விபத்­துக்­களில் நான்கு பேர் பலி 11 பேர் காயம்

0 629

நாட்டின் வெவ்­வேறு பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை காலை 6 மணி­யுடன் நிறை­வ­டைந்த  24 மணி நேரத்­துக்குள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் சிக்கி நான்கு பேர்  உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 11 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

இந்த விபத்­துக்கள் எம்­பி­லி­பிட்­டிய, அது­ரு­கி­ரிய, கொக­ரல்ல மற்றும் மாவத்­த­கம ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் பதி­வா­கி­யுள்­ளன.

கொக­ரல்ல விபத்து

கொக­ரல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மல்­சி­றி­புர -தித்­தெ­னிய வீதியில் நேற்று முன்­தினம் பிற்­பகல் 6.15 மணி­ய­ளவில் இடம் பெற்ற விபத்தில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த கிரி­யாய பகு­தியை சேர்ந்த  41  வய­து­டைய மொஹமட் மன்சூர் என்­பவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

தித்­தெ­னிய பகு­தியை நோக்கிப் பய­ணித்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பாட்டை இழந்து எதிர்த்­தி­சையில் பய­ணித்த முச்­சக்­கர வண்­டி­யுடன்  மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து மோட்டார் சைக்கிள் ஓட்­டு­நரும் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த நபரும் காய­ம­டைந்­தனர். அத்­துடன் முச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்த மூவரில் ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய முச்­சக்­கர வண்டி சாரதி பொலி­சாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

மாவத்­த­கம விபத்து

இது­த­விர, ஒன்­பது பேருடன் பய­ணித்த வான் வண்டி கட்­டுப்­பாட்டை இழந்து குடை­சாய்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில்  45 வய­து­டைய வாரி­ய­பொல பகு­தியை சேர்ந்த ரஞ்சித் தன­பால என்­பவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

மாவத்­த­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கர்­மாந்த புரய சந்­திக்கு அண்­மையில் கண்­டி­யி­லி­ருந்து குரு­நாகல் நோக்கிப் பய­ணித்த வான் நேற்று முன்­தினம் இரவு 10.40 மணி­ய­ளவில்  விபத்­துக்­குள்­ளா­ன­மை­யி­னா­லேயே மேற்­படி உயி­ரி­ழப்பு சம்­ப­வித்­துள்­ளது.

மேலும், விபத்தில் படு­கா­ய­ம­டைந்த வான் சாரதி உட்­பட 9 பேரும் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­துடன், மாவத்­த­கம பொலிசார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அது­ரு­கி­ரிய மற்றும் எம்பிலி­பிட்­டிய விபத்து

மேலும், எம்பி­லி­பிட்­டிய, அது­று­கி­ரிய ஆகிய பகு­தி­களில் பஸ் வண்டி  மோட்டார் சைக்­கி­ளுடன்  மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மோட்டார் சைக்கிள் ஓட்­டு­நர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். எம்­பி­லி­பிட்­டிய –- இரத்­தி­ன­புரி வீதியில் நேற்று முன்­தினம் பிற்­பகல் 2.45 மணி­ய­ளவில் பஸ் வண்டி எதிர்த்­தி­சையில் பய­ணித்த மோட்டார் சைக்­கி­ளுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் 60 வய­து­டைய எம்­பி­லி­பிட்­டிய பகு­தியை சேர்ந்த பிரி­யந்த  எனப்­படும் மோட்டார் சைக்கிள் ஓட்­டுநர் உயி­ரி­ழந்­துள்ளார்.

அத்­துடன், அது­ரு­கி­ரிய – – கொட்­டாவ வீதியில் பஸ்­வண்டி மோட்டார் சைக்­கி­ளுடன் நேருக்கு நேர் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மோட்டார் சைக்கிள் ஓட்­டுநர் உயி­ரி­ழந்­துள்ளார்.

விபத்து சம்­பவம் நேற்று முன்­தினம் பிற்­பகல் 6.30 மணி­ய­ளவில் இடம் பெற்­றுள்­ள­துடன், விபத்தில் படு­கா­ய­ம­டைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 36 வயதுடைய பலாங்கொடை பகுதியை சேர்ந்த கிஷன் குமார எனப்படுபவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துக்களுடன் தொடர்புடைய இரண்டு பஸ் வண்டியின் சாரதிகளும்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.