வெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா? ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை

பொறுப்பு சி.ஐ.டி பிரதானியிடம் கையளிப்பு

0 1,405

அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வினால் நடாத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில், வெள்ளை வேன் கடத்­தல்­க­ளின்­போது தான் சார­தி­யாகக் கட­மை­யாற்­றி­ய­தாகக் கூறி, பொது­மகன் ஒருவர் வெளி­யிட்ட பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்கள் தொடர்பில் பூரண விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தா­னி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பூரண அவ­தானம் திரும்­பி­யுள்­ள­தா­கவும், அதன்­படி ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்ட விப­ரங்கள், ஒலி மற்றும் ஒளி­ப­ரப்­புக்­களின் பிர­தி­க­ளுடன் அது தொடர்பில் பூரண விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­ன­வுக்குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார். பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் இடம்­பெற்ற வெள்­ளைவேன் கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய  ராஜபக் ஷவே  செயற்­பட்டார் என்றும், சுமார்  300 பேர் வரை வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குட்­ப­டுத்தி கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் ஒன்றின் சார­தி­யாகப் பணி­யாற்­றி­ய­தாகக் கூறப்­படும் அந்­தனி டக்ளஸ் பெர்­னாண்டோ என்ற நபர்  நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்தார்.

கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள ஜன­நா­யக தேசிய அமைப்பு காரி­யா­ல­யத்தில்  அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் தலை­மையில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டே அவர் இந்த தக­வல்­களை வெளி­ப்ப­டுத்­தி­யி­ருந்தார்.

“வெள்ளை வேன் கடத்­த­லுடன் தனக்கு தொடர்­பில்லை என்று கோத்­தா­பய தற்­போது தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் அவரே இதன் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர். இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வேன்­களின் ஒன்­றி­னது சார­தி­யாக நானும் பணி­பு­ரிந்­துள்ளேன்.

இந்தக் கடத்­த­லுக்குப் பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் பெரிதும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கினர். கடத்தல் தொடர்பில் கோத்­தா­பய பிரி­கே­டியர் ஒரு­வ­ருக்கும், மேஜர் ஒரு­வ­ருக்கும் ஆலோ­ச­னை­களை வழங்­குவார். அவர்­களே இதனை வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்­துவர். இதன்­போது நபர்­களை கடத்­து­வ­தற்கு வாக­ன­மொன்று பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அவரை மறைத்து வைத்து சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தும் இடத்­திற்கு பிறி­தொரு வாக­னத்­தி­லேயே அழைத்துச் செல்­வார்கள்.

இந்த இடங்­களில் அவர்கள் மறைத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். பின்னர் மேல­திக தக­வல்­களை பெறு­வ­தற்­காக அவர்கள் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் ஆளாக்­கப்­ப­டு­வார்கள். இவ்­வாறு பல கொடு­மைகள் செய்த பின்னர் அவர்கள் கொலை செய்­யப்­ப­டு­வார்கள். பின்னர் சட­லத்தின் உள்­ளு­றுப்­பு­களை அகற்­றி­விட்டு மொன­ரா­கலை – சீத்­தா­வக்கை காட்டுப் பகு­தி­யி­லுள்ள குள­மொன்றில் போடு­வார்கள். அந்தக் குளத்­திலே 100க்கும் அதி­க­மான முத­லைகள் வாழ்­கின்­றன. அவற்­றுக்கே இவர்கள் உண­வாக்­கப்­ப­டு­வார்கள்.

இன்­றும்­கூட நீங்கள் அந்தக் குளத்தை சோத­னை­யிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்­கப்­பெறும். நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்”  என குறித்த நபர் கூறியிருந்தார்.

மிகப் பாரதூரமான இந்தக் கூற்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நேற்று இரவோடிரவாக  விஷேட ஆலோசனைகளை நடத்தியுள்ள நிலையிலேயே, நேற்று முற்பகல் இதுகுறித்து பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு சி.ஐ.டி. பிரதானியிடம் பொறுப்பளிக் கப்பட்டுள்ளது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.