ஈராக் – ஈரான் எல்­லையில் நில­ந­டுக்கம் 700 இற்கும் மேற்­பட்டோர் படு­காயம்

0 695

ஈராக் -– ஈரான் எல்­லையில்  திங்­கட்­கி­ழமை ஏற்­பட்ட சக்தி வாய்ந்த நில­ந­டுக்­கத்தில் சிக்கி இது­வரை 700 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நா­டு­களின் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இது குறித்து ஊட­கங்கள் தரப்பில், ”ஈராக் – ஈரான் எல்­லையில் உள்ள கெர்­மன்ஷா மாகா­ணத்தை மைய­மாக வைத்து திங்­கட்­கி­ழமை சக்தி வாய்ந்த நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது. இந்த நில­ந­டுக்கம் ரிச்டர் அள­வு­கோலில் 6.3 ஆக பதி­வா­கி­யது. இந்த நில நடுக்­கத்தில் வீடுகள் பல சேத­ம­டைந்­தன. 713 பேர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் உள்­ளனர். அவர்­களில் சிலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. இது­வரை உயி­ரி­ழப்பு ஏதும் இல்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரு­கி­றது” என்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்த நில­ந­டுக்கம் ஈராக்கின் பல மாநி­லங்­க­ளிலும் உண­ரப்­பட்­டது. குறிப்­பாக ஈரானின் சர்போல் இ ஜஹாப் மாவட்­டத்தின் பெரும்­ப­கு­தி­யான கிரா­மங்­களில் உள்ள வீடுகள் சேத­ம­டைந்­த­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்த நில­ந­டுக்கம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தொலைக்­காட்­சியில் பேசும்­போது, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்­யு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன்” என்றார். முன்­ன­தாக, கடந்த ஆண்டும் ஈராக் – ஈரான் எல்லைப் பகு­தியில் ரிச்டர் அளவில் 7.3 ஆக சக்தி வாய்ந்த நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது. அந்த நில­ந­டுக்­கத்தில் 700க்கும் மேற்­பட்டோர் பலி­யா­னமை குறிப்­பி­டத்­தக்­கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.