குப்பைத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக உறுதி வழங்குபவர்களுக்கே புத்தளம் மக்கள் ஆதரவளிப்பர்

ஆதரவளிப்பர் கட்சி மாறியதாக வெளிவரும் தகவல்களை மறுக்கிறார் நகரபிதா கே.ஏ.பாயிஸ்

0 1,094

ஜனா­தி­பதி தேர்­தலில் கட்­சியின் தலை­மைத்­து­வத்­திற்கு கட்­டுப்­பட்டு, கட்­சியின் தீர்­மா­னத்­துடன் இணைந்தே பய­ணிக்­கிறேன். நான் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் இணைந்­து­விட்டேன் என்று வெளி­யாகும் தக­வல்­களல் எவ்­வித உண்­மையும் இல்­லை­யென புத்­தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரி­வித்தார்.

 

இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,  தலை­வர்கள் எந்தப் பக்கம் நின்­றாலும் புத்­தளம் குப்பைத் திட்­டத்தை யார் நிறுத்­து­வ­தாக வாக்­கு­றுதி தரு­கி­றார்­களோ அவர்­க­ளுக்கே தமது ஒட்­டு­மொத்த வாக்­கு­க­ளையும் வழங்­கு­வது என்று புத்­த­ளத்தில் வாழும் மக்கள் தீர்­மா­னித்து விட்­டார்கள்.

 

நான் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை விட்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு மாறி­விட்­ட­தாக பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கி­றார்கள்.

 

நான் ஒரு­போதும் கட்சி மாறப்­போ­வ­தில்லை. எப்­போதும் எனது தலை­வ­ருக்கு கட்­டுப்­பட்டு நடப்பேன், கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக செயற்­ப­டவும் மாட்டேன்.

 

எனினும், மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட நான் மக்­க­ளு­டைய கருத்­து­க­ளுக்கும், தீர்­மா­னங்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்­டிய கடப்­பாடும் எனக்கு உள்­ளது. கொழும்­பி­லி­ருந்து புத்­தளம் அறு­வக்­காலு பிர­தே­சத்தில் கொட்­டப்­ப­டு­கின்ற குப்­பை­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து பல மாதங்­க­ளாக போராட்­டங்­களை நடத்தி வந்­தார்கள்.

 

ஆனால், இந்த நல்­லாட்சி அர­சாங்கம் அந்த போராட்­டங்­களை மலி­னப்­ப­டுத்தி, கணக்­கி­லேயே எடுக்­க­வில்லை.

 

தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக அண்­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தாச புத்­த­ளத்­திற்கு வருகை தந்து உரை­யாற்றும் போது தான் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டதும் புத்­தளம் குப்பைத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன் என்று சொல்லிச் சென்­றாரே தவிர, முழு­மை­யாக நிறுத்­துவேன் என்று உறு­தி­யான வாக்­கு­று­திகள் வழங்­க­வில்லை. புத்­தளம் குப்பை விவ­கா­ரத்தை அவர் கணக்­கி­லேயே எடுக்­க­வில்லை.

 

கடந்த வாரம் புத்­த­ளத்தில் உள்ள சமயத் தலை­வர்கள், க்ளீன் புத்­தளம் முக்­கி­யஸ்­தர்கள் சகிதம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தாபய ராஜ­ப­க் ஷவை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டிய போது தான் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டால் உட­ன­டி­யாக குப்பைத் திட்­டத்தை நிறுத்­துவேன் என்று வாக்­கு­றுதி வழங்­கினார்.

 

அது­போல சனிக்­கி­ழமை புத்­த­ளத்­திற்கு வருகை தந்த சுயேட்­சை­யாக ஒட்­டக சின்­னத்தில் போட்­டி­யிடும் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிஸ்­புல்­லாஹ்­வையும் மேற்­படி அமைப்­பினர் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

 

அவரும் இந்த குப்பைத் திட்­டத்தை முழு­மை­யாக நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருக்­கிறார். அது­மாத்­தி­ர­மின்றி, எதிர்­வரும் 6 ஆம் திகதி புத்­த­ளத்­திற்கு வருகை தர­வுள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்­க­வையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

 

குப்பைத் திட்­டத்தை முழு­மை­யாக நிறுத்­து­வ­தாக யார் வாக்குறுதிகளை தருகிறார்களோ அவர்களையே ஆதரிக்க வேண்டும் என்பதுதான் புத்தளத்தில் வாழும் மக்களுடைய நிலைப்பாடாகும்.

 

மக்களுடைய இந்த நிலைப்பாடுகள் தொடர்பில் நான் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நேற்று தொடர்புகொண்டு தெளிவுபடுத்தினேன். தொடர்ந்தும் இதுபற்றி கட்சியோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.-Vidivelli

  • புத்தளம் மேலதிக நிருபர்

Leave A Reply

Your email address will not be published.