நீரிழிவு ஒரு பயங்கர நோயா?

0 1,633

18 வய­திற்கு மேற்­பட்டு உல­க­ளா­விய ரீதியில் குறித்த நோயால் பாதிக்­கப்­பட்டோர் தொகை 2045 இல் 156 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க கூடிய வாய்ப்­புள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­தைக்கு இதனால் பாதிக்­கப்­பட்ட அதி­கூ­டிய மக்கள் தொகையை கொண்ட தெற்­கா­சிய நாடு­களில் முதல் ஐந்து நாடு­களில் நாமி­ருப்­பது மூன்­றா­மி­டத்தில். இது எதன் புள்­ளி­வி­ப­ர­மென நினைக்­கி­றீர்கள்? வேலை­யில்லா மக்கள் தொகை என நினைக்­கி­றீர்­களா? இல்லை வறு­மை­யினால் பீடிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை ? அப்­ப­டியும் இல்லை என்றால் எது­வாக இருக்­கலாம்?

நீரி­ழிவு

நீங்கள் நினைப்­பதை காட்­டிலும் வேக­மாக பர­வக்­கூ­டி­யதும் சிலர் பெரி­தாக கற்­பனை செய்­வதை காட்­டிலும் சாதா­ர­ண­மா­ன­து­மான ஒரு நோயே நீரி­ழிவு. நீரி­ழி­வினால் பாதிக்­கப்­பட்டோர் அதை பயங்­க­ர­மாக எண்ணி மன அழுத்­தத்­திற்கு ஆளாகத் தேவை­யில்லை. மேலும் எதிர்­வரும் காலங்­களில் நீரி­ழிவின் தாக்­கத்­தி­லி­ருந்தும் பாது­காப்பாய் இருக்­கவே சில கட்­டுக்­கோப்­பான வழி­மு­றை­களை இந்த ஆக்கம் வாச­கர்­க­ளுக்கு முன்­வைக்­கி­றது.

சர்க்­கரை வியாதி என பொது­வாக அறி­யப்­ப­டு­கின்ற இந்த நோய் சதை­யியினால் இன்­சுலின் சுரக்க முடி­யா­த­போது அல்­லது சதையி தயா­ரிக்­கின்ற இன்­சு­லினை உட­லினால் பயன்­ப­டுத்த முடி­யாத போது உரு­வா­கின்ற நாட்­பட்ட நோயாகும்.

நம் நாட்டில் 12 பேருக்கு ஒருவர் என்ற விகி­தத்தில் நீரி­ழிவு நோயா­ளர்கள் காணப்­ப­டு­கின்­றனர். மேலும் கர்ப்­ப­கால நீரி­ழிவு 7 இற்கு 1 என்ற விகி­தத்­திலும் நில­வு­கின்­றது. நீரி­ழிவு ஏன் ஏற்­ப­டு­கின்­றது என்­பதை பொது­வா­கவே அனை­வரும் அறிவர். ஒழுங்­கற்ற உணவு பழக்கம், உடற்­ப­யிற்­சி­யின்மை, அதி­க­மான உட­னடி உண­வுகள், உண­விற்கு சேர்க்­கப்­ப­டு­கின்ற இர­சா­யன பதார்த்­தங்கள், மர­பணு ரீதியில் கடத்­தப்­ப­டு­கின்ற நோயின் பரம்­பரை அலகு என்­பன அவற்றுள் சில. இந்நோய் ஏற்­பட அலட்­சி­யமும் அவ­சர கதி­யி­லான எமது அன்­றாட செயற்­பா­டு­களே காரணம். யார் மீதும் குற்றம் சொல்­வதால் இந்நோய் அழிந்து போகப்­போ­வ­து­மில்லை. எனவே, பாதிக்­கப்­பட்டோர் அதனை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும், ஏனையோர் பாதிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்­கான நட­வ­டி­க்கைக­ளையும் மேற்­கொள்ள வேண்டும்.

முழு­தாகக் குணப்­ப­டுத்த முடி­யாத நோயான நீரி­ழிவை முழு­மை­யான கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ர­லா­மென இன்­றைய மருத்­துவ உலகம் நிரூ­பிக்­கி­றது. உங்கள் உடல் உங்கள் மனதின் கட்­டுப்­பாட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. எனவே கொஞ்சம் ஆபத்­தான பின்­வி­ளை­வு­களை இந்நோய் விளை­விக்கும் என்­றாலும் கூட, அதையே எண்ணிப் பீதி­ய­டைந்­து­வி­டு­வது நல்­ல­தல்ல. அது உங்­களை வேறு நோய்­களின் பக்­கமாக நகர்த்தி விடலாம்.

நீரி­ழி­வினால் பாதிக்­கப்­பட்டு 5 ஆண்­டு­களின் பின்னே பாதிப்­புகள் வெளிக்­காட்­டப்­படும். எனவே, நிறை­யவே அவ­தானம் தேவை. நீரி­ழிவு நோயின் பாதிப்­பிற்கு கண், சிறு­நீ­ரகம், இதயம், கால் நரம்பு என்­பன விரை­வாக பாதிப்­ப­டை­கின்­றன. நோயின் ஆரம்பம் அதா­வது, 20% மட்­டுமே பாதிப்­புக்­குள்­ளான நிலை­மை­யெனில் பூர­ண­மாகக் குணப்­ப­டுத்­தலாம். 80% பாதிக்­கப்­பட்ட பின்னர் இனம் காணப்­பட்டால் அதனை கட்­டுப்­ப­டுத்த மட்­டுமே முடியும். மேலும் உல­க­ளா­விய ரீதியில் 58% நீரி­ழிவு நோயா­ளிகள் இனம் காணப்­ப­டாத நிலை­யி­லேயே உள்ள­ன­ரென சர்­வ­தேச நீரி­ழிவு கூட்­ட­மைப்பு தெரி­விக்­கி­றது.

நீரி­ழிவின் தாக்­க­மா­னது முதலில் இரத்தக் குழாய் உட்­சு­வரில் ஏற்­ப­டு­கி­றது. பின்னர் கண்ணில் விழித்­தி­ரையில் வெண்­ப­டர்க்­கை­யாக, கட்­ராக்­டாக வெளிக்­காட்­டப்­ப­டு­கி­றது. இதனை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­றி­வி­டலாம். மேல­திக வைத்­திய பரி­சோ­தனை மூலம் இரத்தக் குழாய் வெடிப்பின் மூலம் ஏற்­ப­டு­கின்ற திடீர் பார்­வை­யி­ழப்­பிற்­கான வாய்ப்­பு­களை இனம் காணலாம். பார்­வை­யி­ழப்­ப­தற்கு வாய்ப்­பி­ருந்தால் அதனை லேஸர் சிகிச்­சையின் மூலம் சீராக்­கி­வி­டலாம். எனினும் தொடர் கண் பரி­சோ­தனை மேற்­கொள்­வது சிறந்­தது.

மேலும், நீரி­ழி­வினால் அவ­திப்­ப­டு­வோ­ருக்கு சாதா­ர­ண­மா­கவே 5 – 12% செரி­மா­ன­மாகும் வீதம் குறை­வ­டை­வதால் கணைய, கல்­லீரல், பெருங்­குடல் புற்று நோய் வரு­வ­தற்கு நீரி­ழிவு ஒரு கார­ணி­யாக அமை­ய­லா­மென வைத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்­நோயை கொண்ட பெண்­க­ளுக்கு மார்­பக மற்றும் கர்ப்­பப்பை புற்று நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கு 48% வாய்ப்பு இருக்­கி­றது.

கர்ப்ப காலத்தில் உயர்­கின்ற குருதி வெல்ல மட்­ட­மா­னது, தாய் –- சேய் நலத்தை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பாதிக்­கின்­றது. இதன் கார­ண­மாக உயர் குருதி அழுத்தம், அதிக நிறை­யு­டைய குழந்­தைகள், பிள்ளைப் பேறின்­போது சிக்கல் தோன்றல் என்­பன உரு­வாகி பிள்ளை பேற்­றின்பின் மறைந்­து­விடும். எனினும் எதிர் காலங்­களில் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டலாம்.

இனி குருதி வெல்ல மட்­டத்தை நிலை­யான வீச்சில் பேணவும், நீரி­ழிவு நோய் அபா­யத்­தை­விட்டும் தூர­வி­ல­கிட ஒரு­சில மாற்­று­வ­ழிகளைப் பார்ப்போம்.

1) நாளாந்த உணவுப் பழக்க வழக்க அட்­ட­வணை

உங்கள் வைத்­தியரின் ஆலோ­ச­னைப்­படி உணவு வேளைக்­கான அட்­ட­வ­ணை­யொன்றைத் திட்­ட­மி­டுங்கள். அதனை உணவு மேசைக்­க­ருகில் அல்­லது உணவு பரி­மா­றும் இடத்­தில காட்­சிப்­ப­டுத்­துங்கள். இத­னை­விடக் கூடவோ குறை­யவோ உணவை உட்­கொள்­வ­தில்லை என உங்­க­ளுக்கு நீங்­களே திட­சங்­கற்பம் பூணுங்கள்.

2) உங்கள் உணவின் GI அளவை கவ­னத்தில் கொள்ளுங்கள்.

GI அள­வென்­பது உங்கள் உணவில் உள்ள க்ளுகோஸ் அளவை குறிக்கும். GI அதி­க­ரிக்கும் உணவில் க்ளுகோஸ் அதிகம் காணப்­ப­டு­கி­றது. எனவே, உங்கள் பிர­தான உணவு வேளையில் GI அதி­க­மான உணவை உட்­கொண்டால், ஈற்­று­ண­வாக GI குறைந்த உணவை தெரி­வு­செய்­யுங்கள். GI அதி­க­மான சில உணவு வகைகள் வெள்ளை அரிசி, கோதுமை மா, பாண் என குறிப்­பி­டலாம்.

GI குறைந்த உண­வு­க­ளாக: உலர்ந்த அவரை மற்றும் உலர்ந்த பருப்பு வகைகள், ஓட்ஸ், பழங்கள், மாப்­பொருள் தன்­மை­யற்ற மரக்­க­றிகள் என்­ப­வற்றை பரிந்­துரை செய்­யலாம்.

3) மாப்­பொருள் அளவை கணக்கி­டுங்கள்

நீங்கள் உண­வாக உட்­கொள்­கின்ற மாப்­பொருள் மற்றும் வெல்­ல­மாக மாறக்­கூ­டிய உண­வு­களின் கலோரி அளவை தெரிந்து வைத்­துக்­கொள்­வது சிறந்­தது. ஏனெனில், அப்­போ­துதான் நீங்கள் உண்ணும் உணவை நீங்கள் கட்­டுப்­பாட்டில் வைக்க முடியும்.

ஒவ்­வொரு நேர உணவின் பின்னும் நீங்கள் உட்­கொண்ட மொத்த கலோரி அளவை கணக்­கி­டு­வது உங்கள் உட்­செ­லுத்த வேண்­டிய இன்­சுலின் அளவை தீர்­மா­னிக்க உத­வி­பு­ரியும். இதனை உணவு உட்­கொண்டு இரண்டு மணி நேரத்­திற்கு பின் குருதி வெல்ல பரி­சோ­தனை செய்­வதன் மூலம் இனம் காண்­பது உங்கள் உணவு வேளை அட்­ட­வ­ணையைத் திட்­ட­மிட இல­கு­வாக இருக்கும்.

4) உணவில் நார் உணவு வகை­களை அதிகம் உள்­வாங்­குங்கள்.

நார்ச் சத்­துள்ள உண­வுகள் எமது உடம்பால் சமி­பா­ட­டையச் செய்ய முடி­யா­ததால் அவ்­வகை உண­வுகள் மூலம் உடல் குருதி வெல்ல அளவு அதி­க­ரிக்­காது. ஆனால் நாருள்ள உண­வு­க­ளுடன் சில மாப்­பொருள் கொண்ட உண­வு­களும் காணப்­ப­டு­கின்­றன. நாளொன்­றிற்கு 25- – 30 கிராம் நார் சத்­துள்ள உணவு எடுப்­பது இரத்த வெல்ல மட்­டத்தை சீராகப் பேண உதவும்.

5) தண்ணீர் போத்தல் ஒன்று

உடலில் அள­வாக நீர்ச்­சத்து காணப்­ப­டு­மெனில் குருதி வெல்ல அளவு அதி­க­ரிக்கும் வாய்ப்பு குறை­கி­றது. தாகம் ஏற்­ப­டு­கின்ற போது அதை தணிக்க மென்­பானம் அல்­லது குளிர்­பா­னத்தை தெரி­வு­செய்­யாது தண்­ணீரை தெரி­வு­செய்­யுங்கள். ஏதேனும் சுவை விருப்பம் எனில் சர்க்­கரை இல்­லாத டீ வகை­களை தெரி­வு­செய்­வது சிறந்­தது.

6) வாழ்வின் ஓர் அங்­க­மாக மாற்­றி­வி­டுங்கள்

அன்­றாட செயற்­பா­டு­களில் ஒன்­றாக உடற்­ப­யிற்­சியை மாற்­றி­வி­டுங்கள். வியர்த்து வழிய மணிக்­க­ணக்கில் செய்ய வேண்டும், என்­னு­டைய வய­திற்கு இது சரி­வ­ருமா, இதை பண்­ணினால் உண்­மை­யி­லேயே சுகர் குறை­யுமா? என்­றெல்லாம் கேள்­விகள் வரு­வது சாதா­ரணம். உடற்­ப­யிற்சி என்­ப­துவும் சாதா­ரண விட­ய­மாகும். பிர­தான உணவு வேளையின் பின் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ளுங்கள். உங்கள் நிறை குறைவை எடையைக் கொண்டு தீர்மானிக்காது, உங்கள் உடையை வைத்து நீங்களே அறிந்து கொள்வது சிறந்தது.

மேலும் உடல் சொல்வதற்கு செவிசாயுங்கள். உடல் களைப்பை உணரும் போது அதற்கு கட்டுப்படுவதே ஆரோக்கியத்திற்கு நலம்.

இவை எல்லாம் நீரிழிவு நோயாளர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் நீரிழிவு நோயாளர் என்ற அடையாளம் உங்களுக்கு வந்துவிடாமல் இருக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளாகும்.

சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் (நவம்பர் 14) அறிமுகப்படுத்தப்பட்டது. அது 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இத்தினம் இன்சுலினை கண்டு பிடித்த விஞ்ஞானி பிறட்ரிக் பான்ரிங்
பிறந்த தினமாகும்.-Vidivelli

  • ஷிப்னா சிராஜ்

Leave A Reply

Your email address will not be published.