­கையில் இருக்­கின்ற ஏதா­வது ஒரு இனத்தை தீவி­ர­வாத இனத்­த­வர்கள் என்­ப­தாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யுமா என்ற கேள்வி இங்கு ஆரா­யப்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.

தீவி­ர­வாதம் என்­பது சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்­களின் மூல­மா­கவும் ஏதே ஒரு சந்­தர்ப்­பத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­தாக குறிப்­பிட முடியும். அத்­துடன் அது போன்ற ஒன்று மலை­நாட்டின் தோட்டத் தொழி­லா­ளர்கள் மத்­தி­யி­லி­ருந்து மாத்­தி­ரம்தான் இன்னும் உரு­வா­க­வில்லை.

தெற்கின் சிங்­கள இன இளை­ஞர்கள் மூல­மாக இரண்டு கல­வ­ரங்கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. 71 ஆம் ஆண்டு கல­வரம் மிகக் குறு­கிய காலப்­ப­கு­தியில் முறி­ய­டிக்­கப்­பட்ட ஒன்­றாகக் குறிப்­பி­டலாம். ஆனால் அதன்னர் 16 ஆண்­டுகள் கழிந்­தபின் ஏற்­பட்ட ஜே.வீ.பீ கல­வ­ர­மா­னது 27 மாதங்கள் வரை நீடித்­தது என்­ப­துடன் கல­வ­ரக்­கா­ரர்கள் ஆட்­சி­யினைக் கைப்­பற்­றி­வி­டு­வார்கள் என்ற நிலை அண்­மிக்கும் தரு­ணத்­தி­லேயே அந்தக் கல­வரம் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு கல­வ­ரங்­க­ளு­டனும் விகா­ரை­க­ளுக்கு நெருங்­கிய தொடர்­புகள் இருந்­த­துடன் கல­வ­ரக்­கா­ரர்­களின் ஆயு­தங்­களை மறைத்து வைக்கும் தளங்­க­ளாக விகா­ரைகள் காணப்­பட்­டன. 71 ஆம் ஆண்டு கல­வ­ரத்தின் போது 500 பிக்­குகள் அளவில் கைது­செய்­யப்­பட்­ட­துடன் இரண்­டா­வது கல­வ­ரத்தின் போது குறித்த கல­வ­ரத்­துடன் தொடர்­பு­பட்­டனர் என்ற அடிப்­ப­டையில் 500 க்கும் அதி­க­மான பிக்­குகள் கொல்­லப்­பட்­டனர். கல­வ­ரக்­கா­ரர்­களும் அவர்­களை எதிர்த்த பிக்­கு­களை கொலை­செய்­தனர். தெற்கில் ஜே.வீ.பீ கல­வ­ரங்­களில் பௌத்த பிக்­கு­களில் ஒரு சிலர் ஈடு­பட்­டார்கள் என்­ப­தற்­காக பௌத்த மதத்தை தீவி­ர­வாத அடிப்­ப­டை­யி­லான ஒரு அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது என்­ப­துடன் சிங்­கள இளை­ஞர்கள் இரண்டு கல­வ­ரங்­களை உரு­வாக்­கினர் என்­ப­தற்­காக சிங்­கள இனத்தை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய இன­மா­கவும் கரு­த­மு­டி­யாது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் தோல்­வியின் பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சியல் தலை­மை­ய­க­மாக அமைந்த நாரஹேன்­பிட்ட அப­ய­ரா­ம­யி­லேயே இரண்­டா­வது கல­வ­ரத்தின் ஆரம்­பப்­புள்­ளி­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற 1987 ஆம் ஆண்டு தடை­செய்­யப்­பட்ட மே தின கூட்­ட­மா­னது ஜேவீபீ யினரால் மீண்டும் நாடாத்­தப்­பட்­டது. மாது­லு­வாவே சோபித தேரர் மற்றும் முருத்­தெட்­டு­வத்தே ஆனந்த தேரர் ஆகி­யோரே அந்த தடை­செய்­யப்­பட்ட மே தினக் கூட்­டத்தின் பிர­தான பேச்­சா­ளர்­க­ளாக இருந்­தனர். அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தின் விளை­வாக பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் பணி­யா­ள­ரான லெஸ்லி ஆனந்த லால் என்­ப­வரும் ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாண­வ­ரான கித­சிறி மேவன் ரண­வக என்­ப­வரும் உயி­ரி­ழந்­தனர்.

அந்தச் சந்­தர்ப்­பத்தில் மேற்­படி இரண்டு பிக்­கு­களும் ஜேவீபீ க்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள் என்­ப­தற்­காக அவர்கள் இரு­வரும் தீவி­ர­வா­தி­க­ளாகக் கரு­தப்­ப­ட­வில்லை.

மொழித் தீவி­ர­வாதம்

இது இலங்­கையின் தமிழ் மக்­க­ளுக்கும் பொது­வா­ன­தாகும். இலங்கைத் தமிழ் மக்­களின் கதை­யா­னது மிகவும் வேதனை தரக்­கூ­டிய ஒன்­றாகும் என்­ப­தாகக் குறிப்­பி­டலாம். தமிழ் ஈழம் என்ற ஒன்றைப் பெற்­றுக்­கொள்­வது என்ற அடிப்­படை யிலான சிந்­த­னையை தமிழ் அர­சியல் கட்­சிகள் பெற்றுக் கொள்­வ­தற்கு அன்­றைய சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களே கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றனர். 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட போதிலும் நாட்டின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் ஆங்­கில மொழி­யி­லி­லேயே நடை­பெற்­று­வந்­தன. சிங்­கள, தமிழ் மொழி­களைப் பேசும் மக்­க­ளுக்கு தபால், தந்­திகள் கூட ஆங்­கில மொழி­யி­லேயே கிடைக்­கப்­பெற்­றன. ஆங்­கி­ல­மொழி அறி­யாத தமிழ், சிங்­கள மக்கள் தமக்குக் கிடைக்கும் தபால், தந்­தி­களை வாசித்­த­றிந்து கொள்­வ­தற்­காக ஆங்­கிலம் தெரிந்த ஒரு­வரை நாடிச் செல்­ல­வேண்டி யிருந்­தது. ஆக்­கி­ர­மிப்­புக்கு உள்­ளா­கி­யி­ருந்த நீண்ட காலப்­ப­கு­தியில் தாய் மொழிக்­கி­ருந்த இரண்டாம் தர மதிப்பை இல்­லா­ம­லாக்கி தாய்­மொ­ழிக்கு உரிய மதிப்­பினை வழங்­கு­வது குறித்த தேவைப்­பாடு சுதந்­திரம் பெற்­றது முதலே கலந்­து­ரை­யா­டப்­பட்­டு­வந்­தது. அதன் அடிப்­ப­டையில் அரச நட­வ­டிக்­கைகள் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் இடம்­பெ­ற­வேண்டும் என்­ப­தாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு வந்­தது. சிங்­களம், தமிழ் ஆகிய இரண்டு தாய்­மொ­ழி­க­ளுக்கும் அரச கரு­ம­மொழி என்ற அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தா­கவே 1956 ஆம் ஆண்­டு­வரை அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கருத்­தாக இருந்­து­வந்­தது.

சிங்­களம், தமிழ் ஆகிய இரண்டு தாய்­மொ­ழி­க­ளுக்குப் பதி­லாக சிங்­க­ள­மொ­ழிக்கு மாத்­தி­ரமே அரச கரு­ம­மொழி என்ற அந்­தஸ்த்து வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லான மொழித்­தீ­வி­ர­வாதம் 56 ஆம் ஆண்டு புரட்­சிக்குக் கிட்­டிய காலப்­ப­குதில் தோன்­றி­யது. இந்தப் பற்­றி­யெ­ரியும் மொழித்­தீ­வி­ர­வா­தத்­திற்கு எண்ணெய் ஊற்­றிய தலை­வ­ராக எஸ்.டளியு.ஆர்.டீ பண்­டா­ர­நா­யக்க அவர்­களைக் குறிப்­பி­டலாம். தனக்கு அதி­காரம் கிடைக்­கப்­பெறும் பட்­சத்தில் அடுத்த 24 மணித்­தி­யா­லங்­களில் சிங்­கள மொழியை மாத்­திரம் அரச கரு­ம­மொ­ழி­யாக மாற்­று­வ­தாக அவர் வாக்­கு­று­தி­ய­ளித்தார். அந்த வாக்­கு­று­தி­யுடன் சிங்­களம் மாத்­திரம் என்ற விடயம் பாரிய தீப்­பி­ழம்­பாக மாற்­றம்­பெற்று நாட்டின் பல பக்­கங்­க­ளுக்கும் பர­வத்­து­வங்­கி­யது. அத்­துடன் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மாத்­தி­ர­மன்றி ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குக்­கூட அது­வரை காலமும் அவர்­களால் பின்­பற்­றப்­பட்டு வந்த மொழிக் கொள்­கையைக் கைவிட்டு சிங்­களம் மாத்­திரம் என்ற கொள்­கையை பின்­பற்­றி­யாக வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது.

அப்­போ­தைய காலப்­ப­கு­தி­களில் இரண்டு தமிழ் அர­சியல் கட்­சிகள் காணப்­பட்­டாலும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் அங்­கத்­துவம் வகித்­தனர். அந்த அடிப்­ப­டையில் இரண்டு கட்­சி­க­ளி­னதும் பிர­தான செயற்­கு­ழுக்­களில் தமிழ் அங்­கத்­த­வர்கள் இருந்­து­வந்­தனர். சிங்­களம் மாத்­திரம் என்ற கொள்கை அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தனைத் தொடர்ந்து இரண்டு கட்­சி­க­ளி­னதும் தமிழ் அங்­கத்­த­வர்கள் கட்­சி­களை விட்டுச் சென்­றனர். இதன் விளை­வாக பிர­தான இரண்டு கட்­சி­களும் தமிழ் அங்­கத்­துவம் அற்ற கட்­சி­க­ளா­கி­விட்­டன.

பிரச்­சி­னைக்குள் தள்­ளப்­படல்

தாம் அதி­கா­ரத்­துக்கு வரு­மி­டத்து 24 மணித்­தி­யா­லங்­களில் சிங்­கள மொழியை மாத்­திரம் அரச மொழி­யாக்­குவோம் என்று உறு­தி­ய­ளித்து 1956 ஆம் ஆண்டு அதி­கா­ரத்­தினைக் கைப்­பற்­றிய பண்­டா­ர­நா­யக்க சிங்­கள மொழிக்கு பிர­தான இடத்தை வழங்­கு­வ­துடன் ஆகக் குறைந்­தது தமிழ் மக்கள் செறி­வாக வாழ்­கின்ற வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளி­லா­வது தமிழ்­மொ­ழியில் தமது அரச பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தை வழங்­கி­யி­ருப்­பா­ராயின் இலங்­கையின் நிலை மாத்­தி­ர­மன்றி தமிழ் மக்­களின் நிலை­கூட சிறந்­த­தாக அமைந்­தி­ருக்க வாய்­பி­ருந்­தது.

உலகில் மிகப்­ப­ழைமை வாய்ந்த மொழி­களில் தமிழ் மொழியும் ஒன்று என்­ப­துடன் இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு தமிழ் மொழியின் மீது இருக்கும் பற்று சிங்­கள மக்­க­ளுக்கு சிங்­கள மொழியில் இருக்கும் பற்­றி­னை­விட அதிகம் எனலாம். தமிழ் மக்கள் தமது மதத்தை விட மொழிக்கே முன்­னு­ரிமை வழங்­கு­ப­வர்­க­ளாக இருக்­கின்­றனர். நான் ராவய பத்­தி­ரி­கையை விநி­யோ­கிக்கும் ஒரு­வ­ருடன் வாகனமொன்றில் பய­ணிக்­கும்­போது அற்­பு­த­மான கதை ஒன்றை என்­னிடம் கூறினார். அவர் ஒரு சிங்­கள இனத்­தவர் என்ற போதிலும் 1983 ஆம் ஆண்டு ஜுலைக் கல­வரம் வரையில் மட்­டக்­க­ளப்பு பகு­தி­யி­லேயே வாழ்ந்­தி­ருக்­கின்றார். மட்­டக்­க­ளப்பு பகு­திக்­கான தமிழ்ப் பத்­தி­ரிகை விநி­யோ­கஸ்­த­ராக அவரே இருந்­தி­ருக்­கின்றார். இரவு நேரங்­களில் பத்­தி­ரி­கை­களை விநி­யோ­கிக்கும் போது சிங்­களக் கடை­க­ளுக்­கான பத்­தி­ரி­கை­களை அந்­தந்தக் கடை­களின் அரு­கா­மையில் சென்று பத்­தி­ரிகைக் கட்­டு­களை கடைக்­குள்ளே வீசி­வி­டு­வ­தற்கு முடி­யு­மான நிலை இருந்த போதிலும் தமிழ் பகு­தி­களில் அவ்­வாறு செய்ய முடி­வ­தில்லை என்­ப­தா­கவும், கடை உரி­மை­யாளர் நித்­தி­ரையில் இருந்தால் அவர்­களை எழுப்பி பத்­தி­ரிகைக் கட்­டு­களை அவர்­க­ளது கைக­ளி­லேயே கொடுக்­க­வேண்டும் என்­ப­தா­கவும் பத்­தி­ரி­கையை நிலத்தில் வீசு­வ­தனை அவர்கள் மொழிக்குச் செய்­கின்ற அகௌ­ர­வ­மாகக் கரு­து­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ் மொழி முற்று முழு­தாகப் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தா­னது தமி­ழர்கள் தன்­மானம் இழந்­தது போன்ற ஒன்­றா­கவே அவர்கள் கரு­தி­யி­ருப்பர். இந்த உரி­மையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவர்கள் மேற்­கொண்ட முயற்­சி­களின் அளவும் அதற்­காக அவர்கள் செல­விட்ட சக்­தியின் அளவும் மிக விசா­ல­மா­னது.

அதற்­காக பண்­டா­ர­நா­யக்­க­வுடன் உடன்­ப­­டிக்கை ஒன்றும் மேற்­கொள்­ளப்­பட்­டது. எனினும் அப்­போ­தைய மொழிப் பற்­றா­ளர்­களின் எதிர்ப்பின் விளை­வாக அவ்­வு­டன்­ப­டிக்­கையைக் கிழித்­தெ­றியும் நிலை பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எற்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு ஜன­வரி 01 ஆம் திகதி முதல் சிங்­கள மொழி மாத்­திரம் அரச மொழி­யாக நாடு முழு­வதும் அமுல்­ப­டுத்­தப்­பட்ட கொள்­கைக்கு எதி­ராக பெடரல் கட்சி தொட­ரான சத்­தி­யாக்­கி­ரகம் ஒன்றை மேற்­கொண்­டது. மிக­வுமே அமை­தி­யான முறையில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த எதிர்ப்பின் விளை­வாக வடக்கு, கிழக்கு பகு­தி­களில் அரச பணி முற்­றாக வீழ்ச்­சி­கண்­டது. 50 நாட்­க­ளாகத் தொடர்ந்த இந்த சத்­தி­யாக்­கி­ர­கத்­தினை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக 4 கோரிக்­கைகள் அவர்­களால் முன்­வைக்­கப்­பட்­டன. அவைகள் வரு­மாறு.

1.தமிழ்­மொழி வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களின் அரச கரும மொழி­யாக அமைய வேண்டும்.

2.அந்த மொழி­யா­னது குறித்த இரண்டு மாகா­ணங்­க­ளி­னதும் நீதி­மன்ற மொழி­யா­கவும் அமை­ய­வேண்டும்

3.சிங்­க­ள­மொழிக் கொள்­கையின் கார­ண­மாக அரச சேவையில் இருக்­கின்ற தமிழ் மக்கள் முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும்.

4. வடக்கு –கிழக்கு மாகாணம் தவிர்ந்த பகு­தி­களில் வசிக்­கின்ற தமிழ் மக்­க­ளி­னது மொழி உரி­மைகள் குறித்து விளக்கம் தரப்­ப­ட­வேண்டும்.

ஈழம் என்­ப­தற்குள் தள்­ளப்­படல்

அவர்கள் அன்று முன்­வைத்த இந்தக் கோரிக்­கை­களில் பிரி­வினை வாதத்தின் நிழல் கூட இருப்­ப­தாகக் கரு­த­மு­டி­யாது. மிக­வுமே எளி­மை­யான நிலையில் இருந்த இந்தப் பிரச்­சி­னையை அப்­போதே தீர்த்­து­வைப்­ப­தான முயற்­சிகள் மேற்­கொண்­டி­ருக்கப் பட­வேண்டும். ஆனால் அதற்குப் பதி­லாக சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அவ­ச­ர­காலச் சட்­டத்­தினை அமுல்­ப­டுத்தி முப்­ப­டை­யி­னரை வடக்கு – கிழக்கு பிர­தே­சங்­க­ளுக்கு அனுப்­பி­வைத்தார். பெடரல் கட்­சியின் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், செனட் சபை உறுப்­பி­னர்கள் மற்றும் அந்தக் கட்­சியின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் என்போர் கைது செய்­யப்­பட்டு பனா­கொட இரா­ணுவ முகாமில் 170 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டனர்.

இலங்­கையில் மொழி குறித்து கையா­ளப்­பட்ட கொள்­கை­யா­னது தமிழ் மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மன்றி சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் பாத­க­மான பிர­தி­ப­லன்­களை உரு­வாக்­கு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. சிங்­கப்­பூரில் அரச கரும மொழி­யாக நான்கு மொழிகள் காணப்­ப­டு­கின்­றன. வட ஆபி­ரிக்­காவில் 11 அரச கரும மொழிகள் காணப்­ப­டு­கின்­றன. சுவிட்­சர்­லாந்தில் 4 மொழிகள் காணப்­ப­டு­வ­துடன் அந்த நாட்டில் ரோமனேஷ் எனும் மொழியைப் பேசுவோர் மொத்த சனத்­தொ­கையில் 1 வீத­மா­ன­வர்­களே காணப்­ப­டு­கின்­றனர். எனினும் 1938 முதல் அந்த மொழி கூட ஒரு அரச கரும மொழி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் சிங்­களம் மாத்­திரம் என்ற கொள்கை (அதன் பின்னர் தமிழ் மாண­வர்­க­ளுக்கு மாத்­திரம் என்ற அடிப்­ப­டை­யி­லான பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பிர­வே­சிப்­ப­தற்­கான தரப்­ப­டுத்தல் கொள்கை) ஈழம் என்பதற்குள் தள்ளப்படுவதற்குக் காரணமாக அமைந்ததுடன் சிங்கள இளைஞர்கள் ஒரு மொழி மாத்திரம் என்ற வட்டத்துக்குள் அடைபட்டதால் பல மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்பிழந்து அவர்களது முன்னேற்றங்கள் கூட தடைப்படுவதாக அமைந்துவிட்டன.

சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இனவாதக் கொள்கைகள் காரணமாகவும், ஈழம் எனும் கொள்கையை ஏற்ற தமிழ் தலைவர்கள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கும் இலங்கை நாட்டுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்.ரிரி.ஈ போன்ற பயங்கரமான இனவாத இயக்கங்கள் தலைதூக்குவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது.

எல்.ரிரிஈ நாசகாரமானதாக அமைந்தது சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த இயக்கத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களது தொகை மிக அதிகம் என்பதுடன் தமிழ்த் தலைவர்களில் 99 வீதமானவர்கள் கொல்லப்பட்டதும் அந்த இயக்கத்தின் மூலமாகவன்றி பாதுகாப்புப் படையினர் மூலமாகவல்ல. எல்.ரிரி.ஈ இயக்கமானது தமிழ்ச் சமூகத்துக்கு மிகப் பாரிய அளவிலான கெடுதல்களை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் யுத்தத்தின் மூலமாக அந்த இயக்கம் தோல்வியடையச் செய்யப்பட்டதன் பின் தமிழ்ச் சமூகம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நோக்கப்படாமல் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுவ தானது நாட்டை இன்னும் பின்னோக்கி நகர்த்துவதாக அமையுமே தவிர அது நாட்டுக்கு நலன் சேர்ப்பதாக அமைந்துவிடாது.

நாட்டின் முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் இதையே கூற முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது தீவிரப்போக்கான ஒரு இளைஞர் குழுவின் நாசகாரச் செயல் என்பதுடன் அது முஸ்லிம் மக்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற ஒன்றாகக் கருதிவிட முடியாது.

துண்டுகளாகப் பிரிந்திருக்கின்ற தேசிய ஒற்றுமையினை ஒன்றுபடுத்துவதன் ஊடாக சமூகக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதானது தீர்க்கப்படவேண்டிய நாட்டின் பிரச்சினைகளில் பிரதான இடத்தைப் பெறுகின்ற பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற எந்த முயற்சியுமே வெற்றியளிக்கப் போவதில்லை.

2019 ஆம் ஆண்டு மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களிடம் இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மற்றைய அபேட்சகர்களிடம் கூட இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் இருக்கவில்லை.-Vidivelli

 

  • விக்டர் ஐவன்
    தமிழில்: ராஃபி சரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.