ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

0 1,193

1. தேசியப் பாது­காப்பு குறித்து

இந்த ஜனா­தி­பதி தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில் தேசிய பாது­காப்பு விட­யா­மா­னது முக்­கி­ய­மா­ன­தொன்­றாக மக்கள் மத்­தியில் இடம்­பி­டித்­தி­ருக்­கின்­றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இந்­நிலை ஏற்­படக் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம். ஒரு நாடு என்ற அடிப்­ப­டையில் தேசிய பாது­காப்பு குறித்து முறை­யான பாது­காப்பு பொறி­மு­றை­யொன்று அமைத்துக் கொள்­வதில் கவனம் செலுத்­து­வது மிக மிக அவ­சி­ய­மான விடயம் என்­பதில் மாற்றுக் கருத்­துகள் இருக்­க­மு­டி­யாது. விஜே­வீர என்­ப­வரால் தெற்கில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டுகள் மற்றும் பிர­பா­கரன் மூல­மாக வடக்கே ஏற்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டுகள் மற்றும் யுத்­தத்தின் பின்னர் சஹ்­ரானின் செயற்­பா­டுகள் என்­பன ஊடாக ஏற்­பட்ட நாச­கார வேலைகள் என்­பன இலங்­கையின் பாது­காப்­புக்­காக மேற்­கொள்­ளப்­பட்ட பாரிய அச்­சு­றுத்­தல்­க­ளாகக் குறிப்­பி­டலாம். முத­லா­வது செயற்­பாடு சிங்­கள செயற்­பா­டா­கவும் இர­ண­டா­வது, மூன்­றா­வது செயற்­பா­டு­களை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்­பா­டு­க­ளாக குறிப்­பி­டலாம்.

எனினும், மேற்­படி செயற்­பா­டுகள் எது­வுமே வானத்­தி­லி­ருந்து வந்து இறங்­கி­ய­வை­யாக குறிப்­பிட முடி­யாது என்­ப­துடன் அவை வெளி­நாட்டின் ஆக்­கி­ர­மிப்பு என்­ப­தா­கவும் கரு­த­மு­டி­யாது. பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னைகள் என எது­வுமே மேற்­படி தீவி­ர­வா­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­க­வில்லை என்­ப­துடன் சமூக அர­சியல் கார­ணங்­களே மேற்­படி தீவி­ர­வா­தங்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருந்­தன. தீவ­ர­வா­தங்கள் தலை­தூக்­காத அடிப்­ப­டையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்­ப­டை­யி­லான பிரி­வி­னை­வா­தங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்­தினை இல்­லாமல் செய்து அனைத்து மக்­க­ளுக்கும் சம­வு­ரிமை மற்றும் சம அங்­கீ­காரம் கிடைக்கும் அடிப்­ப­டை­யி­லான இலங்கை தேச­மொன்று அமைக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் இப்­ப­டி­யான கல­வ­ரங்­களை நாடு எதிர்­நோக்­கா­ம­லி­ருந்­தி­ருக்கும்.

ஜே.வி.பி.யின் இரண்­டா­வது கல­வ­ரத்­தினை முடி­வுக்குக் கொண்­டு­வந்­ததன் பின்னர் இளை­ஞர்­கள்­களின் விரக்தி குறித்து ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்று அப்­போ­தைய ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ச­வினால் நிய­மிக்­கப்­பட்­டது. தெற்கின் சிங்­களக் கல­வ­ரங்­க­ளுக்கும் வடக்கின் தமிழ் கல­வ­ரங்­க­ளுக்கும் சாதி, இன, மத வேறு­பா­டு­களே கார­ண­மாக அமைந்­த­தாக அந்த ஆணைக்­குழு அறிக்­கை­யாக சம­ர்ப்­பித்­தது. சஹ்­ரானின் ஒரு நாள் தற்­கொலைத் தாக்­கு­த­லுக்கு சர்­வ­தேச முஸ்லிம் தீவி­ர­வாதக் குழுக்­களின் தீவி­ர­வாதக் கருத்­துக்­களின் தாக்கம் இருப்­ப­தாகக் கூறப்­பட்­ட­போ­திலும் யுத்த வெற்­றியின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் இதற்குக் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம் என்­ப­தாக கரு­தலாம்.

இரா­ணுவம் மற்றும் புல­னாய்­வுத்­து­றை­களை நவீ­ன­ம­யப்­ப­டுத்தி ஆயத்த நிலையில் வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மான விட­ய­மென்ற போதிலும், தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மெனில் சாதி, இனம், மதம் என்­ப­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கல­வ­ரங்கள் உரு­வா­காத நிலை உரு­வாக்­கப்டல் வேண்டும். சுதந்­திரம் பெற்று 71 வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இவ்­வா­றான சூழ்­நி­லையை உரு­வாக்க முடி­யாத நிலையில் இருக்­கின்ற எமது நாட்டில் மேற்­படி செயற்­பா­டுகள் ஊடாக மாத்­தி­ரமே தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யு­மாக அமையும். இந்த தேவைப்­பாட்­டினை பூர்த்­தி­செய்­யாத நிலையில் பாது­காப்பு படை­யி­ன­ரையும் புல­னாய்வுத் துறை­யி­ன­ரையும் ஆயத்த நிலையில் வைப்­பது எந்த வகையில் தீர்­வாக அமையும்?

(i) இது தொடர்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் கருத்து என்ன?
(ii) சிங்­கள தமிழ் மக்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருக்­கின்ற இனத்­துவம் மற்றும் இன வேறு­பாடு குறித்து கரு­து­வது என்ன?
(iii) இனத்­துவ முறையின் அடிப்­ப­டையில் அழுத்­தத்­திற்கு உட்­பட்­டி­ருக்கும் இனத்­த­வர்கள் மீது வன்­மு­றை­களும் அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­வார்­களா?
(iv) இந்த நிலையைப் போக்கி அவர்­க­ளுக்கும் சம அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ள­வேண்­டிய மீள்­கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கைகள் யாவை?
(v) இன, மத அடிப்­ப­டை­யி­லான பிணக்­குகள் ஏற்­ப­டா­தி­ருக்கும் விதத்தில் சக­வாழ்­வினை ஏற்­ப­டுத்தும் வழி­மு­றைகள் யாவை?
(vi) சிங்­கள, தமிழ் கல­வ­ரத்­துக்கு கார­ண­மாக அமைந்த விட­யங்கள் மற்றும் குறித்த கல­வ­ரத்தை அடக்­கி­யதன் விளை­வாக ஏற்­பட்ட மனி­தா­பி­மா­னத்­துடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆரா­யப்­ப­டுதல் குறித்த நிலைப்­பா­டுகள்; என்ன?

2. பரா­ளு­மன்றம் குறித்து

19 ஆவது சீர்­தி­ருத்­தத்தின் பிர­காரம் அடுத்த ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட்­ட­துடன் நாட்டை நிர்­வா­கிக்கும் சர்­வா­தி­கார அதி­காரம் பாரா­ளு­மன்ற அர­சாங்­கத்­தி­னையே சார்ந்­து­வி­டு­கின்­றது. எனினும் அந்தப் பாரிய பொறுப்­புக்­களை ஏற்று உரிய முறையில் நிர்­வ­கிக்கும் அளவில் இன்­றைய பாரா­ளு­மன்றம் காணப்­ப­டு­வ­தில்லை. மிக­வுமே பல­வீ­ன­ம­டைந்­த­தா­கவும் வினைத்­திறன் குன்­றி­ய­தா­க­வுமே காணப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பெரும்­பா­லா­ன­வர்கள் சட்­டத்­துக்குப் புறம்­பாக அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதன் விளை­வா­கவே இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் வியா­பாரம் செய்­வது அவர்­க­ளது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையே இல்­லா­ம­லாக்­கி­விடும் அளவில் பார­தூ­ர­மான குற்­ற­மாகும். இது கடந்த 40 வரு­டங்­க­ளாக நடை­பெற்­று­வரும் குற்­றச்­செயல் என்­ப­துடன் இந்தக் குற்­றங்­களை சரி­செய்­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை என்­ப­துடன் அவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தனை விரும்­பு­வ­து­மில்லை
(i) ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­களில் சிலர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள கட்­சி­களை சார்ந்­த­வ­ராக இருக்­கின்­றனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது தொடர்­பான பிரச்­சினை குறித்த அவர்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன?

(ii) குறித்த பிரச்­சினை பாரா­ளு­மன்­றத்தின் அபி­மா­னத்­தினை இல்­லா­மல்­செய்யும் ஒன்­றாக கரு­து­மி­டத்து அது தொடர்­பான பாரா­ளு­மன்ற பரி­சோ­தனை ஒன்­றுக்­கான முன்­மொ­ழி­வொன்­றினை தேர்­த­லுக்கு முன்­ன­தாக குறிப்­பி­டு­வ­தற்கு அவர்கள் தயாரா?
(iii) பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ராத கட்­சி­களில் அங்கம் வகிப்­ப­வர்­களின் அபிப்­பி­ராயம் என்ன?

3. சொத்­துக்கள் பொறுப்­புக்கள் குறித்த சட்டம் தொடர்­பாக

முறை­யற்ற விதங்­களில் சொத்­துக்­களை ஈட்­டி­யி­ருக்­கின்ற மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் அரச உய­ர­தி­கா­ரிகள் என்­ப­வர்­களை மக்­க­ளது ஒத்­து­ழைப்­புடன் சட்­டத்­தின்முன் நிறுத்­து­வ­தற்­கான பல­மான ஏற்­பா­டுகள் 1988 ஆம் ஆண்டு 74 ஆம் இலக்கம் மூல­மாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட 1975 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க சொத்­துக்கள், பொறுப்­புக்கள் வெளிப்­ப­டுத்தல் சட்­டத்தின் மூல­மாக வழங்­கப்­ப­பட்­டி­ருக்­கின்­றது. எனினும், அந்த சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­ப­டு­கின்­ற­வர்கள் இல­கு­வாக வெளி­வர முடி­யு­மான அடிப்­ப­டை­யி­லான ஓட்­டை­க­ளு­டனே குறித்த சட்டம் அமைக்­கப்­பட்­டி­ரு­கின்­றது என்­ப­தாகக் குறிப்­பி­டலாம். குறித்த ஓட்­டைகள் அடைக்­கப்­ப­டு­வதன் ஊடாக முறை­கே­டாக சொத்­துக்­களை ஈட்­டு­ப­வர்­களை சட்­டத்தின் பிடிக்குள் கொண்­டு­வர முடி­யு­மான அடிப்­ப­டை­யி­லான சிறந்த சட்­ட­மொன்­றாக மாற்­றி­ய­மைக்­கலாம்.

குறித்த சட்­டத்­திற்­க­மைய சொத்­துக்கள், பொறுப்­புக்கள் என்­ப­வற்றை வெளிப்­ப­டுத்­தா­ம­லி­ருக்கும் ஒரு­வ­ருக்கு எதி­ராக விதிக்க முடி­யு­மான தண்­டப்­ப­ணத்தின் அளவு ரூபா 1000 ஆகும். செத்­துக்கள், பொறுப்­புக்கள் என்­ப­வற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்கும் படி­வம்­கூட இன்­றைக்குப் பொருத்­த­மா­ன­தாக இல்லை. வேண்­டு­மென்றே சொத்­துக்கள், பொறுப்­புக்கள் விபரம் வெளி­யி­டாது இருக்­கின்­ற­வர்­க­ளுக்­கான தண்­டப்­ப­ணத்தை ஐந்து இலட்சம் ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் ஒரு­வ­ருட சிறைத் தண்­டனை வழங்­கு­வது கட்­டா­ய­மாக்­கவும் முடியும். இதற்­காக வழங்­கப்­படும் விண்­ணப்­பங்கள் இலத்­தி­ர­னியல் அமைப்பில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அல்­லது கணக்­காளர் நாய­கத்தின் இணைய தளத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அனைத்து சொத்­துக்கள், பொறுப்­புக்கள் குறித்த விண்­ணப்­பப்­ப­டி­வங்­க­ளையும் காட்­சிப்­ப­டுத்தும் முறை­யொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்த முடியும். இந்த சட்­ட­வாக்­கத்தின் மூல­மாக முறை­கோ­டாக சொத்து சேக­ரிப்­ப­வர்­களை சட்­டத்தின் பிடிக்குள் கொண்­டு­வர முடி­யு­மாக அமையும்.

(i) இது தொடர்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன?
(ii) பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களால் இது தொடர்­பான சட்­ட­வாக்­கத்­திற்­கான முன்­மொ­ழி­வொன்­றினை தேர்­த­லுக்கு முன்­ன­தாக முன்­வைப்­பார்­களா?

4. கல்வி குறித்து

கல்வி என்­பது ஒரு தேசத்தின் முது­கெ­ழும்­பாக கரு­தப்­ப­டு­கின்­றது. காலா­வ­தி­யான ஒன்­றா­கவே நட்டின் கல்வி முறைமை காணப்­ப­டு­கின்­றது. கல்வி, திறன், பெறு­மானம் என­ப­வற்றை சமூ­கத்­திற்கு வழங்­கு­வதன் ஊடாக நேர்­மை­யான கல்விச் சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான இய­லு­மையை இன்­றைய கல்­வி­முறை பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. தேசத்தில் காணப்­ப­டு­கின்ற சாதி, இன, மத பேதங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்­தினை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கும் நட்டின் பொரு­ளா­தார நிலையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் அவ­சி­ய­மான செயற்­பா­டு­களை கல்­வி­முறை வழங்கத் தவ­றி­யி­ருக்­கின்­றது.

மன­ன­மிடும் அடிப்­ப­டை­யி­லான கல்வி முறை ஒன்­றையே முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை­யான கல்வி சார்ந்த கட்­ட­மைப்பில் காண­மு­டி­கின்­றது. இது மாண­வர்­களின் ஆக்கத் திறன்­களை இழக்கச் செய்­கின்ற ஒரு நாச­கார முறைமை என்­பதை கல்வி சார்ந்த அதி­கா­ரி­களும் ஆசி­ரி­யர்­களும் புரிந்­து­கொள்ளத் தவ­றி­விட்­டனர். மன­ன­மிடும் முறை­யா­னது மாண­வர்­களை உள­வியல் ரீதியில் பாதிப்­புள்­ளாக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­துட,ன் இந்­நிலை மாண­வர்­களை போதைப்­பொருள் பாவ­னைக்­குக்­கூட அடி­மைப்­ப­டுத்­து­கின்ற ஒரு கார­ணி­யா­கவும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

மாண­வர்­க­ளுக்கு கணித பாடத்­தினை சரி­யான முறையில் கற்­பிக்கத் தெரி­யாத ஒரு நாடாக இலங்கை காணப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மாக சாதா­ர­ண­தர பரீட்­சையில் கணித பாடத்தில் சித்­தி­ய­டை­யாத மாணவர் விகிதம் 65 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தது. இந்த நிலையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக மாண­வர்கள் ஆர்­வ­மாகக் கற்கும் முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை கல்­விசார் அதி­கா­ரிகள் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்­ளாது சித்­தி­ய­டை­வ­தற்­காகப் பெற­வேண்­டிய ஆகக்­கு­றைந்த புள்­ளிகள் 29 என்­ப­தாக குறைக்­கப்­பட்­டது. அதன்­வி­ளை­வாக தற்­போது கணித பாடத்தில் சித்­தி­ய­டை­வோரின் தொகை 65 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த செயற்­பாடு மாண­வர்­க­ளது கல்வி வளர்ச்­சியில் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

உலக வங்­கியின் கணிப்­புக்­க­மைய ஏனைய தொழில்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது ஆகக் குறைந்த சம்­பளம் வழங்­கப்­படும் தொழி­லாக ஆசி­ரியர் தொழில் கரு­தப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற கல்வி முறை இல­வசக் கல்வி முறை­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் போட்டிப் பரீட்­சை­களில் சித்­தி­ய­டை­வ­தற்­காக மேல­திக வகுப்­புக்­களை நாடியே ஆக­வேண்டும் என்ற நிலை காணப்­ப­டு­கின்­றது.
இந்­நி­லை­யா­னது ஏழ்­மையில் இருப்­ப­வர்­களின் நிலை­களை கல்­வியின் ஊடாக உயர்­வ­டையச் செய்­வ­தற்­கான வாய்ப்­புக்­களை இல்­லா­ம­லாக்­கு­கின்ற ஒரு கார­ணி­யாக மாறி­வி­டு­கின்­றது.

பணம் படைத்­த­வர்­க­ளுக்கு சகல வசதி­க­ளு­டன்­கூ­டிய பாட­சா­லையும் ஏழை­க­ளுக்கு எது­வு­மற்ற பாட­சா­லை­களும் என்ற நிலைதான் இன்­றைய கல்­வி­மு­றையில் காண­மு­டி­கின்­றது. இதன் ஊடா­கவும் ஏழ்­மையில் இருப்­ப­வர்­களின் நிலை­களை கல்­வியின் ஊடாக உயர்­வ­டையச் செய்­வ­தற்­கான வாய்ப்­புக்­களை இல்­லா­ம­லாக்­கு­கின்ற நிலையே உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

சிறந்த கல்­வி­மு­றை­களைக் கொண்ட நாடு­களில் ஆரம்­பப்­பள்­ளி­க­ளுக்கு பிள்­ளை­களைச் சேர்க்­கும்­போது தனது வீட்­டுக்கு கிட்­டிய ஆரம்பப் பாட­சா­லை­களில் ஒன்­றிற்கு அவர்­களை சேர்க்க வேண்­டு­மென்ற முறையே காணப்­ப­டு­கின்­றது.

அனைத்து ஆரம்பப் பாட­சா­லை­களும் கிட்­டத்­தட்ட ஒரே வித­மான தரத்­தினைக் கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. எனவே, பிள்­ளையின் முத­லா­வது பாட­சா­லையை தெரி­வு­செய்­வதில் போட்­டித்­தன்மை ஏற்­பட்டு அதிக பணத்தைச் செல­விட வேண்­டிய நிலை ஏற்­ப­டு­வ­தில்லை. இந்த மாசு­பட்ட நிலை­யினை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யதன் அவ­சி­யப்­பாட்­டினை இளைஞர் விரக்தி ஆணைக்­குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்­குழு என்­பன தமது சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருந்த போதிலும் அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்கள் இந்த முறை­மை­யினை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு இடம்­கொ­டுப்­ப­தில்லை

(i) இலங்­கையின் கல்வி முறை குறித்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற அபேட்­ச­கர்­களின் எண்­ணப்­பா­டுகள் என்ன?
(ii) கல்­வித்­து­றையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் யாவை?

5. பால் மற்றும் இறைச்சிப் பிரச்­சினை

இலங்­கையில் பால்மா இறக்­கு­ம­திக்­காக வரு­டாந்தம் 500 மில்­லியன் அளவில் செல­வா­கின்­றது. இலங்­கைக்குத் தேவை­யான பால்­மா­வினை இலங்­கை­யி­லேயே உற்­பத்தி செய்­து­கொள்­ள­மு­டி­யு­மான நிலை காணப்­பட்ட போதிலும் இறைச்­சிக்­காக மாடு­களை வளர்ப்­பது பாவ­கா­ரியம் என்­ப­தாக நாட்டில் பர­வி­யி­ருக்­கி­னற நம்­பிக்­கை­யா­னது இந்த முயற்­சிக்கு பாரிய தடை­யாக காணப்­ப­டு­கின்­றது. பால் பெறு­வ­தற்­காக மாத்­திரம் மாடு­களை வளர்ப்­பது சாத்­தி­ய­மான ஒன்­றாக இருப்­ப­தில்லை. பாலுற்­பத்­திக்­காக மாடு­களை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்­பத்­தி­யையும் கருத்தில் கொள்­வது பொரு­ளா­தார ரீதியில் சிறந்த பிர­தி­ப­லன்­களை நாட்­டுக்கு பெற்றுத் தரு­வ­தாக அமையும்.

இந்­தியா ஓர் இந்­துத்­துவ நாடு என்­ப­துடன் இந்­துக்கள் பொது­வாக இறைச்சி சாப்­பி­டு­வ­தில்லை. எனினும் உல­கிலே பாரி­ய­ளவில் மாட்­டி­றைச்சி ஏற்­று­மதி செய்­கின்ற நாடாக இந்­தியா காணப்­ப­டு­கின்­றது. 2014 ஆம் ஆண்டில் இந்­தியா 2,087,000 மெட்ரிக் டொன் இறைச்­சியை ஏற்­று­­மதி செய்­துள்­ளது. அது உலக இறைச்சி ஏற்­று­ம­தியில் 20 வீத­மாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்­று­மதி ஊடாக இந்­தியா பெற்­றுக்­கொண்ட வரு­மானம் 478,118 மில்­லி­ய­னாகும்.

மாட்­டி­றைச்சி தொடர்பில் இலங்­கை­யிலும் முறை­யான கொள்­கை­யொன்று அமைக்­கப்­ப­டு­மாயின் பாலுற்­பத்­தியில் தன்­னி­றைவு அடை­வ­துடன் பண்ணைத் தொழி­லினை அபி­வி­ருத்தி செய்ய முடி­யு­மா­கவும் அமையும். இலங்­கையர் மாட்­டி­றைச்சி உண்­ணா­த­வி­டத்து இறைச்­சியை ஏற்­று­மதி செய்­வது ஊடாக அந்­நியச் செலா­வ­ணியை உழைத்­துக்­கொள்ள முடி­யு­மா­ன­தாக அமையும்.

(i) குறித்த பிரச்­சி­னைகள் தொடர்பில் ஜனா­தி­பதி அபேட்­ச­கர்­களின் நிலைப்­பாடு என்ன?
(ii) இறைச்சி உற்­பத்தி தொடர்பில் தேசியக் கொள்­கை­யொன்று வகுக்­க­ப­பட வேண்டும் என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னரா?

6. குப்பைப் பிரச்­சினை தொடர்­பாக

தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற சில இடங்­களில் மலை­போன்று குப்­பை­களைக் கொட்­டி­வி­டு­கின்ற நடை­மு­றை­களே இலங்­கையில் கழி­வ­கற்றல் நட­வ­டிக்­கை­யாக பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது இலங்­கையின் பிர­தான நக­ரங்­களைச் சூழ ஆங்­காங்கே குப்பை மேடுகள் காணப்­ப­டு­வ­துடன் அவ்­வப்­போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடா­கவும் அவற்றில் வெடிப்­புகள் ஏற்­ப­டு­வது ஊடா­கவும் உயிர்ச்­சே­தங்­களும் பொருட்­சே­தங்­களும் ஏற்­ப­டு­வ­தாக அறிய முடி­கின்­றது.

குப்­பைகள் கொட்­டப்­படும் இடங்­களைச் சூழ வசிக்­கின்­ற­வர்கள் எதிர்­கொள்­கின்ற பாத­கங்கள் கருத்தில் கொள்­ளப்­ப­டாத நிலை­யி­லேயே குப்­பைகள் கொட்­டப்­ப­டு­கின்­றன.
(i) இலங்­கையில் கழி­வ­கற்றல் பிரச்­சினை குறித்து ஜனா­தி­பதி அபேட்­ச­கர்­களின் நிலைப்­பாடு என்ன?
(ii) கழி­வ­கற்றல் தொடர்பில் இலங்கை பின்­பற்­று­கின்ற கொள்­கை­களை அவர்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றார்­களா?
(iii) மாற்று நட­வ­டிக்­கைகள் ஏதும் இருக்­கு­மாயின் அவைகள் என்­னென்ன?

7. விவ­சா­யத்­திற்கு கேடு விளை­விக்­கின்ற வன விலங்­குகள் தொடர்பில்

விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுக்கு கேடு விளை­விக்­கின்ற குரங்­குகள், பன்­றிகள், மயில்கள், முள்ளம் பன்­றிகள், மர­அ­ணில்கள் என்­பற்றின் எண்­ணிக்கை கட்­டுப்­பா­டின்றி அதி­க­ரித்­து­வ­ரு­கின்­றன. அதன் விளை­வாக அவைகள் ஊடாக விவ­சா­யத்­திற்கு ஏற்­ப­டுத்­தப்­படும் பாதிப்­புக்­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அர­சாங்­கத்தின் கணக்­கெ­டுப்­புக்கு அமைய மொத்த விவ­சாய உற்­பத்­தி­களில் 30 வீத­மா­னவை விலங்­கு­களால் அழி­வுக்­குள்­ளா­கின்­றன.
எந்த நாடு­க­ளிலும் அள­வுக்­க­தி­க­மாக விலங்­குகள் ஊடாக விவ­சா­யங்­க­ளுக்குப் பாதிப்­பேற்­பட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. ஏதா­வது ஒரு விலங்கு அசா­தா­ரண வேகத்தில் பெரு­கு­கின்­ற­தாயின் அந்த விலங்­கு­களை வேட்­டை­யா­டு­வ­தற்கு பொது­மக்கள் அனு­ம­திக்­கப்­படும் அமைப்­பி­லான கொள்­கைகள் பின்­பற்­றப்­பட வேண்டும். அல்­லது உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் ஊடாக குறித்த விலங்­குகள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­காக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். கங்­காரு அவுஸ்­தி­ரே­லி­யாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அத­னது தொகையை ஒரு மில்­லி­யனால் குறைப்­ப­தற்­கான தீர்­மா­ன­மொன்று அவுஸ்­தி­ரே­லியா அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதன் முதற்­கட்­ட­மாக பத்­தா­யிரம் கங்­கா­ருகள் கொல்­லப்­பட்­டுள்­ளன.

விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்கு கேடு விளை­விக்­கின்ற வன விலங்­கு­களை வேட்­டை­யா­டவும் அவற்றின் இறைச்­சி­களை வைத்­தி­ருக்­கவும் எடுத்துச் செல்­வ­தற்கும் விவ­சா­யி­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தா­னது விவ­சா­யத்­திற்கு கேடு விளை­விக்கும் விலங்­கு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லான சிறந்த தீர்­வாகும்.
(i) குறித்த பிரச்­சினை தொடர்பில் ஜனா­தி­பதி அபேட்­ச­கர்­களின் நிலைப்­பாடு என்ன?
(ii) வன விலங்­கு­களை வேட்­டை­யாட அனு­ம­திப்­பது தொடர்பில் அவர்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன?

8. குற்­ற­வியல் வழக்­குகள் தொடர்­பாக

முன்­னைய அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் ஏற்­பட்­ட­தாகக் குறிப்­பி­டப்­படும் சில குற்­றச்­சாட்­டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசன்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேரைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கிவிடல், போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்படல் என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்ட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நமவடிக்கைகள் என்ன?
(i) இவை தொடர்பில் ஜனாதிபதி அபேட்சகர்களின் நிலைப்பாடு என்ன?
(ii) குறித்த பரிசோதனைகள் மற்றும் வழக்குகள் தெடரப்படவேண்டியவை களா? அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

9. யாப்பு தொடர்பாக

தற்போதைய யாப்பானது அதற்குரிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பொன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரை காலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலகநாடுகள் கருதுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
யாப்பு உருவாக்கும் குழுவில் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21 ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது.
யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தப்படாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அனைத்து துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது.

(i) இவை தொடர்பில் ஜனாதிபதி அபேட்சகர்களின் நிலைப்பாடு என்ன?
(ii) பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்பற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும்? அல்லது யாப்புக் குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா? – Vidivelli

  • விக்டர் ஐவன்
    தமிழில் : ராஃபி சரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.