அச்சுறுத்தும் தற்கொலை

0 2,349

மனி­தர்­க­ளாக பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்க்­கையின் ஒவ்­வொரு கட்­டத்­திலும் பல்­வேறு பிரச்­சி­னை­களை சந்­திப்­பார்கள். அந்த அனு­ப­வங்கள் நல்­ல­வை­யா­கவும் அமை­யலாம். கெட்­ட­வை­யா­கவும் அமை­யலாம். ஆனாலும் இந்த அனு­ப­வங்கள் மூலம் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்கும் காயங்­க­ளுக்­காக வேண்டி தமது ஆயுளை முடித்­துக்­கொள்ள வேண்டும் என எண்­ணு­வது நிச்­ச­ய­மாக ஒரு பிழை­யான தெரி­வாகும். 

உல­க­ளவில் வரு­டாந்தம் 800,000 தற்­கொ­லைகள் இடம்­பெ­று­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்தின் அறிக்கை கூறு­கி­றது. நாம் கடந்து செல்லும் ஒவ்­வொரு 40 நொடி­க­ளிலும் ஒரு­வரை தற்­கொ­லையின் மூலம் இழக்­கின்றோம். தற்­கொலை முயற்­சி­களின் எண்­ணிக்கை இதைவிட 25 மடங்கு அதி­க­மாகும். தற்­கொ­லை­க­ளுக்கு மன­நிலைப் பிரச்­சினை மாத்­தி­ர­மில்­லாமல் உயி­ரியல், உள­வியல் மற்றும் சமூக கார­ணிகள் போன்­ற­னவும் கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. இருந்­த­போ­திலும் உலகில் இடம்­பெறும் 90% மான தற்­கொ­லைகள் மன அழுத்­தத்­தி­னா­லேயே இடம்­பெ­று­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

குடும்­பத்தில் யாரா­வது ஒருவர் தற்­கொலை செய்து கொள்ளும் பட்­சத்தில் மர­ப­ணுவின் அடிப்­ப­டையில் அவ்­வா­றான முயற்­சிகள் தோன்­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் கடத்­தப்­ப­டு­கின்­றன. உல­க­ளா­விய ரீதியில் கடந்த 45 வரு­டங்­களில் 60% இனால் தற்­கொ­லை­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 14 -– 45 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்­களின் மர­ணத்­திற்கு தற்­கொலை ஒரு பிர­தான கார­ணி­யாக விளங்­கு­கின்­றது.

தற்­கொ­லைக்கு மன­அ­ழுத்தம் ஒரு பாரிய கார­ண­மாக இருப்­பதால் தமக்கு ஏற்­பட்ட சோகத்தின் அடிப்­படைக் கார­ணங்­களைக் கண்­டு­பி­டித்து அவற்றை வேரோடு பிடுங்கி எறி­ய­வேண்டும். அல்­லது சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கு குறித்த சோகத்தை இல்­லா­ம­லாக்க அரு­கி­லுள்ளோர் உதவ வேண்டும்.

ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­துவ விஞ்­ஞானப் பிரிவின் மன­நல விரி­வு­ரை­யா­ளரும் கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையின் மன­நல மருத்­து­வ­ரு­மான வைத்­தியர் ஜயமல் டீ சில்வா தற்­கொலை தொடர்­பாக தெரி­விக்­கையில், நாங்கள் இன்று பாடல் காணொ­லி­க­ளிலும் கலைப்­ப­டைப்­புக்­க­ளிலும் அதி­க­மாக தற்­கொலை தொடர்­பான விட­யங்­களை பார்க்­கிறோம். இது தற்­கொலை எண்­ண­மு­டை­ய­வர்­க­ளுக்கு தற்­கொலை செய்து கொள்­வ­தற்­கான வழி­யினை தோற்­று­விக்­கின்­றது. இவை தொடர்­பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்­டிய பாரிய பொறுப்பு சமூ­கத்­துக்கு உள்­ளது என்றார்.

சுமித்­ரயோ

இலங்­கையில் தற்­கொ­லை­களை தடுப்­ப­தற்­காக வேண்டி சுமித்­ரயோ என்ற அமைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. தற்­கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்­று­ப­வர்கள் இந்த அமைப்பின் உத­வியை நாடும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு உள­வள ஆலோ­சனை மற்றும் வழி­காட்­டல்கள் என்­பன வழங்­கப்­படும்.

உள­வியல் ரீதி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இவர்­களைத் தொடர்­பு­கொள்­ளும்­போது உணர்வு ரீதி­யான உறு­துணை குறித்த நபர்­க­ளுக்கு வழங்­கப்­படும். அத்­துடன் இவ்­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கங்கள், பாட­சா­லைகள் மற்றும் பின்­தங்­கிய கிரா­மங்­க­ளுக்குச் சென்று தற்­கொலைத் தடுப்பு தொடர்­பான விழிப்­பு­ணர்வு செயற்­றிட்­டங்­க­ளையும் நடத்­து­கின்­றது.

“நான் சுமித்­ர­யோவில் இணைந்த பின்னர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுடன் நட்பு ரீதி­யாக இருக்­கிறேன். அது என்­னு­டைய பொறுப்பு. வழ­மை­யாக மக்கள், செய்ய வேண்­டிய விட­யங்­க­ளையும் செய்­யக்­கூ­டாத விட­யங்­க­ளையும் பற்றி பேசு­வ­தற்கு தயங்­கு­வார்கள் ஆனால் சுமித்­ரயோ அதற்கு பூரண சுதந்­திரம் வழங்­கு­கின்­றது” என அமைப்பின் அங்­கத்­த­வ­ரான த­க் ஷிலா குமாரி தெரி­விக்­கின்றார்.

சுமித்­ரயோ அமைப்பின் ஆய்­வின்­படி இலங்­கையில் வடமேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­மான தற்­கொ­லைகள் இடம்­பெ­று­கின்­றன. பிங்­கி­ரிய, கட்­டு­பொத்த மற்றும் ஹெட்­டிப்­பொல ஆகிய வடமேல் மாகாண கிரா­மங்கள் அதி­க­மான தற்­கொலை இடம்­பெற்ற கிரா­மங்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன.

எதற்­காக தற்­கொலை?

ஏதா­வ­தொரு செயற்­பாட்­டினால் தன்­னைத்­தானே மாய்த்­துக்­கொள்ளும் தற்­கொலைச் செய­லினை கோழைத்­தனம் என்றோ ஒரு­வரின் பல­வீனம் என்றோ கரு­தி­விட முடி­யாது. மன­வள ஆய்­வா­ளர்கள் மற்றும் உள­வி­ய­லா­ளர்­களின் கருத்­துப்­படி தற்­கொலை என்­பது ஒரு நோயாகும். அதை ஒரு பல­வீ­ன­மாகக் கரு­து­வது பிழை­யாகும்.

மனி­தர்­க­ளுக்குத் தோன்­று­கின்ற பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­யில்­லாத போதும் அது தொடர்­பான விடயங்­களை பகிர்ந்­து­கொள்ள யாரும் இல்­லாமல் இருத்தல் அல்­லது பகிர்ந்து கொள்ள முடி­யாமல் இருத்தல் போன்ற கார­ணங்­களால் தற்­கொலை மன­நிலை தோன்­று­கின்­றது.

தொழில் கிடைக்­காமை, பொரு­ளா­தார பிரச்­சினை, குடும்ப விவ­கா­ரங்கள், காதல் விவ­கா­ரங்கள், போதை, மன­நல கோளாறு, நிரந்­தர நோய் அல்­லது உடற்­கோ­ளாறு போன்ற விட­யங்கள் ஒரு மனி­த­னுக்கு ஏற்­ப­டும்­போது தற்­கொலை எண்ணம் பிறக்­கி­றது.

இவை­த­விர பாலியல் ரீதி­யான கவலை, பெற்­றோ­ரு­ட­னான முரண்­பாடு, சொத்­தி­ழப்பு, பரீட்­சையில் தோல்வி, பாலியல் இய­லாமை போன்ற கார­ணங்­க­ளாலும் தற்­கொலை எண்ணம் தோன்­று­கின்­றது. பிர­தா­ன­மாக மேற்­கு­றிப்­பிட்ட கார­ணங்­க­ளி­னா­லேயே அதி­க­மான தற்­கொ­லைகள் இடம்­பெ­று­கின்­றன.

நமது கடமை என்ன?

ஒரு சரா­சரி மனி­தனின் சிந்­த­னைக்கும் தற்­கொலை எண்ணம் உடைய ஒரு­வரின் சிந்­த­னைக்­கு­மி­டையில் அதி­க­ள­வான வித்­தி­யா­சங்கள் உள்­ளன. எனவே எமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கும் பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நேரம் ஒதுக்­கு­வது ஒரு உயிரை வாழ­வைக்கும் செயற்­பாடு என்­பதை முதலில் நாம் உணர வேண்டும்.

உங்­க­ளு­டைய நண்­பர்கள் அல்­லது மன­ரீ­தி­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என நீங்கள் உணரும் நபர்­களை முடிந்­த­வரை சமா­தானம் செய்ய முயற்சி செய்­யுங்கள். அவர்­களை தனி­மையில் விடா­தீர்கள். பாதிக்­கப்­பட்­டவர் தனது மனதிலுள்ள விட­யங்­களை உங்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தும்­போது தற்­கொலை எண்­ணத்தை கைவி­டலாம். அதற்கு நீங்கள், ‘உனக்கு நான் இருக்­கிறேன்’ என நம்­பிக்கை கொடுத்து அதை அவ­ருக்கு உணர வைக்க வேண்டும்.

சுமித்­ரயோ அமைப்பின் பண்­டு­வஸ்­நு­வர பிர­தேச அதி­கா­ரி­யான பி.எம். த­க் ஷிலா குமாரி இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில், நாம் எதிர்­கொள்ளும் விடயம் எது­வாக இருப்­பினும் அந்த விட­யத்தில் நெகிழ்­வுத்­தன்­மை­யுடன் செயற்­பட வேண்டும். ஒரு­வ­ருடன் நட்­பாக வேண்டும் என்றால் நாம் அவரைப் புரிந்­து­கொள்ள வேண்­டுமே தவிர அவர் மீது பரி­தா­பப்­ப­டு­வது மாத்­திரம் தீர்­வைத்­த­ராது. உணர்வு ரீதி­யாக பல­வீ­ன­ம­டைந்த ஒரு­வ­ருக்கு இவ்­வா­றுதான் உதவ வேண்டும். நாம் அவர்கள் சொல்ல வரும் விட­யங்­களை கேட்க வேண்­டுமே தவிர அவர் பேச விரும்­பாத ஒரு விடயம் பற்றி பேசும்­படி வற்­பு­றுத்­து­வது ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல.

தற்­கொலை செய்­ய­வேண்டாம் என நாம் யாருக்கும் அறி­வு­றுத்­து­வ­தில்லை. தற்­கொலை என்­பது ஒரு பாரிய உள­வியல் தப்­பிப்பு. சிலர் தற்­கொலை செய்­வது ஒரு தனி­ம­னித சுதந்­திரம் எனக் கரு­து­கி­றார்கள். தற்­கொலை என்­பது நாட்­டுக்கோ வீட்­டுக்கோ அந்த நப­ருக்கோ அல்­லது சமூ­கத்­துக்கோ ஆரோக்­கி­ய­மான ஒரு விடயம் கிடை­யாது. ஆனால் தற்­கொலை செய்து கொள்­பவர் இதைப்­பற்­றி­யெல்லாம் சிந்­திப்­ப­தில்லை என்றார்.

சமூக ஆர்­வ­ல­ரான குமு­தினி டீ சில்வா தற்­கொலை தொடர்­பாக தெரி­விக்­கையில், இன்­றைய சமூக வலைத்­த­ளங்­களும் ஸ்மார்ட் தொலை­பே­சியும் தற்­கொ­லை­க­ளுக்கு பாரிய கார­ணங்­க­ளாக அமைந்து விடு­கின்­றன. அனை­வரும் சமூக வலைத்­த­ளங்­க­ளுக்குள் மூழ்­கும்­போது நம்மில் யாரோ ஒருவர் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்றார். கைப்­பேசி மீது கொண்ட மோகத்­தினால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அந்த நபரின் நடத்தை மாற்றம் அவ­ரு­டைய பிரச்­சி­னைகள் பற்றி சிந்­திக்க நாம் நேரம் ஒதுக்­கு­வது கிடை­யாது.

நீங்கள் உண்­மை­யாக அந்த நபர் மீது அக்­கறை எடுத்­துக்­கொள்­ப­வ­ராக இருந்தால் குறைந்­தது 5-–10 நிமிடம் வரை அவர்­க­ளுடன் உரை­யாட வேண்டும். அவரை ஒரு தேநீர் கடைக்கு அழைத்துச் செல்­லலாம். அப்­போது தனது பிரச்­சி­னை­களை பேச வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். சில விட­யங்­களை பேசாமல் மன­துக்­குள்­ளேயே வைத்­தி­ருப்­பது எமது சமூ­கத்தில் உள்­ள­வர்­களின் வழக்­க­மாக ஆகி­விட்­டது. மேலும் எமது சமூ­கத்தில் உள்­ள­வர்கள் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­போது உள­வள ஆலோ­சனை பெறு­வ­தற்குச் செல்­வ­தில்லை. என்றார்.

தற்­கொலை மன­நிலை உடை­ய­வரா நீங்கள்?

துர­திஷ்­ட­வ­ச­மாக நீங்கள் தற்­கொலை மன­நிலை உடை­ய­வ­ராக இருந்தால் அந்த எண்­ணத்தை மாற்றிக் கொள்­வது இல­கு­வா­னதே. இதற்­காக மாற்­றத்தை நீங்கள் உங்­க­ளது மன­நி­லையில் இருந்தே கொண்­டு­வர வேண்டும்.

எப்­போதும் தனி­மையில் இருக்­கா­தீர்கள். தனிமை தற்­கொ­லையைத் தூண்டும். உங்­களை நேசிப்­ப­வர்­க­ளுடன் முடிந்­த­வரை நேரத்தை செலவு செய்­யுங்கள். அவர்கள் எப்­போதும் உங்­க­ளு­டைய சந்­தோ­சத்தைப் பற்றி சிந்­திப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். அவர்­க­ளிடம் உங்­க­ளது பிரச்­சி­னை­களை பகிர்ந்து கொள்­ளுங்கள். மனி­தர்கள் ஒவ்­வொ­ரு­வரும் ஏதோ ஒரு வகையில் பிரச்­சி­னை­களைக் கொண்­ட­வர்­கள்தான் என்ற யதார்த்­தத்தை உண­ருங்கள். ஆன்­மி­கத்தின் பக்கம் உங்கள் கவ­னத்தை திருப்­புங்கள். இறை­வ­னிடம் உங்­க­ளது பிரச்­சி­னை­களைச் சொல்லி மன்­றா­டுங்கள். நிச்­ச­ய­மாக உங்­க­ளது பிரச்­சினை எது­வாக இருப்­பினும் அதற்கு ஆன்­மீக ரீதி­யான தீர்வு கிடைக்கும்.

வாழ்க்­கையில் நடந்த சந்­தோ­ஷ­மான விட­யங்­களை மனதில் நினை­யுங்கள். அவற்றை மீண்டும் திரும்­பப்­பெற முயற்சி செய்­யுங்கள். சமூ­கத்தின் பார்வை பற்றி சிந்­திக்­காமல் உங்­க­ளுக்கு பிடித்­ததை செய்­யுங்கள். தனி­மையை தவிர்த்து வெளி­யேறிச் செல்­லுங்கள். தேவை­யற்ற சிந்­த­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வையுங்கள். இந்த செயற்­பா­டு­களின் மூலம் நிச்­ச­ய­மாக தற்­கொ­லைக்கு முடிவு கட்­டலாம்.

உலக சுகா­தார நிறு­வனம் தெரி­விப்­பது என்ன?

செப்­டம்பர் 10 ஆம் திகதி உலக தற்­கொலை தடுப்பு தினத்தை முன்­னிட்டு உலக சுகா­தார நிறு­வனம் ஒரு அறிக்­கை­யினை கடந்த வாரம் வெளி­யிட்­டி­ருந்­தது. அதில், குடும்பம், உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்­களை பொறுத்­த­வரை ஒவ்­வொரு இறப்பும் பார­தூ­ர­மா­ன­வை­யாகும். எனினும் தற்­கொ­லையைத் தடுக்க முடியும். நிரூபிக்­கப்­பட்ட தற்­கொ­லை­யினைத் தடுக்கும் தந்­தி­ரோ­பா­யங்­களை உறு­தி­யான முறையில் தேசிய சுகா­தார மற்றும் கல்வி நிகழ்ச்­சித்­திட்­டங்­களில் உள்­வாங்­கு­மாறு நாம் அனைத்து நாடு­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுக்­கின்றோம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 5 ஆண்­டு­களில் பல நாடு­களில் தற்­கொலை தடுப்பு, தேசிய தந்­தி­ரோ­பா­யங்­களில் அதி­க­ரித்­துள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது..
உயர் வரு­மானம் பெறு­கின்ற நாடு­க­ளி­லேயே தற்­கொலை வீதம் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச ரீதி­யாக 15 – 29 வய­துக்கு இடைப்­பட்ட இளம் பரா­யத்­தி­னரின் இறப்­புக்குக் கார­ண­மான இரண்­டா­வது கார­ணி­யாக தற்­கொலை காணப்­ப­டு­கின்­றது. முத­லா­வது கார­ணி­யாக வீதி விபத்து காணப்­ப­டு­கின்­றது எனவும் அவ்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­கான சூழ­லுக்கு செல்­வதைத் தடுத்தல், தற்­கொலை தொடர்பில் பொறுப்­புடன் அறிக்­கை­யிடும் வகையில் ஊட­கங்­க­ளுக்கு அறி­வூட்­டுதல், இளம்­ப­ரா­யத்­தினர் மத்­தியில் வாழ்க்­கைத்­தி­றனைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உதவும் வகை­யி­லான நிகழ்ச்­சிகள் மற்றும் ஆபத்­தான நிலை­யினை ஆரம்ப நிலை­யி­லேயே அடை­யா­ளப்­ப­டுத்­துதல் போன்­ற­வற்றின் மூலம் தற்­கொ­லையைக் குறைக்­கலாம் எனவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­கொ­லையை தடுப்­பதில் ஊட­கங்களின் பங்கு

தற்­கொ­லை­களைத் தடுப்­பது ஒரு பாரிய சவா­லாக உள்ள போதிலும் அதைத்­த­டுப்­ப­தற்கு பங்­க­ளிப்­பது ஊட­கங்களின் பாரிய பொறுப்­பாகும். இன்று ஒரு சில ஊட­கங்கள் தற்­கொலை தொடர்­பாக அறிக்­கை­யி­டும்­போது பல தவ­று­களை விடு­கின்­றன.

பல நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே ஊடகங்கள் பங்காற்றி வருகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல. இந்த நிலைமையை மாற்றியமைக்க ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயக்கடனாகும்.

தற்கொலைகளை அறிக்கையிடும்போது தற்கொலை செய்து கொண்டமுறை, அதற்கு பயன்டுத்தப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை எழுதுவது கூடாது. நஞ்சருந்தி உயிரிழந்திருக்கும் பட்சத்தில் பயன்படுத்தப்பட்ட நஞ்சு அல்லது நச்சு வாயு போன்றவற்றின் பெயர்களை சுட்டுவது கூடாது. அவ்வாறு குறித்த பெயர்களை பதிவிடுவதால் ஏற்கனவே தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு தற்கொலை செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.

மனிதனின் வாழ்க்கை ஒரே சீராக சென்றால், அது அவனுக்கு சுவாரஷ்யமான வாழ்க்கையாக இருக்காது என்பதற்காகத்தான் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான். ஏமாற்றமாய் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் உறுதியான அஸ்திவாரங்கள். ஆனால் இதனை அறிந்து கொள்ளாத மனிதனோ தன் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக நடக்கும்போது தன்னையே மாய்த்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவால் இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அவதியுறுவதை எண்ணி உயிர் ஊசலாடும் போது வருந்துகிறான்.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.