ஹொர­வப்­பொத்­தானையில் கைதான ஐவரின் வங்கிக்கணக்கில் ரூபா 100 கோடி இருந்ததா?

0 982

அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹொர­வப்­பொத்­தான பொலிஸார் ஐவரைக் கைது செய்­தனர். இவர்கள் ஐவரும் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

அவர்கள் கைது செய்­யப்­பட்ட மறு­தினம் மே மாதம் 25 ஆம் திகதி இந்­நாட்டின் பிர­தான தேசிய பத்­தி­ரி­கை­யொன்றின் முன்­பக்க செய்தி பின்­வ­ரு­மாறு தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

“சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா” என்று அச்­செய்தி பிர­தான தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு அச்­செய்­தி­யுடன் தொடர்­பான கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் ஐவரின் புகைப்­ப­டங்­களும் பிர­சு­மா­கி­யி­ருந்­தன.

இவ்­வாறு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் நால்வர் கெபித்தி கொல்­லாவ பொலிஸ் பிரி­விற்கு உட்­பட்ட எல்­ல­வெவ கிரா­மத்தை சேர்ந்­த­வர்­க­ளாவர். அவர்கள் நூஹு சக­ரியா, செய்னுல் ஆப்தீன் இர்பான், லெப்பே தம்பி ஜெஸ்மின், செய்னுல் ஆப்தீன் கலீ­பத்­துல்லா ஆவார்கள். மற்­றவர் ஹொரவப்­பொத்­தான பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிவு­லே­கட கிராமத்தைச் சேர்ந்த மொஹிதீன் பாவா நவுபர் என்­ப­வ­ராவார்.

குறிப்­பிட்ட தேசிய பத்­தி­ரி­கையின் செய்தி பின்­வ­ரு­மாறும் தெரி­வித்­தி­ருந்­தது. ”அடை­யாள அட்டை இலக்­கங்கள் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் இந்­நாட்டின் சில நபர்­க­ளி­னது வங்கி கணக்கின் ஊடாகவும் இப்­பணம் கிடைக்கப் பெற்­றுள்­ளது” என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
வங்கிக் கணக்­கு­க­ளுக்கு 100 கோடி ரூபா கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் கணக்கில் 100 கோடி ரூபா உள்­ள­தா­கவும் எந்­தவோர் சட்ட பிரி­வி­ட­மி­ருந்து தங்களுக்கு எதி­ராக இது­வரை குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்கள் தெரி­விக்­கி­றார்கள். பத்­தி­ரி­கையின் தவ­றான, உண்­மைக்­குப்­பு­றம்­பான செய்­தி­யினால் அவர்கள் சமூ­கத்தில் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

மொழிப் பிரச்­சினை கார­ண­மாக எங்­களின் விப­ரங்­க­ளையும் இது தொடர்­பான உண்மை நிலை­யி­னையும் சிங்­கள ஊட­கங்­க­ளுக்குத் தெரி­விக்க முடி­யாத இக்­கட்­டான நிலையில் தாம் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கி­றார்கள். இதனால் தாம் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கி­றார்கள்.

செய்­தியில் காணப்­படும் பிரச்­சி­னைகள்

குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்தி, சம்­பவம் தொடர்­பான வழக்கின் ‘பி’ அறிக்கை பொலி­ஸா­ரினால் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்பே கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருப்­ப­தாக அந்த ஊட­க­வி­ய­லா­ள­ரினால் எவ்­வாறு தீர்­மா­னிக்க முடியும். ஊட­க­வி­ய­லாளர் இந்தத் தக­வல்­களை நம்­பிக்­கை­யான தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டாரா? செய்­தியை பிர­சு­ரிப்­ப­தற்கு முன்பு அச் செய்தி உண்­மை­யா­னது என உறுதி செய்து கொண்­டாரா? நீதி­மன்ற தீர்ப்­பொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு சம்­பந்­தப்­பட்ட ஐவரும் சஹ்­ரானின் குழு­வினைச் சேர்ந்­த­வர்கள் என்று குறிப்­பி­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு கிடைத்த நம்­பிக்­கை­யான சாட்­சிகள் என்ன? சந்­தேக நபர்கள் ஐவரும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அவர்­க­ளது தெளி­வான புகைப்­ப­டங்­களை ஊட­கத்தில் வெளி­யிட்­டது எவ்­வாறு? செய்­தியில் குறிப்­பிட்­டுள்­ள­தன்­படி பொலிஸார் இந்த விப­ரங்­களை வழங்­கி­யி­ருந்தால் அந்த விப­ரங்கள் முறை­யான விசா­ர­ணை­களின் பின்பு வழங்­கப்­பட்­ட­னவா-? என்னும் வினாக்கள் குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்­தியை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தும்­போது எழு­கின்­றன.

விசா­ரணை அறிக்கை

கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் ஐவர் தொடர்பில் பயங்­க­ர­வாதம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு பொலி­ஸா­ரினால் கெபித்திகொல்­லாவ நீதிவான் நீதி­மன்­றுக்கு சமர்­ப்பிக்­கப்­பட்ட “பி” அறிக்­கையும் வெளி­யா­கி­யுள்­ளது. “பி” அறிக்கை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளி­யிடப்பட்­டுள்­ளது. ஆனால் சட்ட ரீதி­யான இந்த அறிக்­கை­களில் கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருந்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டில்லை.

ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி

இந்தக் கைது மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ரொஷான் சஞ்­சீவ எம்­மிடம் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட இந்த ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருந்­த­தாக நானோ, பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த எவரோ ஒரு­போதும் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­க­வில்லை. குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த தவ­றான கருத்­து­களால் ஹொர­வப்­பொத்­தான பொலிஸும் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலை­யத்­துக்கு எதி­ராக விசா­ர­ணை­யொன்றும் நடத்­தப்­பட்­டது.

பொலிஸ் மூலம் ஏதா­வது ஊடக அறிக்கை அல்­லது விப­ரங்கள் வெளி­யிப்­பட வேண்­டு­மென்றால், நான் முதலில் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரை தொடர்பு கொள்வேன். அச்­செய்தி அவ­சி­ய­மா­ன­தென்றால் ஊடகப் பேச்­சா­ளரே ஊட­கங்­க­ளுக்கு அதனை வெளி­யி­டுவார். அல்­லாது நான் ஒரு­போதும் ஊட­கங்­க­ளுக்கு தக­வல்­களை வழங்­கு­வ­தில்லை என்றார்.

கெபித்தி­கொல்­லாவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி

சந்­தேக நபர்கள் ஐவரும் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு கெபித்­தி­கொல்­லாவ பொலி­ஸுக்கு அழைக்­கப்­பட்டு வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது என சந்­தேக நபர்கள் ஐவரின் குடும்ப அங்­கத்­த­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். இது தொடர்பில் கெபித்­தி­கொல்­லாவ பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் விசா­ரித்தோம்.

சந்­தேக நபர்கள் ஐவரும் சஹ்­ரானின் குழுவைச் சேர்ந்­த­வர்கள் என்றோ 100 கோடி ரூபா வங்கிக் கணக்­கு­களில் வைத்­தி­ருக்­கி­றார்கள் என்றோ எனக்கு எந்தத் தக­வலும் கிடைக்­க­வில்லை அவர்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் கொள்­ளை­களை பரப்­பு­வது தொடர்­பாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களை அடுத்தே அவர்­களை பொலி­ஸுக்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்தேன். இந்­நி­லையில் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸா­ரினால் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கெபித்­தி­கொல்­லாவ பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை நிறுத்த வேண்­டி­யேற்­பட்­டது என கெபித்­தி­கொல்­லாவ பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்

கைது செய்­யப்­பட்­ட­வர்­களின்சமூகப் பின்­னணி

கைது செய்­யப்­பட்ட எஸ்.ஏ. இர்பான் எல்­ல­வெவ கிரா­மத்தை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வ­ராவார். அவ­ரது மனைவி பாத்­திமா சாஹிதா. அவர் எம்­மிடம் இவ்­வாறு தெரி­வித்தார்.

100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள எனது கண­வ­ரிடம் குறைந்­தது வங்­கியில் சேமிப்புக் கணக்­கொன்­று­கூட இல்லை. எங்­க­ளுக்கு வங்கிக் கணக்­குகள் இல்லை. லைசன் இல்லை, வாகனம் மாத்­தி­ர­மல்ல எங்­க­ளுக்கு இருப்­ப­தற்கு ஒரு இடம் கூட இல்லை. நாங்கள் மிகவும் கஷ்­டப்­பட்டே வாழ்க்­கையை நடத்­து­கிறோம். இப்­ப­டி­யி­ருக்­கும்­போது அந்தப் பத்­தி­ரிகை எம்­மிடம் 100 கோடி ரூபா இருந்­த­தாக எப்­படிக் கூற­மு­டியும். அன்று பொலிஸார் வீட்­டுக்கு வந்து நீண்­ட­நேரம் சோதனை நடத்­தி­னார்கள். என்­றாலும் எங்­க­ளி­டம எதுவும் இருக்­க­வில்லை. அவர்­களால் எதையும் கண்டு பிடிக்­க­மு­டி­ய­வில்லை’ என்றார்.

ஒரு பிள்­ளையின் தந்­தை­யான இர்பான் பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்­றிய மௌல­வியும் பள்­ளியில் கல்வி கற்­பித்­த­வ­ரு­மாவார். அவ­ரது மனைவி தொழில் செய்­யா­தவர். இர்­பா­னுக்கு சொந்­த­மாக வீடு இல்லை. அவர் தனது மனைவி, பிள்­ளை­யுடன் 5 குடும்­பங்கள் வாழும் சிறிய வீடொன்­றிலே வாழ்­கிறார். அந்த வீட்டில் 5 குடும்­பங்­களைச் சேர்­நத 15 பேர் வாழ்­கி­றார்கள்.

‘பள்­ளியில் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தினமும் 2 கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே சென்­ற­டை­வார். சைக்கிள் வண்­டி­யொன்­றினை வாங்­கு­வ­தற்குக் கூட அவ­ருக்கு வச­தி­யில்லை’ என இர்­பானின் தந்தை எம்­மிடம் தெரி­வித்தார்.

இர்பான் கைது செய்­யப்­பட்­டதன் பின்பு எமது உற­வி­னர்கள் சிலரும் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்­களும் எங்கள் குடும்­பத்தை ஐ.எஸ். குடும்பம் எனப் பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றார்கள். எமக்கு எதி­ராகப் பேசு­கி­றார்கள். 100 கோடி ரூபா இருந்தால் ஏன் இவ்­வாறு வறு­மையில் வாழ­வேண்டும் என்று கேள்­வி­யெ­ழுப்­பு­கி­றார்கள். இதனால் எமது குடும்பம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது என்றும் அவர் கண்ணீர் வடிய எமக்குக் கூறினார்.

கைது செய்­யப்­பட்ட மற்­று­மொ­ருவர் ஜெஸ்மின். அவர் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்தார். 2 பிள்­ளை­களின் தந்தை. அவ­ரது மனை­வியும் ஒரு ஆசி­ரியை. ஒரு­ப­குதி நிர்­மா­ணிக்­கப்­பட்ட சாதா­ரண வீட்டில் அவர்கள் வாழ்­கி­றார்கள்.
ஜெஸ்மின் அண்­மையில் வாகன விபத்தில் காயங்­க­ளுக்­குள்­ளானார்.

அதனால் அவ­ரது உடல் பாதிப்­புக்­குள்­ளா­னது. உடல் உபா­தை­க­ளுக்­கான அவ­ரது உப­யோ­கத்­துக்­காக கொமட் உடன்­கூ­டிய கழி­வறை ஒன்­றைக்­கூட அவர்­களால் அமைத்­துக்­கொள்ள முடி­யாத அள­வுக்கு கஷ்­ட­மான வாழ்க்­கையை வாழ்­கிறார். அவர் கழி­வ­றையில் கொமட்­டுக்குப் பதி­லாக ஒரு கதி­ரையைப் பயன்­ப­டுத்தும் நிலையில் நாம் வாழ்­கிறோம் என அவ­ரது மனைவி ஜெபா கைருல் ஹுதா தெரி­வித்தார்.

ஜெஸ்­மினின் மனைவி பாட­சாலைச் சங்­கத்தின் மூல­மாக கட­னொன்­றினைப் பெற்­றுள்­ளதால் அவ­ரது மாதாந்த சம்­ப­ளத்தில் 20 ஆயிரம் ரூபாய் செலுத்­தப்­ப­டு­கி­றது. முன்பு கண­வரின் சம்­ப­ளமும் கிடைத்­தது. அதனால் வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கும் போது­மாக இருந்­தது. இப்­போது அவ­ரது பாது­காப்பும் எமக்கு இல்­லா­ததால் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக அவ­ரது மனைவி தெரி­வித்தார்.

பொலிஸார் இரு தட­வைகள் வந்து வீட்டைச் சோத­னை­யிட்­டார்கள். ஆனால் அவர்கள் எதையும் கொண்டு செல்­ல­வில்லை. 100 கோடி ரூபா குற்­றச்­சாட்டு தொடர்­பாக பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டாலும் பொலி­ஸா­ரி­னாலோ அல்­லது சட்டப் பிரி­வு­க­ளி­னாலோ இது­வரை அவ்­வா­றான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்­யப்­பட்ட மொஹிதீன் பாவா நௌபர் ஹொர­வப்­பொத்­தான கிரா­மத்தைச் சேர்ந்­தவர். அவர் ஒரு பட்­ட­தாரி. அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­யாற்­றி­யவர். நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யாவார். அவ­ரது மனைவி அர­சாங்கப் பாட­சாலையொன்றில் ஆசி­ரி­யை­யாகக் கட­மை­யாற்­று­கிறார். அவர் கைது செய்­யப்­பட்ட தினம் அவ­ரது முழு வீடும் பொலி­ஸாரால் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ரது வங்கி கணக்குப் புத்­தகம் மற்றும் கட­வுச்­சீட்டு என்­பன பொலி­ஸாரால் கைப்­பற்றப்பட்­டுள்­ளன.

இந்தக் கைதுக்குப் பின்­ன­ணியில் அர­சியல் பழி­வாங்கல் இருப்­ப­தாக தான் சந்­தே­கிப்­ப­தாகக் குறிப்­பிடும் நௌபரின் மனைவி சித்தி ஆயிஷா, பத்­தி­ரி­கையில் வெளி­வந்த செய்­தியைச் சுட்­டிக்­காட்டி நாங்கள் அரை­கு­றை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்­டிலே வாழ்­கிறோம்., வீட்டின் முன்­ப­குதி அமானா வங்­கி­யி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்ட கடன் மூலமே நிர்­மா­ணிக்­கப்­பட்­டது என்றார். அந்தக் கடனைச் செலுத்தி முடிக்க பல வரு­டங்கள் செல்லும். மேலும் பல இடங்­க­ளுக்கும் கடன் தொகை செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது என்றும் கவ­லைப்­பட்டார்.

எவ­ருக்கும் எமது வங்கிக் கணக்­கு­களை பரி­சோ­தனை செய்ய முடியும். எங்­க­ளது வங்கிக் கணக்­கு­க­ளுக்கு எமது மாத சம்­ப­ளமே இடப்­பட்­டுள்­ளது என்­பதை அப்­போது அறிந்து கொள்­ளலாம். பத்­தி­ரிகைச் செய்­தியில் தெரி­வித்­துள்­ள­படி எங்­க­ளிடம் 100 கோடி இருந்தால் நாம் ஏன் இவ்­வாறு துன்­பப்­பட வேண்டும்?
நௌபர் தொழில் நண்­பர்கள் மற்றும் கிராம மக்­க­ளுடன் கௌர­வ­மான வாழ்க்கை வாழ்ந்­தவர், செயற்­பட்­டவர். பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்ட 100 கோடி ரூபா குற்­றச்­சாட்டு கார­ண­மாக அவ­ரது தொழில் நண்­பர்கள் அவர் மீதான நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர் என அவ­ரது குடும்ப உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். அத்­தோடு கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வந்த சிங்­கள– முஸ்லிம் உற­வுக்கு இடையில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளதால் மன­உ­ளைச்­சல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

என். சக­ரியா, எல்­ல­வெவ கிரா­மத்தில் கைது செய்­யப்­பட்ட மற்­று­மொ­ரு­வ­ராவார். சோளப் பயிர்ச்­செய்கை மூலம் தனது வாழ்க்­கையை நடத்தி வந்த இவர் சில­காலம் மௌல­வி­யாகப் பணி­பு­ரிந்­த­வ­ராவார். இவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். மனைவி தொழில் எதுவும் செய்­யா­தவர்.

அவ­ரது மனைவி மஹ்ரூப் நஸீஹா கைது தொடர்பில் தெரி­விப்­பது; எங்­க­ளுக்கு சொத்­துக்­க­ளென்று இருப்­பது பிள்­ளை­களும் இந்த வீடும் மாத்­தி­ரம்தான். சஹ்ரான் பற்றி நாம் தெரிந்து கொண்­டதும் இந்தச் சம்­ப­வத்தின் பிற­குதான். எனது கணவர் விவ­சாயம் செய்து கிடைத்த வரு­மா­னத்தின் மூலமே நாம் வாழ்ந்தோம். தற்­போது அவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பதால் நாம் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். பல வேளை­களில் நாம் பசி­யுடன் இருந்த நாட்­களும் உள்­ளன. அக்கம் பக்­கத்­தி­லுள்­ள­வர்கள் எம் மீது அனு­தா­பப்­பட்டு செய்யும் உத­விகள் மூலம்தான் சாப்­பிட்டு, நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். இந்தப் பகு­தி­களில் காட்டு யானை­களின் பிரச்­சி­னையும் இருக்­கி­றது. மிகுந்த பயத்­து­டனே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கிறோம் என்றார்.

கலீ­பத்­துல்­லாவும் எல்­ல­வெவ கிரா­மத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ராவார். இவர் 5 பிள்­ளை­களின் தந்­தை­யாவார். கலீபத்­துல்­லாவின் தந்தை கலீ­பத்­துல்­லாவின் பிள்­ளை­களை நோக்கி தனது இரு கரங்­க­ளையும் ஏந்­தினார்.
பின்பு இவ்­வாறு தெரி­வித்தார், “ கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் பத்­தி­ரி­கையைக் கொண்டு வந்து எம்­மிடம் காட்டும் வரை 100 கோடி ரூபா கதை எங்­க­ளுக்குத் தெரி­யாது. இந்தப் பிள்­ளை­களின் காது­களில் இருக்கும் காத­ணி­களை நன்­றாகப் பாருங்கள் அவை தங்கம் அல்ல. தங்க காத­ணிகள் இரண்டு அவர்­க­ளுக்கு வாங்கிக் கொடுப்­ப­தற்குக் கூட எங்­க­ளுக்கு வசதி இல்லை. நான் எனது மக­ளுக்குக் கொடுத்­தி­ருக்கும் இந்தக் காணியும் இந்த வீடும் பிள்­ளைகள் ஐவ­ருமே எங்­க­ளுக்­குள்ள சொத்­துக்கள்” என்றார் அவர்.

தவ­றான செய்­தியைவெளி­யிட்ட பத்­தி­ரிகை தெரி­வித்­தவை

கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா வைப்பில் உள்­ள­தாக செய்தி வெளி­யி­டு­வ­தற்கு முன்பு அத்­த­க­வலின் உண்மைத் தன்மை, அது தொடர்­பான நம்­பிக்­கை­யான சாட்­சி­யங்கள் மூலம் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா? என நாம் குறிப்­பிட்ட பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் மற்றும் செய்­தியை எழு­திய ஊட­க­வி­ய­லாளர் ஆகி­யோ­ரிடம் வின­வினோம்.

அந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு நேரம் இருக்­க­வில்லை. தவ­றான செய்­தி­யொன்­றினை வெளி­யிட்­டது தொடர்பில் கவ­லையைத் தெரி­வித்துக் கொள்­கிறேன் என பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் தெரி­வித்தார்.
செய்­தியை வெளி­யிட்ட ஆசி­ரியர் குழாத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் கருத்து தெரி­விக்­கையில், செய்தி சரி­யா­னதா? என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா? இல்­லையா? என்று நீங்கள் கோரு­வது தொடர்பில் எந்த வகை­யான தெளி­வு­களை வழங்­கு­வ­தற்கும் நான் உட்­பட்­ட­வ­னல்ல. 100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் வைப்­பி­லுள்­ள­தான தகவல் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸாரால் எனக்குக் கூறப்­ப­ட­வில்லை என்றார்.

சிங்களத்தில்: நிராசா பிய­வ­தனி
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

 

vidivelli

Leave A Reply

Your email address will not be published.