காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்

0 857

சர்ச்­சைக்­கு­ரிய ஹிமா­லயப் பிராந்­தி­யத்தின் தன்­னாட்சி அதி­கா­ரத்தை புது­டில்லி அர­சாங்கம் நீக்­கி­ய­தோடு அப்­பி­ர­தே­சத்தில் கட்­டுப்­பா­டு­க­ளையும் விதித்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்­மீரில் அமைந்­துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்­டினுள் இந்­தியப் படை­யினர் நுழைந்­தனர்.

48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக இரு சுற்­றுக்­க­ளாக இந்­திய இரா­ணு­வத்­தினால் தான் தாக்­கப்­பட்­ட­தாக 50 வய­தான குழாய் பொருத்­து­ந­ராக வேலை செய்யும் அவர் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பிராந்­தி­யத்தில் இந்­திய இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்­னத்­திற்கு எதி­ராக கிளர்ச்சிக் குழுவில் இணைந்து கொண்ட அவ­ரது இளைய சகோ­த­ரனை கண்­டு­பி­டித்துத் தரு­மாறு கோரி­ய­தோடு அவரை சர­ண­டையச் செய்­யு­மாறு அல்­லது தண்­ட­னையைப் பெறு­மாறு கூறச் சொல்­லியே அவர் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இரண்­டா­வது தடவை இரா­ணுவ முகா­மொன்றில் வைத்து படை வீரர்கள் தான் மயக்­க­ம­டையும் வரை தன் மீது தாக்­குதல் மேற்­கொண்­ட­தாக தார் தெரி­வித்தார். தான் கண் விழித்­த­போது வீட்டில் இருந்­த­தா­கவும் தனது பிட்டப் பகு­தியில் சிராய்ப்புக் காயங்கள் மற்றும் இரத்தம் தோய்ந்­தி­ருந்த நிலைமை கார­ண­மாக தன்னால் நிமிர்ந்து உட்­கார முடி­யா­ம­லி­ருந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் தாக்­கு­தல்கள் முடிந்­து­வி­ட­வில்லை, கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஹெப் ஷிர்மால் கிரா­மத்­தி­லுள்ள அவ­ரது வீட்­டினுள் நுழைந்த படை­யினர் குடும்­பத்­தி­னரின் பயன்­பாட்­டிற்­காக சேமித்து வைத்­தி­ருந்த அரிசி மற்றும் ஏனைய உணவு தானி­யங்­க­ளிலும் உரம் மற்றும் மண்­ணெண்­ணெயைக் கலந்து அவற்றை பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு நாசம் செய்­தனர்.
தார் மீது இந்­தியப் படை­யினர் வன்­மு­றை­களை அல்­லது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது இதுவே முதல் தட­வை­யல்ல.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிராந்­தி­யத்தில் இந்­திய அர­சாங்­கத்­தினால் பாது­காப்புக் கெடு­பி­டிகள் விதிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரால் தமது வீடுகள் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக காஷ­்மீ­ரி­லுள்ள கிரா­மங்­களில் வாழும் மக்கள் ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட நேர்­கா­ணல்­களில் தெரி­வித்­தனர்.

படை­யினர் தம்­மீது தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தா­கவும் மின்­சா­ரத்தை தம்­மீது பாய்ச்­சி­ய­தா­கவும் தெரி­வித்த அவர்கள் அழுக்கை சாப்­பி­டு­மாறும் கழிவு நீரை அருந்­து­மாறும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­தனர். இது தவிர, சேமித்து வைத்­தி­ருந்த உணவுப் பொருட்­களில் நஞ்சைக் கலந்­த­தா­கவும், தமது கால்­ந­டை­களைக் கொன்­று­விட்­ட­த­ாகவும் தெரி­விக்கும் அவர்கள், தமது பெண் உற­வி­னர்­களை அப­க­ரித்துச் சென்று திரு­மணம் செய்து கொள்­வ­தா­கவும் அவர்­களை அச்­சு­றுத்­தி­யு­முள்­ளனர். ஆயி­ரக்­க­ணக்­கான இளம் வய­தினர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதற்குப் பதி­ல­ளித்த ஸ்ரீந­கரில் அமைந்­துள்ள இரா­ணுவத் தலை­மை­யக வடக்குக் கட்­டளைத் தள­ப­தியின் பேச்­சா­ள­ரான கேணல் ராஜேஷ் கேலியா, கிரா­ம­வா­சி­களின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­த­தோடு அக்­க­ருத்­துக்கள் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் இந்­திய இரா­ணு­வத்­தினர் மனித உரி­மை­களை மதிப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வா­தி­களின் நட­மாட்டம் அப்­ப­கு­தியில் காணப்­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன எனவும் கேலியா தெரி­வித்தார்.

தேசி­யத்­திற்கு எதி­ரான மற்றும் தொந்­த­ரவை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் சில இளை­ஞர்கள் நாட்டின் சட்­டத்­திற்கு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

காஷ்­மீரில் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­ட­வில்லை, அங்கு எவ்­வித அட்­டூ­ழி­யங்­களும் இடம்­பெ­ற­வில்லை என இந்­தி­யாவின் உயர்­மட்ட பாது­காப்பு அதி­கா­ரி­யான தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் தோவால் தெரி­வித்தார்.

அவர்கள் எமக்கு மின்­சாரம் பாய்ச்­சினர்

இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடு­க­ளி­னாலும் உரிமை கோரப்­படும் இரு பிராந்­தி­யங்­களில் புது­டில்­லியின் நிரு­வா­கத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் தொடர்பில் திட்­ட­மிட்ட துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் நியா­யத்­தற்கு முர­ணான கைது­க­ளையும் இந்­திய இரா­ணுவம் மேற்­கொள்­வ­தாக காஷ்மீர் மக்­களும் சர்­வ­தேச மனித உரிமைக் குழுக்­களும் தொடர்ச்­சி­யாக பல ஆண்­டு­க­ளாகக் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

பிர­தமர் நரேந்­திர மோடியின் இந்து தேசி­ய­வாத அர­சாங்கம் கடந்த ஆகஸ்ட் 5 ஆந் தேதி காஷ்­மீரின் சுயாட்சி அதி­கா­ரத்தை நீக்கி, ஊர­டங்குச் சட்­டத்தை பிறப்­பித்­த­தோடு தகவல் தொடர்­பு­க­ளையும் முடக்­கிய ஐந்து வாரங்­களில் காஷ்­மீரில் விரக்தி, கோபம் மற்றும் பயம் என்­பன அதி­க­ரித்­துள்­ளன.

மாண­வர்கள் மீண்டும் பாட­சா­லைக்கு செல்­வதை ஊக்­கு­விக்கும் வகை­யிலும், வர்த்­தக நிலை­யங்­களை மீண்டும் திறக்­கக்­கூ­டிய வகை­யிலும் பிர­தான நக­ரான ஸ்ரீந­கரின் சில கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டி­ருந்­தாலும், வன்­முறை மற்றும் அச்­சு­றுத்­தலின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் புகார்­களை முன்­வைக்­கின்­றனர். அங்கு காணப்­படும் அடக்­கு­மு­றைகள் ஆயுதக் கிளர்ச்­சியில் ஈடு­ப­டு­ப­வர்கள் மற்றும் மாற்றுக் கருத்­து­டை­யோரை அடக்­கு­வ­தற்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டவை போன்று காணப்­ப­டு­வ­தாக கிரா­மப்­புற மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

படை­யி­னரால் இரவு நேரத் தேடு­தல்­க­ளின்­போது மேற்­கொள்­ளப்­படும் துஷ்­பி­ர­யோ­கங்கள் காஷ்­மீ­ருக்கு எதி­ராக புது டில்லி அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் தொடங்­கிய ஆகஸ்ட் மாத முற்­ப­கு­தி­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­ன­தாக குறைந்­தது 200 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட நேர்­கா­ண­லி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் என உத்­தி­யோ­பூர்­வ­மாக அழைக்­கப்­படும் மாநி­லத்­திற்கு சில அர­சியல் சுயாட்சி மற்றும் காணி தொடர்­பான உரி­மை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்த பல தசாப்த கால அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களை இந்­திய அர­சாங்கம் வலி­தற்­ற­தாக்­கி­ய­தை­ய­டுத்து அதன் அந்­தஸ்தில் மாற்றம் ஏற்­பட்­டது.

அந்த மாநிலம் தற்­போது தரம் குறைக்­கப்­பட்டு சமஷ்டி அர­சாங்­கத்தின் இரு ஆள்­புலப் பிர­தே­சங்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் செற்­பாடு உச்ச நீதி­மன்­றத்தில் சவா­லுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

பரிகாம் கிரா­மத்தில் வெதுப்­பகத் தொழில்­பு­ரியும் சனா­உல்லாஹ் சோபியின் குடும்­பத்­தினர் தமது வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது இரா­ணு­வத்­தினர் திடீ­ரென அவர்­க­ளது வீட்­டினுள் நுழைந்­தனர். படை­யினர் தனது இரு ஆண் பிள்­ளை­க­ளையும் வீதிக்கு இழுத்துச் சென்று துப்­பாக்­கியின் பின்­பக்­கத்­தி­னாலும் இரும்புச் சங்­கி­லி­க­ளி­னாலும் தடி­க­ளி­னாலும் தாக்­கி­ய­தாக சோபி தெரி­வித்தார்.

எனது பிள்­ளை­களை நடுத்­தெ­ருவில் போட்டு காட்டு மிராண்­டித்­த­ன­மாக இரா­ணு­வத்­தினர் தாக்­கி­ய­போது அவர்கள் வீரிட்டு அழு­தனர். என்னால் எதுவும் செய்ய முடி­யாத நிர்க்­கதி நிலையில் நின்­றி­ருந்தேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

சிறிது நேரத்தில் மேலும் 10 இளை­ஞர்கள் இரா­ணு­வத்­தி­னரால் கிரா­மத்தின் மத்­திய பகு­திக்கு அழைத்து வரப்­பட்­டனர். இந்­தி­யா­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களின் பெயர்­களை கூறு­மாறு கேட்­டனர். என ஆகஸ்ட் 7 ஆந் திகதி இடம்­பெற்ற சம்­ப­வத்­தினை நினைவு கூரு­கின்றார் சோபியின் 20 வயது மக­னான முஸப்பர் அஹமட்.

எங்­க­ளது முது­கிலும் கால்­க­ளிலும் மூன்று மணி­நே­ர­மாகத் தாக்­கினர், அவர்கள் எமக்கு மின்­சா­ரத்தைப் பாய்ச்­சினர் எனத் தெரி­வித்த அஹமட் தனது மேலா­டை­யினை உயர்த்தி முதுகில் இருந்த எரி­கா­யங்­க­ளையும் சிரா­ய்ப்புக் காயங்­க­ளையும் காண்­பித்தார்.

நாங்கள் அவர்­க­ளிடம் எங்­களை விட்­டு­வி­டு­மாறு மன்­றா­டினோம் ஆனால் அவர்கள் மேலும் ஆத்­தி­ர­முற்று கடு­மை­யாகத் தாக்­கினர். அழுக்­கு­களை உண்­ணு­மாறும் சாக்­கடை நீரை அருந்­து­மாறும் எம்மை நிர்ப்­பந்­தித்­தனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

அதி­காலை வேளையில் படை­யினர் எம்மை கைவிட்டுச் சென்­றனர். நாம் வலி­யினால் துடித்­துக்­கொண்­டி­ருந்தோம் என்று தெரி­வித்த வெதுப்­பகப் பணி­யா­ள­ரான முஸப்பர் அஹமட், தானும் தனது மூத்த சகோ­த­ரனும் மேலும் சுமார் எட்­டுப்­பேரும் ஒரு அம்­பி­யுலன்ஸ் வண்­டியில் ஒட்­டு­மொத்­த­மாக ஏற்­றப்­பட்டு ஸ்ரீந­க­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்­றிற்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டது தொடக்கம் குறைந்­தது 3,000 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர், இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் இளை­ஞர்­க­ளாவர் என பொலிஸ் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். சர்­வ­தேச ஊடக நிறு­வ­ன­மொன்­றினால் பதி­வே­டு­களும் பார்­வை­யி­டப்­பட்­டன.

பொதுப் பாது­காப்புச் சட்­டத்­தினை மீறி­ய­தாக சுமார் 120 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இச் சட்­டத்தின் பிர­காரம் விசா­ர­ணைகள் எது­வு­மின்றி இரு வரு­டங்­க­ளுக்கு ஒரு­வரை தடுத்­து­வைக்க முடியும்.

ஆயி­ரக்­க­ணக்­கானோர் பொலிஸ் பாது­காப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்குக் காரணம் அர­சுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களில் அவர்கள் பங்­கு­பற்­றி­வி­டாமல் தடுப்­ப­தற்­கே­யாகும்.

சிலர் விடு­விக்­கப்­பட்டு சில நாட்­களின் பின்னர் மீண்டும் வரு­மாறு அழைக்­கப்­ப­டு­கின்­றனர். சிலர் பகல்­பொ­ழுதில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் இரவில் விடு­விக்­கப்­ப­டு­கின்­றனர். இரவில் அவ­ரவர் வீடு­களில் உறங்­கி­யதன் பின்னர் மீண்டும் மறுநாள் காலையில் அழைத்து வரு­மாறு பெற்­றோர்கள் பணிக்­கப்­ப­டுன்­றனர்.

பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து, 1940 களி­லி­லி­ருந்து காஷ்மீர் தொடர்­பான முரண்­பாடு தொடர்ந்து வரு­கின்­றது. இரு நாடு­களும் காஷ்மீர் தொடர்பில் இரண்டு யுத்­தங்­களில் ஈடு­பட்­டுள்­ளன. அப்­பி­ராந்­தி­யதின் ஒவ்­வொரு பகு­தி­யினை இரு நாடு­களும் நிரு­வ­கித்து வரு­கின்­றன.

இந்­தியா ஆரம்­பத்தில் தனது நிர்­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்மீர் பிர­தே­சத்தில் இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளையே கட்­டுப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.
எவ்­வா­றெ­னினும், தொடர்ச்­சி­யான அர­சியல் குழப்­பங்கள், மீறப்­பட்ட வாக்­கு­று­திகள், மாற்றுக் கருத்­து­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட பகு­தியில் 1989 ஆம் ஆண்டு இந்­திய கட்­டுப்­பாட்­டிற்கு எதி­ரான ஐக்­கிய காஷ்­மீ­ருக்­கான பெரும் ஆயுதப் போராட்­ட­மாக வெடித்­தது. காஷ­்மீ­ருக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட வேண்டும் அல்­லது பாகிஸ்­தா­னுடன் இணைக்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் முன்­வைக்­கப்­பட்­டது.
பாகிஸ்­தா­னு­ட­னான மறை­முக யுத்­த­மாக இந்­தியா கரு­து­கின்ற இந்த முரண்­பாட்டில் இது­வரை சுமார் 70,000 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இரா­ணு­வத்­தி­ன­ரதும் பரா இரா­ணுவப் பொலி­ஸா­ரி­னதும் தொடர் ரோந்து இடம்­பெறும் இப்­பி­ராந்­தியம் உலகில் மிகப் பாரிய அளவில் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தே­ச­மாகக் காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பா­லான காஷ்மீர் மக்கள் இந்­திய இரா­ணு­வத்தின் பிர­சன்­னத்தை வெறுப்­ப­தோடு கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றனர்.

காஷ்­மீ­ரி­லுள்ள புதிய தலை­மு­றை­யினால் இப் போராட்டம் புது வடிவம் பெற்­றுள்­ளது. புது­டில்­லியின் நிரு­வா­கத்­திற்கு துப்­பாக்­கி­க­ளி­னாலும், சமூக வலைத்­த­ளத்­தி­னாலும் சவால் விடுக்­கின்­றனர்.

கடந்த டிசம்பர் மாதம் இந்­திய பாரா இரா­ணுவத் தொட­ரணி மீது முழு­மை­யான வெடி­பொருள் நிரப்­பப்­பட்ட வேன் ஒன்­றினைக் கொண்டு சென்று காஷ்மீர் தற்­கொ­லை­தா­ரி­யொ­ருவர் மோதி வெடிக்கச் செய்­ததில் 40 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு இரண்டு டசி­னுக்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர். இந்த சந்­தர்ப்­பத்தில் கிளர்ச்­சிக்­கா­ரர்­களைக் கையாள்­வ­தற்கு அர­சாங்கப் படை­யி­ன­ருக்கு ‘முழு­மை­யான சுதந்­திரம்’ வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அறி­வித்தார்.

இந்­தியப் படை­யினர் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் உடல் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தின் மூலமும் சட்­டத்­திற்குப் புறம்­பான கைதுகள் மூல­மா­கவும் பொது­மக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக மனித உரிமைக் குழுக்கள் தொடர்ச்­சி­யாக பல ஆண்­டு­க­ளாக இந்­தியா மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றன. இதனை மறுக்கும் இந்­திய அதி­கா­ரிகள் இந்தக் குற்­றச்­சாட்­டினை பிரி­வி­னைக்­கான பிர­சாரம் எனத் தெரி­விக்­கின்­றனர்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் மனித உரிமைக் குழுக்­க­ளினால் முன்­வைக்­கப்­படும் துஷ்­பி­ர­யோகக் குற்­றச்­சாட்­டுக்­களில் பாலியல் வன்­பு­ணர்வு, புணரச் செய்தல், தண்ணீர் ஊற்றி சித்­தி­ர­வதை செய்தல், பிறப்­பு­றுப்­புக்­களில் மின்­சாரம் பாய்ச்­சுதல், எரி­கா­யங்­களை ஏற்­ப­டுத்­தல் மற்றும் தூங்க விடாது தடுத்தல் என்­பன உள்­ள­டங்­கி­யுள்­ளன.

காஷ்­மீரில் இடம்­பெறும் பாலியல் வன்­பு­ணர்வு, சித்­தி­ர­வதை மற்றும் சட்­டத்­திற்கு புறம்­பான கொலைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் சம்­பந்­த­மாக சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை­யொன்று நடத்­தப்­பட வேண்­டு­மென கடந்த வருடம் ஐக்­கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. அந்த அறிக்கை பொய்­யா­ன­தென இந்­தியா மறுத்­தது.

தற்­போது இடம்­பெற்­று­வரும் நட­வ­டிக்­கை­களில் பாது­காப்புப் படை­யி­னரின் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பான புதிய அறிக்­கைகள் தொந்­த­ரவு தரு­வ­ன­வா­க­வுள்­ள­தாக முன்­னணி மனித உரி­மைகள் சட்­டத்­த­ர­ணி­யான பர்வேஸ் இம்ரோஸ் தெரிவித்தார்.

பரந்த அப்பிள் தோட்டங்களைக் கொண்ட கிராமங்களில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் படையினர் வரும்போது பயமும் கோபமும் கலந்த உணர்வினை தெளிவாகக் காணமுடிகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாத முற்பகுதியி லிருந்து கிராமத்திலுள்ள தனது வீட்டை படையினர் ஏழு தடவைகள் சோதனையிட்டுள்ளதாகவும் அவர்கள் வருவதற்கு முன்னதாக தனது மகளை வேறு ஓர் இடத்திற்கு அனுப்பி விடுவதாகவும் 60 வயதான அப்துல் கானி தார் தெரிவித்தார்.

எனது மகனைத் தேடி வருவதாக அவர்கள் கூறுவார்கள் ஆனால் எனக்குத் தெரியும், அவர்கள் எனது மகளைத் தேடியே வருகின்றனர் என கண்ணீருடன் அப்துல் கானி தார் தெரிவித்தார்.

திருமணம் செய்து கொள்வதற்காக எமது சிறுமிகளை கொண்டு செல்லவுள்ளதாக படையினர் அச்சுறுத்தியதாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவித்தனர்.

வெற்றிபெற்ற இராணுவத்தினர் போல எமது வீடுகளுக்குள் அவர்கள் நுழை கின்றனர். எமது உயிர்கள், சொத்துக்கள் மற்றும் கௌரவத்தின் மீது தமக்கு உரிமை இருப்பது போன்று செயற்படுகின்றனர் என அரிஹாலில் வசிக்கும் நாஸிர் அஹமட் பட் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாத முற்பகுதியில் ராபிக் அஹமட் லோனே வெளியே சென்றி ருந்தபோது வீட்டினுள் படையினர் நுழைந்தனர்.

எமது வீட்டை சோதனையிடுவதற்கு தம்முடன் வருமாறு படையினர் எனது மனைவியை அழைத்துள்ளனர். அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததும் துப்பாக்கியின் பின்புறத்தினாலும் தடிகளினாலும் அவளைத் தாக்கியுள்ளனர் என லோனே தெரிவித்தார். எனது மனைவி தாக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் தமது சேவலையும் கொன்றுவிட்டதாக லோனே மேலும் தெரிவித்தார்.

நன்றி: அல் ஜஸீரா

தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.