செப்­டெம்பர் மூன்றாம் வாரத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான ஆயத்­தங்கள்

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு

0 609

செப்­டெம்பர் மாதம் மூன்றாம் வார­ம­ளவில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு தயா­ராக வேண்டும். ஆனால் அன்­றைய தினம் வரையில் ஜனா­தி­பதித் தேர்தல் தான் நடத்­தப்­படும் என்று உறு­தி­யாகக் கூற முடி­யாது என்று தெரி­வித்த சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, சட்­டத்­திற்­க­மைய மாகாண சபைத் தேர்­தலே நடத்­தப்­பட வேண்டும் என்றும் குறிப்­பிட்டார். 

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­த­தா­வது,

சட்­டத்­திற்­க­மைய மாகாண சபைத் தேர்­தலே முதலில் நடத்­தப்­பட வேண்டும். மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு தயா­ரா­கவே இருக்­கி­றது. அத்­தோடு செப்­டெம்பர் மாதம் மூன்­றா­வது வாரத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு ஆயத்­த­மாக முடியும். எனினும் அது வரையில் ஜனா­தி­பதித் தேர்தல் தான் இடம்­பெறும் என்று உறு­தி­யாகக் கூற முடி­யாது.

எவ்­வா­றி­ருப்­பினும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 9 ஆம் திக­தி­யி­லி­ருந்து ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்கும் நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆனால் அதற்கு முன்­ன­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் தேர்­தலை நடத்த முடியும்.

இவற்றை விடவும் பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்கும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். எந்த சந்­தர்ப்­பத்­திலும் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்­த­லுக்குச் செல்ல முடியும். ஆனால் அவ்­வாறு இடம்­பெ­றாது என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. அதனால் தான் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஆவ­ணங்­க­ளையும் இரண்டு முறை­மை­யிலும் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­காக ஆவ­ணங்­க­ளையும் தயா­ரித்­துள்ளோம்.

கேள்வி : பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஏற்றுக் கொண்­டுள்ளார். ஆனால் அவர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னூ­டா­கவே பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­யுள்ளார். இதனால் அவ­ரு­டைய பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை கேள்­விக்­கு­றி­யா­குமா?

பதில் : அது தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுடன் தொடர்­பு­டைய விட­ய­மல்ல. அர­சியல் கட்­சி­க­ளுக்­கு­ரிய விட­ய­மாகும். எமக்கு இது குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதுவும் அறி­விக்­கப்­பட்டால் நாம் பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­விப்போம். பாரா­ளு­மன்­றத்தால் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். தற்­போது கட்­சி­க­ளுக்­கி­டையில் காணப்­படும் உள்­ளக ஒழுக்க பிரச்­சி­னை­களில் தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­யி­டாது.

கேள்வி : 18 வயது பூர்த்­தி­யான இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அது குறித்து தேர்­தல்கள் ஆணைக்­குழு முன்­னெ­டுத்­துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில் : வாக்காளர் பட்டியல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதனூடாக 18 வயதுடையவர்களுக்கு எம்மால் வாக்குரிமையை வழங்க முடியும். அதனை வலியுறுத்த வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடமேயன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அல்ல.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.