துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் சேர் ராசிக் பரீட்

0 1,304

பெரும்­பான்­மை­யின, சிறு­பான்­மை­யின சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் வெறும் போடு­காய்­க­ளாக பாவிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை சுட்­டிக்­காட்­டிய மறைந்த சேர் ராசிக் பரீட், நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்­றியும் பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் அதிகம் பேசி­யி­ருக்­கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்தின் 75ஆவது ஆண்டு நிறை­வை­யொட்­டிய அதன் பவ­ள­விழா நிகழ்வில் அதி­தி­களில் ஒரு­வ­ராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் கூறினார்.

இந்­நி­கழ்வு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­ற­போது சேர் ராசிக் பரீட்டின் பாரா­ளு­மன்ற உரைகள் அடங்­கிய நூலொன்றும் வெளி­யி­டப்­பட்­டது.

இதில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பிர­தம அதி­தி­யா­கவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர். சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன ஆகியோர் அதி­தி­க­ளா­கவும் கலந்­து­கொண்டு உரை­யாற்­றினர். சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலைய தலைவர் ஓமர் காமில் நிகழ்­வுக்குத் தலைமை தாங்­கினார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரை­யாற்­றும்­போது கூறி­ய­தா­வது;
சேர் ராசிக் பரீட் கால­னித்­துவக் காலத்­திலும் சுதந்­தி­ரத்­திற்கு பிந்­திய பாரா­ளு­மன்ற ஜன­நா­யக காலத்­திலும் இலங்கை முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பிர­தி­ப­லிப்­ப­வ­ராக விளங்­கினார். அவர் மூதவை உறுப்­பி­ன­ரா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் நீண்­ட­காலம் சேவை­யாற்­றினார். 1893இல் டிசம்பர் 29ஆம் திகதி செல்­வந்த குடும்­ப­மொன்றில் பிறந்த அவர் சமூக அந்­தஸ்தும் செல்வச் செழிப்பும் மிக்­க­வ­ராக விளங்­கினார்.

1915ஆம் ஆண்டும் இனக்­க­ல­வ­ரத்தின் போதும் முத­லா­வது உலகப் போர் முரசு அறை­யப்­பட்டுக் கொண்­டி­ருந்த போதும் கொழும்பு நகர காவற்­ப­டையில் ஒரு லெப்­டினன் ஆகவும் அவர் பணி­யாற்­றி­யி­ருக்­கின்றார்.

கொழும்பு றோயல் கல்­லூரி மாண­வ­ரான ராசிக் பரீட் பின்­னாளில் புகழ்­பூத்த இலங்­கையின் அர­சி­யல்­வா­தி­யான முன்னாள் பிர­த­மர்­க­ளான டீ.எஸ். சேனா­நா­யக்க, டட்லி சேன­நா­யக்க, சேர் ஜோன் கொத்­த­லா­வல, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்­டா­ர­நா­யக்க, ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க போன்­றோ­ருடன் நல்­லு­றவைப் பேணி­வந்தார். தீவிர அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பின்னர் பாகிஸ்­தா­னிய இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ராவும் பணி­யாற்­றினார்.

அவ­ரது தந்தை டபிள்யூ.எம். அப்துல் ரஹ்மான் சட்­ட­சபை உறுப்­பி­ன­ராக இருந்­த­தோடு அவ­ரது பாட்­டனார் அரசி மரைக்கார், வாப்­பிச்சி மரைக்கார் ஒரு கட்­ட­டக்­கலை நிபு­ண­ராக திகழ்ந்­த­தோடு கால­னித்­துவ ஆட்­சியின் நினைவுச் சின்­னங்­களில் ஒன்­றாக மிளிர்ந்து கொண்­டி­ருக்கும் தேசிய நூத­ன­சா­லையின் சிற்­பி­யா­கவும் இன்றும் போற்­றப்­ப­டு­கின்றார்.

அவ­ரது பாட்­டனார் கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியை ஸ்தாபித்தார். சேர் ராசிக் பரீட் பம்­ப­லப்­பிட்டி முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரியை ஆரம்­பித்­தது மட்­டு­மல்ல, முஸ்லிம் பெண்­களின் கல்வி மேம்­பா­ட்­டிற்­காக அதற்­கான நிலத்­தையும் அன்­ப­ளிப்புச் செய்தார்.

தன்­ன­ல­மற்ற சேவை­யி­னூ­டாக பொது­வாக வறிய மக்கள் வாழ்ந்த கொழும்பு நகரின் பின்­தங்­கிய பிர­தே­சங்­களில் அவர் மகப்­பேற்று நிலை­யங்­க­ளையும் மருத்­து­வ­ம­னை­க­ளையும் நிறு­வினார். கால­னித்துவக் காலத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான காலத்­தி­னூ­டாக தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­காக பாடு­பட்ட அதே­வே­ளையில் தான் சார்ந்த சமூ­கத்தின் தனித்­துவ அடை­யா­ளத்­தையும் கலா­சார விழு­மி­யங்­க­ளையும் பேணிப்­பா­து­காப்­ப­திலும் அவர் அதிக கவனம் செலுத்­தினார்.

வாழ்க்­கையில் தனக்­கென சில குறிக்­கோள்­களை கொண்­டி­ருந்த அவர், 1930ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபையின் உறுப்­பி­ன­ரானார். கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து விடு­பட்டு, விடு­த­லையை வேண்டி நின்ற தேசப்­பற்­றா­ளர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செய­லாற்ற துணிந்த அவர் முஸ்­லிம்­களின் அர­சி­யலில் சமூக அர­சியல் செல்­நெ­றியை வகுப்­பதில் ஓர­ள­வுக்கு முன்­னே­றி­யி­ருந்தார்.
கிழக்கு மாகாண அர­சி­ய­லிலும் அவ­ரது கரி­சனை இருந்­தது. நூலொன்றில் இவ்­வாறு எழு­தி­யுள்ளார். “கல்­கு­டாவை எடுத்துக் கொண்டால் 40 வீத முஸ்லிம் சனத்­தொ­கையும், இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யான மட்­டக்­க­ளப்பில் 25 வீத முஸ்­லிம்­களும் காணப்­ப­டு­கின்­றனர். ஆகையால் சோன­கர்­களும், தமி­ழர்­களும் அங்கு மகிழ்ச்­சி­க­ர­மான குடும்­பத்­தி­ன­ராக இருப்­பார்கள்” என்றார்.
அக்­கா­லத்தில் அகில இலங்கை சோனகர் சங்­கத்­தி­ன­ருக்கும், அகில இலங்கை முஸ்லிம் லீக்கிற்­கு­மி­டையே போட்டி நிலைமை காணப்­பட்­டது.

சிங்­க­ளத்தை அரச கரு­ம­மொ­ழி­யாக்கும் சட்­டத்தை அவர் வர­வேற்­றதன் பின்­ன­ணியில் இந்­திய சமூ­க­வி­ய­லாளர் ஒருவர் எழு­தும்­போது, மேலா­திக்க சிங்­கள தேசி­ய­வாத நிகழ்ச்சி நிரலை சேர் ராசிக் பரீட் ஆத­ரித்­த­தற்கு ஏது­வாக வச­தி­ப­டைத்த மற்றும் அர­சி­யலில் தீவிர ஈடு­பாடு கொண்ட முஸ்­லிம்கள் சிங்­கள மொழி பேசப்­படும் பிர­தே­சங்­க­ளி­லேயே வசித்து வந்­த­தனால் ஆகும் என்­கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளை விடு­முறை தின­மாக ஆக்­கு­வ­தற்கு அவர் முன்­வைத்த கோரிக்­கையை அவ­ரது வார்த்­தை­க­ளி­லேயே சொல்­லு­வ­தென்றால், “மன்­னிக்­கவும், அன்று நான் இங்­கி­ருக்­க­வில்லை. பௌத்­தர்கள் 12 நாட்­களை மேல­திக விடு­முறை தினங்­க­ளாக பெறும் பொழுது முஹம்மத் நபி (ஸல்) அவர்­க­ளது பிறந்த நாள் விடு­முறை மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நான் பௌத்­தர்­களின் உரி­மை­க­ளுக்கு எதி­ரா­ன­வ­னல்ல. ஆனால் முஸ்­லிம்­களின் உரி­மை­களை பறிக்­கா­தீர்கள். இந்த நாட்டில் வாழும் ஆறு இலட்சம் முஸ்­லிம்­க­ளுக்கு உரிய உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். நாங்கள் எங்­க­ளது உரி­மை­க­ளையே கேட்­கின்றோம். இது ஒரு சுதந்­தி­ர­மான நாடு நாங்கள் சுதந்­தி­ர­மா­கவே எங்­க­ளது வாக்­கு­களை வழங்­கினோம்” என்றார்.

சேர் ராசிக் பரீட் ஒரு­போதும் வார்த்­தை­களை மாற்றிப் பேசி­யவர் அல்லர். இந்­திய முஸ்லிம் பூர்­வீக அடை­யாளம் என்­ப­தை­விட இலங்கை சோனகர் என்ற அடை­யா­ளப்­ப­டுத்­த­லுக்கு அவர் முக்­கி­யத்­துவம் வழங்­கினார். கரை­யோர முஸ்­லிம்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார். இலங்கை சோனகர் என்ற வார்த்தைப் பிர­யோ­கத்தில் அவர் பிடி­வா­த­மாக இருந்தார். குறு­கிய ‘பழங்­கு­டி­வாத’ சிந்­தனைப் போக்­கிற்கு எதி­ரான கருத்­துக்கள் அவ­ரது பாரா­ளு­மன்ற உரை­களில் வெளிப்­பட்­டன.

ஒரு சமயம் அவர் பிர­தமர் டட்லி சேன­நா­யக்­கா­விற்கு சவால் விட்டார். “இங்கு யாரா­வது கௌரவ உறுப்­பி­னர்கள் தங்­க­ளது தந்­தையின் பிறப்புச் சான்­றி­தழ்­களை சமர்ப்­பிக்­க­லாமா?” என்றார். அதற்கு டட்லி “முடி­யாது” என்றார். சேர் ராசிக் பரீட் தொடர்ந்தார். “மறைந்த பிர­த­ம­ருக்கு அவ­ரது பிறப்புச் சான்­றிதழ் இருந்­ததா? இல்லை. எனக்குத் தெரியும் சேர் சொலமன் டயஸ் பண்­ட­ர­நா­யக்­கவை இங்கு ஏனை­ய­வர்­களை விட எனக்குத் தெரியும். அவ்­வாறே தேசத்தின் தந்தை டீ.எஸ். சேனா­நா­யக்­கா­வையும் எனக்குத் தெரியும். அவர்கள் எவ­ரி­டமும் தந்­தை­யாரின் பிறப்புச் சான்­றிதழ் இருக்­க­வில்லை. முன்னாள் பிர­தமர் டீ.எஸ். சேனா­நா­யக்க இந்­திய மற்றும் பாகிஸ்தான் பிர­ஜை­களின் (பிரஜா உரிமை மசோதா) நீங்கள் எங்கே? இலங்கை சோன­கர்­களை பொறுத்­த­வரை இலங்கைச் சோனகர் ஒவ்­வொ­ரு­வரும் இலங்கை பிர­ஜை­க­ளா­கவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அந்த வாக்­கு­று­தியை பிரஸ்­தாப சட்ட மூலம் முன்­வைக்­கப்­பட்ட போது தேசத்தின் தந்தை (டீ.எஸ். சேனா­நா­யக்க) எனக்கு வழங்­கி­யி­ருந்தார் என்றார்.

சேர் ராசிக் பரீட்டின் பாரா­ளு­மன்ற உரை­களில் மரண தண்­ட­னையை ஒத்­தி­வைத்தல், வாடகை குடி­யி­ருப்­பா­ளர்­களின் வீடுகள் தொடர்­பான விடயம் இலங்கை அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் பற்­றி­யவை என்­பன முக்­கி­ய­மா­னவை.
அவர் நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்றி பேசி­யி­ருக்­கின்றார். அணிந்­தி­ருந்த நேர்த்­தி­யான தூய உடையில் கோட்டில் ஓர்கிட் மலர் அலங்­க­ரிக்­கத்­தக்­க­தாக அவர் பேசி­ய­தெல்லாம் கல்­குடா, காத்­தான்­குடி, கண்டி மற்றும் கிரிந்த போன்ற இலங்­கையின் பல்­வேறு பாகங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் துய­ரக்­க­தை­யை­யே­யாகும். குரல் எழுப்ப சக்­தி­யற்­றி­ருந்­த­வர்­க­ளுக்­காக அவர் குரல் கொடுத்தார்.

1958ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்தைப் பற்றி அவர் பாரா­ளு­மன்­றத்தில் பேசிய பொழுது 1915ஆம் ஆண்டு மற்றும் 1958ஆம் ஆண்டு கல­வ­ரங்கள் இருண்ட நாட்கள் என்றார். அவை பற்றி குறிப்­பி­டா­விட்டால் நான் எனது கடமையில் தவறிவிட்டவனாகி விடுவேன் என்றார்.

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்கள் ஆக பாவிக்கப்படுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களாக வாழ்கின்ற போதிலும் இலங்கையர் என்ற தேசிய உணர்வுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை சேர் ராசிக் பரீட் வலியுறுத்தி வந்­தி­ருக்­கின்றார். விடாப்­பி­டித்­தனம், பிரத்­தி­யே­க­வாதம் என்­ப­வற்றில் ஊறிப்­போ­யி­ருந்த முஸ்­லிம்­களின் ஒரு சாராரை சரி­வர நெகிழ்வுத் தன்­மை­யுடன் நெறிப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர் பாடு­பட்­டி­ருக்­கின்றார்.

சேர் ராசிக் பரீட்டின் அணு­கு­மு­றையைப் பொறுத்­த­வரை எமது மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்­க­ளிடம் சில ஒத்­த­தன்­மைகள் காணப்­பட்­டன. அர்த்­த­புஷ்­டி­யு­ட­னான அதி­காரப் பர­வ­லாக்கம் பற்­றிய தலைவர் அஷ்ரப் அவர்களின் பார்வை சேர் ராசிக் பரீட்டின் நோக்கிலிருந்து அதிகம் வேறுபடவில்லை என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.