மஹிந்த அரசு செய்த அநியாயங்களை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்

தமிழர்களும் முஸ்லிம்களும் சஜித்தை நம்பலாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடிவெள்ளிக்கு விஷேட செவ்வி

0 2,460

Q: இந்த தேர்தல் தொடர்பில் முஸ்­லிம்­க­ளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முஸ்­லிம்­க­ளுக்கு விஷே­ட­மாக எதையும் நான் கூறத்­தே­வை­யில்லை. 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் செய்­த­ அநியாயங்களை முஸ்­லிம்கள் மறந்­து­வி­ட­மாட்­டார்கள் என்று நினைக்­கிறேன்.

முஸ்­லிம்­க­ளுக்கு முன்னர் இந்­நாட்டில் பிரச்­சினை இருக்­க­வில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் முறை­யாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது­பல சேனா, சிஹல ராவய உள்­ளிட்ட சில அமைப்­பு­களை உரு­வாக்­கினர். இவற்றை கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவே உரு­வாக்­கினார். அவர்கள் அதனை மறுத்­தாலும் என்­னிடம் ஆதா­ரங்கள் இருக்­கின்­றன. அவர்­களின் அலு­வ­ல­கங்­களை கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவே திறந்­து­வைத்தார். அதற்­கான புகைப்­ப­டங்கள் இருக்­கின்­றன.
பித்து பிடித்­த­வர்­களை கைவி­டு­வது போல முஸ்லிம் மக்­களை தாக்­கு­வ­தற்கு இவர்­களை விட்­டனர். வீடு­களை எரித்­தனர், தொழிற்­சா­லை­களை எரித்­தனர், வியா­பார நிலை­யங்­களை எரித்­தனர். இதனை அடுத்து தான் ஈஸ்டர் தாக்­குதல் நடந்­தது .இது குறித்து கைது செய்­யப்­பட்ட சில இளை­ஞர்கள் வாக்­கு­மூ­லங்­களை தெளி­வாக கொடுத்­துள்­ளனர். 2013 ஆம் ஆண்டின் பின் தமக்கு வேறு வழி­யின்றி இவ்­வா­றான செயல்­க­ளுக்கு துணை­போ­ன­தாக தெளி­வாக கூறி­யுள்­ளனர்.

இன­வா­தத்தை தூண்­டி­விட்டு இவர்கள் வாக்கு சேக­ரிக்க முயல்­கின்­றனர். தற்­போது சிறு­பான்மை மக்­க­ளுக்­காக பணி­யாற்­று­வ­தாக கூறு­கின்­றனர். இவர்கள் சிஹல ராவய, பொது­பல சேனா போன்ற அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை தடை செய்­வார்­களா ?ஏனைய இன மதத்­தி­ன­ருக்கு எதி­ராக ஒரு விரலைத் தூக்­கினால் கூட அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பார்­களா? அல்­லது அவர்­க­ளுக்கு அலு­வ­லகம் அமைத்துக் கொடுத்து பணம் கொடுத்து அர­வ­ணைத்துக் கொள்­வார்­களா?

Q: நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்கள் நடந்­த­னவே?

அந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதை எடுத்து நோக்­குங்கள். கைது செய்­யப்­பட்ட அனை­வரும் பொது ஜன பெர­மு­னவின் ஆத­ர­வா­ளர்­களும் முக்­கி­யஸ்தர்களும் ­தானே.

மினு­வாங்­கொ­டையில் தாக்­கு­தல்­களை வழி­ந­டாத்­தி­யவர் யார்? குளி­யா­பிட்­டியில் முன்­ன­ணியில் நின்று தாக்­கி­ய­வர்­களும் அதற்­காக கைது செய்­யப்­பட்­ட­வர்­களும் எந்தக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள். எனவே பொது ஜன பெர­மு­னதான் இந்த தாக்­கு­தல்­களின் பின்னால் உள்­ளது என்­பதை முஸ்­லிம்கள் நன்கு விளங்­கி­யுள்­ளார்கள்.

Q: சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யானால் முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என உங்­களால் உறு­தி­ய­ளிக்க முடி­யுமா?

என்னால் தனிப்­பட்ட ரீதி­யாக உத்­த­ர­வாதம் வழங்க முடி­யாது. ஆனால் சஜித் பிரே­ம­தாச அந்த உத்­த­ர­வா­தத்தை வழங்­கி­யி­ருக்­கிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவை பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிப்பேன் என்றும் அவர் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துவார் என்றும் சஜித் கூறி­யி­ருக்­கிறார். எனது பார்­வையில் சரத் பொன்­சேகா இன­வா­தி­யல்ல. அவ­ரிடம் தேசத்தைப் பாது­காப்­ப­தற்­கான இய­லுமை இருக்­கி­றது. அவர் அந்தப் பொறுப்பைச் செய்வார் என நம்­பு­கிறேன்.

Q: தேசிய பாது­காப்பை எங்­களால் மாத்­தி­ரமே உறு­திப்­ப­டுத்த முடியும் என ராஜ­பக் ஷ தரப்­பினர் கூறு­கின்­ற­னரே?

அப்­படி அவர்கள் கூறு­வ­தென்றால் தேசிய பாது­காப்பை அவர்கள் எவ்­வாறு முன்பு பலப்­ப­டுத்­தி­னார்கள் என்று கேளுங்கள். யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தி­லி­ருந்து 2015 ஜன­வரி மாதம் வரை 6 வரு­டங்­க­ளாக அவர்கள் தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்­தி­யது பொது­ப­ல­சே­னாவைப் பாது­காத்து முஸ்லிம் மக்­களை இன்­னல்­க­ளுக்­குட்­ப­டுத்­தி­யதன் மூலமா? யுத்­தத்தில் வெள்­ளைக்­கொடி ஏந்தி வந்த அப்­பாவித் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டல்­லவா? அவர்­க­ளுக்கு வெடி­வைத்து நந்­திக்­கடல் எங்கும் இரத்தம் ஓடி­யது அல்­லவா? இது பாது­காப்பா? இதுவா தமிழ் மக்­க­ளுக்கு அவர்கள் வழங்­கிய பாது­காப்பு? அவர்கள் சிங்­கள மக்­க­ளுக்­குத்தான் என்ன பாது­காப்பு வழங்­கி­னார்கள்? எப்­படிப் பாது­காப்பு வழங்­கி­னார்கள்-? ஊட­க­வி­ய­லாளர் லசந்­தவைக் கொலை செய்­தார்கள். 18 ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கை, கால்­களை முறித்­தார்கள். இதுவா அவர்கள் வழங்­கிய பாது­காப்பு? முதலில் பாது­காப்பு என்­பது பற்றி அவர்­க­ளுக்குத் தெரி­யுமா? என நான் சவால் விடு­கிறேன். இரா­ணு­வத்­தி­னரை பாதை­களில் நிறுத்­து­வதன் மூலம் பாது­காப்பு வழங்க முடி­யாது. மக்­களின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொ­டுப்­பதன் மூலமே பாது­காப்பு வழங்க முடியும். சுதந்­தி­ர­மாக பேசும் உரிமை, ஊடக சுதந்­திரம், சுதந்­தி­ர­மாக நட­மாடும் உரிமை, சுதந்­தி­ர­மாக அர­சி­யலில் ஈடு­படும் உரிமை இவை­களே பாது­காப்­பாகும். ராஜபக் ஷவின் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கருத்து வெளி­யிட்டார் என்­ப­தற்­காக ரவி­ராஜை கொலை செய்­தார்­கள்­தானே.

Q: ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­ன­ணியில் கோத்­தா­பய ராஜ­பக் ஷ உள்­ள­தா­கவும் சஹ்ரான் குழு­வுக்கு பண உதவி செய்­த­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கி­றதே?

சஹ்ரான் கோத்­தா­பய ராஜ­பக் ஷ தரப்­பி­ன­ருடன் நெருக்­க­மாக இருந்தார் என்று கூறப்­ப­டு­கி­றது. சஹ்­ரா­னுக்கு அவர்கள் பணமும் கொடுத்­துள்­ளார்கள் என தக­வல்கள் வரு­கின்­றன. எனினும் எனக்கு அது பற்றி சரி­யாகத் தெரி­யாது. பொலிஸில் முறைப்­பா­டுகள் உள்­ளன. அதனை வைத்து நட­வ­டிக்கை எடுக்க முடியும்.

Q: சுதந்­திரக் கட்சி சம்­மே­ள­னத்தில் உரை­யாற்­றிய நீங்கள் முஸ்லிம் இளை­ஞர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாக மாறி­யதை நியா­யப்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்­டீர்­களா?

2013 இன் பின் இந்த அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இல்­லாமற் போன­மை­யி­னாலே முஸ்லிம் இளை­ஞர்கள் இயக்க ரீதியில் ஒன்­று­பட்­டார்கள் என்றே நான் கூறினேன். பயங்­க­ர­வாதம் நல்­லது என நான் கூற­வில்லை. உரி­மைகள் வழங்­கப்­ப­டா­த­வி­டத்து, தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டாத விடத்து இளைஞர், யுவ­திகள் பயங்­க­ர­வா­தத்தின் பால் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தைத்தான் நான் சொல்ல வந்தேன்.

Q: முஸ்­லிம்­களில் ஒரு­சாரார்  இன்­னமும் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கி­றார்­களே?

நான் ஒன்று மட்­டுமே கூற­வி­ரும்­பு­கிறேன். எனக்கு நன்கு அறி­மு­க­மான சில முஸ்லிம் பிர­பல வர்த்­த­கர்­களும் கோத்­தாவை தாம் விரும்­பு­வ­தாக கூறி­னார்கள். எமக்கு மஹிந்த ராஜபக் ஷ மீது விருப்­ப­மில்லை என்­றாலும் கோத்­தா­பய ராஜபக் ஷ வந்தால் எங்கள் வர்த்­த­கத்­துக்கு உத­விகள் செய்வார் என்­றார்கள். அதற்கு ”உங்­க­ளது சட­லங்­கள்தான் பெட்­டியில் வீட்­டுக்கு வரும்” என நான் அவர்களுக்குக் கூறினேன். அவ்வளவுதான்.

Q: சிலர் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் என்றும் அல்லது மூன்றாவது சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார்களே?

இரு பிரதான வேட்பாளர்களல்லாத எவருக்கும் அளிக்கப்படும் வாக்குகள் வீணானவையே. இன்று மிகவும் தீர்மானமிக்க சூழ்நிலைக்கு நாடு தள்ளப்
பட்டுள்ளது. அதாவது நாம் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சிக்குச் செல்வதா? இல்லையேல் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதா? என்ற தீர்மானத்திற்கு வர
வேண்டியுள்ளது. எம்மால் சிறு சிறு விடயங்களை முன்வைத்து வேறுபட முடியாது. நாம் ஒருவரின் முகத்தைப் பார்த்து தீர்மானம் எடுக்காது, யாரால்
சரியாக சேவையாற்ற முடியும்-? நேர்மையாக யார் செயற்படுவார்? எவரது கொள்கைகள் நாட்டுக்கு நன்மை பயக் கும்?, யார் தகுதியானவர்? என்பதைத் தீர்மானித்து வாக்களிக்கவேண்டும்.-Vidivelli

  • நேர்­காணல்:
    எம்.பி.எம்.பைறூஸ்

Leave A Reply

Your email address will not be published.