முஸ்லிம் தனியார் சட்ட வரைபு துரிதப்படுத்தப்பட வேண்டும்

0 1,317

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு ஒரு தசாப்­த­காலம் நிறை­வ­டைந்து விட்­டது.

தற்­போ­தைய ஓய்­வு­நிலை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான குழு ஒன்­பது வரு­ட­கா­ல­மாக பல்­வேறு மட்­டத்தில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி தனது அறிக்­கையை கடந்த வரு­டமே நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் கைய­ளித்­தது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இத்­தனை வரு­டங்­களா? என்று பலரும் வியப்­புக்­குள்­ளா­கினர். திருத்தக் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளுக்­கி­டையே சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சுகள் தொடர்பில் நில­விய கருத்து முரண்­பா­டு­களே தாம­தத்­திற்குக் கார­ண­மாகும்.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கருத்து முரண்­பா­டு­க­ளுடன் கூடிய சிபா­ரிசு அறிக்­கையே சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குழு அங்­கத்­த­வர்­களில் சிலர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் பிள­வு­பட்டு தனி­யான சிபார்­சு­களைச் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலை­வரும், பொதுச் செய­லா­ளரும் இணைந்­தி­ருந்­தனர்.

சட்­டத்­தி­ருத்த விட­யங்­களில் பிள­வு­பட்­டி­ருந்த குழு அங்­கத்­த­வர்­களை ஒரு­மு­கப்­ப­டுத்தி சிபா­ரி­சு­களை நீதி­ய­மைச்சர் பெற்­றுக்­கொள்ள முயற்­சித்­தாலும் அது கைகூ­டாமற் போகவே, திருத்­தங்கள் தொடர்பில் இறுதித் தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் பொறுப்­பினை நீதி­ய­மைச்சர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல தட­வைகள் ஒன்­று­கூடி ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் ஒரு சில விட­யங்­களைத் தவிர பெரும்­பா­லான விட­யங்­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கி­னார்கள். அந்தத் திருத்­தங்­க­ளுக்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யிலே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா குறிப்­பிட்ட சட்­ட­வ­ரைபை உடன் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­படி கடி­த­மொன்­றினை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­முக்கு அனுப்பி வைத்­துள்ளார். இக்­க­டி­தத்தின் பிர­திகள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கபீர் ஹாஷி­முக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பான செய்­தியை எமது பத்­தி­ரி­கையில் நேற்று முன்­பக்க பிர­தான செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்தோம்.

இவ்­வ­ருட இறு­தியில் நாம் ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­நோக்­கி­யுள்ளோம். அர­சியல் கள நிலைமை எவ்­வாறு அமையும் என எதிர்வு கூற­மு­டி­யாத நிலை­யிலே நாட்டின் அர­சியல் நிலைமை தினமும் மாற்றம் கண்டு வரு­கி­றது.

‘ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளதால், அதற்கு முன்பு உட­ன­டி­யாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். தவறும் பட்­சத்தில் நாம் கூட்­டாக மேற்­கொண்ட முயற்­சிகள் தேவைப்­ப­டாத ஒன்­றா­கி­விடும்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா தனது கடி­தத்தில் எதிர்வு கூறி­யி­ருக்­கிறார்.

அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள திருத்­தங்கள் காலத்­துக்கு ஏற்­ற­ன­வாகும். முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு மேம்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. முழு­நேர காதி­நீ­தி­ப­தி­க­ளாக இஸ்­லா­மிய சட்டம் பயின்ற ஆண் சட்­டத்­த­ர­ணிகள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளார்கள். பெண்கள் முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளார்கள். திரு­மணப் பதிவு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. பல­தார மணத்­துக்கு கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இத்­தி­ருத்­தங்­க­ளினால் சமூகம் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.

காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாமல் செய்வதற்காக பெரும்பான்மையின ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயலில் இறங்கியுள்ளன. காதிநீதிபதிகள் தொடர்பாக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இச்சூழ்நிலையில் இக்கட்டமைப்பைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அமைச்சர் ஹலீம் இதனையுணர்ந்து உடனடியாக செயலில் இறங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவுடன் இணைந்து நாமும் குரல் கொடுக்கிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.