சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டிபி முதன் முறையாக இஸ் ரேல் விஜயம்

0 737

இஸ்ரேல் மற்றும் சாட் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு தரப்பு உறவு 1972 ஆம் ஆண்டு துண்­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து சாட் நாட்டு ஜன­ாதி­பதி இத்ரிஸ் டிபி முதன் முறை­யாக இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யா­ஹுவைச் சந்­தித்­துள்ளார்.

பாது­காப்பு தொடர்­பான விட­யங்கள் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் இரு தலை­வர்­களும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தென வர்­ணித்துக் கொள்ளும் இச்சந்­திப்பு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜெரூ­ச­லத்தில் இடம்­பெற்­றது.

நாம் எமது தொடர்­பு­களை முழு­மை­யாகத் துண்­டித்­தி­ருக்­க­வில்லை. ஆனால் தற்­போது நாம் மிக விரை­வாக விரி­வாக்கம் செய்து வரு­கின்­றோ­மென சந்­திப்பின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய நெட்­டன்­யாஹு தெரி­வித்தார்.

இதனை நாம் அனைத்து விட­யங்­க­ளிலும் செய்­ய­வுள்ளோம். எல்­லா­வற்­றிற்கும் முதலில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போரட்டம் இருக்கும் எனத் தெரி­வித்த நெட்­டன்­யாஹு, தான் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஆபி­ரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்ய விருப்பம் கொண்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களை மீள உரு­வாக்கும் நோக்­குடன் புதிய யுக­மொன்­றினை உரு­வாக்க இரு நாடு­களும் உறு­தி­பூண்­டுள்­ள­தாக இத்ரிஸ் டிபி தெரி­வித்தார்.

பலஸ்­தீன விவ­காரம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த இத்ரிஸ் டிபி, இஸ்­ரே­லு­ட­னான உறவை மீள உரு­வாக்கிக் கொள்­வ­தென்­பது நீண்­ட­கா­ல­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள சமா­தான முன்­னெ­டுப்­புக்­களில் உள்ள நாட்டின் கரி­ச­னையில் எவ்­வித மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தாது எனவும் தெரி­வித்தார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையேயான சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஆழமான பற்றுதலுடன் சாட் இருப்பதாக இத்ரிஸ் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.