சமூக பொறுப்பின் தோல்வி

0 1,155

எந்­த­வொரு நபரும் நிம்­ம­தி­யா­கவும், மகிழ்ச்­சி­யா­கவும் வாழவே விரும்­புவர். ஆனால், வாழ்நாள் பொழு­து­களில் இயற்­கை­யா­கவும், செயற்­கை­யா­கவும் நடந்­தே­று­கின்ற சில நிகழ்­வுகள் அந்த நிம்­ம­தி­யையும் மகிழ்ச்­சி­யையும் தூர நகர்த்­தி­வி­டு­கின்­றன.

அத்­தோடு, சிலரின் நட­வ­டிக்­கைகள் பலரை கவ­லைக்கும், அச்­சத்­துக்­கு­மா­ளாக்­கியும் விடு­கி­றது. அந்­த­வ­கையில், நாட்டின் நிம்­ம­தியை இழக்கச் செய்­வதை இலக்­காகக் கொண்டு கடந்த காலங்­களில் இடம்­பெற்ற செயற்­பா­டுகள் கொஞ்சம் கொஞ்­ச­மாக நினை­வு­க­ளி­லி­ருந்து அகன்று செல்லும் சூழலில் வீதி­களில் இடம்­பெ­று­கின்ற கோர விபத்­துக்­களும் கட­லிலும், ஆறு­க­ளிலும் மூழ்கி மர­ணிக்கும் பரி­தாப நிகழ்­வு­களும் மக்­களின் மனங்­களில் ரணங்­க­ளாகக் காட்­சி­ய­ளிக்கும் இக்­கா­ல­கட்­டத்தில், மக்­களின் பொடு­போக்­கான, அலட்­சி­ய­மான, பொறுப்­பற்ற செயற்­பா­டுகள் டெங்குக் காய்ச்­சலை ஏற்­ப­டுத்தும் நுளம்­பு­களின் பெருக்­கத்தை அதி­க­ரிக்கச் செய்து உயி­ரா­பத்­துக்கள் ஏற்­ப­டவும் சம­கா­லத்தில் வழி வகுத்­தி­ருக்­கின்­றன.

கடந்த இரண்டு, மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் நில­விய கடும் வரட்­சி­யின்பின் ஆழ்­க­டலில் அடிக்­கடி உரு­வாகும் தாழ­முக்­கத்­தினால் கால­நி­லையில் மாற்­ற­மேற்­ப­டு­கி­றது. அத்­தோடு, வடகீழ் பரு­வப்­பெ­யர்ச்சிக் காலமும் ஆரம்­பித்து விட்­டதால் இப்­ப­ரு­வத்­துக்­கான மழை வீழ்ச்­சியும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், மழைநீர் கார­ண­மாக நுளம்­புகள் பெருகி வளர்­வ­தற்­கான சூழல் உரு­வாகி நோய்கள் பரவும் நிலையும் உரு­வெ­டுத்­துள்­ளது.

குறிப்­பாக, டெங்கு நுளம்­பினால் ஏற்­படும் காய்ச்சல் மற்றும் கால­நிலை மாற்­றத்­தினால் ஏற்­படும் நோய்­களின் கார­ண­மாக ஒரு­சில பிர­தே­சங்­களில் பலர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவற்றில், சமூகப் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்ள டெங்கு நுளம்புப் பெருக்கம் மற்றும் டெங்குக் காய்ச்சல் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தோடு, சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பது குறித்தும் வீட்டு உரி­மை­யா­ளர்­களும் ஏனைய அரச, தனியார் நிறு­வனத் தலை­வர்கள் மற்றும் ஊழி­யர்­

களும் அதிக சிரத்­தை­கொள்­வது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது.
இருப்­பினும், சிலரின் செயற்­பா­டு­களும், மன­நி­லையும் இவ்­வி­ட­யத்தில் மாற்­ற­ம­டை­யா­மலே காணப்­ப­டு­வதை உண­ர­மு­டி­கி­றது. அடிமேல் அ­டித்தால் அம்­மி­கூட நகரும் என்­ற­தொரு பழ­மொழி உள்­ளது. ஆனால், இப்­ப­ழ­மொ­ழியை இந்­நாட்டு சமூக அங்­கத்­த­வர்­களில் பலர் பொய்­யாக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஏனெனில், நுளம்புப் பெருக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக, டெங்­குக்­காய்ச்சல், அதன் அறி­குறி, அதற்­கான சிகிச்சை நட­வ­டிக்கை குறித்து அச்சு மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் வாயி­லா­கவும் ஏனைய ஊடகச் செயற்­பா­டுகள் மூல­மா­கவும், அடிக்­கடி விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும், எந்த மாற்­றமும் மக்­களின் மனப்­பாங்கில் ஏற்­பட்­ட­தாகக் காண­வில்லை.

நேரக்­க­டத்­தல்­க­ளுக்­காக வானொலி, தொலைக்­காட்­சி­களில் ஒலி, ஒளி­ப­ர­பப்­படும். சினி­மாப்­பா­டல்­களைக் கேட்­கவும், சின்­னத்­திரை நாட­கங்கள். சினி­மாக்­களைப் பார்க்­கவும் காட்டும் அக்­கறை, நம்­மையும் பிற­ரையும் பாது­காப்­ப­தற்­காக ஒலி, ஒளி­ப­ரப்புச் செய்­யப்­படும் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை கேட்­ப­தற்கும், பார்ப்­ப­தற்கும் அக்­க­றை­கொள்­ளாமல் இருப்­பது நமது மனப்­பாங்­குகள் இன்னும் மாற்­ற­ம­டை­ய­வில்லை என்­பதைத் தெளி­வாக சுட்­டிக்­காட்­டு­கி­றது.

மக்­களின் மனோ­நி­லை­யா­னது இந்நோய் தொடர்­பிலும் இவற்றைத் தடுப்­பது தொடர்­பிலும் திசை­தி­ருப்­பப்­ப­டாத நிலையில், இந்­நோயைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அதா­வது, நுளம்­புகள் பெரு­கு­வதைத் தடுக்க முடி­யாது. விழிப்­பு­ணர்வு தொடர்பில் மக்கள் மனங்­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருப்பின் இந்­நு­ளம்­புகள் பெருகி வளரும் இடங்கள் சூழலில் காணப்­ப­டாது.
மக்­க­ளி­னதும், பொறுப்­பு­வாய்ந்த உரிய அதி­கா­ரி­க­ளி­னதும் மனப்­பாங்கில் மாற்­ற­மேற்­ப­டாத கார­ணத்­தி­னா­லேயே பல பிர­தே­சங்­களில் சூழல் சுத்தம் செய்யப்படாதிருக்கிறது. மக்­க­ளி­னதும், உரிய அதிகாரிகளினதும் அலட்­சி­யங்கள் பல அப்­பாவி சிறு­வர்­க­ளையும், வளர்ந்­த­வர்­க­ளையும் டெங்கு நுளம்­பு­க­ளுக்குப் பலி­கொள்ளச் செய்­து­கொண்­டி­ருப்­பதை நாளாந்தம் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­படும் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்­கையின் மூலம் அறி­ய­மு­டி­கி­றது. இந்­நி­லைப்­பா­டா­னது சமூகப் பொறுப்பின் தோல்­வியைப் புடம்­போ­டு­வதைக் காணலாம்.

டெங்கு அதி­க­ரிப்பும் அபாய எச்சரிக்கையும்

மழை காலத்தில் ஏற்­படும் பெரும்­பா­லான நோய்­க­ளுக்கு நுளம்­பு­களே பிர­தான கார­ணி­க­ளாக இருக்­கின்­றன. நுளம்­புகள் பெருகி வளர்­வ­தற்குத் தகுந்த சூழலைத் தோற்­று­விப்­பதில் மழைநீர் பெரும் பங்கு வகிக்­கி­றது. இதன்­கா­ர­ண­மாக நாட்டில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் டெங்கு நோய்ப் பரவல் தீவி­ர­மாக அதி­க­ரித்து வரு­வ­தனால் மக்­களை மிகுந்த அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் சுற்றுச் சூழலை தூய்­மை­யாக வைத்­தி­ருக்­கு­மாறும் சுகா­தார

அமைச்சின் தொற்­றுநோய் தடுப்புப் பிரிவு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.
ஏனெனில், இம்­மாதம் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் 13,056பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ரு­டத்தின் ஜன­வரி மாதம் முதல் நவம்பர் மாதம் 25ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நாடு­பூ­ரா­கவும் 76,413 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இன­தா­லேயே டெங்கு நோய் தொடர்பில் மக்­களை சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ள­துடன் சுற்­றா­ட­லையும் சுத்­த­மாக வைத்­தி­ருக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில், சூழல் பாது­காப்பு மற்றும் சூழல் அலங்­கா­ரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பொலி­ஸா­ருக்கு விஷேட ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அதற்­க­மைய சூழல் பாது­காப்பு மற்றும் அலங்­காரம் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நாட­ளா­விய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரி­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக சிறப்புத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இச்­சந்­தர்ப்­பத்தில், பெரு­கி­வ­ளரும் நுளம்­பு­க­ளினால் ஏற்­படும் நோய்கள் தொடர்­பா­கவும் நோய்­க­ளுக்­கான சிகிச்சை பெறு­வது தொடர்­பா­கவும் அவற்றை எவ்­வாறு கட்­டு­ப­டுத்த முடியும் என்­பது குறித்தும் ஒவ்­வொரு தனி­ந­பரும், குடும்­பமும் அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும். நம்மை நாம் பாது­காக்க முயற்­சிக்­கா­விடின் நாமும் பாதிக்­கப்­பட்டு பிறரும் பாதிக்­கப்­ப­டுவர்.
நுளம்பின் பெருக்கம் அதன் பாதிப்­புக்கள் அதி­க­ரித்­துள்ள பிர­தே­சங்­களில் நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும், பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பு போதி­ய­ளவில் கிடைக்கப் பெறா­தி­ருப்­ப­தாக சுகா­தா­ரத்­து­றை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய் விஞ்­ஞானப் பிரிவு மற்றும் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவு என்­பன நுளம்­பு­க­ளினால் ஏற்­படும் நோய்­க­ளி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான பல்­வேறு வேலைத்­திட்­டங்ளை காலத்­திற்குக் காலம் முன்­னெ­டுத்­தாலும், அதற்­கான ஒத்­து­ழைப்பு மக்­க­ளினால் வழங்­கப்­ப­டா­தி­ருப்­பதை இப்­பி­ரி­வு­களின் நட­வ­டிக்­கை­ளின்­போது டெங்கு நுளம்­புகள் பெருகி வளர்­வ­தற்கு உடந்­தை­யாக இருந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் சட்ட நட­வ­டிக்­கை­களை அவ­தா­னிக்­கின்­ற­போது அறிய முடி­கி­றது.
சுகா­தார அமைச்­சினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைக்­காக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற பல செயற்­றிட்­டங்­க­ளின்­போது, டெங்கு நுளம்பு விருத்­தி­ய­டை­யக்­கூ­டிய சூழலை வைத்­தி­ருந்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பிர­காரம் பல தரப்­பி­னர்­க­ளுக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்பட்டுள்­ளன.
வீட்டு உரி­மை­யா­ளர்கள், பாட­சாலை அதி­பர்கள், அரச, தனியார் நிறு­வ­னங்­க­ளது பொறுப்­பா­ளர்கள் என பல தரப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதை சுகா­தார அமைச்சின் தக­வல்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கி­றது.

மக்­களைப் பாது­காக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­கின்­ற­போது, அதற்கு மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­காது பொடு­போக்கு மனப்­பாங்­குடன் செயற்­ப­டு­வது ஆபத்­துக்­களை உரு­வாக்கும். என்­பது கவ­னத்­திற்­கொள்­ளத்­தக்­க­தாகும்.
ஏத்­த­கைய சட்­டங்கள் வகுப்­பட்­டாலும், அறி­வு­றுத்­தல்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் மக்கள் தமது சமூகப் பொறுப்பை முன்­னெ­டுக்­காது செற்­ப­டு­கி­றார்கள் என்­பதை சில பிர­தே­சங்­களின் சூழல் அசுத்­த­மா­கவே காணப்படு­வதைக் கொண்டு அனு­மா­னிக்க முடி­கி­றது. அத்­துடன், இச்­சுத்­த­மற்ற சூழல் நிலைக்கு மக்கள் அதிகாரிகளையும் அதி­கா­ரிகள் மக்­க­ளையும் பரஸ்­பரம் குற்­றஞ்­சு­மத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இத­னி­டையே, இன்னும் சிலர் தங்­க­ளது வீட்டுச் சூழல் மாத்­திரம் சுத்­த­மாக இருக்க வேண்­டு­மென நினைத்து அவர்­களின் அயல் சுற்­றா­டலை அசிங்­கப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தங்கள் வீட்டின் அல்­லது தங்­க­ளது வர்த்­தக நிலை­யங்­களில் சேக­ரிக்­கப்­படும் திண்மக் கழி­வு­களை பாதை­க­ளிலும், தெருச் சந்­தி­க­ளிலும் வீசி­விட்டுச் சென்­றி­ருப்­பதை பல்­வேறு பிர­தே­சங்­களில் அவ­தா­னிக்க முடி­கி­றது. இதற்குக் காரணம் என்ன?
தொழில்­நுட்பம் வளர்ச்­சி­ய­டைந்து நவீன ஊடக சாத­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உல­கமே உள்ளங் கைக்குள் வந்­தும்­கூட, நாக­ரிக மோகத்­துக்குள் மூழ்கி அதனை தங்­க­ளது நவீன வீட­மைப்­புக்­க­ளிலும், ஆடை­ய­ணி­க­ளிலும், வாழ்க்கை முறை­க­ளிலும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தும் மக்கள், பொது­வான விட­யங்­களில் நாக­ரிகப் பண்­பு­களைக் காட்டத் தவ­று­கின்­றனர். ஒரு­சிலர் ஆதி­வா­சி­களின் செயற்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

கிழக்கும் டெங்கும்

கிழக்கு மாகாணம் உட்­பட பல மாவட்­டங்­களில் நிலவும் மழை­யுடன் கூடிய கால­நி­லையின் கார­ண­மாக டெங்கு நோய்த்­தாக்கம் அதி­க­ரித்­தி­ருப்­பதை அவ­தா­னிக்­க­மு­டி­கி­றது. சுற்றுச் சூழல் பாது­காப்பில் காணப்­படும் பல­வீ­ன­மாக சமூகப் பொறுப்பின் நிமித்­தமே இந்த நிலை­மை­க­ளுக்குக் காண­ர­மாகக் காணப்­ப­டு­கி­றது.

தங்­க­ளது வீடு­களில் சேக­ரிக்­கப்­படும் திண்மக் கழி­வு­களை வீதி­யோ­ரங்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­ப­டாத தனியார் மற்றும் அரச காணி­க­ளிலும், கடற்­கரை மற்றும் ஆற்­றங்­க­ரை­க­ளிலும் வீசப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு வீசப்­படும் திண்மக் கழி­வுகள் முறை­யாக அகற்­றப்­ப­டா­துள்­ள­தா­கவும், உரிய உள்­ளூ­ராட்சி மன்ற அதி­கா­ரிகள் திண்மக் கழி­வு­களை அகற்­று­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தில்லை எனவும் வடி­கான்­களை முறை­யாக சுத்­தப்­ப­டுத்­து­வ­தில்­லை­யெ­னவும் பிர­தேச மக்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மீது அவ்­வப்­போது குற்­றச்­சாட்டியிருந்தமையை கடந்த காலங்­களில் காண முடிந்­தது.
இதேவேளை, டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கா­துள்­ள­தாக இப்­பி­ர­தேச அதி­கா­ரிகள் மக்­களைக் குறை கூறு­கின்­றனர். இவ்­வாறு பரஸ்­பர குறை­பாட்டுக் குரல்­களை ஒலித்­துக்­கொண்டு பிர­தே­சங்­களை சுத்­தப்­ப­டுத்­து­வதில் அலட்­சி­ய­மாக செயற்­பட்­டதன் விளை­வாக இப்­பி­ர­தே­சங்­களில் நுளம்புப் பெருக்கம் அதி­க­ரித்து பலரை வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்கச் செய்­துள்­ள­துடன், உயிர்­க­ளையும் காவு­கொண்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் இப்­பி­ர­தே­சங்­களில் நுளம்­பு­களின் பெருக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­றிட்­டங்கள் சுகா­தாரத் துறை­யி­ன­ராலும் தொண்டர் அமைப்­புக்­க­ளி­னாலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை பாராட்­டப்­ப­டக்­கூ­டிய விட­ய­மாகும். இப்­பி­ர­தே­சத்தை சார்ந்த பல அமைப்­புக்­களின் இளை­ஞர்கள் சுய­மாக முன்­வந்து இப்­ப­ணியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்குப் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டி­யது இப்­பி­ர­தேச மக்­களின் தலை­யாய சமூகப் பொறுப்­பாகக் காணப்­ப­டு­கி­றது. இப்­பொ­றுப்பை சரி­வர நிறை­வேற்­று­கின்­ற­போது நம்­மையும் பாது­காத்து நமது அய­ல­வர்­க­ளையும் இந்நோய்த் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காக்க முடியும். டெங்கு நுளம்­பினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புள்­ளி­வி­ப­ரங்­களை நோக்­கு­கின்­ற­போது, நவம்பர் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் 2,959 பேரும், கம்­பஹா மாவட்­டத்தில் 1,371 பேரும், களுத்­துறை மாவட்­டத்தில் 806 பேரும் டெங்கு நோய்த்­தாக்­கத்­திற்கு இம்­மா­வட்­டங்­களில் ஆளா­கி­யுள்­ளனர். மொத்­த­மாக மேல் மாகா­ணத்தில் மாத்­திரம் இம்­மாதம் 25ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் 5,128 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்னர்.

இதேவேளை, டெங்கு நோய்த் தாக்கம் கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலுமுள்ள பல பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுவதான தகவல்களும் வெளியாகியுள்ளன.

நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் 286 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,596 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 1,395 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இம்மாதத்தின் ஆரம்பம் முதல் 25 ஆம் திகதி வரை யான காலப்பகுதியில் 3,277 பேர் டெங்கு நுளம்பினால் பாதிக்கப் பட்டுள்ளதுடன், ஆறு பேரின் உயிர்கள்

காவுகொள்ளப்பட்டுமுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந் நிலையில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அதிகளவிலானோர் டெங்குக் காய்ச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­மை­யா­னது டெங்கு நோய்த் தடுப்­பதில் காணப்­படும் சமூகப் பொறுப்பின் தோல்­வி­யையே எடுத்­துக்­காட்­டு­கி­றது.

இதனால், உயிர்­கொல்லி நுளம்­பு­க­ளி­லி ருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அலட்சிய மனப்பாங்கிலிருந்து விடுபட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு, உரிய தரப்புக்களால் முன்வைக்கப்படும் அறிவூட்டல்களை ஏற்று நடப்பதற்கும் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்.

அப்போதுதான் நமது சமூகப் பொறுப்பின் தோல்வியிலிருந்து விடுபட்டு சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் டெங்கு நோயினால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து நம்மையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க முடியும்.-Vidivelli

  • எம்.எம்.ஏ.ஸமட்

Leave A Reply

Your email address will not be published.