ஜனாஸா தொழுகை மறுப்பு விவகாரம் : மாதம்பிட்டி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிவாசல் சம்மேளனம் விசாரணை

0 961

கொழும்பு, மாதம்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழு­கை­யொன்று நடாத்த அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலையில் பள்­ளி­வாசல் வளா­கத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லையில் குறிப்­பிட்ட ஜனாஸா தொழுகை நடத்­தப்­பட்­ட­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் விசா­ர­ணை­யொன்­றினை நடாத்­தி­யது.

அறி­யாமல் செய்த இந்த தவ­றுக்கு சம்­பந்­தப்­பட்ட மஸ்ஜித் நிர்­வாகம் ஜனா­ஸா­வுக்கு உரிய குடும்ப அங்­கத்­த­வர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­ய­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

நடை­பெற்ற விசா­ர­ணையில் பாதிக்­கப்­பட்ட ஜனா­ஸா­வுக்கு சொந்­த­மான குடும்ப உறுப்­பி­னர்­களும், பள்­ளி­வாசல் நிர்­வாகம், கொழும்பு வடக்கு மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் மொஹமட், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இது தொடர்பில் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வா­றான சம்­ப­வங்கள் இதன்­பி­றகு கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அத்­தோடு நாட­ளா­விய ரீதியில் எந்தப் பள்­ளி­வா­ச­லிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் தவிர்க்­கப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மாதம்பிட்டி பள்ளிவாசலில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு 3 ஆம் தரப்பே காரணமாக இருந்துள்ளது என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.